தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
டெல்லி மேல்-சபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்கான செயற்குழு கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.சி.டியூ. அலுவலகத்தில், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடந்தது. மேல்-சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர்டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இதுதொடர்பாக தா.பாண்டியன் …
-
- 0 replies
- 308 views
-
-
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் அகங்காரமான திமிர் வைகோ கண்டனம் இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில்லை என்று தஞ்சையில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தது, தமிழக மக்களை எப்படி வேண்டுமானாலும் வஞ்சிக்கலாம், ஏமாற்றலாம் என்ற ஆணவத்தின் பிரதி…
-
- 0 replies
- 489 views
-
-
தமிழர் உணர்வாளர்கள் நடிகர்கள்,மக்கள் எனஆயிரக்கணக்கானவர்களின் இறுதி வணக்கத்துடன் இனமான இயக்குனர் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.(படங்கள்,காணொளிகள்) நாம்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மணிவண்ணின் இறுதி நிகழ்வுகள் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது இன்று இறுதி வணக்க நிகழ்வில் உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன்,நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, காசியானந்தன்,பொ.மணியரசன், வைகோ உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் சத்தியராஜ்,நடிகர் மனோபாலா,தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் சரத்துகுமார்,ராதிகா,உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள் என பெருமளவானர்கள் திரண்டு தங்கள் இறுதி வணக்கத்தினை செலுத்தினார்கள் தொடர்ந்து தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின்,…
-
- 2 replies
- 973 views
-
-
ஜூன் 15, 2013 தி.மு.க., சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழக கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இன்று தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி, மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதற்குள் உரிய முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். மேலும் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் மது…
-
- 0 replies
- 422 views
-
-
காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும் தலைசிறந்த சிந்தனையாளருமான மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் ஆளானேன்.எழுத்திலும் பேச்சிலும் அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன் நடிகராகவும் முத்திரை பதித்தார். தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார். தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும் திறமும் கொண்டு இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில் இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில் வேதனை மேலிடுகிறது. திராவிட இயக்கத்தில் சோதனைகளை …
-
- 3 replies
- 554 views
-
-
பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் தேதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக …
-
- 0 replies
- 390 views
-
-
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் பாசன பகுதிகளான திருவிடைமருதூர், கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன் வாயு எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதனை அனுமதித்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்ப்படும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் சுமார் ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பாத…
-
- 0 replies
- 649 views
-
-
காவல்துறை சீருடை போதையின் அடையாளமா? 5ec6b69cb2850d593812b98ed52fae7d
-
- 0 replies
- 452 views
-
-
http://kotticodu.blogspot.in/2013/06/2016.html தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமா? தமிழகத்தில் கருணாநிதி போனால் ஜெயலலிதா என்றும் ஜெயலலிதா போனால் கருணாநிதி என்றும் தான் ஒவ்வெரு முறையும் முதல்வர் பதவிக்கான போட்டியும் தர்க்கங்களும் நடந்தது வந்தது. ஆனால் சமீப காலமாக அந்த தர்க்கங்களை உடைக்கும் விதமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வரும் 2016 ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக வைகோ அரியணை ஏறுவார் என்று சொல்லி வருகிறார். தமிழருவி மணியனின் இந்த பேச்சு முகநூலில் இரண்டு மூன்று தினங்களாக மிக பெரிய தர்க்கங்களை உருவாக்கி இருக்கிறது. முகநூலில் இருக்கும் ஒரு சில திமுகவினரை உசுபேற்றி விட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இதற்கு முன்பும் பல மு…
-
- 6 replies
- 896 views
-
-
சென்னை: மரக்காணம் வன்முறையில் பேருந்து உள்பட அரசு சொத்துக்களை சேதம் விளைவித்தது தொடர்பாக பா.ம.க.விடம் இருந்து ரூ.50 கோடி அபராதமாக வசூலிக்க தமிழக வருவாய்த்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பங்கேற்க வந்த பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், பல வீடுகள் எரிக்கப்பட்டதோடு, அரசு, தனியார் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்க…
-
- 0 replies
- 505 views
-
-
காரைக்கால் எம்.எம்.ஜி நகர், என்ஜினியர்ஸ் கார்டனை சேர்ந்தவர் ஜெய பாலன் மகள் வினோதினி (24). சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்திருந்த அவர், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு சென்னை செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தபோது வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.12-ந் தேதி அதிகாலை வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். வினோதினி மீது ஆசிட் வீசியதாக காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் வினோதினியை சுரேஷ் குமார் ஒருதலையாக காதலித்ததும், அவரது காதல் நிறைவேறாதத…
-
- 0 replies
- 485 views
-
-
சென்னை: விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மா.ஃபா.பாண்டியராஜன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது அக்கட்சியினர் இடையே பெரும் அதி்ர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருண் பாண்டியன் (பேராவூரணி), மிக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), சுந்தர்ராஜன் (மத்திய மதுரை), தமிழ் அழகன் (திட்டக்குடி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி ராஜமாணிக்கம் (சேந்தமங்கலம்) ஆகியோர் சந்தித்து தங்களின் தொகுதி பிரச்னை குறித்து மனு கொடுத்தனர். இதனிடையே, தே.மு.தி.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த பாண்டியராஜன், கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வந்தார். இந்த நிலையில், இன்று விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.…
-
- 0 replies
- 801 views
-
-
முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் அன்பரசன்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில முன்னாள் அமைச்சரும், என்னுடைய ஆருயிர் தம்பியுமான திருநாவுக்கரசருடைய மகன் அன்பரசனுக்கும், அம்பாசமுத்திரம் டாக்டர் கே.பி. அருணாசலத்தின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் நடைபெற்றுள்ள மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்திலே திருமணத்திலே கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்துவிட்டு இந்த மணவிழாவிற்கு நான் வந்துள்ளேன். இந்த மணவிழாவிலே பல கருத்துகளை நம்முடைய அனைத்துக் கட…
-
- 0 replies
- 530 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பிக்களை தேர்வு செய்ய வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன், ரத்னவேல், கே.ஆர்.அர்ஜூன், லட்சுமணன், தங்கமுத்து ஆகிய 5 பேரை வேட்பாளர்களாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரில் 4 பேர் வெற்றி உறுதியான நிலையில் 5-வது நபரை தேர்வுசெய்ய அ.தி.மு.க.விடம் 15 எம்.எல்.ஏக்களின் ஓட்டுக்களே உள்ளது. 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்பதால், அ.தி.மு.க.வுக்கு மேலும் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும். புதிய தமிழகம் (2), மனித நேய மக்கள் கட்சி(2), பார்வர்டு பிளாக்…
-
- 0 replies
- 423 views
-
-
சென்னை: இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை காக்க 1974ஆம் ஆண்டு இந்திய-இலங்கை அரசால் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "கடலில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்பட்டு துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் அவர்களது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாக் ஜலசந்தியை கடக்ககூடாது என மிரட்டப்படுகின்றனர். எனவே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்திய குடியுரிமையை ஒப்படைத்து விட்…
-
- 1 reply
- 588 views
-
-
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் தலா 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய இரு கட்சிகளும் கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுவரை யாரும் காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார். ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. …
-
- 0 replies
- 423 views
-
-
டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:- 2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும். பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எங…
-
- 0 replies
- 434 views
-
-
சென்னை: பா.ஜ.க.வில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி விலகியிருப்பது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கோவாவில் நேற்று நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அக்கட்சியின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளைக்குகள் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சியின் ஆட்சி மன்ற குழு, தேர்தல் குழு, தேசிய செயற்குழு ஆகிய பதவிகளில் இருந்து விலகியுள்ளது அக்கட்சியினர் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்வானியின் இந்த திடீர் விலகல் குறித்து செய்தி அறிந்த தமிழக…
-
- 2 replies
- 582 views
-
-
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலிலதா கண்டனம் தெரிவித்தார். அவர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து ராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று மாலை அங்கு சென்றனர். அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட மலை ரெயில் முன்பு மறியல் போராட்டத…
-
- 0 replies
- 505 views
-
-
கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், போராட்ட குழுவினர் பெண்களை ஆபாசமாக பேசியதாக ஒரு செய்தி பரபரப்பாக உலா வருகிறது. இதற்கு போராட்ட குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 22 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்ட குழுவை சேர்ந்த நிர்வாகிகள், பெண்களிடம் அருவருப்பகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசுவது போன்ற செய்தி அடங்கிய சி.டி.க்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை அனுப்புபவர் யார்? என்பது தெரியவில்லை. தபால் முத்திரை இல்லாமல் இந்த செய்தி அடங்கிய சி.டி. பார்சலை தபால் ஊழியர்களே பட்டுவாடா செய்து வருகின்றனர். இது போ…
-
- 0 replies
- 654 views
-
-
நீலகிரி: குன்னூர், வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இன்று மாலை ராணுவ முகாமை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு கடந்த மாதம் 21ஆம் தேதியில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது' என மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், இங்கு இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குள்ளானது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தரப்பினரும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளித்து…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தீவுத்திடல் அருகே தென்னிந்திய படை தலைமை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15533:in-a-demonstration-to-protest-against-the-sri-lankan-army-training&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 593 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜூன் 3 அன்று எனது 90-வது பிறந்த நாளினை கழக உடன் பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினர். தமிழகத்தில் தி.மு.க.வை தாண்டி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், தமிழ் மக்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்க் கவிஞர் பெருமக்களும் எனது பிறந்த நாளையொட்டி பெருமை சேர்த்தனர். இந்தியத்துணை கண்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துச் செய்திகளை கடிதம் மூலமாகவும், தந்தி மூலமாகவும், குறுஞ…
-
- 5 replies
- 658 views
-
-
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு, தமிழக அரசை ``மாற்றாந்தாய்'' மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இது குறித்து செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:- கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை நிறைவேற்ற முயற்சித்தல் சர்க்கரை ஆலைகளின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துதல்; குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கொள்முதல் செய்யும் டீசல…
-
- 0 replies
- 398 views
-
-
பாகிஸ்தானில் வாஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வருகிற இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘‘அமெரிக்கா இந்த தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிரானது’’ என்று பிரதமர் நவாஸ் செரீப் சமீபத்தில் கூறினார். இந்த நிலையில், நேற்று அமெரிக்க ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15492:missile-attack-u-s-ambassador-…
-
- 1 reply
- 498 views
-