Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் நுழைய நிலவும் ஆடை கட்டுப்பாட்டை நீக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். புதிய சட்டம், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வக்கீல்கள் காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேட்டி அணிந்து சென்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், வேட்டி கட்டி நுழைபவர்களை தடு…

  2. தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்துகொள்ளும் அணுகுமுறை உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது. நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோல, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இலங்கை அரசைப் போல பாகிஸ்தான் அரசு கொடூரமாக நடந்துகொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம். இலங்கை அரசின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்திருக் கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவத…

  3. தமது தந்தையைப் பணி செய்ய விடாமல் ராகுல் காந்தி முட்டுக்கட்டைப் போட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து, காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. கட்சிக்குள் நடைப்பெற்ற குளறுபடிகளை அக்கட்சியின் முக்கியத் தலைவர்களே விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் மகள் தமன் சிங்கும் இப்போது பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமது தந்தை பிரதமராக இருந்தபோது அவரை பணி செய்ய விடாமல், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் தலைவர் சோனியா காந்தி பலமுறை முட்டுக்கட்டைப் போட்டுள்ளனர் என்றும் தமன் சிங் கூறியுள்ளார். மேலும், தேர்தலில் அதிக செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவ…

  4. தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக் குறித்த அவதூறுக் கட்டுரைத் தொடர்பாக, இலங்கைத் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் நலன் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார். இதை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசின் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான இணையத் தளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த வேளையில், இலங்கை அரசு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. இருப்பினும் மேற்கண்ட பிரச்னையை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை எம்பிக்கள் எழுப்பி அவையில் அமளி கிளப்பினர். இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கைத் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. http://4tamilmedia.…

  5. ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் எனப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் 16 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று தமிழகம் வந்தபோது அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள மைதானத்தில் அவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜூனியர் கிரிக்கெட் அணியினரின் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய நேரத்தில், தமிழகத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. எனவே, தமிழகத்தில் இவர்களுக்கு தனியாக பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். த…

  6. முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் நடிகர் விஜய் உள்பட தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேஆர் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110196/language/ta-IN/article.aspx

  7. வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக கற்பிக்க நடவடிக்கை! - உத்தர்கண்ட் எம்பி வலியுறுத்தல் டெல்லி: திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும், வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு ம…

    • 2 replies
    • 500 views
  8. தமிழக அகதி முகாம்களில் உள்ள 62 இலங்கை மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு அனுமதி! [sunday 2014-08-03 09:00] தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதி மாணவர்களில் 62 பேர் 2014-15-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 40 பேர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளாகக் குடியேறுபவர்களின் குழந்தைகள் தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 110 அகதி முகாம்களைச் சேர்ந்த 2,200 மாணவ, மாணவிகள் இப்போது பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். …

  9. தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நி…

  10. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களைத் தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மனதால் நினைத்துக்கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றது. அதுமட்டுமின்றி, ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களுக்கு என்ன பொருள்?’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன. இட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்…

    • 1 reply
    • 453 views
  11. சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்: அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே... மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா? தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பட…

  12. New How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi? கொழும்பு : இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர் கடிதம் பகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பிட்டு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அண்டை நாட்டின் தலைவரை இவ்வளவு மோசமாக சித்தரித்து, மற்றொரு நாடு, தன்னுடைய அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இவ்வாறு வெளியிட்டிருப்பது, சர்வதேச நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்துவோம் என்று தற்போதைய மத்திய அரசும் கூறி வரும் சூழ்நிலையில், நமது நாட்டுத் தலைவர்களை இப்படி மோசமாக இலங்கை அரசின் இணையதளம் விமர்சித்திருப்பது அதிர்ச்ச…

  13. திமுகவுக்கு வாக்களித்த மக்களை அவமதித்துவிட்டார்கள்: கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை இந்த முறை ஜூலை 10-ந் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து ஜூலை 22-ந் தேதி வரை சட்டப்பேரவை நடைபெற்ற 9 நாட்களில் தி.மு.க. உறுப்பினர்கள் 9 முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு, தரப்படாத காரணத்தால்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிக்காரர்களை “ஓடுகாலிகள்” என்று ஒரு அமைச்சர் கேவலமாக கூறலாமா? பேரவை தலைவர் இத்தகைய பண்பாட்டுச் சிதைவை அனுமதிக்கலாமா? அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்திலே சுனாமி பேராபத்து ஏற…

