தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, கார் மற்றும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதால் அதன் பின்னால் வந்த கார் பேருந்து மீது மோதியிருக்கிறது. அதே நேரத்தில் காரின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது மோதி இருக்கிறது. தனியார் பேருந்து, கார், லாரி அடுத்தடுத்து மோதிக் கொண்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள, செஞ்சியில் இருந்து தாம்பரத்துக்கு காரில் வந்த 6 பேரும் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். http://news.vikatan.com/article.php?module…
-
- 0 replies
- 429 views
-
-
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாகவும் தெரிகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது. காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர். ரயில் பெட்டிகள் எஸ்.…
-
- 48 replies
- 3.1k views
-
-
சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி! சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு பார்த்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த கூற்றை தமிழக அரசு நிராகரித்து விட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸார் யாரையும் இதுவரை பிடித்து வைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தீவிரவாத தாக்குதலாக பார்த்தால் அதிமுக அரசின் மீதான இமேஜ் போய் விடும் என்ற பயத்தால் தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்பட்டு வருவ…
-
- 3 replies
- 691 views
-
-
சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குகிறது. தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உக்கிரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த ஆண்டில் பல மாவட்டங்களில் கடந்த மாதம் தொடக்கத்திலேயே வெயில் 100 டிகிரியை எட்டியது. கடந்த மாதம் இறுதியில் வெயில் 107 டிகிரி பதிவானது. எனவே, மே மாதத்தில் வெயில் 112 டிகிரி வரை உயர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 526 views
-
-
புதுடெல்லி: 2ஜி வழக்கு வழக்கில் வரும் 26ஆம் தேதி ஆஜராகுமாறு ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடியை தந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து அமலாக்கத்துறை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 10 பேர் மீதும் மற்றும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, …
-
- 0 replies
- 333 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது நாளாக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இறுதி வாதம் புதன்கிழமையும் தொடர்ந்தது. அப்போது சுதாகரன் திருமணத்திற்கு பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை. ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் தனது இறுதிவாதத்தை தொடர்ந்த பவானி சிங், சென்…
-
- 0 replies
- 685 views
-
-
சென்னை: சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள கருணாநிதி, தமிழகத்தில் செயல்படும் அரசு இருக்கிறதா? முதலமைச்சர் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டு வெடித்து, சிலர் இறந்து விட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற என்னுடைய விழைவினையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் ப…
-
- 0 replies
- 332 views
-
-
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிதாரப் பூச்சு இன்றி நேரடியாகச் சொல்லும் ஆண்மையாளன் என்று சொல்லப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றல் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். 1950-ல் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர். http://www.dinamani.com/latest_news/2014/02/23/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D…
-
- 1 reply
- 655 views
-
-
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரு நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநில உளவு பிரிவு காவல்துறையினரும், கியூ பிரிவு காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர் உசேன் என்பவர் மண்ணடி பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜாகீர் உசேனை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து சென்னை மற்றும் பெங…
-
- 4 replies
- 610 views
-
-
லோக்சபா தேர்தலில், கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தவர்கள், கட்சி கொடுத்த பணத்தை அமுக்கியவர்கள் குறித்த விசாரணை, அரசியல் கட்சியினர் மத்தியில் தீவிரமாகியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல முனைப் போட்டி நிலவியது; முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சியின் ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி களமிறங்கியிருந்ததால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு ஒத்துழைப்பையும் கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்தனர்.இதுவரை எந்த தேர்தலிலும் தராத அளவுக்கு 'பூத் கமிட்டி'களுக்கும், நிர்வாகிகளுக்கும் பணம் வாரி வழங்கப்பட்டது. வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சியும் நடந்தது; தொகுதிக்கு 20 கோடியிலிருந்து 30 கோடி ரூபாய் வரை பணம் விநி…
