தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அண்மையில் ஒடிசாவில் நேர்ந்த ரயில் விபத்து, கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட சில மோசமான ரயில் விபத்துகளைப் பற்றி நாட்டு மக்களை சிந்திக்கவைத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு ரயில் விபத்தில், அந்த ரயில் முழுவதும் கடலில் மூழ்கியது. இந்த சோகமான நிகழ்வு மனித தவறுகளால் ஏற்பட்டது அல்ல, இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டது. படக்குறிப்பு, ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அளவில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோரும் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமானோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு குறித்த விரிவான அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழா…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MK STALIN FB/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 ஜூன் 2023, 10:19 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் மேகேதாட்டு அணை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு. இது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தின் பின்னணி என்ன? கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்த பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தி…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
6 ஜூன் 2023, 09:59 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்திருக்கிறது. கடந்…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் இடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வீடுகள். மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புதிய வீடுகள் கட்டித் தருவதாக அதிகாரிகள் கூறியதை நம்பி, குடியிருந்த வீட்டுகளை இடித்துவிட்டு 52 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊருணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 இடங்களில் உள்ள முகாம்களில் 1,609 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வசிக்கும் பழைய வீடுகளை இடித்துவிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணி முகாமில் 186 குடும…
-
- 3 replies
- 675 views
-
-
02 JUN, 2023 | 01:20 PM இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை ஸ்கூபா வீரர்களின் உதவியோடு இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சர்வதேச கடலோர எல்லையில் இந்திய-இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கையை மீறி கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அத…
-
- 3 replies
- 339 views
- 1 follower
-
-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று ஆரம்பம்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப் பிரமாண்டமாக விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு ப…
-
- 2 replies
- 726 views
- 2 followers
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டை உலுக்கிய சாதி ஆணவக் கொலை வழக்குகளில் கோகுல் ராஜ் கொலை வழக்கும் ஒன்று. 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தக் கொடூர கொலை வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. கோகுல் ராஜ் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்த…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்! SelvamMay 31, 2023 21:17PM ஷேர் செய்ய : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் ஐடி விங் பக்கம், இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், செய்திப்பிரிவு செயலாளர…
-
- 3 replies
- 531 views
- 2 followers
-
-
படக்குறிப்பு, மணக் கோலத்தில் சுமதி - சேகர் தம்பதி கட்டுரை தகவல் எழுதியவர்,மாயகிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வேகமாக மாறி வரும் இன்றைய சமூகச் சூழலில் திருமணம் என்பது ஆண், பெண் இரு பாலருக்குமே பெரும் சவாலான ஒன்றாக மாறி வருகிறது. சாதி, மதம், கல்வி, சமூக அந்தஸ்து, வேலை, ஊதியம் எனப் பல தடைகளைக் கடந்தால்தான் ஆணோ, பெண்ணோ ஒரு திருமண பந்தத்திற்குள் நுழைய முடிகிறது. அதுவே, மாற்றுத்திறனாளிகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களது உடலில் உள்ள குறைகளே திருமணத்திற்குத் தடையாக நிற்கும். கள்ளக்குறிச்சியில் அத்தகைய மாற்றுத்திறனாளிகளான ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழை…
-
- 1 reply
- 485 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 29 மே 2023, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டிலுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கான இளங்கலை இடங்களுக்கான (MBBS) அங்கீகாரத்தை திரும்பப் பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் உருவாகக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த முடிவை திரும்பப்பெற உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகள் தங்கள் இளநிலை படிப்புகளுக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிட்டது எப்படி? என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன செய்ய இ…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 MAY, 2023 | 10:02 AM மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்என நாம் தமிழ் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது அடிப்படை வசதிகள் ஏதுமற…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 28 மே 2023 இன்று சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்ட பிரதமர், புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றியபோது, “இங்கு செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம்,” என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஆதீனங்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது, பிரதமர் உரை என்று பல்வேறு விதங்களில் தமிழ்நாட்டின் தொடர்பு இருந்துகொண்டே இருந்ததாகவும் இது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அ…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
தமிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம். தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார். இந்த நிலையில் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அந்த நாட்டின் முன்னணி தொழில் வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து நாளை மறுதினம் ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2023/1332617 @Kapithan ஆதவன் நியூஸ் தலைப்பு... இப்படி இருந்தது //தழிழக …
-
- 3 replies
- 742 views
- 1 follower
-
-
14 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து …
-
- 11 replies
- 783 views
- 1 follower
-
-
தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலி! kugenMay 23, 2023 தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூன்று இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்த…
-
- 0 replies
- 526 views
-
-
22 மே 2023 தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார். பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க ம…
-
- 0 replies
- 741 views
- 1 follower
-
-
22 MAY, 2023 | 11:23 AM தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த போது கூட்ட நெருக்கடியால் மு.க.ஸ்டாலின், டி.ராஜா, சரத் பவார்,தொல்.திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் நோக்கில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதில் 19 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் பெ…
-
- 4 replies
- 686 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 51 நிமிடங்களுக்கு முன்னர் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இப்போதிருந்து 2017ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் இளங்கோ எச்சரிக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் நில…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 மே 2023 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குற…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,…
-
- 18 replies
- 1.7k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,INC படக்குறிப்பு, ராகுல் காந்தி 13 மே 2023, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெற…
-
- 4 replies
- 484 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2023 | 01:08 PM புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்க…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 15 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி முருகன் கோவிலில் புலிப்பாணி சித்தர்கள் போகர் ஜெயந்தி நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. கோவில் நடைமுறையில் இல்லாத விழாவை நடத்த முற்படுகின்றனர் என கோவில் நிர்வாகம் கூறும் நிலையில் தங்களின் நடைமுறையில் கோவில் நிர்வாகம் தலையிடுவதாக புலிப்பாணி சித்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலிப்பாணி சித்தர்கள் யார்? திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் முருகனின் அறுப…
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி Published By: Rajeeban 04 May, 2023 | 10:44 AM திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும…
-
- 5 replies
- 865 views
- 1 follower
-