தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து கேலி செய்த பத்திரிகைகள் மீது லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கடுமையாக சாடினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார். கருணாநிதியை சந்தித்து விட்டு வந்ததை, "வாசமில்லா மலர் இது.. வசந்ததைத் தேடுது..." என்று டி.ராஜேந்தர் அவரது 'ஒருதலை ராகம்' படப்பாடலையே பாடுவது போல் பத்திரிகை ஒன்று கேலி செய்திருந்தது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் வாசமில்லாத மலரா...வசந்ததைத் தேடி அலைகிறேனா?" என்று காட்டமாக கேட்டவர், "கருணாநிதியின் சந்தி்ப்பு அரங்கேறியது ஒரு காட்சி. அதற்கு பிறகு நடக்கப்போவதை பற்றியெல்லாம் உங்களுக்கு சொல்வே…
-
- 0 replies
- 549 views
-
-
மதுரை: தி.மு.க. தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் கூறவில்லை என்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ள மு.க.அழகிரி கூறியுள்ளார். தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, மதுரையில் உள்ள தமது வீட்டில் செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது அவரிடம்,"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று கூறியிருந்தீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "சரியாக படிக்காத மாணவனை நீ உருப்பட மாட்டாய் என்று ஆசிரியர் சொல்வதைப்போல்ததான், அறிவுரையாக தி.மு.க தோற்றுவிடும் என்று சொன்னேன். எப்படி மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் கூறுகிறாரோ, அதுபோலத்தான் தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூறினேன். ஆனால் நீங்கள்தா…
-
- 1 reply
- 271 views
-
-
திருச்சி: திருச்சி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரவு வரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் சாலையில் உள்ளது சத்யம் ஓட்டல். இந்த ஓட்டல் புதுக்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்திக்கு சொந்தமானது. இதன் தரைதளத்தில் பனாமா ரெஸ்டாரென்டும், இரண்டாவது, மூன்றாவது தளங்களில் 40 அறைகள் உள்ளன. 4வது தளத்தில், 2 கூட்ட அரங்கு அறைகள் உள்ளது. 4வது தளத்தில் ஜூனியர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். மற்றொரு ஹாலில், 50 பேர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இது தவிர ஓட்டலில் உள்ள…
-
- 1 reply
- 347 views
-
-
அரியலூர்: வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண்ணும், தலித் வாலிபரின் காதல் விவகாரத்தால் வீடு தீவைக்கப்பட்டுள்ளது இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்காக மாற தொடங்கியுள்ளது. தர்மபுரி சம்பவம் போலவே மீண்டும் அரியலூர் மாவட்டத்திலும் தலை எடுக்க தொடங்கியுள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகள் தமிழரசி. இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். பாலமுருகனும், தமிழரசியும் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர…
-
- 0 replies
- 928 views
-
-
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தியுள்ளார். அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வக…
-
- 0 replies
- 455 views
-
-
சென்னை: மு.க.அழகிரியை நீக்கியதால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படாது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கட்சியிலுள்ள செயல்வீரர்கள் சிலரை கட்சி பணியாற்ற வேண்டாம் எனக்கூறி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறி தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''மு.க.அழகிரி நீக்கப்பட்டதால் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது. தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி மு.க.அழகிரிக்காகவே ஏற்படுத்தப்பட்டது. அந்த பதவி வேறு யாருக்கும் வழங்கப்படமாட்டாது. மு.க.அழகிரி நீக்கம் நாடாளுமன்றத் தேர்தலில…
-
- 6 replies
- 639 views
-
-
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களின் மகள்களை வீட்டோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. வேலைக்கு சென்று பெற்றோரை காப்பாற்றும் மகளை கேலி செய்தே கொடுமைபடுத்துகின்றனர் அத்தெருவில் வசிக்கும் மக்கள். சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் காமாட்சியம்மமன் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கும். அவர்களது மூத்த மகளுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. 15 வயதாகும் இரண்டாவது மகளுக்கு அதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பு இல்லை. பெற்றோரும் மூத்த மகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க, இளைய மகள் மட்டும் அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தையே காப்பாற்றி வருகிறார். ஆனால், சிறுமி வேலைக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அந்தப் …