-
- 1 reply
- 589 views
-
-
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வரும் நிலையில், மே 1 முதல் சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் பல மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பல மணி நேர மின் வெட்டு நிலவி வந்தது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக மின் வெட்டு குறைந்திருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், வழக்கம் போல சென்னையில் 2 மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பல மணி நேர மின்வெட்டும் அமலுக்கு வருகிறது. மற்ற மாவட்டங்களில் எத்தனை மணி நேரம்? மற்றமாவட்டங்களில் எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பதை மின்வார…
-
- 0 replies
- 583 views
-
-
‘ஒரு காலத்துல நூற்றுக்கணக்கான பறவைகள் இந்தக் கரிசல் மண்ணில் சுற்றி திரிஞ்சது. ஆனா, இன்னைக்கு எதையும் பார்க்க முடியல. விளைநிலத்தை அழிச்சு, விவசாயத்துக்கு பாடை கட்டிட்டோம். மழையும் இல்லாம போயிருச்சு. மனுஷன் வாழ்க்க மாறும்போது பறவைகள் வாழ்க்கையும் மாறத்தானே செய்யும்!’’ ஆதங்கத்தோடும் வருத்தத்தோடும் மீசை தடவிப் பேசுகிறார் சோ.தர்மன். கரிசல் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் என எழுதியிருக்கும் இவர், ‘காணாமல் போன கரிசல் காட்டுப் பறவைகள்’ என்கிற நூலை இப்போது எழுதியிருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் இந்த நூலில், தான் பார்த்த 68 பறவைகளின் முழு விவரணைகளை விளக்கமாகப் பதிவு செய்துள்ளார். ‘‘முன்னாடி இந்தக் கரிசல் காட்டு…
-
- 0 replies
- 534 views
-
-
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவரது உடல் இன்று இரவு சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. இளம் வயது முதலே இராணுவத்தில் பணியாற்றுவதை லட்சியமாக கொண்டிருந்தவராம் முகுந்த் வரதராஜன். தெற்கு காஷ்மீரின் சோஃபியான் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமையன்று இரவில் நடந்த மோதலில் 44வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். இவருடன் வேறு ஒரு வீர்ரும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அன்று காலையில் இடிக்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடுகளில் ர…
-
- 13 replies
- 1.3k views
-
-
திருச்சி: லோக்சபா தேர்தலில் சற்று, "வீக்'கான தொகுதிகள் நிலவரம் குறித்து உளவுத்துறையினர் அளித்த அறிக்கையுடன், முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளதால், அ.தி.மு.க.,வினர் கிலி அடைந்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த, 24ம் தேதி நடந்தது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில் துவங்கி பிரச்சாரம் வரை, அனைத்துக்கட்சிகளைக் காட்டிலும், அ.தி.மு.க., தான் முதன்மை வகித்தது. விலையில்லா பொருட்கள் விநியோகம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடச் செய்தது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு போன்றவற்றால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை தமிழகத்தில் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருதினார். ஆனால், தமிழகத்தில் முக்கியமான, தி.மு.க.,…
-
- 0 replies
- 4.2k views
-
-
'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து இந்தியாவிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் ம…
-
- 3 replies
- 711 views
-
-
7 தமிழர் விடுதலை வழக்கு - கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: கருணாநிதி. சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்: கேள்வி: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை அரசியல் சாசன பெஞ்சுக்குமாற்றி உள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? ப தில்: இவைகள் எல்லாம் வழக்கு விஷயங்கள். இவைகள் நீதிமன்ற வ…
-
- 2 replies
- 554 views
-
-
7 பேர் விடுதலை குறித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: வைகோ கவலை [saturday, 2014-04-26 11:45:17] முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்கள் வழக்கில் நேற்று (25ஆம் தேதி) தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, மேற்கூறிய வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக வழங்கி உள்ள தீர்ப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஏனெனில், இந்த ஏழு பேருமே ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் துளியும் தொடர்பு இல்லாத குற்றம் அற்ற நிரபராதிகள் ஆவர். ஏறத்…
-
- 0 replies
- 354 views
-
-
ராமேஸ்வரம்: பாம்பன் ரோடு பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து, நீல வர்ண பெயின்ட் பூசப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பாம்பன் ரோடு பாலம், ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீரமைக்கப்படுகிறது. இதற்காக 18 கோடியே 56 லட்ச ரூபாயில் கடந்தாண்டு ஜன. 28 தேதி, பழுது நீக்கும் பணி துவங்கியது. பாலம் தூண்களில் இருந்த விரிசல், சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்கப்பட்டது. பாலம் அடிபகுதி மற்றும், தூண்கள் இடையில் இருந்த பழைய பேரிங்குகள் அகற்றி, புதிய பேரிங்குகள் பொருத்தப்பட்டது. ஏற்கனவே, பாலத்தில் பூசப்பட்டு இருந்த "பிங்' வர்ணத்திற்கு பதிலாக, உப்புக் காற்றில் வர்ணம் மாறாத வகையில், ரசாயனம் கலந்த நீல வர்ண பெயின்ட் பூசும் பணி, சில மாதங்களாக நடைபெறுகிறது. தற்போது பா…
