தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
‘ஒரு காலத்துல நூற்றுக்கணக்கான பறவைகள் இந்தக் கரிசல் மண்ணில் சுற்றி திரிஞ்சது. ஆனா, இன்னைக்கு எதையும் பார்க்க முடியல. விளைநிலத்தை அழிச்சு, விவசாயத்துக்கு பாடை கட்டிட்டோம். மழையும் இல்லாம போயிருச்சு. மனுஷன் வாழ்க்க மாறும்போது பறவைகள் வாழ்க்கையும் மாறத்தானே செய்யும்!’’ ஆதங்கத்தோடும் வருத்தத்தோடும் மீசை தடவிப் பேசுகிறார் சோ.தர்மன். கரிசல் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் என எழுதியிருக்கும் இவர், ‘காணாமல் போன கரிசல் காட்டுப் பறவைகள்’ என்கிற நூலை இப்போது எழுதியிருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் இந்த நூலில், தான் பார்த்த 68 பறவைகளின் முழு விவரணைகளை விளக்கமாகப் பதிவு செய்துள்ளார். ‘‘முன்னாடி இந்தக் கரிசல் காட்டு…
-
- 0 replies
- 531 views
-
-
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவரது உடல் இன்று இரவு சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. இளம் வயது முதலே இராணுவத்தில் பணியாற்றுவதை லட்சியமாக கொண்டிருந்தவராம் முகுந்த் வரதராஜன். தெற்கு காஷ்மீரின் சோஃபியான் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமையன்று இரவில் நடந்த மோதலில் 44வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். இவருடன் வேறு ஒரு வீர்ரும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அன்று காலையில் இடிக்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடுகளில் ர…
-
- 13 replies
- 1.3k views
-
-
திருச்சி: லோக்சபா தேர்தலில் சற்று, "வீக்'கான தொகுதிகள் நிலவரம் குறித்து உளவுத்துறையினர் அளித்த அறிக்கையுடன், முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளதால், அ.தி.மு.க.,வினர் கிலி அடைந்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த, 24ம் தேதி நடந்தது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில் துவங்கி பிரச்சாரம் வரை, அனைத்துக்கட்சிகளைக் காட்டிலும், அ.தி.மு.க., தான் முதன்மை வகித்தது. விலையில்லா பொருட்கள் விநியோகம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடச் செய்தது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு போன்றவற்றால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை தமிழகத்தில் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருதினார். ஆனால், தமிழகத்தில் முக்கியமான, தி.மு.க.,…
-
- 0 replies
- 4.2k views
-
-
'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து இந்தியாவிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் ம…
-
- 3 replies
- 709 views
-
-
7 தமிழர் விடுதலை வழக்கு - கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: கருணாநிதி. சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்: கேள்வி: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை அரசியல் சாசன பெஞ்சுக்குமாற்றி உள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? ப தில்: இவைகள் எல்லாம் வழக்கு விஷயங்கள். இவைகள் நீதிமன்ற வ…
-
- 2 replies
- 552 views
-
-
7 பேர் விடுதலை குறித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: வைகோ கவலை [saturday, 2014-04-26 11:45:17] முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்கள் வழக்கில் நேற்று (25ஆம் தேதி) தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, மேற்கூறிய வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக வழங்கி உள்ள தீர்ப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஏனெனில், இந்த ஏழு பேருமே ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் துளியும் தொடர்பு இல்லாத குற்றம் அற்ற நிரபராதிகள் ஆவர். ஏறத்…
-
- 0 replies
- 353 views
-
-
ராமேஸ்வரம்: பாம்பன் ரோடு பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து, நீல வர்ண பெயின்ட் பூசப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பாம்பன் ரோடு பாலம், ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீரமைக்கப்படுகிறது. இதற்காக 18 கோடியே 56 லட்ச ரூபாயில் கடந்தாண்டு ஜன. 28 தேதி, பழுது நீக்கும் பணி துவங்கியது. பாலம் தூண்களில் இருந்த விரிசல், சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்கப்பட்டது. பாலம் அடிபகுதி மற்றும், தூண்கள் இடையில் இருந்த பழைய பேரிங்குகள் அகற்றி, புதிய பேரிங்குகள் பொருத்தப்பட்டது. ஏற்கனவே, பாலத்தில் பூசப்பட்டு இருந்த "பிங்' வர்ணத்திற்கு பதிலாக, உப்புக் காற்றில் வர்ணம் மாறாத வகையில், ரசாயனம் கலந்த நீல வர்ண பெயின்ட் பூசும் பணி, சில மாதங்களாக நடைபெறுகிறது. தற்போது பா…
