தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தி.மு.க.வுக்கு ரூ.50 லட்சம் தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி! தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூண், தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக ஐம்பது லட்சத்தை வாரி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மாநிலம் முழுவதும் முழு வீச்சில் தேர்தல் நிதி திரட்டி வருகிறது தி.மு.க. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூணை சந்தித்த தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா, அவரிடம் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கேட்டாராம். கட்டாயம் அதை தருவதாக சொல்லி அவரை வழியனுப்பிய ஆரூண், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட நகர, ஒன்றிய தி.மு.க. செயலாளர்களை அழைத்து ஆளுக்கு மூன்று லட்சம் வீதம் தேர்தல் நிதி வழங்கி ரசீதை போட்டு வாங்கி இருக்கி…
-
- 1 reply
- 497 views
-
-
கோவையை அடுத்துள்ள சூலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் பட்டணம்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் சிலையின் முகத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து உடனே உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். மேலும்,…
-
- 0 replies
- 859 views
-
-
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான்: அரிமாவளவன் பேச்சு Posted by: Vadivel Published: Monday, March 25, 2013, 11:56 [iST] கரூர்: கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான் என தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தெரிவித்துள்ளார். மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள் வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர். அவர்கள் மத்தியில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசியதாவது, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக அவன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த …
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் மீனவ குடும்பத்தினர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இவர்கள் இலங்கை போலீஸார் மூலம் மல்லாஹம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் 26 பேரையும் வரும் 11ஆம் தேதி வரை சிறைவைக்க மல்லாஹம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி பெற்றிருந்தன. ஆனாலும் இலங்கை கடற்படையினர் மீதுள்ள அச்சத்தால் 300…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக். இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருந்தும் ஈழப் பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில் நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வா…
-
- 0 replies
- 666 views
-
-
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1 எஸ்.கிருபாகரன் புதிய தொடர் அரை நூற்றாண்டு காலம் திரையுலகிலும் அரசியலிலும் மின்னிய ஜெயலலிதா என்ற நட்சத்திரம் மறைந்துவிட்டது. ஆண்களே ஆதிக்கம் செலுத்திய துறைகளில் ஒரு பெண் பரபரப்பாக இயங்கி, வெற்றிக்கோட்டையில் பெருமிதமாக வீற்றிருந்தார் என்பது பெரும் வியப்பு. துணிச்சல், மிடுக்கு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத கம்பீரம்... இதுதான் ஜெயலலிதா! புறம் பேசமாட்டார்... பரபரப்புப் பத்திரிகையாளர் களிடம் பத்தடி தள்ளியே இருப்பார்... ஷாட் முடிந்த அடுத்த நொடியே மேக்கப் கலைத்து, கார் நிற்கும் போர்டிகோவை நோக்கி அவர் கால்கள் விரையும். இதுதான் நடிகை ஜெயலலிதா! 1968-ம் ஆண்டு, வார இதழ் ஒன்றுக்கு அவர் அளி…
-
- 24 replies
- 14.2k views
-
-
சென்னை: புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் Prevention of Food Adulteration Act 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்க…
-
- 0 replies
- 517 views
-
-
இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமார் என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு ஒரு சிறிய ஜாமின் தொகை கட்டி பிணையில் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகை கட்டப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். விஜய் குமார் இதற்கிடைய…
-
- 0 replies
- 321 views
-
-
சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள் தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வர…
-
- 2 replies
- 714 views
-
-
சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள் பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் அமைச்சர்களும், அதிமுக மகளிர் அணியினரும் சென்னை திரும்பினர். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மூன்று பேரையும் விடுதலை செய்தார். இந்தத் தீ…
-
- 1 reply
- 502 views
-
-
தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி: தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகே உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர். மேலும் இந்த தாக்குதலில் ஓ.பி.எஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வே…
-
- 0 replies
- 348 views
-
-
போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்க ஆளில்லை... போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்கக்கூட யாருமில்லையாம்! இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஜெயலலிதாவின் உதவியாளர்கள் விழிபிதுங்கி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை, போயஸ்கார்டன் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அங்கு கட்சியின் வி.ஐ.பி-க்கள் வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக, சசிகலா குடும்பத்தினர் வரத் தயங்குகிறார்கள். காரணம்..ஜெயலலிதாவின் ஆவி இங்கே நடமாடுகிறது என்ற வதந்தி பரவியது தான். மாடியில் உள்ள ஜெயலலிதா, அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. ஜெயலலிதா ஆசையாக …
-
- 0 replies
- 533 views
-
-