-
- 0 replies
- 247 views
-
-
தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டிலேயே கழித்த கெஜ்ரிவால் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா ஆகியோர் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, டென்மார்க் பெண் கற்பழிப்பில் சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் மோதல் உருவாகி உள்ளது. இதில் 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே உடனடியாக ஏற்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டில…
-
- 0 replies
- 378 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, தம்மை பரோலி்ல் விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கில், வேலூர் சிறைத்துறை பதில் அளி்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூக்குத் தண்டனை கைதியான அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், 90 வயதான தனது தந்தை சங்கர நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்க, ஒரு மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ம…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் அதிகமான மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி அங்காடி, பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே, நீலகிரி அங்காடி நிர்வாகத்திடம், இலங்கை பொருட்களை விற்கவேண்டாம். அவை இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது. அதனால், அப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம்' என்று இலங்கை புறக்கணிப்பு குழு பலமுறை கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும், அங்கு தொடர்ந்து இலங்கைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அதனை கண்டிக்கும் வகையிலும் அந்நிர்வாகத்திற்கு இறுதி எச்சரிக்கை க…
-
- 1 reply
- 456 views
-
-
லீனாமணிமேகலைக்கு என்ன பிரச்சினை? திரைப்பட இயக்குநர் லீனாமணிமேகலை கவிஞராக அறிமுகமாகி, ஆவணப்படங்கள் எடுத்து, பின்னர் திரைத்துறையில் நுழைந்த பெண் இயக்குநர் லீனாமணிமேகலை பற்றிய சர்ச்சை வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது. அவரது “வெள்ளைவேன் கதைகள்” 90நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தை இலங்கைராணுவத்தின் கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பயணம்செய்து, முஸ்லிம்,சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து, “கொரில்லா படப்பிடிப்பு” முறையில் உயிராபத்து-அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெள்ளைவேன் கதைகளை எழுதி-இயக்கி-தயாரித்திருக்கிறார் லீனாமணிமேகலை - என்கிறது ஜனசக்த…
-
- 0 replies
- 664 views
-
-
வீழ்ந்தால் அனுபவம்....எழுந்தால் வெற்றி! அறப்போர் உருவெடுத்து ஏறத்தாள ஒரு வருடங்கள் ஆகப்போகின்றன. ஆவணப்படம் என்ற சொல்லாடலே புலம்பெயர் தமிழர்களிடத்தில் பாவணையில் இல்லாத காலம். ஏதோ சினிமாப்படம் எடுக்கின்றேன் என்று நினைத்தவர்களே அதிகம். "உங்களிற்கெல்லாம் வேறு வேலையே இல்லையா" என்று கேட்டவர்கள் முதல் "நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா" என்று ஏளனம் செய்தவர்கள் வரை இன்றும் எம்முடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக ஓடிய போதும் சரி, மொழிபெயர்ப்பிற்காக ஓடிய போதும் சரி எந்த பின்னடைவும் இல்லை, எந்த சோர்வையும் நெருங்கவிடவில்லை. ஈழ விடுதலைக்கு எதுவுமே செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வோம் என்பதே அறப்போருக்கு உயிரூட்டியது. உடல் நலக்குறைவு வந்தபோதும் சரி, பைக்கில…
-
- 1 reply
- 676 views
-
-
மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் நாளை வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழ…
-
- 2 replies
- 630 views
-
-
http://news.vikatan.com/article.php?module=news&aid=23416&category=244&phid=10190#album_list
-
- 0 replies
- 624 views
-
-
ஜெயலலிதா என்னை அர்ச்சித்திருக்கிற வார்த்தைகளை எம்.ஜி.ஆர். கேட்டிருந்தால் கவலைப்பட்டிருப்பார் : கலைஞர். பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாதா? என்பது குறித்து, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், ஜவாகிருல்லா எம்.எல்.ஏ., பேராயர் எஸ்ரா. சற்குணம் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர். கலைஞர் பேசும்போது, ’’காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த எங்களை எப்படி நடத்தினார்? பக்தவச்சலம் கூட எப்படி நடத்தினார்? அவ்வளவு ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமை…
-
- 1 reply
- 686 views
-
-