-
- 0 replies
- 487 views
-
-
சேலம்: காதலிக்க மறுத்த மாணவியை நிர்வாணமாக்கி அதிமுக பிரமுகர் ஒருவர் தாக்குதல் நடத்திய கொடுமை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே நிகழ்ந்துள்ளது. தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்த கந்தன் என்பவரின் மகள் அகிலா (16, பெயர் மாற்றம்). இவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க கிளை செயலாளருமான விஸ்வநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (எ) சாமிநாதன் (17). இவர் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படிக்கிறார். இதனிடையே, அகிலாவை சாமிநாதன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அகிலா பள்ளிக்கு சென்று வரும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் அக…
-
- 0 replies
- 637 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட 19 பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை …
-
- 0 replies
- 428 views
-
-
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு: உடனுக்குடன் இங்கே.... -நான் யாரையும் ஆதரிக்கவில்லை- அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி -ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கினை பதிவு செய்தார் -புதுச்சேரியில் வாக்களித்தார் அமைச்சர் நாராயணசாமி -தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் வாக்குப்பதிவு செய்ய வந்தார் -ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் கமல்ஹாஸன் -கெளதமியுடன் சென்று வாக்களித்தார் கமல்ஹாசன் -திருவான்மியூர் வாக்கு்ச சாவடியில் ஷாலினியுடன் சென்று ஓட்டுப் போட்டார் அஜீத் -வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு -தமிழக வாக்குச்சாவடிகள் சிலவற்றில் வாக்குப் பதிவு தாமதமாக தொடக்கம் -வாக்களிக்க முதல் ஆளாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் …
-
- 15 replies
- 1.4k views
-
-
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் உள்பகுதியில் பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி வெளியே வரும் இடம் உள்ளது. அங்குள்ள மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் 10க்கு 4 அளவுடையது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது.உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில் காலை 6 மணிக்கு மேல்தான் விமானங்கள் வரத்தொடங்கும். இதனால் அந்த இடத்தில் பயணிகளோ, ஊழியர்களோ இல்லை. இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் அவசர அவசரமாக வந்து இடிபாடுகளை அகற்றினர். விமான நிலைய உயரதிகாரிகளும் வந்து ஆய்வு செய்தனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2015…
-
- 6 replies
- 872 views
-
-
இந்தியக் குடியரசின் 16ஆவது மக்களவைத் தேர்தலின் தமிழகத்துக்கான வாக்கெடுப்பு நாளை (24) நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்கெடுப்புப் பணிகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகின. இதனடிப்படையில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்குமாக வாக்கெடுப்புகள் நாளையதினம் 60,817 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. (பாண்டிச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்சேரி தனி இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக தேர்தலில் அதிக ஆசனங்களைக் குவிக்குமென கருத்துக் கணிப்புகள்…
-
- 0 replies
- 360 views
-
-
சென்னை: இந்தியாவின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி இல்லை, இந்த 'லேடி' தான் என்று ஜெயலலிதா பெருமிதத்துடன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ''தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை சுதந்திர இந்தியா இதுவரை சந்தித்ததில்லை. தமிழர் விரோதப் போக்குடன் செயல்பட்ட மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அளித்த 178 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள…
-
- 1 reply
- 593 views
-
-
சென்னையில வீடு வாங்குறது குதிரைக்கொம்பா மாறிட்டு வருது. அபார்ட்மென்ட் வீடுகளோட விலை எப்பவுமே ஏறுமுகமாத்தான் இருக்கு. இந்த வாரத்தில ஒவ்வொரு ஏரியாவிலேயும் அபார்ட்மென்ட், சதுர அடிக்கு எவ்வளவு விலை போகுதுங்கிற தகவல் இதோ... ஏரியா விலை (ஒரு சதுர அடிக்கு) பெசன்ட் நகர் Q.11450 Q.15900 ஜிஎஸ்டி சாலை Q.3100 Q.3600 கூடுவாஞ்சேரி Q.2800 Q.3250 ஹஸ்தினாபுரம் Q.3750 Q.4150 கீழ்க்கட்டளை Q.4400 Q.4950 நங்கநல்லூர் Q.5750 Q.6600 படூர் Q.3400 Q.4000 பம்மல் Q.3500 Q.4000 பெருங்களத்தூர் Q.3550 Q.4200 பொத்தேரி Q.3050 Q.3400 சேலையூர் Q.3400 Q.4200 செம்பா…
