தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…
-
- 0 replies
- 526 views
-
-
தமிழீழத்தை வென்றெடுக்க தமிழகத்தில் புதிய இயக்கம்! [saturday, 2013-03-16 08:51:39] இலங்கையில் நீதி மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்குத் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என சபதம் ஏற்று தமிழீழத்தை அமைக்க புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கி பாயும் புலியாகப் பொங்கியெழுந்துள்ளனர் தமிழக மாணவர்கள். "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு' என்ற பெயரில் உதயமாகியுள்ள இந்த இயக்கமானது வெகுவிரைவில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டதில் குதிக்குமாறு மேற்படி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=78194&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 414 views
-
-
ஈழத் தமிழருக்காய்,இங்குள்ளத் தமிழருக்காய், தமிழினத்தின் விடியலுக்காய் களம் காணும் மாணவர்க்கு ஆதரவு அளித்திட அன்புக்கரம் நீட்டிட.இடிந்தகரை கூடங்குளம் பகுதி வாழ் பெண்கள் பிஞ்சுக் குழந்தைகள் நடத்தும் சிறப்பு உண்ணாநிலைப் போராட்டம் இடிந்தகரைப் போராட்டப் பந்தலில் பங்குனி முதல் நாள் (மார்ச் 14 2013) வியாழனன்று காலை 10 மணி முதல் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. http://www.sankathi24.com/news/27963/64//d,fullart.aspx
-
- 5 replies
- 833 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி இலங்கையில் நடைபெற்ற இன படுகொலையை விசாரித்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 11ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அரியாங்குப்பத்தில் இருந்து உப்பளம் கடற்கரை சாலை வழியாக சட்டசபை க்கு காரில் முதல்வர் ரங்கசாமி சென் றார். அவரது கார் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே வந்தபோது மாண வர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென வழி மறித்து தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். மாணவர்களின் நியாயமான உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டு செயல்படும் என தெரிவித்த முதல்வர், உங்களிடம் பேச்சு நடத்த அமைச்சரை அனுப்பி வை…
-
- 3 replies
- 500 views
-
-
"இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர். தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூ…
-
- 0 replies
- 524 views
-
-
மாணவ சக்தியின் முதல் பணி பரந்துபட்ட மக்களை ஒரு சக்தியாய் உருத்திரட்டுவதே தத்தர் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் நம்மனைவருக்கும் ஒரு ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது. மக்களின் மனங்களில் மாணவர்கள் அன்புக்கும், மதிப்புக்கும், எதிர்பார்க்கைக்கும் உரியவர்கள். மாணவர்கள் கையசைத்தால் பெற்றோரும், மற்றோரும் அவர்களுக்கு தலைசாய்ப்பது இயல்பு. மாணவர்கள் எப்போதும் மக்களின் மனங்களில் களங்கம் கற்பிக்க முடியாதவர்கள். அவர்களின் குரல்கள் மக்களின் செவிகளை துளைக்கும் என்று சொல்வதை விடவும், அவர்களின் இதயங்களுக்குள் நுழையும் என்…
-
- 0 replies
- 1k views
-
-
அன்பான தம்பிகளே தங்கைகளே! உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டவர்களாய் தமிழ் மக்களின் இன்றைய நிர்க்கதியான நிலையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களிற்கு ஒரு விடிவு வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் ஆக்ரோசத்துடனும் களம் புகுந்துள்ள சகோதர்களே! முதற்கண் உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட நட்சத்திரங்களைத் தம் ஹீரோக்களாக எண்ணி அவர் பின்னால் அணிவகுப்பவர்கள் மாணவர்கள் என்ற கருத்தை துடைத்தெறிந்து உண்மையிலே திரையிலே போலியாக ஹீரோயிசம் காட்டும் அரிதார நாயகர்களுக்கெல்லாம் உண்மையான ஹீரோக்கள் நீங்களே என்பதைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். மக்களுக்காகப் பேசுபவர்களும் செயற்படுபவர்களுமே உண்மையான அரசியல் தலைவர்க…
-
- 0 replies
- 446 views
-
-
பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென…
-
- 0 replies
- 311 views
-
-
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவையொட்டி வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா திடலில் 61 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே. சேகர்பாபு வரவேற்று பேசினார். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 61 ஜோடிகளுக்கும் மு.க.ஸ்டாலின் தங்கத் தாலியை எடுத்துக் கொடுத்தார். மணமகன் ஒவ்வொருவராக வந்து தாலியை பெற்றுக் கொண்டனர். பின்னர் கெட்டிமேளம் முழங்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினார்கள். மணமக்களை மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின…
-
- 0 replies
- 495 views
-
-
தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை. இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=artic…
-
- 4 replies
- 804 views
-
-
ஈழதமிழர்களுக்கு ஆதரவாக, வரும் 18ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், மாநில அளவில் கல்லூரி மாணவர்களை இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளனர். இக்குழுவின், ஒருங்கிணைப்பாளரும், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவியுமான திவ்யா கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவை அமைந்துள்ளோம். இக்குழுவில், 19 மாவட்டங்களை சேர்ந்த, 50 கல்லூரிகள் இணைந்துள்ளனர். 31 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஒன்றி…
-
- 0 replies
- 434 views
-
-
மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது மார் 15, 2013 திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது. தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.sankathi24.com/news/28002/64//d,fullart.aspx
-
- 0 replies
- 520 views
-
-
ஜட்டி பனியனுடன் வாருங்கள் அனுமதி தருகிறேன்:-கல்லூரி முதல்வர். [வீடியோ ] விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர்டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் …
-
- 0 replies
- 551 views
-
-
கோரிக்கையோடு,பொது வாக்கெடுப்பு கேட்டு போராடி வரும் மாணவர்களின் போராட்டம் வலுப்பெறுகிறது . நேற்று மாலை திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 4 நாட்களாக திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களே வீதி மறியல், தபால் நிலைய முற்றுகை, தொடர் வண்டி முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தினார்கள். மாலை 3 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முற்பட்டபோது விமானநிலைய காவல் துறையினர் பிரதான சாலையை அடைத்து வைத்திருந்தனர். மாணவர்கள் அதனை மீறி செ…
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கலைஞர் கருணாநிதி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அரசு மன்னார் கல்லூரி மாணவர்களை புதன்கிழமை சந்தித்து வாழ்த்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது ; இந்த அறவழிப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. டெசோ அறிவித்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா என்பது குறித்து பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அது படுதோல்வி அடைந்ததை வழக்கம் போல உண்மையைத் திரித்துப் பேசும் கருணாநிதி…
-
- 0 replies
- 666 views
-
-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=94208
-
- 6 replies
- 762 views
-
-
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்துப் பெறும் இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தொடர்பான எட்டுக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய உண்ணாவிரதத்தை கடந்த 11ம் தேதியுடன் முடித்துக் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்கள், தற்போது அடுத்த கட்டப் போராட்டத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தைப் போல், தற்போது தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கமும் மாநிலம் முழுவதும் பரவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நான்கு மாண…
-
- 2 replies
- 543 views
-
-
இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்ற…
-
- 0 replies
- 401 views
-
-
பல இன்னல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம், படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்புஇ அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடுஇ மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்…
-
- 0 replies
- 408 views
-
-
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நடிகர் சிலம்பரசன்.
-
- 4 replies
- 640 views
-
-
தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 1…
-
- 1 reply
- 587 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தங்க பத்தகம் வாங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவர் சிறையில் இருந்து கொண்டே மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் டிடிபி டிப்ளமோ படிப்பு படித்து வந்தார். அவர் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்று சிறை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு எழுதிய 185 கைதிகளில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவி…
-
- 7 replies
- 753 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி! தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார். எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவ…
-
- 3 replies
- 981 views
-