தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் இதுவரை 10 இலட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துற…
-
- 0 replies
- 178 views
-
-
தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர். இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். மிக விரைவில் அந்த ஏற்பாடுகள் நடக்குமென தெரிகிறது. இந்த கட்சிகளிற்கு மேலதிக, தமிழ் தரப்பில் இன்னொரு முயற்சியும் நடப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். புலம்பெயர் தமிழரான கோடீஸ்வரர் ஒருவரின் பின்னணியில் இந்த முயற்சி நடக்கிறது. புலம்பெயர் தேசத்திலும், இலங்கையிலும் ஊடகங்களை இயக்கும் அந்த வர்த்தகரின் பின்னணியில், இந்த முயற்சி நடக…
-
- 0 replies
- 406 views
-
-
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்! மின்னம்பலம்2022-03-02 திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்குத் தவிரத் தமிழகத்தில் இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மூன்றாம் அலை வேகமாகப் பரவி தற்போது ஓய்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 400க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15-02-2022-இன்படி, ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உள்துறை அமைச்சக…
-
- 0 replies
- 269 views
-
-
ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை: தீபக் பரபரப்பு பேட்டி Share Tweet அ-அ+ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். சென்னை: முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 298 views
-
-
ஜெ., கைரேகை பதிவு கேட்டு சிறை அதிகாரிக்கு உத்தரவு சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் கைரேகை பதிவு இருந்தால், தாக்கல் செய்யும்படி, பெங்களூரு சிறை அதிகாரி மற்றும், 'ஆதார்' அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், போஸ் வெற்றி பெற்றார்.அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர், டாக்டர் சரவணன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், வேட்பாளர் நியமனம் மற்றும் சின்னம் ஒதுக்கீடுக்கான படிவத்தில் இருந்த, ஜெயலலிதாவின் கைரேகை குறித்து, சந்தேக…
-
- 0 replies
- 280 views
-
-
மிஸ்டர் கழுகு: எடைத்தேர்தல்! எடைத் தட்டில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தினகரன் மூவரும் இருக்கும் ஜூ.வி அட்டையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து, ‘‘நல்ல ஐடியா’’ என நம் ஓவியரைத் தட்டிக்கொடுத்தார் கழுகார். ‘‘எடப்பாடிக்கும், தினகரனுக்கும் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முக்கியமானதல்ல. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் இது ‘எடை போடும்’ தேர்தல்’’ என்றார் கழுகார். அவரே தொடரட்டும் என்று காத்திருந்தோம். ‘‘ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாமல், கடந்த 28 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இது. கடைசியாகத் தமிழகம் சந்தித்த தேர்தல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல். அப்போது ஜ…
-
- 0 replies
- 1.8k views
-
-
தாண்டிக்குடி: சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற தாண்டிக்குடி மலைத்தேன் உற்பத்தி, அழிவின் விளிம்பில் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்டது தாண்டிக்குடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 300 அடி உயரமுள்ள இந்த கிராமத்தில், நிலவும் சீதோஷ்ண நிலை, ஓங்கி உயர்ந்த சோலைக்காடுகள் ஆகியவை, தேன் உற்பத்திக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.இங்கு அடுக்குத்தேன் (பெட்டி), மலைத்தேன் (பாறை), கொசுந்தேன் (செடி, கொடிகள்), கொம்புத்தேன் (மரக்கிளைகள்) ஆகிய உற்பத்தியாகிறது.சர்வதேச தரம்கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கிடைக்கும் தேன் சர்வதேச அளவில் தரச்சான்றிதழ் பெற்றிருந்தது. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம் 1954 முதல், இங்கு கிடைக்கும் தேன் பதப்படுத்தப்பட்டு, …
-
- 0 replies
- 1.9k views
-
-
ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா ராஜராஜ சோழனின் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. நவம்பர் 2, 3ம் திகதிகளில் அரசு சார்பில் சதய விழா நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சதய விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜனின் பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்படவுள்ளது. https://athavannews.com/2022/1306854
-
- 0 replies
- 711 views
-
-
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதம் - சென்னை போராட்டத்தில் முதல்வர்-துணை முதல்வர் பங்கேற்பு அ-அ+ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றுள்ளனர். #CauveryManagementBoard சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த …
-
- 0 replies
- 266 views
-
-
வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான் தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களின் நீதிமன்றப் போராட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஓர் இடத்தில்போய் முட்டிக்கொள்ள... கிட்டத்தட்ட விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார் தினகரன். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிருப்தி ஏற்பட, கொஞ்சம் ஆடித்தான் போனார். தன் தளபதியாக தினகரன் நினைத்துக்கொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்ட ஆரம்பிக்க, மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளானார். இந்நிலையில், தினகரன் தரப்பில் தற்போது திடீர் உற்சாகம் தென்பட ஆரம்பித்துள்ளது. ‘‘ஏதாவது ஓர் அதிரடி ஆட்டம் ஆடியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக்க…
-
- 0 replies
- 741 views
-
-
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி வந்தமர்ந்த வேகத்தில் நம் பக்கம்கூட திரும்பாமல், தன் மொபைல் போனை ‘டச்’சிக் கொண்டே இருந்தார் கழுகார். நாம் அவ்வப்போது பேசிய வார்த்தைகளும் அவர் காதில் விழவே இல்லை. சட்டென்று எழுந்துபோய் அவரை நாம் கட்டிக்கொள்ள... கொஞ்சம் ஆடிப்போனவராக, நம்மைத் தட்டிக்கொடுத்தார். ‘‘அடடே... கட்டிப்பிடி வைத்தியமா? செம டைமிங்காகத்தான் வேலை பார்க்கிறீர்கள்’’ என்று சொல்லிச் சிரித்தவர், தொடர்ந்தார். ‘‘டி.டி.வி.தினகரன் முகாமில் இருப்பவர்கள்கூட இப்படி ஒரு முடிவைத் துணிச்சலாக எடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க-வின் மக்களவை எம்.பி-க்கள் ஒரு மாபெரும் …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் புதுஸ்ஸா "முளைத்த" விதை.. பாஜகவுக்கு விஜய் ஆதரவு? மிரண்ட "திராவிட கட்சிகள்".. மாறுகிறதே HemavandhanaUpdated: Thursday, November 2, 2023, 17:17 [IST] சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன.. இதை திராவிட கட்சிகளும் உற்றுகவனித்தபடியே வருகின்றன. நடிகர் விஜய்: அந்தவகையில், சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று உரக்க குரலெழுப்பிய அம்பேத்கரும், பெரியாரும், காமராஜரும் மாறி மாறி விஜய்யின் பேச்சில் நினைவுகூரப்பட்டு வருகிறார்கள். எனினும், பெரியாரை முன்னிலைப்படுத்தியிருந்த விஜய், மறைந்த முதல்வர்கள் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ சொல்லவில்லை.. மாறாக, பெரியார், அம்பே…
-
- 0 replies
- 481 views
-
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கொலையுண்ட நந்தினி 24 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது? …
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
மீண்டும் முதல்வர் பதவி: 'நிதானம்' காட்டுகிறாரா ஜெயலலிதா? கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறார். ஆனாலும், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அவசரம் காட்டவில்லை. தீர்ப்பு வெளியாகி 3 நாட்கள் ஆகியும் அமைச்சரவை ராஜினாமா, எம்எல்ஏக்கள் கூட்டம் என எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா எப்போது பதவியேற்பார் என்று தெரியாததால் ஆளுக்கொரு தேதியை பரப்பி வருகின்றனர். தீர்ப்பு வெளியான நாளில் அதிமுகவைச் சேர்ந்த 151 எம்எல்ஏக்களும் சென்னைக்கு வந்துவிட்டனர். கூட்டத்துக்கான அழைப்பு எப்போது வருமோ என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் கட்சி மேலிட…
-
- 0 replies
- 432 views
-
-
மீண்டும் சூடுபிடித்துள்ள பொள்ளாச்சி விவகாரம்: இளம் பெண்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் முழு இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்களின் விபரங்களை சி.பி.ஐ அதிகாரிகள் தற்போது திரட்டி வருகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை அரசு மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக அமைப்புகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்கள் மற்றும் சந்தேக மரணங்க…
-
- 0 replies
- 641 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்கள், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகான தேர்தல், அரசியல் கட்சிகளிடம் பிளவு, கட்சிக் கூட்டணிகள் போன்ற பல காரணங்களால் தமிழ்நாட்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள் மீதும் பலரின் கவனம் படிந்திருந்தது. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கவனம் பெற்றன. தேர்தல் அணுகுமுறை இரண்டு கட்சிகளுமே வெற்றி பெறுவதிலும், கணிசமான வாக்குகளை பெறுவதிலும்…
-
- 0 replies
- 686 views
-
-
விஜயகாந்த் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர் மீது தீ பற்றிய பரபரப்பு வீடியோ! விழுப்புரம்: விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கண்டித்து அவரின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்ற போது அவர்களின் மீது தீ பற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. vikadan.com
-
- 0 replies
- 639 views
-
-
சீட்டுக்கு பணம் கேட்கப்பட்டதா? கேப்டன் அலுவலகத்திற்கு பூட்டு! தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று ஓப்பனாக அறிவித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கொஞ்சமாக அதில் ஒரு மாற்றம் போல், 'என்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் கட்சிகளை வரவேற்கிறேன்' என்றார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் பல ரசவாதங்களை ஏற்படுத்தி வைத்துள்ளது. பின்வாசல் வழி தேமுதிகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரே கேப்டனின் இந்த முடிவால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், '' தேமுதிக அலுவலகத்துக்கு பின் வாசல் வழியாக வந்து பின் வாசல் வழியாகவே விஜயகாந்த் போகிறார்'' என்ற குற்றச்சாட்டையும் …
