Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம்! மின்னம்பலம்2021-11-08 தமிழ்நாடு அரசின் முக்கியமான 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நவம்பர் 6ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வழக்கமாகவே ஆட்சி மாறியதும் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்படுவதும் தொடர்கதைதான். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் வரை கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தீவிரமாக இருந்ததன் காரணமாக வழக்கமான மாற்றல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாடு அரசின் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். …

  2. ஆயிரம் தினகரன் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது! - முதல்வர் 'தில்' பேட்டி! ``ஒரு தினகரன் அல்ல ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது'' என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஊட்டியில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி நற்பெயரோடு இருக்கிறது. ஒரு சிலர் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சியின் மீது குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். குற…

  3. கொழும்பு: இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்…

  4. கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில் இந்தியாவின் சக்தி வாய்ந்த குடும்பங்களில் ஒன்றில் பிறந்த கார்த்தி ப. சிதம்பரம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளவர். விளையாட்டிலும் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குபவர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியாவின் நிதியமைச்சராவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பழனியப்பன் சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகனாக 1971 நவம்பர் மாதம் பிறந்தார் கார்த்தி. செட்டிநாட்டு ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித் தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா. …

  5. 19 ஆண்டுகளாக ஜெயலலிதா வழக்கில் பணியாற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தம் நாளை ஓய்வு: கடைசி வரை வழங்கப்படாத பதவி உயர்வு? ஜி.சம்பந்தம் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பணியாற்றி வரும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜி.சம்பந்தம் நாளை ஓய்வு பெறுகிறார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜி. சம்பந்தம் கடந்த‌ 27.9.1987 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர…

  6. Started by நவீனன்,

    பதவி பறிபோன தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், 'எங்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; பெரிய பதவிகள் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் தந்தால் போதும்' என, முதல்வர் பழனிசாமிக்கு, துாது அனுப்பி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனால், தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டதாகவும் புலம்பி உள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா பரிந்துரை செய்தார். 'நோட்டீஸ்' விளக்கம் கோரி, 19 எம்.எல்.ஏ.,க்களுக்கு…

  7. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு 1 ஜூன் 2022 படக்குறிப்பு, சிதம்பரம் நடராஜர் கோயில். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை வரும் 7, 8 தேதிகளில் ஆய்வு செய்ய‌ இருப்பதாக அறிவித்துள்ளது. கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம…

  8. அரிதாரம் பூசி வண்ணமயமாய் பறக்கும் பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறும்: கமல், ரஜினி மீது ஓபிஎஸ் தாக்கு ஒபிஎஸ், ரஜினி, ஜெயக்குமார், கமல் - கோப்புப் படம் அரசியலில் புதிதாக அரிதாரம் பூசி சில வண்ண பலூன்கள் பறக்கின்றன. விரைவில் அவை உடைந்து சிதறிவிடும் என துணை முதல்ர் ஓபிஎஸ், கமல்- ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவச்சிலையை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூட்டாக திறந்து வைத்தனர். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போத…

  9. நீட் தேர்வில் 720/ 720: தமிழக மாணவன் சாதனை பல்கலைக் கழகங்களில் மருத்துவத்துறையில் மாணவர்களை இணைப்பதற்கான நீட் பரீட்சையானது, இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றது. இப்பரீட்சையில் தோற்றுவதற்காக நாடு முழுவதும் 20 ,87 ,445 பேர் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 1, 47 ,581 பேர் விண்ணப்பித்திருந்தனர். https://athavannews.com/2023/1334917

    • 2 replies
    • 353 views
  10. சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், புகாரை வாபஸ் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மீது பரபரப்புப் புகார்களைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியவர், சசிகலா புஷ்பா. அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருக்கிறது எனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அத்துடன், அ.தி.மு.க.வின் பொதுச…

  11. திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் மோதல்: இலங்கை அகதி கைது 15 அக்டோபர் 2013 திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில், இலங்கை அகதிகளை தடுத்துவைது கண்காணிக்க சிறப்பு முகாம் சிறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 வயதுடைய நிர்மல் ஆனந்த், மற்றும் 32 வயதுடைய இலங்கநாதன், ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது. சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு மண்டை உடைந்தது. தகவலறிந்த சிறை பொலிஸார் நிர்மல்குமாரை மீட்டு, சிறை வளாகத…

  12. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், …

  13. அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரா ரஜினி? சமூக வலை தளங்களில் விவாதம் 'ரஜினி ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டால் தான், அவரது ரசிகர்களுக்கு உண்மை புரியும்' என, 'தினமலர்' இணையதள வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 'அவர் அரசியலுக்கு வர வேண்டுமா; வேண்டாமா' என, சமூக வலை தளங்களில், பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.இது குறித்து, 'தினமலர்' இணையதளத்தில் வாசகர்கள் கூறிய கருத்துக்கள்: பாவம் ரசிகர்கள் நிஜன் - சென்னை: போய் வேலைய பாருங்க; அவரு எப்போ வருவார்னு அவருக்கே தெரியாதுன்னு சொல்லியிருக்கார…