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 16 மாநிலங்களின் மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடையும். வேட்பு மனுக்கள் பரீசிலனை 29 ஆம் தேதி நடைபெறும். மனுவை வாபஸ் பெற கடைசி தேதி ஜனவரி 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன், திமுகவைச் சேர்ந்த ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க…
-
- 0 replies
- 459 views
-
-
ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாதான் தைப் பொங்கல் திருவிழாவாகும். பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகும். அண்மைக் காலமாக விவசாயிகள் வாழ்வு கண்ணீர்க் களமாகிவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதரங்களான நதி…
-
- 0 replies
- 728 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் தமது கூட்டணிக்கு வந்து சேருவார் என காங்கிரஸ் கட்சி காத்துக்கொண்டிருக்கிறது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என கருணாநிதி கூறியதற்குப் பதிலளித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா இதைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அமைச்சரவையில் ஒன்பதரை ஆண்டு காலம் தி.மு.க. பங்கு வகித்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியும் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடியவர் கருணாநிதி. அந்தக் கட்சியின் தயவுமூலம் தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுத்தந்தார். தி.மு.க. பொத…
-
- 0 replies
- 479 views
-
-
வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக காணாமல் போய்விடும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொற்பொழிவுகள், எழுத்துகள் அடங்கிய "வெல்லும் சொல்', "என் அண்ணா', "புரட்சிக் கதிர்கள்' ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது: தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல அணி அமைய வேண்டும். அந்த அணியில் பாஜக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அந்த அணிதான் வெற்றி பெறும். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கும், பாஜக தலைமையிலான அணிக்கும் இடையே போட்டி இருக்கு…
-
- 0 replies
- 451 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று கூறிய இலங்கை மந்திரியின் பேச்சு இந்திய அரசுக்கு விடுக்கும் சவாலாகும். இந்த கருத்தால் தமிழக மீனவர்களிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். மதவாத சக்திகள் வென்றுவிட கூடாது என்பதற்காக பா.ஜனதா கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். அவர் தனது நிலைப்பாட்டை பிப்ரவர…
-
- 0 replies
- 436 views
-
-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்–அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு “தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகள…
-
- 0 replies
- 378 views
-
-
திமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு? சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 தொகுதிகள், தேமுதிக 8 , காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடை பெற்றன. பின்னர் அழகிரியின் எதிர்ப்பால் தேமுதிக பிரேக் போட்டது. இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேச களநிலைமை மாறியது. திருமா சந்திப்பு இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார். அப்போது …
-
- 0 replies
- 669 views
-
-
11 ஜனவரி, 2014 எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்தை தாம் நேரில் சென்று சனிக்கிழமையன்று அழைத்ததாக தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை கோயம்பேட்டில் இருக்கும் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் திமுக தலைமையிலான அணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து தான் ஏற்கெனவே விடுத்து வந்த வேண…
-
- 0 replies
- 557 views
-
-
தமிழக, இலங்கை மீனவர்கள் இடையே யான பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரத்தில் என் மீது கருணாநிதி பழி போடுவது, காங்கிரஸுடனான உறவை புதுப்பிக்க உதவுமே தவிர, பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமருக்கு உடனுக்குடன் கடிதம் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டபோதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர…
-
- 3 replies
- 415 views
-
-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது நல்லதோ அதன்படி, கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மேலிட வேட்பாளர் தேர்வுக்குழுத் தலைவருமான குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை இரவு திடீரென, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேருமா என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியது என்ன? குலாம் நபி ஆசாத் சென்னையில் வந்து தங்குவது எனக்குத் தெரியும். ஆனால், அவர் கருணாநிதியை சந்தித்…
-
- 0 replies
- 456 views
-