Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: வீரப்பனின் நண்பர்களான நான்கு தமிழர்களைக் காப்பாற்றாவிட்டால் நாளை நமது மூன்று தம்பிகளை காப்பாற்ற முடியாது போய்விடுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பை தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப் , பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனையை இரகசியமாக நிறைவேற்றிய மத்திய காங்கிரஸ் அரசு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கில் போட்டுக் கொன்று அதன் மூலம் நாட்டையும் சட்டத்தையும் காப்பதில் தாங்கள் உறுதியாக செயற்படுகின்றோம் என்று காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது. இந்த நான்கு பேர் மட்டுமல…

  2. சென்னை : உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்ட தண்ணீரானது, தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு 5 நாட்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை வந்தடைந்தது. மத்திய நிபுணர் குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதன்படி கடந்த சனிக்கிழமை விநாடிக்கு 1,250 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தண்ணீரானது புதன்கிழமை இரவு வரை தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரவில்லை. மழையின்றி காவிரிப் படுகை வறண்டிருந்ததாலும் கர்நாடக எல்லைப் பகுதியில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கான வெள்ளோட்டத்துக்கு அந்த மாநில அரசு தண்ணீரை…

  3. காங். மீது முதல்வர் குற்றச்சாட்டு Friday, 15 February, 2013 01:49 PM சென்னை,பிப்.15:காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாததால் காவிரி நதிநீர் பிரச்சனையில் இந்த இரண்டு கட்சிகளும் கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன என்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். இந்த இரண்டு கட்சிகளும் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப் பேட்டையில் அம்மா பேரவை சார்பில் 65 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா இத…

  4. 26 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 1990களில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை கலக்கி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில், கடந்த 1991ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷன் மீது, வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் பலியாகினர். இதே போல், கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 22 போலீசார் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, வீரப்பன் க…

    • 3 replies
    • 1.1k views
  5. "குஷ்பு இன்னொரு மணியம்மை"? கொந்தளிக்கும் உறவுகள்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மணியம்மையார் யார்? தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த…

    • 2 replies
    • 1.8k views
  6. பிரான்சுடன் இணைந்து ஏவுகணை தயாரிக்க இந்தியா பேச்சு! [Friday, 2013-02-15 09:09:30] தரையில் இருந்து வானில் உள்ள குறுகிய தூர இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணையை பிரான்ஸூடன் இணைந்து தயாரிக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதன் தயாரிப்புப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஷுவா ஹொலாந்த், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தில்லியில் சந்தித்துப் பேசினர். ராணுவம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி இருவரும் விவாதித்தனர். பின்னர், இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் நடுத்தர-பல்வகைப் பயன் இலக…

    • 3 replies
    • 730 views
  7. காவிரி எங்கே? - காத்திருந்த விவசாயிகள் ஏக்கம்! கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு வரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு, கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உடனடியாக திறந்துவி…

  8. சென்னையில் ஜிலுஜிலு மழை...தென் மாவட்டங்களும் குளிர்கின்றன Posted by: Sudha Published: Friday, February 15, 2013, 10:20 [iST] சென்னை: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இன்று காலையிலிருந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு மேல் மெதுவாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, ராஜாபாளையம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி திருமங்கலம், திண்டுக்கல், தேனி, சிவங்கை, கொடைக்கானல் உள்ள…

  9. வீரப்பன் மனைவிக்கு 25 இலட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு 25 இலட்சம் ரூபாவை (இந்திய ரூபாய்) நஷ்ட ஈடாக வழங்குமாறு இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனயுத்தம் படத்தில் வீரப்பன் கதையைப் பயன்படுத்தியமை மற்றும் அதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை பாதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்தமை போன்றவற்றிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்துள்ளார் முத்துலட்சுமி. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வனயுத்தம் என்ற பெயரில் தமிழிலும், அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்திலும் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் கதையை ராம் கோபால் வர்மா மூலம் படமாக எடுப்பதாக முத்த…