-
- 0 replies
- 700 views
-
-
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவ…
-
- 0 replies
- 502 views
-
-
தமிழர் விரோத போக்கு... உங்க ஓனரே வந்தாலும் பேட்டி தர முடியாது: "டைம்ஸ் நவ்"க்கு வைகோ பதிலடி!! விருதுநகர்: தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதால் டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்கு பேட்டியளிக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் மதிமுக ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்துள்ள தகவல்: வைகோ நேற்று விருதுநகரில் இருந்து சூரன்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இடையில் வழிமறித்த டைம்ஸ் நவ், பத்திரிகை பெண் நிருபர் வைகோவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பேட்டியளிக்க வைகோ மறுப்பு தெரிவித்துவிட்டார். தொலைக்காட்சி உரிமையாளரே வைகோவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள…
-
- 0 replies
- 873 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் வெளியாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்று வரும் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் 25 ஆம் திகதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். …
-
- 0 replies
- 468 views
-
-
சென்னை: பணத்திற்காக கட்சியை கார்த்திக் விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ள அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியினர், கார்த்திக்கைவிட கருணாஸ் சிறந்த சமுதாய தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளனர். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ''நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இருந்து நாங்கள் பணியாற்றியது சமுதாய மக்களை திறம்பட வழி நடத்துவதற்காதான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினோம். அதில், எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கொடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை முன்வந்தது. ஆனால், நிற…
-
- 5 replies
- 1k views
-
-
சென்னை: ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. …
-
- 0 replies
- 569 views
-
-
புலிகளை அழித்ததால் இந்தியாவுக்கு என்ன லாபம்??
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகர் ரஜினிகாந்தை, வீட்டில் சந்தித்தார் நரேந்திர மோடி!! சென்னை: சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை. தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானத்…
-
- 14 replies
- 1.6k views
-
-
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான். 160 அடி ஆழம் குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்…
-
- 0 replies
- 391 views
-
-
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். மாலை 4 மணிக்கு சிறுவன் மீட்பு மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் (ரோபோ) மூலம் சிறுவன் மாலை 4 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டான். சிறுவன் மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கருணாகரன், "மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் மூலம் சிறுவன் மீட்கப்பட்டான். தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப்பண…
-
- 5 replies
- 1.7k views
-
-
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசியுள்ளார். கடந்த 6ஆம் தேதி நடந்த இந்த சந்திப்பு குறித்த படத்தை ம.தி.மு.க தற்போது வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று மாலை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த்தை வைகோ சந்தித்து பேசியதாக ம.தி.மு.க இரண்டு பேர் ஒன்றாக இருக்கும் படத்தை இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இல்லம் சென்றார் என்றும், அப்போது, ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு …
-
- 0 replies
- 474 views
-
-
இதற்கு மேலும் பேசினால்..; கருணாநிதிக்கு வைகோ எச்சரிக்கை! கூட்டணி என்பதற்காக எல்லாவற்றுக்கும் உடன்பட்டு போக மாட்டோம். எங்கே உடன்பட வேண்டுமோ அங்கே மட்டும் உடன்படுவோம் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ சனிக்கிழமை பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நமக்கான நீதி கிடைக்கும். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு …
-
- 1 reply
- 575 views
-