தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தமிழகத்தில் மகிந்த ராஜபக்ச கலாச்சாரம் மற்றும் வணிகத்துறை மூலம் கால் பதிக்க முயற்சிக்கிறார் அதை தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் ஒருபோதும் அனுமதிக்காது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் கூறியுள்ளார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலை காணொளில் பார்வையிடலாம். http://www.pathivu.com/news/32196/57//d,article_full.aspx
-
- 0 replies
- 370 views
-
-
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கட்டடம் இடிந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டும், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது. சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினை சே…
-
- 3 replies
- 635 views
-
-
என் செருப்பு எங்கே?: இடிபாடுகளில் இருந்து 72 மணிநேரம் கழித்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி! சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவ…
-
- 3 replies
- 612 views
-
-
மன்னவனூரில் வனத்துறை சார்பில், புதிதாக 4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள டிரெக்கிங் பாதையை சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகள். டிரெக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள குடில்கள் கொடைக்கானல் வனப்பகுதியில் 2006-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட டிரெக்கிங் (மலையேறும் நடைப் பயணம்) சுற்றுலா கோடை ஆப் சீசனில் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற் காக வனத்துறை ரூ.37 லட்சம் மதிப் பீட்டில், புதிய டிரெக்கிங் மலையேற்றப் பாதைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சவால்கள் நிறைந்த சாகசம் இந்தியாவில் உள்ள 75 சிறந்த கோடை வாசஸ்தலங்களில் கொடைக் கானல் முக்கிய இடத்தைப் பெற் றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், ஓய்வு நேரங்களில் அந்நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ அதிகார…
-
- 0 replies
- 586 views
-
-
கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சத்தீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று மத்திய அரசு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கச்சத்தீவில் வலைகளை உலர்த்த, மீனவர்கள் ஓய்வெடுக்க உரிமை உள்ளது என்றும், அதே நேரத்தில் கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 1974-1976 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி பாரம்பரிய உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்க…
-
- 6 replies
- 618 views
-
-
அய்யா பழ.நெடுமாறன் அவர்களினால தொடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழர் தேசியக் கட்சியி தொடர்பில் இயக்குனர் கௌதமன் அவர்கள் வழங்கிய நேர்காணல் http://www.pathivu.com/news/32066/57//d,article_full.aspx
-
- 2 replies
- 596 views
-
-
லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், வைகோ, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். லோக்சபா தேர்தலில், போட்டியிட்ட ம.தி.மு.க., கடும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தோல்விக்கு பின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கவிருக்கிறார். அப்போது, கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியினர் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கிறார், வைகோ. கூடவே, நிறைய நிகழ்ச்சிகளிலும் வைகோ பங்கேற்கிறார்.இதன் முதல்கட்டமாக, ஜூலை 3ல், திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்களை வைகோ சந்திக்கிறார். அதன்பின், விருதுநகர் உட்பட பல ஊர்களுக்கும் செல்கிறார…
-
- 4 replies
- 517 views
-
-
பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி உதயம்! ஜூன் 29, 2014 இன்று தஞ்சாவூர் முள்ளிவாய்க்கள் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைந்து பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக தமிழ்தேசிய முன்னணி என்ற பெயருடன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற மண்டபத்தில் ஒன்று திரண்ட தமிழ்தேசிய இயக்கங்களை சார்ந்தவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தினை உருவாக்கியுள்ளார்கள். இது தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி…
-
- 2 replies
- 709 views
-
-
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளையும் தமிழகம் பராமரிக்கிறது. ஆனால் அந்த அணைகளை தமிழகம் உரிமை கோர முடியாது. 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்றார். 4 அணைகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் உம்மன்சாண்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். http://tamil.thehindu.com/tamilnadu/4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%…
-
- 0 replies
- 603 views
-
-
சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா. படம்: இஸ்ரோ சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது, தமிழக ஆளுநர் ரோசய்யா உடன் இருந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் 5 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்…
-
- 0 replies
- 695 views
-
-
செருகுடியில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி. சண்டிகேசுவரர். சோழ மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்களில் சில மட்டுமே இன்னமும் வழிபடும் நிலையில் உள்ளன. பெரும்பான்மையான கோயில்கள் பிற்கால மன்னர்களின் படையெடுப்பு மற்றும் காலவெள்ள த் தில் கரைந்து போய் காணக் கிடைக்காமல் போய்விட்டன. எங்கேயோ எப்போதோ அக் கோயில்களின் சிதிலங்கள் வெளிப் பட்டு அதன் தொன்மைத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு சிதிலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கிடைத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தார். கும்பகோணம் வட்டத்தில் கோவிலாச்சேரிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான செருகுடியில் ஒரு குளக்கரையின் ஓரம் சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்…
-
- 0 replies
- 636 views
-
-
