தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி! Posted by: Mathi Published: Monday, February 11, 2013, 11:15 [iST] சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்று அக்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்திருக்கிறார். அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங…
-
- 0 replies
- 893 views
-
-
இலங்கை சிறையில் வாடும் தமிழர்களை மீட்க தமிழக அரசுக்கு அக்கறையில்லை! இலங்கை சிறையில் உள்ள 27 தமிழர்களை தமிழகம் கொண்டு வர அவர்களின் முகவரியை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை, கொழும்பு சிறையில், தமிழகத்தை சேர்ந்த 27 பேரும் கேரளாவை சேர்ந்த ஆறு பேரும் என 33 பேர் உள்ளனர். இவர்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களில், சுந்தரம் என்பவர், கேரளாவின், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர், தவறுதலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் உள்ள 33 பேரின் சரியான முகவரியை தருமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் மற்றும் கேரள அர…
-
- 0 replies
- 629 views
-
-
தமிழகத்தை நோக்கி வரும் காவிரி இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசு நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து திறந்துவிட்டுள்ள தண்ணீர் இன்று தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற, 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு, கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து உ…
-
- 0 replies
- 839 views
-
-
பெற்றோருக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் எதிர்காலமாக விளங்குபவர்கள் குழந்தைகள். எனினும் அவர்களில் பலர், குழந்தைப்பருவத்திலேயே மடிந்து விடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சத்து குறைவாக உள்ள அவர்களுக்கு, திடீரென்று நோய் வந்தால் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. அத்தகைய நிலையில், அவர்களைப் பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள கூடுதல் பொறுப்பு என்ன? புதியதோர் உலகில் பிரவேசிக்கும் இவர்களைப் போன்ற பல குழந்தைகள் ஏன் பிறந்தோம் என்றே தெரியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில், ஆயிரம் குழந்தைகளுக்கு 21 குழந்தைகள் இறந்து வருகின்றன. இந்த இறப்பை தடுப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதா…
-
- 0 replies
- 788 views
-
-
சென்னை : "இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால். கடன் வாங்கினால் தான், நிறைவேற்ற முடியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை, நான் வாங்கி வைத்து விட்டதைப் போல, முதல்வர் ஜெயலலிதா, திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். 2006ம் ஆண்டு மே மாதம் தான், தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த, ஐந்தாண்டு காலத்திற்கு பின், தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு, 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது. அதுபோலவே, மின் வாரியத்திலும், 2005 - 2006ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் சுமையை வைத்து விட்டுத் தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இ…
-
- 0 replies
- 704 views
-
-
திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி பாமக சார்பில் அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால்தான் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எனவேதான் எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில் புதிய அரசியலைப் பற்றி பேசுகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செ…
-
- 0 replies
- 657 views
-
-
சென்னை: இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னை அடையாறில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பாமகவை தவிர எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனவேதான் புதிய அரசியலை பேசுகிறோ…
-
- 0 replies
- 750 views
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கருணாநிதி கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல்காந்தி கருணாநிதிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களது கனிவான வார்த்தைகளும், மனோபாவங்களும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு புதிய பொறுப்புணர்வுகளை அளித்துள்ளது. உங்களை போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையும், ஆலோசனைகளும் எனது புதிய பொறுப்புகளை நிறைவேற்ற துணையாக இருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. http://news.vikatan.com/?nid=12371
-
- 1 reply
- 762 views
-
-
பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் முதலில் திறக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் படிப்படியாக 8000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்றும் ஷெட்டர் இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாகவும், திங்கட்கிழமை மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழக டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்ப…
-
- 0 replies
- 666 views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா பாதைக்கு வர வேண்டும் என்று திட்டக்குடி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அவர்களை ராதாபுரம் தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், மதுரை மேற்கு சுந்தரராஜன், பேராவூரணி நடிகர் அருண் பாண்டியன் ஆகிய நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்தடுத்துப் பார்த்து அதிமுக ஆதரவாளர்களாக மாறினர். இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சி அடைந்தது. ஒருமுறை…
-
- 3 replies
- 766 views
-
-
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி பற்றிய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடந்தது. அதன் விவரம், ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு இலங்கை அரசிடம் நஷ்டஈடு பெறும் வகையில் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் கடந்த முறை தீர்மானம் கொண்டு வந்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அந்த தீர்மானத்தின் கருத்துக்களை வலுவிழக்கச் செய்து ஆதரித்தது. இலங்கை தமிழர்களுக்கு எந்த அதிகார பகிர்வும…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்முகாமில் இருந்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனது மகன்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறாது என்று அவர் தெரிவித்துள்ளார். தினமலர்
-
- 8 replies
- 2.4k views
-
-
சென்னை: ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கிக்குள் புகுந்து மர்ம நபர்கள் இன்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. முகமூடி அணிந்துவந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று வங்கிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் வங்கியின் கண்ணாடிகள் உடைந்தன.மேலும் ஊழியர்கள் ஜனகன் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் இதனிடையே ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உள்பட் தமிழகத்தின் பல்வேறு இடங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
கருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா 18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ? புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன …
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை: நடிகை குஷ்பு வீடு மீது இன்று சுமார் 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.. சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு உள்ளது. வீட்டின் எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை. தாக்குதல் நடந்தபோது, வீட்டில் குஷ்புவோ அல்லது அவரது கணவர் சுந்தர் சி.யோ வீட்டில் இல்லை. குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஆனந்த விகடனுக்கு பேட்டி…
-
- 4 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி: மத்தியக் குழு அளித்த பரிந்துரையின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் குறித்து, ஆய்வு செய்த நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழகத்தில் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற 2.44 டி.எம்.சி,. தண்ணீர் குறைந்தபட்ச தேவை என்றும், அதுவே உடனடியாக போதுமானது என்றும் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியக் குழுவின் பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு உடனடியாக கர்நாடகம் காவிரியிலிருந்து 2.44 டி.எம்.சி. நீரை திறந்து விடவேண்டும் என்று …
-
- 0 replies
- 813 views
-
-
டெசோ மாநாட்டு தீர்மானங்களை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கவே, ஸ்டாலின் டில்லி சென்றாரேயன்றி, ராகுலை சந்திக்க அல்ல என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி சிவா எம்.பி., இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி திருச்சி சென்றுள்ளார். அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி துணை தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து தாங்கள் கடிதம் அனுப்பிய நிலையில், டில்லி சென்ற திமுக பொருளாளர் ஸ்டாலின், ராகுலை சந்திக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்தஅவர், டெசோ தீர்மானங்களை வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கவே ஸ்டாலின் டில்லி சென்றாரே தவிர, ராகுலை சந்திக்க அல்ல என்று கூறினார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலி…
-
- 0 replies
- 753 views
-
-
மதுரை: மதுரையில் படுகொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் கொடைக்கானல் நட்சத்திர ஓட்டலில் தங்கியதால் அங்கு சென்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொட்டு சுரேஷ் கடந்த மாதம் 31-ந் தேதி மதுரை டி.வி.எஸ் நகர் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அட்டாக் பாண்டி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபா என்கிற சபாரத்தினம் (வயது 25), சந்தானம் (24), உள்ளிட்ட 7 பேர் சரணடைந்தவர்கள். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானல் சென்ற பொட்டு இதற்கிடையில் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட தினத்திற…
-
- 0 replies
- 1.3k views
-
-
டெல்லி: தமிழகத்தில் கருகும் பயிர்களை காக்க 2.44 டிஎம்சி தண்ணீர் போதும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு நடத்திய நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக 9 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது கடந்த திங்கட்கிழமை விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தின் தண்ணீர் தேவை அளவை அறிய நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய நீர்வள கமிஷனுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய வேளாண்மை துறை துணை ஆணையர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில் மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர்கள் மகேந்திரன், ஜேக்கப் ஆகிய 3 பேர் அடங்…
-
- 1 reply
- 754 views
-
-
டெசோ குறித்து விமர்சனம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு! சென்னை: அதிமுக உறுப்பினர் வைகை செல்வனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையிலிருந்து 2 வது நாளாக திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. வைகைச் செல்வன் பேசுகையில், சிலர் தனது மகனுக்காகவும், பேரன், பேத்திக்காகவும் கருத்தரங்கம் நடத்துகிறார்கள் என்றார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து பேசிய வைகைச் செல்வன், "இலங்கையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.இலங்கையில் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதை தடுக்க இவர்கள் எதுவும் செய்யவில்லை. கடிதம் …
-
- 2 replies
- 955 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபக்சே மறுப்பு: இந்தியாவுக்கு அவமதிப்பு இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு, எனவே அதை அடைவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த இராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்…
-
- 1 reply
- 910 views
-
-
கணவரை இழந்தபிறகு முதன் முதலாக கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மீண்டும் மேடையில் தோன்றி இசைக்கச்சேரி செய்தார். 'கண்ணோடு காண்பதெல்லாம்', 'மின்சாரக் கண்ணா' புகழ் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் கோட்டூர்புரம் அருகே ஆற்றுப்பலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது நித்யஸ்ரீயிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக இசை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் கணவரை இழந்த நித்யஸ்ரீயின் இசை எதிர்காலம் என்ன? அவர் மீண்டும் பாடுவாரா? என்ற கேள்வி கர்நாடக இசை உலகிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. கடந்த இரண்டு மாதங்களாக தனது இசை வாழ்க்கை குறித்து மௌனம் காத்து வந்த நித்யஸ்ரீ, மியூசிக் அகாடமி சார்பாக நடத்தப்பட்ட தியாகராஜர் ஆராதனை விழாவில் ஞாயிறன்று பாடின…
-
- 8 replies
- 1.6k views
-
-
மதுரையில் பயங்கரம்... மு.க.அழகிரியின் வலதுகரம் பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை! மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட பொட்டு சுரேஷ் மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிரியின் தீவிர விசுவாசியும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொட்டு சுரேஷ். இவர் இன்று இரவு மதுரையில் அழகிரி இருக்கும் வீட்டு பக்கத்தில் சத்யசாய் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் வெட்டிக் கொன்றது யார் என்பது தொடர்பாக மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யார் இந்த பொட்டு சுரேஷ்? திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அ…
-
- 10 replies
- 3.5k views
-