தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
-
தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும். மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில மரமாக இருப்பது பனைமரம். மக்களின் இயல்பு நிலையை பனை, தென்னை, வாழை என்று 3 மரங்களின் இயல்புடன் ஒப்பிட்டு, திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது. எந்தவிதப் பயனையும் பெறாமல் பிறருக்கு உதவும் குணம்…
-
- 0 replies
- 523 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு – மதுரை சிறையில் இருந்து விடுதலையானார் ரவிச்சந்திரன் Posted on November 13, 2022 by தென்னவள் 9 0 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த கடந்த கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் மற்ற 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்…
-
- 0 replies
- 603 views
-
-
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன? தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டங்களால் மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் திறந்து இயங்கச் செய்யவேண்டுமென்று, போராட்டங்கள் நடத்தியவர்களாலேயே கோரிக்கை விடுக்கும் நிலை தோன்றியுள்ளதாக தெரியவருகிறது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால், தொழிலை இழந்த தொழிலாளர்கள் வருமானம் எதுவுமில்லாமல், உணவுக்கு வழியின்றி தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்டுள்ள தொழிற்சாலையைத் திறந்து மீண்டும் இயங்கச் செய்வதால், தமது வாழ்வாதாரத்துக்கான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கு…
-
- 0 replies
- 446 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 ஜூன் 2024 கேரள அரசு அம்மாநிலத்தின் ஊர்கள், தெருக்களில் சாதி அடையாளம் கொண்ட பெயர்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டே இதைச் செய்ததாகக் கூறும் நிலையில், இன்னும் பல கிராமங்களில் சாதிப் பெயர்கள் மாற்றப்படாமல் உள்ளன. சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க அரசு இந்தப் பெயர்களை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஊர், தெருக்களில் சாதிப் பெயர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் கிராமம், ஊராட்சி மற்றும் தெருக்களில்…
-
- 0 replies
- 841 views
- 1 follower
-
-
சென்னை மண்ணடி மற்றும் நாகை மாவட்டம் சிக்கலில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இலங்கைக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் இருக்கலாம் என்ற தகவலால், அவர்கள் குறித்த விசாரணை நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கைக் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், உளவுத் துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் சோதனை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை மண்ணடி, புரசைவாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர். சென்னையில் என்.ஐ.ஏ சோதனை நாகையில் தேசியப் புலனாய்வு ம…
-
- 0 replies
- 517 views
-
-
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்! தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இ…
-
- 0 replies
- 83 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஜூன் 11-ல் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் திரையுலகைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.இதுதொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியதாவது, பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுவும் தனிமைச் சிறையில். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர மிகவும் போராடிவருகிறார். தான் நிரபராதி என பேரறிவாளன் இன்றுவரை சொல்லிவருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், பேரறிவாளன் நிரபராதி எனக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 575 views
-
-
புலிகளை குறை சொல்லும் கேவலமான காங்கிரசே இந்த வினாக்களுக்கு பதில் சொல். 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? 2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொ…
-
- 0 replies
- 769 views
-
-
சென்னை: நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: தமிழகத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து, முதலமைச்சராகவே மறைந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வைக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிவிப்பினை விமான நிலைய துவக்க விழாவிற்கு முன்பே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி; மாண்புமிகு மத்திய விமானப் போக்க…
-
- 0 replies
- 544 views
-
-
“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?” “கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பா…
-
- 0 replies
- 505 views
-
-
1,500 போலீசார்! எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத அ.தி.மு.க., சசிகலாவுக்கு... எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்வைத்து அராஜகம் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, பாதுகாப்பு அளிக்க, நேற்று, 1,500 போலீசார் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்வைத்து நடந்த, இந்த அராஜகத்தால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு இயந்தி…
-
- 0 replies
- 343 views
-
-
தமிழகம்- கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட தாமதித்து வந்தது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதிலும் காலம் தாழ்த்தியதால் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. கர்நாடகத்தில் தேர்தல் நடந்ததால் கண்காணிப்பு குழு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்தி…
-
- 0 replies
- 311 views
-
-
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு! மின்னம்பலம் ஜெயலலிதா நினைவிடம் பொது மக்கள் பார்வைக்காக இன்று (ஏப்ரல் 9) மீண்டும் திறக்கப்பட்டது. அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ரூ.79.75 கோடி மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுக் கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்டது. அங்கு, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், சிறுகதைகள், படங்கள்…
-
- 0 replies
- 498 views
-
-
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். கடந்த 1ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 19ம் தேதி சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்த கொடூரங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வன்முறை குற்றங்களை கடும் நடவடிக்கைகள் மூலம் வேரோடு கிள்ளிய எறிய வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர இந்த 2 கொலைகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றியும், அது தொடர்பானவை பற்றியும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோச…
-
- 0 replies
- 420 views
-
