தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உ…
-
- 3 replies
- 995 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில் அது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் மனு இன்று மத்திய தகவல் அறியும் ஆணையம் விசாரிக்க உள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கம் கேட்டு ஆணையத்துக்கு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளன் கருணை மனுவை 2012 ல் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். பேரறிவாளன் வேலூர் சிறையில் உள்ளார…
-
- 0 replies
- 622 views
-
-
தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் …
-
- 0 replies
- 691 views
-
-
இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக உறுதி செய்ததை எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழக மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளில் உவகை நிறைந்த உள்ளத்தோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷு புத்தாண்டு: மலையாளப் புத்தாண்டான விஷு கொண்…
-
- 0 replies
- 364 views
-
-
தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும் அழகி போட்டியல்ல,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.மத்திய, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஜெய்ராம் ரமேஷ், குஜராத் மாநிலம், ஆனந்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., சார்பில், ராகுலும், பா.ஜ., சார்பில், நரேந்திர மோடியும், பிரதமர் வேட்பாளர்களாக, முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என, கேட்கப்படுகிறது. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும், அழகி போட்டி அல்ல.அமெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், இரு நபர்களுக்கு இடையேயானது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல், இதைப் போன்றதல்ல. அரசியல் க…
-
- 1 reply
- 373 views
-
-
''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர், வரிச்சியூரைச் சேர்ந்த எஸ்.முருகன் ஆகியோர் மீதான நடவடிக்கை, கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று, அன்பழகன் அ…
-
- 0 replies
- 875 views
-
-
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி. உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீஸ் வாங்கிப் பரிதவித்து நின்ற வேளையில்... ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை ஒரே நாளில் வாபஸான விவகாரம் தி.மு.க-வில் பலத்த அதிருப்தியை விதைத்திருக்கிறது. மதுரையில் மையம்கொண்டு நடக்கும் அரசியல் மாநிலத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது'' என்றும் சொன்ன கழுகார், முதலில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கைப் பற்றி ஆரம்பித்தார். ''கடந்த புதன்கிழமை அன்று அட்டாக் பாண்டி ஆட்கள் சந்தோஷத்தில் திளைத்தனர். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைக்கிறது என்றால் சும்மாவா? பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய 18 பேரில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், ''இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசிய…
-
- 10 replies
- 920 views
-
-
ஈழம் ஒரு இனத்தின் வரலாறு தொடர் - மக்கள் தொலைக்காட்சியின் ஒரு சிறந்த முயற்சி. தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொண்டாலும் கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகளில் கடுகளவு கூட ஈழம் பற்றிய செய்திகள் வந்துவிடாமல் மறைத்த கட்டங்களிலு கூட 2009 காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் பற்றிய செய்திகள் வெளியாகின. தற்போது தினமும் ஈழம் ஒரு இனத்தின் வரலாறு என்ற காட்சித்தொடர் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30க்கு வெளியாக உள்ளது. மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள். (முகநூல்)
-
- 0 replies
- 575 views
-
-
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த அவதூறு வழக்கு தொடர்பான மனுவை முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் இந்த மாதம் இரண்டாம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சி வேண்டும் என்றே முதல்வரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வ…
-
- 1 reply
- 791 views
-
-
கருணை மனுவை தாமதமாக நிராகரித்த காரணத்துக்காக ஒருவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று புல்லர் என்பவரின் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது இந்த தீர்ப்பு ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீடு செய்திருக்கும்; முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 தமிழர் நிலை என்ன என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அவர்களும் இதே காரணத்தின் அடிப்படையிலேயே தமது மேல்முறையீட்டை செய்துள்ளனர். இந்திய பயங்கரவாத எதிர்ப்பு படையின் தளபதி ; மனீந்தர் சிங் பீட்டாவை கொலை செய்யும் நோக்கில், 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மர…
-
- 0 replies
- 1k views
-
-
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 160 தொகுதிகளின் வெற்றி - தோல்விகளுக்கு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும். மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிஷியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 548 views
-
-
புதுக்கோட்டை: மனிதன் உயிர் வாழும் வரை 2 வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அவைகள், உண்பதும், சுவாசிப்பதும்தான். இதில் ஒன்று நின்றாலும் சுடுகாட்டுக்கு போவது நிச்சயம். ஆனால், உயிரோடு இருக்கும்போதே ஒரு கிராமமே சுடுகாட்டுக்கு குடிபெயர்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கும் 3 வேலையும் உண்ணுவதற்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதுதான் நியாயவிலைக் கடைகள். ஆனால், இன்றுவரை அந்த வசதிகள் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ரகுநாதப்பட்டி கிராமம். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.பாலக்குறிச்சி பஞ்சாயத்தில் இருக்கிறது ரகுநாதப்பட்டி கிராமம். இங்கு சுமார் அறுநூறு பேர் வசித்து வருகிறார்கள். 172 ரேஷன் …