  14. மதிவண்ணன் ( த.பெ ) மதிவாணன் என்ற கைதி 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் சிறைத்துறையும் அரசும் தன்னை விடுதலை செய்யவில்லை என்பதால் மனவுளைச்சலால் இன்று அதிகாலை தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்தும் மனம் திருந்தி சமூகத்தில் சாதாரண மனிதர்களை போல் வாழ்வதற்கான உரிமையை மறுக்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறைத்துறை மட்டும் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார். 12 ஆண்டுகள் தண்டனை முடித்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும். மதிவண்ணன் எழுதிவைத்த கடிதம் வெளியிடப்படவேண்டும் தமிழக முதல்வர் அக்கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்…

  15. 51 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் அந்நாட்டு சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு: தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய இலங்கை இடையில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய விவசாயம் மற்றும் மீனவளத் துறை மந்திரி ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை மந்திரி மஹிந்தா அமரவீரா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு அமைச்சர்களும் க…

  16. துப்பாக்கி சூட்டில் மீனவர்கள் காயம்: இலங்கை கடற்படை அட்டூழியம் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். காயம் அடைந்த தினேஷ், அரவிந்தன் ஆகியோர் ஜிப்…

  17. World Photography Day புகைப்படம்: 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம், சென்னையின் நீராதாரம் கொற்றலை ஆறு லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKSHMI KANTH BHARATHI/BBC படக்குறிப்பு, புள்ளும் சிலம்பின காண்.... கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு சென்னையின் முக்கிய நீராதாரம். ஆனால் சென்னையில் இருக்கும் பலருக்கு இது தெரியாது. இந்த ஆற்றை சூழ்ந்த வாழ்வியலை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி. ஆகஸ்ட் - 19 உலகப் புகைப்பட நாளை ஒட்டி அந்தப் ப…

  18. முகமது நபியை இழிவுபடுத்தியதாக கூறி கை துண்டிக்கப்பட்ட பேராசிரியர் ஜோசப் தற்போது எப்படி இருக்கிறார்? செளதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அவரது வீட்டிலிருந்து 100மீ தொலைவில் ஜோசப் சென்ற காரை ஒரு சுஸுகி மினிவேன் இடைமறித்தது. இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் கேரளாவில் கடந்த 2010ஆம் ஆண்டு கல்லூரி தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கியதாகக் கூறி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களால் பேராசியர் டி.ஜே.ஜோசப்பின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் இந்த…

  19. அ.தி.மு.க., அணிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு தேர்தல் கமிஷன் நடத்தும், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெற்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதை, தேர்தல் கமிஷன் மறுத்தது. இந்த புகார் தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து, அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை என்பதை விளக்க, தேர்தல் கமிஷன் திட்ட மிட்…

  20. 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இரத்து- தமிழக அரசு அறிவிப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் இரத்துச் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயற்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்பப் பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு …

  21. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 140 கிலோ கஞ்சா மீட்பு இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 140 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை தனுஷ்கோடி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார். தனுஸ்கோடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரை மணலினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகளின் மொத்த தொகை இலங்கை மதிப்பின்படி சுமார் 1கோடியே 40 இலட்சம் ரூபா எனவும் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்க…

  22. ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive தமிழகம், எப்போதையும்விட அதிகமாகவே சத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 7 - ம் நாள் முன்னிரவு மெல்லிய குரலில் பன்னீர்செல்வம் பேசியது இப்போது எங்கும் எதிலும் எதிரொலித்து பெருஞ்சத்தமாக மாறி இருக்கிறது. கட்சி அரசியலை விரும்பாத, எப்போதும் இந்தக் களேபரங்களிலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள்கூட இந்தச் சத்தத்திலிருந்து தப்பவில்லை. ஒன்று இந்தச் சத்தத்தின் குரலாக இருக்கிறார்கள்... இல்லையென்றால், செவியாக இருக்கிறார்கள். சரி... இவ்வளவு சத்தத்துக்கு நெருக்கமானவர், இந்தச் சத்தம் ஜனிக்கும் மூலத்தின் ஒருவர்... இப்போது எப்படி இருக்கிறார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்...? கால்நூற்றாண்…

  23. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர் 26 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது? எஃப்.ஐ.ஆரில் கூறப்ப…

  24. மறுபடியும் முதலிலிருந்தா? தேமுதிக தலைவர் விஜயகாந்த் | கோப்பு படம் சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கம் இப்போது இருந்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. கூட்டணி பேரங்களும் ஊகங்களும் நடந்துகொண்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சார்ந்த விவாதங்களின் மையமாக இருந்தார். கூட்டணி விஷயத்தில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. தேர்தல் முடிவை அவர் தீர்மானித்தவராக இருந்தார். இன்றும் அவரது முடிவு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் எனக் கணிசமானவர்களால் நம்பப்படுகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் அவரது கூட்டணிக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகளில் விஜயகாந்தின் முக்கியத்துவம் மாறிவிடவ…

  25. கொரோனா தடுப்பூசி : தமிகழகத்தில் இன்று ஒத்திகை! தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று ஒத்திகை நடைபெற உள்ளது. இதன்படி சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் ஒத்திகை நடைபெறவுள்ளதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.