பி.ஜே.பி-க்கு 'செக்': தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி? தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருப்பது பி.ஜே.பி-க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.. சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில், இதுவரை இல்லாதவகையில் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அணி திரண்டு, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். அத்துடன் அவர்கள், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமைகளை எடுத்துரைத்ததுடன், 'விரைவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்' என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசியல்களத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு, …
-
- 0 replies
- 365 views
-
-
வேகம் எடுக்கும் ‘ஃபெரா’... அச்சத்தில் சசிகலா! வழக்குகள்... வாய்தாக்கள்... தண்டனைகள்... சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் புதிதல்ல. அப்படித் தொடங்கி, 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்புதான், சசிகலாவைச் சிறைக்கு அனுப்பியது. அதைப் போல 22 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிக்கலான அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள், வெட்டுக்கிளிகளைப் போல் மொத்தமாகக் கிளம்பி சசிகலா குடும்பத்தை அலைகழிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் அச்சத்தில் இருக்கிறார் சசிகலா. ஜெ.ஜெ டி.வி, சசிகலா, தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீது 1995-96 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ‘ஃபெரா’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 …
-
- 0 replies
- 910 views
-
-
நீலகிரி: இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - அரசியலாக்கப்படுவதன் பின்னணி என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா, இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதுகுறித்த விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. `யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது இடமாற்றத்தை அரசியலாக்க வேண்டியதில்லை' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயல…
-
- 0 replies
- 490 views
- 1 follower
-
-
''அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாம் நாடகம்தான்!'' - போட்டுடைக்கிறார் ஈ.ஆர். ஈஸ்வரன் ப்ரேக்கிங் நியூஸ்களால் மறுபடியும் ஊடகத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அணிகள். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை' என்று அமைச்சர்கள் அறிவித்த அடுத்த நொடியே, அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிறார். 'ஓவியாவுக்கு என்னதான் ஆச்சு?' என்று விடைதெரியாமல் அவஸ்தைப்பட்டு வரும் தமிழக மக்கள் மத்தியில், 'இப்போது அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?' என்ற குழப்பக் கேள்வியும் சேர்ந்துள்ளது. இந்த நிலையில், ''அ.தி.மு.க-…
-
- 0 replies
- 489 views
-
-
இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்’… முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவிப்பு தமிழகம்: நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உ…
-
- 5 replies
- 718 views
-
-
அ.தி.மு.க பொதுக்குழு: முதல்வர், துணை முதல்வர் வருகை - 14 தீர்மானங்கள் இடம்பெறுவதாக தகவல் தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. …
-
- 9 replies
- 2k views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, கடந்த 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் நிராகரித்தார். கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்…
-
- 0 replies
- 253 views
-
-
தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.! தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்ந…
-
- 9 replies
- 642 views
-
-
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான். 160 அடி ஆழம் குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்…
-
- 0 replies
- 396 views
-
-
ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை! Chennai: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. மேலும், விதிமுறைகளின்படி சுமார் 600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக்கு ப…
-
- 0 replies
- 348 views
-
-
தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER (இன்று 03/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.) கேரள மாநிலத்தில் தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு உயிரிழந்ததாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில், "கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபீக் - மரியம்மை தம்பதிகளின் மகள் அப்ரா (வயது 15). இவருக்கு சிறுவயதில் எஸ்…
-
- 1 reply
- 777 views
- 1 follower
-
-
இலவசங்கள், ஃப்ரீபிக்கள் என்பது பொருத்தமல்ல; அவை ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்: ஜெ. ஜெயரஞ்சன் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
ஸ்டெர்லைட் படுகொலைகள்: ஒரு புலி, ஹிட்லர் மற்றும் ராஜபக்ஷே ஆர். அபிலாஷ் தூத்துக்குடி படுகொலைகளின் அதிர்ச்சி விலகாத நிலையில் ஒரு நண்பரிடம் தொடர்ச்சியற்று பலவிசயங்களைப் பற்றி பேசி புலம்பியபடி இருந்தேன். நண்பர் என்னிடம் சட்டெனக் கேட்டார், “மெரினாவில்ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளின் போது போராளிகளை இந்த அதிமுக அரசு நடத்தியதற்கும்இதற்குமான தொடர்பை கவனித்தாயா?”. கவனித்தேன், நியூஸ் 18 டிவி விவாதத்தின் போது ஆரூர்ஷாநவாஸும் அதைக் குறிப்பிட்டார். நான் சொன்னேன், “இரண்டு சம்பவங்களிலும் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஒருவிதத்தில்வேதனையடைய செய்தது, இதை தவிர்த்திருக்கலாமே எனும் எண்ணம். அரசுக்கு இதனால் நேரடியாய் பயன்இல்லையே, இருந்தும் ஏன் செய்கிறது எனும் ஐய…
-
- 0 replies
- 933 views
-