-
- 0 replies
- 509 views
-
-
தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் எம். காசிநாதன் / 2020 ஜூலை 20 தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார். “கொல்லைப்புற வழியாக, ஆட்சிக்கு வர மாட்டோம்” என்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முடிவும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கம், அ.தி.மு.க அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவும், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்பு ‘போனஸ்’ ஆகி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை, வேறு வழியில் சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாகவே, அ.தி.மு.க அரசாங்கம் இன்று வரை நீடித்து வருகிறது; இனியும், 2021 மே வரை நீடிக்கப் போகிறது. …
-
- 0 replies
- 447 views
-
-
டெல்லி மேகங்களால் சூழப்பட்டுள்ள தமிழகம்! தன் வாழ்நாளில் அவ்வளவாக வெளிநாடுகளுக்குச் செல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா. அவர்செய்த பயணங்கள் டெல்லிக்கு மட்டுமே. அதுகூட பல முறை டெல்லிதான் அவரைத் தேடி தமிழகத்துக்கு வந்துள்ளது. அத்தனை பிரதமர்களையும், ஆளுநர்களையும், டெல்லி அதிகாரங்களையும் தமிழகத்தை அச்சத்துடன் தொலைவில் நின்று பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. தற்போது அனைத்தும் தலைகீழாகமாறி தமிழகம் டெல்லி மேகங்களால் சூழப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நாளில் இருந்து தமிழகத்தைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது பி.ஜே.பி மேலிடம். செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநாளில் வழக்…
-
- 0 replies
- 429 views
-
-
மலேசியாவுக்கு தப்ப முயன்ற சேகர் ரெட்டி கூட்டாளி லோதா கைதானது எப்படி?- பரபரப்பு பின்னணி தகவல்கள் லோதா தமிழக அரசின் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும் தொழிலதி பருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் கடந்த 7-ம் தேதி முதல் 4 நாட்கள் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சேகர் ரெட்டிக்கு ரூ.25 கோடி ரூபாய் வரை புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது கொல்கத்தாவைச் சேர்ந்த பராஸ்மால் லோதா தான் என்பது தெரியவந்தது. மேலும் டெல்லியில் வழக் கறிஞர் ரோஹித் …
-
- 0 replies
- 356 views
-
-
அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்! கடந்த 12 ஆண்டுகளாக அ.தி.மு.க.விலிருந்த நடிகர் ஆனந்தராஜ் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாளை அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஆனந்தராஜ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், 'ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் ஆகியோரின் பேச்சுக்கள் வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை' என்று கூறினார். http://www.vikatan…
-
- 0 replies
- 565 views
-
-
அதிகரிக்கும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் உறையும் சசிகலா தரப்பு! தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.வின் தோழி சசிகலா. சசிகலா கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றது, கீழ்மட்டத் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டாலும், தங்களால் ஜெயலலிதா இருந்த இடத்தில் வைத்து, சசிகலாவைப் பார்க்க முடியவில்லை என்று கட்சித் தொண்டர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆ…
-
- 0 replies
- 465 views
-
-
ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்த மலருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே நிறுவனத்தில் வேலை செய்த சேலத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆஷா தன் வலையில் மலரை சிக்க வைத்தார். பின்னர் அவளை சேலத்துக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஆஷாவுடன் தொடர்புடைய திருப்பூர் அங்கேரி பாளையம் கோகுலம் தெருவை சேர்ந்த பிரபு (31), சேலம் வலையப்பட்டி பெருமாள் பாளையம் சக்திவேல் (34), மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த முகமது சபீதுல் (30) ஆகியோரிடம் மலரை ஒப்படைத்துள்ளார். அவர்கள் திருச்சிக்கு மலரை அழைத்து வந்து கற்பழித்து வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து …
-
- 0 replies
- 487 views
-
-
பின் வாங்குகிறாரா சசிகலா? #OPSVsSasikala அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்குப் பதில், மன்னார்குடி குடும்பத்தினரில் வேறுநபர் ஒருவரை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்துக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகளை, சசிகலா தரப்பு தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இர…
-
- 0 replies
- 605 views
-