-
- 0 replies
- 489 views
-
-
சேலம்: காதலிக்க மறுத்த மாணவியை நிர்வாணமாக்கி அதிமுக பிரமுகர் ஒருவர் தாக்குதல் நடத்திய கொடுமை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே நிகழ்ந்துள்ளது. தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்த கந்தன் என்பவரின் மகள் அகிலா (16, பெயர் மாற்றம்). இவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க கிளை செயலாளருமான விஸ்வநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (எ) சாமிநாதன் (17). இவர் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படிக்கிறார். இதனிடையே, அகிலாவை சாமிநாதன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அகிலா பள்ளிக்கு சென்று வரும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் அக…
-
- 0 replies
- 638 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட 19 பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை …
-
- 0 replies
- 430 views
-
-
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு: உடனுக்குடன் இங்கே.... -நான் யாரையும் ஆதரிக்கவில்லை- அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி -ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கினை பதிவு செய்தார் -புதுச்சேரியில் வாக்களித்தார் அமைச்சர் நாராயணசாமி -தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் வாக்குப்பதிவு செய்ய வந்தார் -ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் கமல்ஹாஸன் -கெளதமியுடன் சென்று வாக்களித்தார் கமல்ஹாசன் -திருவான்மியூர் வாக்கு்ச சாவடியில் ஷாலினியுடன் சென்று ஓட்டுப் போட்டார் அஜீத் -வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு -தமிழக வாக்குச்சாவடிகள் சிலவற்றில் வாக்குப் பதிவு தாமதமாக தொடக்கம் -வாக்களிக்க முதல் ஆளாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் …
-
- 15 replies
- 1.4k views
-
-
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் உள்பகுதியில் பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி வெளியே வரும் இடம் உள்ளது. அங்குள்ள மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் 10க்கு 4 அளவுடையது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது.உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில் காலை 6 மணிக்கு மேல்தான் விமானங்கள் வரத்தொடங்கும். இதனால் அந்த இடத்தில் பயணிகளோ, ஊழியர்களோ இல்லை. இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் அவசர அவசரமாக வந்து இடிபாடுகளை அகற்றினர். விமான நிலைய உயரதிகாரிகளும் வந்து ஆய்வு செய்தனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2015…
-
- 6 replies
- 875 views
-
-
இந்தியக் குடியரசின் 16ஆவது மக்களவைத் தேர்தலின் தமிழகத்துக்கான வாக்கெடுப்பு நாளை (24) நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்கெடுப்புப் பணிகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகின. இதனடிப்படையில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்குமாக வாக்கெடுப்புகள் நாளையதினம் 60,817 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. (பாண்டிச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்சேரி தனி இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக தேர்தலில் அதிக ஆசனங்களைக் குவிக்குமென கருத்துக் கணிப்புகள்…
-
- 0 replies
- 362 views
-
-
சென்னை: இந்தியாவின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி இல்லை, இந்த 'லேடி' தான் என்று ஜெயலலிதா பெருமிதத்துடன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ''தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை சுதந்திர இந்தியா இதுவரை சந்தித்ததில்லை. தமிழர் விரோதப் போக்குடன் செயல்பட்ட மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அளித்த 178 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள…
-
- 1 reply
- 597 views
-
-
சென்னையில வீடு வாங்குறது குதிரைக்கொம்பா மாறிட்டு வருது. அபார்ட்மென்ட் வீடுகளோட விலை எப்பவுமே ஏறுமுகமாத்தான் இருக்கு. இந்த வாரத்தில ஒவ்வொரு ஏரியாவிலேயும் அபார்ட்மென்ட், சதுர அடிக்கு எவ்வளவு விலை போகுதுங்கிற தகவல் இதோ... ஏரியா விலை (ஒரு சதுர அடிக்கு) பெசன்ட் நகர் Q.11450 Q.15900 ஜிஎஸ்டி சாலை Q.3100 Q.3600 கூடுவாஞ்சேரி Q.2800 Q.3250 ஹஸ்தினாபுரம் Q.3750 Q.4150 கீழ்க்கட்டளை Q.4400 Q.4950 நங்கநல்லூர் Q.5750 Q.6600 படூர் Q.3400 Q.4000 பம்மல் Q.3500 Q.4000 பெருங்களத்தூர் Q.3550 Q.4200 பொத்தேரி Q.3050 Q.3400 சேலையூர் Q.3400 Q.4200 செம்பா…
-
- 0 replies
- 704 views
-