Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில்நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வரும் மார்ச் 23-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. அத்தீர்மானத்துக்கு இந்தியா முழுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்ப வேண்டும். அதன்…

    • 0 replies
    • 402 views
  2. போராட்டத்தை ஒருங்கிணைக்க, "பேஸ்புக்" மாணவர்கள் இயக்கம் தொடக்கம். நெல்லை: தமிழகத்தில் நடந்துவரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வண்ணம் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை தொடக்கியுள்ளனர். சிங்களப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் இந்த பேஸ்புக்கின் முகப்பு அமைக்கபட்டுள்ளது. இந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 8ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 7ஆயிரம் பேர் இத்தளத்தை பார்வையிட்டுள்ளனர். நாலுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்திட மாணவர்களுக்கு இந்த பேஸ்புக் களமாக அமைந்துள்ளது. நன்றி தற்ஸ்தமிழ்.

  3. தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு உறவுகளுக்கும் இன்று உலகப்பரப்பைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் தமிழீழமே தமிழருக்கான தீர்வாக அமையும் என்று கூறிக் களம் இறங்கியுள்ள எம் தமிழக மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் கனடாவாழ் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்து நிற்கிறது. ஆரம்பகாலங்களில் இருந்த போராட்ட உணர்வுகளும் ஆதரவுகளும் இன்றும் தமிழக மாணவர்களாகிய உங்களிடம் காணப்படுவதானது இன்று புலம்பெயர் நாடுகளில் வாழக்கூடிய பத்து லட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்களையும் போராட உத்வேகமளிக்கிறது. இன்று தமிழக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள போராட்டம் புலம்பெயர் தமிழர்கள் மனதில் நிறைவைத் தந்த…

  4. இலங்கைத் தமிழர்களுக்குஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே சில நாள்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் தமிழக காவல் துறையினர் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் முக்க…

  5. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழக மீனவர்கள் கைதுகளுக்கு எதிராக பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அவசரமாக நடத்திய சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 53 தமிழக மீனவர்களில் 34 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். எனினும் மேலும் 19 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விடுவிக்கப்படும் வரையில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவிருப்பதாக மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/55379

    • 0 replies
    • 537 views
  6. கூட்டணியில் திமுக நீடிக்காது! சோனியாவுக்கு கலைஞர் கடிதம்! ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக நீடிக்காது என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய அநீதியை போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் இந்தியா பிரகடனப்படுத்த வேண்டும்…

    • 3 replies
    • 799 views
  7. தமிழக‌ மாணவர்களுக்கு, ஆதரவு வழங்கும் பாடல். இதனை உங்கள் முகநூலிலும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  8. ஞாயிற்றுக்கிழமை, 17, மார்ச் 2013 (12:44 IST) மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. உலகத்தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் இந்த இனவெழுச்சியை முன்னெடுத்துச் செல்வது நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. மாவீரன் முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த பிறகு ஏற்பட்ட இனவெழுச்சி அரசியல் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைந்தது. தேர்தல் மட்டும் குறு…

  9. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது. போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெ…

    • 0 replies
    • 635 views
  10. http://www.facebook.com/spudayakumar1 எங்கேப் போகிறோம், மாணவர்களே? கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி. நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை. [1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் க…

  11. ஈழத்தமிழர்கள் துயர்துடைக்கும் அக்கறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து அர்பணிப்போடு நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தை நீர்த்து போக வைக்க, ஒடுக்க, அதை தன் கட்சியின் கணக்காக காட்ட பல சதிகளை அரசுகளும் அரசியல் கட்சிகளும் செய்ய முயற்சிக்கின்றன. இந்தச் சூழலில், தனி தனியாக போராடும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமும் அவசரமும்கூட. இதை மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து, அதை மாநிலம் முழுக்க வழிநடத்தும் ஒரு தலைமை குழுவை உருவாக்கலாம். அந்த தலைமையை மாணர்வகளிடமிருந்தே உருவாக்க வேண்டும். மாணவர்களை ஒருங்கிணைக்க அவர்களை பின்னணியிலிருந்து வழிநடத்த, தேர்ந்த ஒரு குழு அவசியம். அதற்கான தகுதி, எப்போதும் ஈழத்தமிழர்களுக்கான துணிந்து அர்ப…

    • 0 replies
    • 419 views
  12. மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களை துரத்தி வந்து இலங்கை கடற்படை கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கியது. மீனவர்கள் 53 பேரை சிறை பிடித்துச் சென்றதோடு 9 படகுகளையும் பிடித்துச் சென்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்தபோது, நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகள் மற்றும் 19 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர். இவர்கள் தலைமன்னார் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீன் பிடித்து முடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவை தாண்டி கரையை நோக்கி வந்து கொண்டிருந…

    • 1 reply
    • 782 views
  13. வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட ,நகர,கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் அவரகள் எமது இணையத்திற்கு தெரியபடுத்தி உள்ளார் . மேலும் அவர் பேசுகையில் ! இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும் , தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள்,வணிகர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகு…

  14. கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம் திமுக மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால்தானே, அதை மிரட்டி தமிழக நலன்களுக்காக சிலவற்றை சாதித்துக் கொள்ள முடிகிறது; 6 வது முறையாக திமுக மிரட்டல் என்று தினமணி கேலிக்காகக் கூறினாலும், அதனால் விளைந்த நன்மைகளை யாரும் மறைக்க முடியாதே என்று திமுக தலைவர் கருணாநிதி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென…

    • 7 replies
    • 1.2k views
  15. மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார். இவர் 20 ம் திகதி நடக்கவிருக்கும் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டதில் கலந்து கொள்வர் என தெரியவருகிறது.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13408:som-pirahas&catid=36:tamilnadu&Itemid=102

    • 1 reply
    • 663 views
  16. அண்மைச்செய்தி: இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை.... - திமுக தலைவர் கருணாநிதி Puthiyathalaimurai

  17. கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேர…

    • 1 reply
    • 1.1k views
  18. கருணாநிதியின் கபட நாடகம்! -பழ. நெடுமாறன்- தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்த…

  19. மு.யூ.மீரான் முகைதீன் முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட், எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் க…

  20. தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர். தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடு…

    • 0 replies
    • 734 views
  21. தஞ்சாவூரில் விரட்டி விரட்டி தாக்கப்பட்டனர் சிங்கள புத்த பிக்குமார்! [saturday, 2013-03-16 12:13:10] இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிக்குகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு 'இன்ப சுற…

  22. மாணவர்களின் போராட்டத்தை முடக்க முயற்சி செய்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும்- தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்…

  23. இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…

  24. தமிழீழத்தை வென்றெடுக்க தமிழகத்தில் புதிய இயக்கம்! [saturday, 2013-03-16 08:51:39] இலங்கையில் நீதி மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்குத் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என சபதம் ஏற்று தமிழீழத்தை அமைக்க புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கி பாயும் புலியாகப் பொங்கியெழுந்துள்ளனர் தமிழக மாணவர்கள். "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு' என்ற பெயரில் உதயமாகியுள்ள இந்த இயக்கமானது வெகுவிரைவில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டதில் குதிக்குமாறு மேற்படி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=78194&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.