-
- 0 replies
- 327 views
-
-
கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடருகிறது. கடந்த 7 ஆம் தேதி 500 விசைப்பபகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேவரம் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், சில படகுகளில் இருந்த வலைகளை அறுத்தும், 5 படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18 ஆம் தேதி வர…
-
- 0 replies
- 367 views
-
-
சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது. 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது. மேலும் அதில் கூறுகையில், …
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருந்தும் ஈழப் பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில் நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வா…
-
- 0 replies
- 659 views
-
-
டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திட்டக்கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவுடன் வந்திருந்தார். அப்போது அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் கூட்டமைப்பினர் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பினர். அமித் மித்ரா தாக்கப்பட்டார். போலீசார் தலையிட்டு மம்தாவை காப்பாற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிண…
-
- 0 replies
- 556 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் இனவெறி கொலைகளுக்கு எதிராகவும் கோவை மாவட்ட ஆன்மீக சமய சமுதாய கலை இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைத்து ஆதினங்கள் -சான்றோர்கள் முன்னிலையில் ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போரட்டதில் ஈடுபட்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13943:kovai-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 461 views
-
-
பெரம்பலூர்: மின் தடையால் இரவில் வெந்து நொந்து கிடக்கும் மக்களை கொள்ளையர்கள் வேறுபடுத்தி எடுக்கிறார்கள். பெரம்பலூர் ஏரியாவில், காத்து வாங்க கதவை திறந்து போட்டு தூங்கும் மக்களை குறிவைத்து மீண்டும் ஜட்டி கொள்ளையர்கள் கிளம்பி இருக்கிறார்கள்! கடந்த வருடம் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஜட்டி திருடர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டினார்கள். ஆளைப் பிடிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்த போலீஸார், பேருக்கு வழக்குகளை பதிவு செய்து ஒரு சிலரை கைதும் செய்தார்கள். போலீஸ் விழித்துக் கொண்டதும் ஜாகையை வேறு மாவட்டங்களுக்கு மாற்றிய ஜட்டி பார்ட்டிகள், இப்போது மீண்டும் பெரம்பலூருக்கு விசிட் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அருண்கும…
-
- 0 replies
- 529 views
-
-
இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கை தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒ்ரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்துகொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்துகொண்டுள்ளோம். அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காது…
-
- 0 replies
- 736 views
-
-
வட இந்தியாவின் புலந்த்சாகரில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 10 வயது சிறுமி, பெற்றோருடன் காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த போது அவளை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், எப்படி ஒரு 10 வயது சிறுமியை சிறையில் அடைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில அரசு வரும் திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஞாயிறன்று, கடைக்குச் சென்ற சிறுமி அடையாளம் தெரியாத ஒரு நபரால் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்து புகார் அளிக்கச் சென்ற சிறுமியை, அப்போது பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் சிறை…
-
- 0 replies
- 844 views
-
-
(முகநூல்)
-
- 1 reply
- 570 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
விக்கிலீக்ஸ்: தனித் தமிழ்நாட்டுக்கு அமெரிக்க ஆதரவைக் கோரிய திமுக அமைச்சர்! புதன், 10 ஏப்ரல் 2013( 14:14 IST ) ஐயா இது இப்போதைய மேட்டர் இல்லை! இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போதைய திமுக அமைச்சர் ராஜாராம் இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியும் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அமெரிக்க அதிகாரியிடம் கேட்டதாக ரகசிய அமெரிக்க கேபிள் மூலம் விக்கிலீக்ஸ் தெரியப்படுத்தியுள்ளது. இந்தியாவை உலுக்கிய எமெர்ஜென்சி என்ற இந்திராவின் பாசிச ஆட்சிக் காலத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய மோதல் இருதுவந்தது. இந்த நிலையில் அப்போதைய தொழிலாளர் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் கே.ராஜாராம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதுவ…
-
- 2 replies
- 713 views
-
-
காவல்துறை அராஜகம். இடுப்புக்கு கீழ் செயல்படாத ஈழத் தமிழர் பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைப்பு. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்புமுகாம்களில் இருப்பவர்களை விடுவிக்கவேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சூழலில். புதிதாக நான்கு பேர் இன்று பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரம் பொழிச்சலூரில் விடுதலைபுலிகள் என்ற பொய் குற்றச்சாட்டில் உதயதாஸ், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் என்ற 4 ஈழ இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்படி அகதியாக தம்மை சங்கர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்துக்கொண்டு அமைதியான முறையில் நான்கு வருடங்களாக தமிழகத்தில் வாழ்க்கை நடத்திவந்த இவர்களை கடந்த டிசம்பர் மாதம் கியூ…
-
- 0 replies
- 498 views
-