சென்னையின் மைய பகுதியான ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ, மணிக்கூண்டுக்கு அருகில், பரபரப்பான பாரதி சாலையில், காலை 6:00 முதல் 8:30 மணிவரையும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரையும், ஆயிரக்கணக்கான கிளிகள், 30 கி.மீ., தூரம் பயணித்து வந்து ஒரு வீட்டில், பசியார வருகின்றன. பசியாற்றுபவர், கேமரா சேகர். அவரிடம் பேசியதில் இருந்து... *உங்களை பற்றி? நான், கேமராக்களின் காதலன்; பறவைகளின் காவலன். தர்மபுரி, என்னைப் பெற்றெடுத்தது; சென்னை, என்னை வளர்த்தெடுத்தது.பழைய, தனித்துவமான கேமராக்களை தேடி சென்று வாங்கி, சேகரிக்க துவங்கினேன். இப்போது, மகாத்மா காந்தியை படமெடுத்த, ஜெர்மனி கேமரா, இந்தியசீன போரை படமெடுத்த வீடியோ, ஸ்டில் கேமரா, தண்ணீருக்குள் இருந்து படம் எடுக்கும் தனித்துவமான கேமரா, 160 வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை: ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார். 2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா, சட்டத்துறை செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். http://news.vikatan.com/ar…
-
- 4 replies
- 731 views
-
-
டெல்லி: பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்! இந்தி பேசுவோர் 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேரைக் கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர். ஐந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசுவோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர். மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய…
-
- 1 reply
- 452 views
-
-
சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது. சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கத்தரி வெயில்: கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர். ஆண்டுதோறும், 'கத்தரி வெயில்' எனப்படும், அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய…
-
- 2 replies
- 608 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7 ஆம் திகதியன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுவை மூவரும் கொடுத்தனர். ஆனால் 11 ஆண்டுகாலம் கழித்து இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இப்படி தாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த …
-
- 0 replies
- 445 views
-
-
ராசிபுரம்: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சரமாரியாக புகார்கள் கூறி கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் களை எடுக்கும் படலம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக விவசாய பிரிவு அணி செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் எம்.பி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை கட்சியில் இருந்து தி.மு.க. தலைமை சஸ்பெண்ட் செய்தது. மேலும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தது. இந்நிலையில், தி.மு.க. …
-
- 3 replies
- 775 views
-
-
சென்னை: தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும், வாழும் ஈழ மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து தீர்வு காணவேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை இல்லாததால் கலந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995ல் தமிழகத்திலுள்ள முகாமில் பி…
-
- 0 replies
- 563 views
-
-
மதுரை: மதுரை அருகே டாஸ்மாக்கில் விற்ற மதுவை குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்துள்ள காரியாப்பட்டி பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தவர்கள் மலைச்சாமி மற்றும் குருசாமி. இவர்கள் இருவரும் இன்று (23ஆம் தேதி) அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் 'குவார்ட்டர்' ஒன்று வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அருகில் இருந்து ஓய்வுக் கூடத்திற்கு சென்று ஆளுக்கு பாதியாக குடித்து இருக்கிறார்கள். இந்நிலையில், பாதி குவார்ட்டரை குடித்து முடிப்பதற்குள் குருசாமி சம்பவ இடத்திலேயே தொண்டையை பிடித்துக் கொண்டு இறந்து விட்டார். இதையடுத்து, உயிருக்கு போராடிய மலைச்சாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவரு…
-
- 1 reply
- 478 views
-
-
கோவை: கோவை பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தாயம்மாள். இவரது வயது 117. இவரது கணவர் சின்னப்பசெட்டியார். இவரது 83வது வயதில் காலமானார். தாயம்மாளுக்கு 7 ஆண், 3 பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது, இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாயம்மாளின் முதல் 3 மகன்கள் காலமாகி னர். தற்போது, தாயம்மாளுக்கு 175 பேரக் குழந்தைகள் உள்ளனர். தாயம்மாள் நேற்று முன்தினம் காலமானார். தாயம்மாளின் உடல் ஆத்துப்பாலம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=97496
-
- 3 replies
- 453 views
-
-
ஈரோடு மகளிர் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் நடிகர் வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி உள்பட 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கர் 97 சென்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை 2012-ம் ஆண்டு குமரவேல், தனது மகள்கள் ஈரோடு லட்சுமிநகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கவுசல்யா, வித்யா, ரம்யா ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். இந்த நிலத்தில், 38 சென்ட் நிலத்தை 2…
-
- 0 replies
- 860 views
-
-
வைகோ | கோப்புப் படம் இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்றும், தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் …
-
- 1 reply
- 730 views
-
-
சென்னை: கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும் படி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர…
-
- 1 reply
- 576 views
-
-
பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இறுதி வாதம் இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கில் கூடுதல் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதைத் தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்களின் இயக்குநர் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, 5 …
-
- 0 replies
- 490 views
-