-
'ஜெயலலிதா உயில் என்னிடம்தான் உள்ளது' : தீபக் பரபர தகவல்..! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் சகோதரர் தீபக் சசிகலா அணிக்குதான் ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவர் தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின், பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தீபக்கின் புதிய கருத்து ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபக் கூறுகையில், "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என…
-
- 0 replies
- 398 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி! ‘டெல்லியில் மழை பெய்ததால் வெயில் குறைந்திருக்கிறது’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ். அவர் டெல்லியில் இருப்பதைப் புரிந்து கொண்டுப் போனில் பிடித்தோம். ‘‘டி.டி.வி.தினகரனுக்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்து விட்டதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! டெல்லி போலீஸ் ‘அந்த ஆதாரம் இருக்கிறது... இந்த ஆதாரம் இருக்கிறது...’ என இழுத்தார்களே தவிர, தினகரனைச் சிறையில் இன்னமும் வைத்திருக்கத் தேவையான காரணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. அதனால் சுலபமாக ஜாமீன் கிடைத்துவிட்டது. 41 நாள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருக்கிறார் தினகரன்.” ‘‘இனி தீவிர அரசியலில் ஈடுபடுவாரா?’’ ‘‘அ.தி.மு.க-வில் உள்ள 122 எம்.எல்.ஏ-க்களில் தற்போது பல கோஷ்டிகள்…
-
- 0 replies
- 3.7k views
-
-
• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே? • ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா? • அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா? 1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து எந்த தகவலும் கலைஞர் குடும்பத்திலிருந்து வெளிவருவதில்லை. கலைஞருக்கு பல மனைவிகள். பல பிள்ளைகள். பல பேரப்பிள்ளைகள் என அவரின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் அவர் ஒரு ஏழை அகதி சிறுவனை தத்தெடுத்து தனது கருணை மனதை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீது தான் …
-
- 0 replies
- 794 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு வழக்கம் போல முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7–1–2014 அன்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அதுபற்றிய தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதி, நாளேடுகளில் வெளியிடச் செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதெனக் கருதுகிறார். ஏற்கனவே, மீனவர் பிரச்சினைக்காக நாகை மீனவர்களும், பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது நாகை மீனவர்கள் உண்ணாவிர…
-
- 0 replies
- 311 views
-
-
கோபத்தில் ஆளுநர்: ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்? கோபத்தில் ஆளுநர்: ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்? தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவரது பெயர் கெட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அவர் மீது ஆளுநர் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக வட்டாரத்தில் ஆளுநரின் கோபம் தொடர்பாகவும், ஆட்சியை கலைக்க அவர் ஆலோசித்திருப…
-
- 0 replies
- 2k views
-
-
வங்கிப் பணிகள்: வட இந்தியர்களுக்காக தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுத்துறை வங்கிப் பணியிடங்களில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பின் மூலம் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும். வங்கிகளின் எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழி தெரியாதவர்களை நியமிப்பது என்பது அந்தந்த மாநில மக்களைத் துன்புறுத்துவதற்கு நிகரானது' என்கின்றனர் வங்கி ஊழியர் சங்கங்கள். 843 பேரில் 400 பேர் யார்? மத்திய அரசின…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
மைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் - ‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்! Chennai: திருடன்- போலீஸ் ஆட்டம் விளையாடியிருப்போம். ஆனால், ஒரு போலீஸே திருடனாய் மாட்டிக் கொண்ட கதை தெரியுமா..? நாங்குனேரி துணைச்சரக உதவிக் காவல்துறை கண்காணிப்பாளரான சபீர் கரிம்தான் மாட்டிக் கொண்ட போலீஸ். ஆம் 30-ம் தேதி சென்னையில் நடந்த சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வில் 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் ஸ்டைலில் `ப்ளூடூத்' உதவியோடு தேர்வெழுதி மாட்டிக் கொண்டார். இதற்கு அவர் மனைவி ஜாய்ஸியும் உடந்தை என்பதுதான் ஹைலைட்! ‘குற்றங்கள்... அதிலும் தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கக் காவல்துறை நவீனமயமாக்கப் படவேண்டும்.'…
-
- 0 replies
- 625 views
-
-
ஆளுநர் பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி இரண்டு பேர் பலி! போலீஸ் வாகனத்தை நொறுக்கிய பொதுமக்கள்! கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது வண்டிப்பாளையம் பகுதியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி, அருகில் உள்ள வீட்டின் பாத்ரூமில் நுழைந்தார். அப்போது குளித்துக்கொண்டிருந்த பெண்மணி அதிர்ந்து வெளியே ஓடினார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பே ஆளுநரின் வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காகக் கடலூருக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆய்வுப்பணியை முடித்…
-
- 0 replies
- 361 views
-
-
திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு அளிக்கப்பட்டது ஏன்? மோகன் பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பஞ்சாயத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். அந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள நிலம் தனியாருக்கு முறையற்று கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் மற்றும் வலசை வரும் பல அரிய வகை பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இங்கு ஆண்டுதோறும் 181 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் …
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
"ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியென்றால்... நான் மக்களாட்சி!" - ரஜினியின் 'எம்.ஜி.ஆர் ஆட்சி'க்கு கமல் பதில் சர்ச்சைகளின் ஆதர்ச நாயகனும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா, தனது முகநூலில் "தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" எனப் பதிவிட்டிருந்தது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் இதற்குக் கணடனம் தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்சைக்குரிய இப்பதிவை முகநூல் பக்கத்திலிருந்து ஹெச்.ராஜா நீக்கியதும், அதற்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 'மக்கள் நீதி மய்ய'த்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது கண்டனத்தை…
-
- 0 replies
- 365 views
-