தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
ஆளுநருடன் சந்திப்பு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த உடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கிய அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இ இந்நிலையில், ர…
-
- 0 replies
- 816 views
-
-
05.01.2014 நீலகிரி தமிழக மக்களுக்கான பணிகளை மேலும் நிறைவு செய்ய மக்கள் உறுதுணையோடு இந்திய அளவில் மாற்றம் ஏற்படும் என்று குன்னூரில் நடந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். குன்னூரில் பொங்கல் பரிசு திட்டம், நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மக்கள் என் பக்கம் தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவ…
-
- 0 replies
- 410 views
-
-
கருணாநிதியை அடித்தாரா அழகிரி முன்னதாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், துரைமுருகனை சந்தித்தது ஏன்? என்று கேட்கப்பட்டது. இதற்கு தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலர் என்ற முறையில், அவரை சந்தித்தேன். காரணமில்லாமல் என் ஆதரவாளர்களை நீக்கியது குறித்து விளக்கினேன் என்றார். மேலும் உங்க அப்பாவை (கருணாநிதியை) அடித்ததாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று கேட்டிருந்தார். இந்நிலையில்தான் இன்று அழகிரி உரத்த குரலில் தம்மை வெறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக கருணாநிதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-deny-karunanidhi-s-upset-stateme…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க... சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா! ஐந்து நாள் பரோல் முடிவடைந்த நிலையில், சென்னை தி.நகரிலிருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ந…
-
- 1 reply
- 777 views
-
-
-
மிஸ்டர் கழுகு: சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய ரெய்டின் அடுத்தகட்டம் என்ன?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்து, அவரது செய்திக் குவியலை உதிர்க்கச் சொன்னோம். ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்குள் ரெய்டு போவார்கள் என்று சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல, எடப்பாடி தரப்பும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியான விஷயம்தான் அது. அன்று இரவு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை, ‘உங்கள் இடத்துக்குப் போகலாம், வாருங்கள்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அழைத்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். ஒரு டெம்போ டிராவலர், ஐந்து க…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராமேஸ்வரம்: பாம்பன் ரோடு பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து, நீல வர்ண பெயின்ட் பூசப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பாம்பன் ரோடு பாலம், ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீரமைக்கப்படுகிறது. இதற்காக 18 கோடியே 56 லட்ச ரூபாயில் கடந்தாண்டு ஜன. 28 தேதி, பழுது நீக்கும் பணி துவங்கியது. பாலம் தூண்களில் இருந்த விரிசல், சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்கப்பட்டது. பாலம் அடிபகுதி மற்றும், தூண்கள் இடையில் இருந்த பழைய பேரிங்குகள் அகற்றி, புதிய பேரிங்குகள் பொருத்தப்பட்டது. ஏற்கனவே, பாலத்தில் பூசப்பட்டு இருந்த "பிங்' வர்ணத்திற்கு பதிலாக, உப்புக் காற்றில் வர்ணம் மாறாத வகையில், ரசாயனம் கலந்த நீல வர்ண பெயின்ட் பூசும் பணி, சில மாதங்களாக நடைபெறுகிறது. தற்போது பா…
-
- 0 replies
- 488 views
-
-
சாய் பல்லவி வைரல் காணொளி: "மதத்தின் பெயரால் தாக்குதல் நடந்தால் அது பாவம்!" 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAI PALLAVI படக்குறிப்பு, சாய் பல்லவி, நடிகை சமீபத்தில் நடிகை சாய் பல்லவி காஷ்மீரி பண்டிட்டுகள், கும்பல் படுகொலை பற்றி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது தமது கருத்துகளுக்கு விளக்கும் தரும் வகையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். தெலுங்கில் வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'விராட பருவம்'. ஜூன் 17ஆம் தேதி வெளியான இந்த படத்தையொட்டி நடிகை சாய் பல்லவி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திரு…
-
- 1 reply
- 676 views
- 1 follower
-
-
தமிழகத்தின் கிரிமினல் பின்னணி எம்.எல்.ஏ-க்கள் 75 பேர்! உங்கள் எம்.எல்.ஏ அதில் ஒருவரா?! #IsMyMLAClean? ‘தண்டனைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 14 பக்கங்களைக் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு. இதன்படி, 'குற்றப் …
-
- 0 replies
- 868 views
-
-
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில்... வருமான வரித்துறையினர், சோதனை! திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபல தயாரிப்பார்களான அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். பிரபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலு…
-
- 0 replies
- 554 views
-
-
பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை! சட்டத்துக்கு விரோதமான தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-2007ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த இணைப்புகளை தவறான வகையில் சன் டிவிக்குப் பயன்படுத்தியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ர…
-
- 0 replies
- 326 views
-
-
மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்! ‘‘‘கவர்னரைச் சந்திக்கவிருக்கிறார் ஸ்டாலின்’ என்று நீர் சொன்னீர். இதழ் வெளிவந்த நாளன்று கவர்னரைச் சந்தித்துவிட்டாரே ஸ்டாலின்?” என்று கழுகார் வந்ததும் உற்சாகம் ஊட்டினோம்! ‘‘கவர்னரை ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால், இன்றைய அமைச்சர்கள்மீது ஊழல் புகார் கொடுப்பதற்காக அவர் சந்திக்கவிருக்கிறார் என்று சொன்னேன். அது தொடர்பான தகவல்களைத் திரட்டிய பிறகு, அந்த விஷயம் தொடர்பாக சந்திப்பார்களாம். இப்போது, கவர்னரே ஸ்டாலினை வரவழைத்துப் பார்த்தார். கவர்னர் அலுவலகத்திலிருந்து மார்ச் 27-ம் தேதி இரவு, ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. கவர்னருடன் சந்திப்புக்கான அந்த அழைப்பு, மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மறுநாள் வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கு…
-
- 5 replies
- 919 views
- 1 follower
-
-
சென்னை ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப் பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயலபட்டதால் விமானத்தில் இருந்து 150பயணிகளும் உயிர் தப்பினார்கள்.யாருக்கும் காயம் இல்லை http://www.dailythanthi.com/News/State/2015/02/26103939/Flight-tire-exploded-accident-150-passengers-survived.vpf
-
- 3 replies
- 385 views
-
-
ஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள்விகள்! வருங்கால தமிழக முதல்வராக கனவு காணும் அரசியல்வாதிகளில் உங்கள் கனவுதான் நனவாக வாய்ப்பு அதிகம். உத்தரபிரதேசத்தில் 45 வயதில் அகிலேஷ் யாதவ் முதல்வராகிறார். அங்கே அவரது தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. இங்கே உங்கள் தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதோ இல்லையா உங்கள் தமையனுக்கு தட்டிக் கொடுக்கும் மனப்பக்குவம் நிச்சயமாக இல்லை. 'நமக்கு நாமே...' என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் நீங்கள்' உங்கள் வீட்டில் இருந்து அதனை தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும். கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களுக்கு, துணை முதல்வர் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. நிச்சயமாக தமிழக வர…
-
- 0 replies
- 265 views
-
-
தற்கொலை செய்த ஈழ அகதியின் கடைசி குரல் ‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் இரண்டு இலட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கை திரும்பினர். தற்போது தமிழக முகாம்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 259 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசிக…
-
- 0 replies
- 463 views
-
-
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! திருச்சி: மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தால்,கூட்டணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். " தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் ‘மர்ம’மான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முகநாதனின் உ…
-
- 0 replies
- 536 views
-
-
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை! மின்னம்பலம் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது.…
-
- 7 replies
- 1.2k views
-
-
மாநில அரசுக்கு மனசாட்சி இருக்கா? கமல் கோபம்! மின்னம்பலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் பசியையும், பட்டினியையும் பொறுத்துக்கொண்டு பல லட்சம் மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தங்கள் வீடுகளிலேயே இருந்து வந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவித்து வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மக்கள் பொறுமை காத்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் நேற்று (மே 7) மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு அதிருப்தியும், கோபமும் வரவழைத்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவத…
-
- 0 replies
- 898 views
-
-
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை! by : Krushnamoorthy Dushanthini ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செயற்திட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் திட்டம் ஏதும் இல்லை. 6 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குற…
-
- 0 replies
- 769 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா தெரப்பி மூலம் சிகிச்சை அளிக்க, சென்னையில் இரண்டு கோடி ரூபாயில் பிளாஸ்மா வங்கியை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தெரபி (ஊநீர் சிகிச்சை) தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 'பிளாஸ்மா தெரபி' அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என…
-
- 0 replies
- 378 views
-
-
ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் கவலையில் இருந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென…
-
- 1 reply
- 526 views
-
-
இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் சிங் சென்னை வந்து இங்கு உண்ணா நிலையில் உள்ள மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் . மாணவர்களை தொடர்ந்து போராட வேண்டும் , நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . முதலில் சென்னை ஐ ஐ டி கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார் . பின்பு அடையார் சட்டப் பல்கலை மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பின்பு அடையார் இசை கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்து அவர்களை ஊக்கப் படுத்தினார் . எல்லா ஊடகங்களுக்கும் இலங்கையை இனப் படுகொலை நாடாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசை கல்லூரி மாணவ மாணவிகள் எவ் வித அடிப்படை வசதியும் இன்றி 3 …
-
- 2 replies
- 526 views
-
-
3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை... பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.சென்னை: கடந்த 19ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அல…
-
- 1 reply
- 618 views
-
-
இலங்கையில் மட்டும் அல்ல தமிழகத்திலும் நெருக்கடிகள் உள்ளது” மு.அசீப் 57 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிற…
-
- 0 replies
- 759 views
-