  10. சுவிஸ் வங்கியில் கலைஞர், சிதம்பரம், கலாநிதி மாறன், ஏ.ராஜாவுக்கு கோடி கணக்கில் சொத்து! சுவிஸ் வங்கியிலே கரறுப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் வெளியிட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு: ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி அர்சத்மேதா.................1,35,800 கோடி லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி ராஜீவ் காந்தி..................19,800 கோடி கருணாநிதி....................35,000 கோடி சிதம்பரம்.......................32,000 கோடி சரத் பவார்.....................28,000 கோடி கலாநிதி மாறன்...............15,000 கோடி HD குமாரசாமி................14,500 கோடி JM சிந்தியா…

  11. நடுக்கத்தையளிக்கும் விடியல்கள் - பேரறிவாளனை எண்ணி ஏங்கும் தாய் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகளுல் ஒருவர் பேரறிவாளன். இவரை மீட்க அவரது தாய் அற்புதம்மாள் (66) பல்வேறு வகைகளில் போராடி வருகிறார். இந்தநிலையில் தனக்கு ஒவ்வொரு விடியலும் பயம் கலந்த நடுக்கத்தை அளிப்பதாகவும், ஒரு தாய்க்குதான் தனது துயரங்கள் புரியுமெனவும் உருக்கமாக கூறியுள்ளார் அற்புதம்மாள். தீவிரவாத தாக்குதல்களில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குருவின் தூக்கு தண்டனை இரகசியமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தனக்கு ஏற்கனவே இருந்த பயம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  12. சென்னை: ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆண்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுகிறார்கள். அதன் பிறகுதான் பாதிக்கப்படுகிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தென்சென்னை மேற்கு மாவட்ட பாமக சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தியாகராயநகரில் நடந்தது. அதில் கலந்துகொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில், காதல் கலப்பு திருமணத்தை நான் எதிர்ப்பதாக தவறான பிரசாரம் செய்கிறார்கள். 14, 15 வயதில் சீரழிவதற்கு பெயர் காதலா? காமவெறியில் உணர்வுகளை தூண்டி சீரழிகிறார்கள். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யும்படி கர்நாடக கோர்ட்டே தீர்ப்பு வழங்கி உள்ளது. 21 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளால் தனக்கு துணையாக வருபவன் தனக்கு ஏற்றவன்தானா? என்று பகுத்தறிந்து த…

    • 0 replies
    • 747 views
  13. சென்னையில் ஐ.நா அலுவலகம் முற்றுகை; வைகோ, நெடுமாறன் கைது செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013 13:19 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியதைக் கண்டித்து சென்னையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பழ. நெடுமாறன், வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுக்கக்கோரி சென்னையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்த முருகதாசனின் நினைவுநாள் இன்றாகும். இதையொட்டி இலங்கையில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறிய ஐ.நா. சபையைக் கண்டித்தும் இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு ந…

  14. இந்தியாவில் கலப்புத் திருமணங்கள், அதாவது, வெவ்வேறு சாதிகள் இடையே நடக்கும் திருமணங்கள், ஒட்டு மொத்த திருமணங்களில் 10 சதவீதமே இருப்பதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை விட,வெவ்வேறு மதப்பிரிவுகளிடையே நடக்கும் கலப்புத் திருமணங்கள் 2.1 சதவீதமாக இருப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தியாவில் 2005-06ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வுத் தரவுகளை அடிப்படையாக்க் கொண்டு இந்த ஆய்வு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நட்த்தப்பட்டிருக்கிறது. இந்த தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், இந்தியாவில் 29 மாநிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 99,260 திருமணமான பெண்கள் குறித்த தரவுகள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த பிரின்ஸ்டன் பல்கலைக்க…

    • 0 replies
    • 664 views
  15. மத்திய இணை அமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி Posted by: Vadivel Published: Monday, February 11, 2013, 18:14 [iST] திருநெல்வேலி: மத்திய இணை அமைச்சர் நடிகர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சவலி ஏற்பட்டதால், அவரை உடனே நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, வந்த மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் நெப்போலியனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நெப்போலியன் உடல் நிலை குறித்து டாக்டர்கள் தரப்பிலோ அல்லது மருத்துவமனை தரப்பிலோ வேறு எந்தத் தகவலும் தரப்படவில்லை. http://tamil.oneindia.in/news/2013/02/11/tamil…