  14. நான் வேணுமா... உன் மகன் வேணுமா? குழந்தையைக் கொன்ற கள்ளக்காதல் பேய், பிசாசு போன்ற கட்டுக்கதைகளை வைத்துக்கொண்டு மக்களை எப்படி வேண்டும் என்றாலும் திசை திருப்பலாம் என்பதற்கு உதாரணம்தான் திண்டிவனத்தில் நடந்த சிறுவன் கொலை சம்பவம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தியும் - ஜெயலட்சுமி தம்பதியர். கடந்த 14-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர்களின் மகன் தினேஷ்குமார் காணாமல் போனான். ராமமூர்த்தி காவல் துறையிடம் புகார் தெரிவிக்க, போலீஸாரும் கிராம மக்களும் ஊர் முழுக்கத் தேடினர். இரண்டு நாட்கள் கழித்து கிணற்றில் மிதந்துக்கொண்டிருந்த தினேஷ்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் உலாவரும் பேய்தான் அந்தக்…

  15. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமியை தமிழக அரசு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எத்தகைய துரோகத்தை தமிழினத்துக்கு இழைத்ததோ அதற்கு சற்றும் குறைவில்லை என்கிற வகையில்தான் தற்போதைய பா.ஜ.க அரசும் செயல்பட்டு வருகிறது. அண்மையில் பா.ஜ.கவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழு இலங்கைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழு…

  16. தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 940 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். இந்த தீ விபத்து தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி…

  17. Started by Athavan CH,

    • 0 replies
    • 804 views
  18. ராமேஸ்வரம்: மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி…

  19. கடந்த ஜூலை பதினெட்டாம் தேதியன்று இந்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீடுக் குழு மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, பருத்தி, கத்திரி, கொண்டைகடலை ஆகிய பயிர்களை வயல்களில் பயிரிட்டு ஆய்வுசெய்ய அனுமதி அளித்தது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். கட்சிகள் எதிர்ப்பு தொடர்புடைய விடயங்கள் மரபணுவியல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த அனுமதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மரபணு மாற்றப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்திய…

  20. ஆட்சி மாறியது... அவஸ்தை மாறவில்லை காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் தமிழக மீனவர்கள்! கடந்த மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நிலையில், மே 31-ல் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அன்றிலிருந்து கடந்த 22-ம் தேதி வரை தமிழக மீனவர்கள் 258 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இப்போது இலங்கை சிறையில் இருக்கின்றனர். இந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் 57 விசைப் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. இதில் இரு படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. எஞ்சிய 55 விசைப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. புதிய அரசு …

  21. சென்னை: ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனை தமக்கு ஏற்படுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (24ஆம் தேதி) விடுத்துள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:- ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறதே? இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு, விசாரணை நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா மற்றும் இதர நான்கு தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இலங்கைக்கு ஐ.நா. விசாரணைக் குழுவை அனுப்புவதற்கு எதிராக இ…

  22. இந்தியாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது என்று, உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சென்று அம்மாநில முதல்வர்களையும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜிம் யாங் கிம், இந்தியாவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங…

  23. நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. அமைச்சர்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அதிரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல் இந்த நிலையில் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், சர்ச்சையில் சிக்கிய நீதிபதி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பதவியில் தொடருவதை மார்க்கண்டேய கட்ஜூ விரும்பவில்லை என, தன்னைச் சந்தித்த தி.மு.க. அமைச்சர்கள்…

  24. தாண்டிக்குடி: சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற தாண்டிக்குடி மலைத்தேன் உற்பத்தி, அழிவின் விளிம்பில் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்டது தாண்டிக்குடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 300 அடி உயரமுள்ள இந்த கிராமத்தில், நிலவும் சீதோஷ்ண நிலை, ஓங்கி உயர்ந்த சோலைக்காடுகள் ஆகியவை, தேன் உற்பத்திக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.இங்கு அடுக்குத்தேன் (பெட்டி), மலைத்தேன் (பாறை), கொசுந்தேன் (செடி, கொடிகள்), கொம்புத்தேன் (மரக்கிளைகள்) ஆகிய உற்பத்தியாகிறது.சர்வதேச தரம்கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கிடைக்கும் தேன் சர்வதேச அளவில் தரச்சான்றிதழ் பெற்றிருந்தது. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம் 1954 முதல், இங்கு கிடைக்கும் தேன் பதப்படுத்தப்பட்டு, …

    • 0 replies
    • 1.9k views
  25. சீமான் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை.. ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி! மதுரை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்று மதுரை மாஜிஸ்திரேட் கூறி விட்டார். மேலும், சீமான் மீது புகார் கொடுத்தவரும், தன்னிடம் போலீஸார் 2 தாள்களில் எதையோ எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறவே, சீமானை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சீமான் விடுவிக்கப்பட்டார். அதிமுக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இருந்து வரும் சீமான் மீது ஏன் போலீஸார் பொய் வழக்குப் போட முனைந்தனர் என்பது புதிராக உள்ளது. சோதனைச் சாவடி கலாட்டா. கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.