தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு இடம்: சென்னை தேனாம்பேட்டை - அண்ணா சாலை | படம்: ம.பிரபு போட்டோ கேலரி மழை தழுவிய அண்ணா சாலை சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகலில் இருந்தே பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டன. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் துண்டிப்பும் ஏற்பட்டன. …
-
- 0 replies
- 440 views
-
-
சீமானுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது அரசு அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பேட்டியளித்த சீமான், அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக அவதூறு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கு விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/சீமானுக்கு-எதிராக-அவதூறு/
-
- 0 replies
- 537 views
-
-
காவிரி- டெல்டா பகுதிகள் சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்- பழனிசாமி காவிரி- டெல்டா பகுதிகள் சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எடப்பாடி பழனிசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கால்நடை வளர்ப்பது அதிகம் இலாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும். இதற்கான தனிச்ச…
-
- 0 replies
- 342 views
-
-
உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ... தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டு சேரும் என்று எதிர்பார்த்து இலவு காத்து வந்த தி.மு.க, பா.ஜ.க இன்னும் பிற கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியுடன் அது இணைந்ததையடுத்து, அந்த கூட்டணியை தற்போது விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒருபுறமிருக்க கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளுக்கு ஒரு கருத்தைக் கூறி, கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணி அமைத்ததே மாபெரும் சாதனையாக நினைத்து, மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார். மிகவும் உற்சாகத…
-
- 0 replies
- 703 views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா! சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 15 ம் தேதியன்றே, ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் ம…
-
- 0 replies
- 409 views
-
-
மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்றம் தான் அனுமதியளிக்க வேண்டும் - இந்திய மருத்துவ கவுன்சில் பதில் புதுடெல்லி, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திமுக, அதிமுக, தமிழக அரசு, பாமக, திக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட…
-
- 1 reply
- 464 views
-
-
நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர் ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் டாக்டர் கண்ணன் அம்பலத்தின் அனுபவங்கள் மற்றும் கம்பூர் ஊராட்சியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்... டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்! "மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021 கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் `நாம் தமிழர் கட்சி’ இந்த முறை என்ன செய்யப்போகிறது? தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆட்டங்களைத் தொடங்கிவிட்டன. பெரிய கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கலாம் என்பது முதல், தங்கள் கட்சிகளில் யாருக்கு சீட்டுக் கொடுக்கலாம் என்பதுவரை முதற்கட்ட முடிவுகளை எடுத்துவிட்…
-
- 1 reply
- 685 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்…
-
- 0 replies
- 684 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார். மரக்காணம் அரு…
-
- 0 replies
- 336 views
-
-
“அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ 'மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுகிறது' என்று திடீரென அறிவித்து அதிரடி அரசியல் காட்டினார் வைகோ. 'அ.தி.மு.க-வின் தலைமையோடு வைகோவுக்கு இருக்கும் நெருக்கம்தான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதற்கு காரணம்' என்றப் பேச்சுக்கள் பலமாக அடிப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனும் வைகோவும் நண்பர்கள் என்பதால் இந்த கருத்தின் உறுதித்தன்மைக்கு வலுசேர்த்தது. அ.தி.மு.க தரப்பிலோ அல்லது ம.தி.மு.க கட்சியினரோ, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்த எந்தத் தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் கவிஞர் காசி ஆனந்…
-
- 1 reply
- 506 views
-
-
ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைதேவை: தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் 73 Views “ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல்கள…
-
- 2 replies
- 363 views
-
-
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறி…
-
- 0 replies
- 501 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார். ‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம். ‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
பன்னீர்செல்வம் அணியில் இணைந்த ராஜகண்ணப்பன் திடீர் சபதம்! முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று இணைந்தார். அப்போது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெற்றவுடன், அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம்' என சபதம் எடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. சசிகலா அணி- பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்தது. இதில், சசிகலா அணியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருந்துவந்தார். இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திடீரென வருகைதந்தார். பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய அவர், அ.தி.மு.க புரட்சித்தலைவி …
-
- 0 replies
- 360 views
-
-
7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பிரமாண்ட ஏற்பாட்டில் கருணாநிதி வைர விழா தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. 13 முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவில் இவர் மட்டுமே உள்ளார். தமிழக சட்டச…
-
- 0 replies
- 373 views
-
-
சென்னையில் 25-9-13 அன்று காலை 10 மணிக்கு வடசென்னை மாவட்ட பகுதி ஆவடியில் தொடங்கி அம்பத்தூர் பாடி வில்லிவாக்கம் பெரம்பூர் திரு.வி.க நகர் புரசை தானா தெரு திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் நிறைவடைந்தது இக் கூட்டதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கோவை இராமகிருட்டிணன் கழக துணை பிரசார செயலாளர் சினி விடுதலை அரசு குரு சரவணன் ஆகியோர் உரையாற்றினார். இதில் வடக்கு மண்டல அமைப்பாளர் அண்ணாமலை வடசென்னை மாவட்ட செயலாளர் ஜனார்தனன் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் அருள் ஆவடி பகுதி அமைப்பாளர் நாகராஜ் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் துணை தலைவர் ரவிசந்திரன் சென்னை மாவட்ட இணையதள பொருபாளர் குரு சரவணன் உள்ளிட்ட கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்சென்ற இந்த ஊர்திபயணம் சென்ற…
-
- 1 reply
- 586 views
-
-
$ பெங்களூரு மாநகராட்சியின் 51-வது மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழரான சம்பத் ராஜ் மேயராகி இருப்பதால் கர்நாடகாவில் தமிழ் அமைப்பினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக மேயர் பதவியை வகித்த பத்மாவதியின் பதவி காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் மேயர் (எஸ்.சி), துணை மேயர் (பொது) பதவிக்கான தேர்தல் நேற்று (வியாழக…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் (நேர்காணல்:- ஆர்.ராம்) மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு, அமிர்தலிங்கத்தை …
-
- 1 reply
- 689 views
-
-
'அம்மா'வுக்காக அனைத்து தியேட்டர்களும் இன்று மூடல்- மதுரையில் உணவகங்களும்.. சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து த…
-
- 0 replies
- 592 views
-
-
மேலதிக தகவல்களுக்கு : http://epaper.newindianexpress.com/375047/The-New-Indian-Express-Dharmapuri/15-11-2014?show=touch#page/2/1 Niyas Ahmed https://m.facebook.com/photo.php?fbid=4855658884826&id=1697724902&set=a.1471488722687.45083.1697724902&source=48
-
- 2 replies
- 570 views
-
-
தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது... மத்திய சட்ட அமைச்சர் Published By: RAJEEBAN 29 MAR, 2023 | 04:33 PM சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரி விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தங்களது மாநில உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நா…
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார். இந்த 90 வருஷ வாழ்க்கையின் ஊடே பார்க்கும் போது, ஸ்ரீவைகுண்டம், ராமசாமி, கருப்பாயி இந்தப் பெயர்களெல்லாம் இன்றைக்கு உங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு என்ன? இந்தப் பேரெல்லாம் இல்லைன்னா, இன் னைக்கு நான் இங்கெ உட்கார்ந்துருப்பேனானு தெரியல. ஒரு மனுசன் உருவாக்கத்துல தாய் - தகப்பன், குடும்பம், ஊரு எல்லாத்துக்கும் பங்கிருக்கு. ஸ்ரீவைகுண்டம…
-
- 0 replies
- 434 views
-
-
கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி மு.க.அழகிரி | கோப்புப் படம். சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார். இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை 1…
-
- 7 replies
- 2.4k views
-