  16. தோழர் அப்சல் குருவின் மரண தண்டனையை எதிர்த்து இன்று (11-2-2013) மாலை வள்ளுவர்க் கோட்டத்தின் முன் நடந்த கண்டனக்கூட்டத்தின் நிழற்படங்கள் நன்றி முகநூல்

  17. ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி! Posted by: Mathi Published: Monday, February 11, 2013, 11:15 [iST] சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்று அக்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்திருக்கிறார். அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங…

  18. இலங்கை சிறையில் வாடும் தமிழர்களை மீட்க தமிழக அரசுக்கு அக்கறையில்லை! இலங்கை சிறையில் உள்ள 27 தமிழர்களை தமிழகம் கொண்டு வர அவர்களின் முகவரியை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை, கொழும்பு சிறையில், தமிழகத்தை சேர்ந்த 27 பேரும் கேரளாவை சேர்ந்த ஆறு பேரும் என 33 பேர் உள்ளனர். இவர்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களில், சுந்தரம் என்பவர், கேரளாவின், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர், தவறுதலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் உள்ள 33 பேரின் சரியான முகவரியை தருமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் மற்றும் கேரள அர…

  19. தமிழகத்தை நோக்கி வரும் காவிரி இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசு நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து திறந்துவிட்டுள்ள தண்ணீர் இன்று தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற, 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு, கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து உ…

  20. பெற்றோருக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் எதிர்காலமாக விளங்குபவர்கள் குழந்தைகள். எனினும் அவர்களில் பலர், குழந்தைப்பருவத்திலேயே மடிந்து விடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சத்து குறைவாக உள்ள அவர்களுக்கு, திடீரென்று நோய் வந்தால் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. அத்தகைய நிலையில், அவர்களைப் பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள கூடுதல் பொறுப்பு என்ன? புதியதோர் உலகில் பிரவேசிக்கும் இவர்களைப் போன்ற பல குழந்தைகள் ஏன் பிறந்தோம் என்றே தெரியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில், ஆயிரம் குழந்தைகளுக்கு 21 குழந்தைகள் இறந்து வருகின்றன. இந்த இறப்பை தடுப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதா…

    • 0 replies
    • 793 views
  21. சென்னை : "இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால். கடன் வாங்கினால் தான், நிறைவேற்ற முடியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை, நான் வாங்கி வைத்து விட்டதைப் போல, முதல்வர் ஜெயலலிதா, திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். 2006ம் ஆண்டு மே மாதம் தான், தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த, ஐந்தாண்டு காலத்திற்கு பின், தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு, 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது. அதுபோலவே, மின் வாரியத்திலும், 2005 - 2006ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் சுமையை வைத்து விட்டுத் தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இ…

    • 0 replies
    • 705 views
  22. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி பாமக சார்பில் அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால்தான் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எனவேதான் எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில் புதிய அரசியலைப் பற்றி பேசுகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செ…

    • 0 replies
    • 659 views
  23. சென்னை: இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னை அடையாறில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பாமகவை தவிர எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனவேதான் புதிய அரசியலை பேசுகிறோ…

    • 0 replies
    • 755 views
  24. சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கருணாநிதி கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல்காந்தி கருணாநிதிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களது கனிவான வார்த்தைகளும், மனோபாவங்களும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு புதிய பொறுப்புணர்வுகளை அளித்துள்ளது. உங்களை போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையும், ஆலோசனைகளும் எனது புதிய பொறுப்புகளை நிறைவேற்ற துணையாக இருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. http://news.vikatan.com/?nid=12371

  25. பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் முதலில் திறக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் படிப்படியாக 8000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்றும் ஷெட்டர் இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாகவும், திங்கட்கிழமை மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழக டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.