Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம் சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின. அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள்…

  2. அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை! (வீடியோ) முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்…

  3. அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை டிடிவி.தினகரன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகி களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பு, டி.டி.வி.தின கரனை துணைப் பொதுச் செயலா ளராக நியமித்தார். தினகரன் நியமனத்துக்கு கட்சியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தினகரனை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஜெ.தீபா அ…

  4. அமைச்சர்கள்... தவறு செய்தால், பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்…

  5. சென்னை: தமிழ்நாட்டில் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் யாரையும் எனது தலைமையிலான அரசு சும்மா விடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் உரை நிகழ்த்தினார். மாநில முதல்வர்களும் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினர். …

  6. அம்பி டு அந்நியன்...! (பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1 ) மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி... என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்... என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம…

  7. அம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபா அபராதம்! தமிழகத்தில் உள்ள வீதிகளில் அம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்புடம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே பொருட்கள், கம்பிகள் இர…

  8. அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் – கமல்ஹாசன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான் என கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒடுக்கப…

  9. அம்மா ஆட்சியில் செருப்பை கழற்றச் சொன்னவருக்கு சிறை மருத்துவமனையின் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டது தவறு என இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே விஜயகுமார் கூறினார். தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும்போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடுத்த, ச…

  10. அம்மா இருக்கும்போது மோடி எதுக்கு? குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக்க பல ஆதரவுக்குரல்கள் எழுகின்றன. அதே வேளையில் திரு. நரேந்திர மோடியை விட தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகத் தகுதியுள்ளவர் என்பதற்கு பத்து காரணங்களைத் தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் சஞ்சய் பின்ரோ. எல்லோரும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமராகலாமா அல்லது ஆகக் கூடாதா என விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமாகிய சஞ்சய் பின்ரோ அவர்கள், தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதாவின் இன்றைய ஈ…

  11. அம்மா உணவகம் அடித்து உடைப்பு https://www.facebook.com/100001158942487/posts/3976418592406733/

  12. பெற்ற தாய்க்கு பிறகு அம்மா என்று அழைக்க கூடியவர் காரைக்கால் அம்மையார் தான். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டபட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் ஒருவரை அம்மா என்று அழைப்பது, காரைக்கால் அம்மையார் பெயருக்கு நாம் செய்யும் இழுக்கு என்று திருவடிகுடில் சுவாமிகள் பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிமலை இறைபணி திருகூட்டத்தின் சார்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா நாச்சியார் கோவில் அருகே உள்ள கூகூரில் கொண்டாடபட்டது. அந்த விழாவில் திருகூட்டத்தின் நிறுவனர் திருவடிகுடில் சுவாமிகள் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவில், ''நாயன்மார்கள் பலரும் அறிந்துள்ள பெண்ணடியார்கள் மூவாரில் அம்மையார் என்று அழைத்து போற்றபடுபவர் காரைக்கால் அம்மையார்தான். இவரது ப…

  13. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். இன்று முற்பகல் 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் அதி நவீன வசதிகளுடன் அரசு பணியாளர்களுக்கான 700 குடியிருப்புக்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தன. அதை இன்று முதல்வர் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு ஊர்களில் கட்டப்பட்டு இருந்த மேம்பாலங்கள், கட்டிடங்களைத் திறந்து வைத்தார் ஜெயலலிதா. அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான இலவச கைப்பேசிகளை வழங்கும் திட்டத்தையும் இன்று துவக்கி வைத்தார்.15 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு இருக்கும் இந்தத் திட்டத…

  14. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்ததாவது, “சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்படுவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது.” என்றார். முன்னதாக நீதிமன…

  15. அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெற…

  16. அம்மா.... அப்போலோ... அ.தி.மு.க.... ரத்தத்தின் ரத்தங்களின் மனநிலை!? #JVBreaks (வீடியோ!) ஜெயலலிதாவின் அப்போலோ வாசம் 40 நாட்களைக் கடந்துவிட்டது. அரசு இயந்திரம் வழக்கம்போலச் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொண்டர்களின் மனநிலை என்ன தெரியுமா ? ரத்தத்தின் ரத்தங்கள் தெளிவாக இருக்கிறார்களா அல்லது தங்களது தலைமை பற்றித் தெரியாமல் இருக்கிறார்களா ? ஒருபக்கம், காவடி... பால்குடம்... மறுபக்கம், அலகு குத்துதல்... மண்சோறு... என தங்களது பிரார்த்தனைகளை ஆரம்பித்துவிட்டார்களே? இவைதானே கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு விசாரணையின்போதும் நடந்தது. இதில் என்ன வித்திய…

  17. அம்மாவின் அதிரடி ஆட்டம் பலிக்குமா? சந்திர. பிரவீண்குமார் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரமுகர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாகச் சந்தித்து "ஆலோசனை" செய்வதால் பொதுக்குழுவை கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஆவலுடன் எதிர்நோக்குவது வழக்கம். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயலலிதா இந்த கூட்டத்தில் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவதால் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்த பொதுக்குழுவிலும் அறிவிப்பு அமர்க்களப்படுத்தியது. இந்தக் கூட்டத்தில்தான், 'வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உட்பட யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது.…

  18. இந்த பதிவு மாநகரன் என்பவரால் பதியப்பட்டது ஆனால் மூலம் ஜூனியர் விகடன் ஸ்ரீரங்கம் சீர்மிகு அரங்கமாக மாறிக் கொண்டு இருக்​கிறது! கொள்ளிடக் கரை, பஞ்சக்கரை சாலை அருகே உள்ளது யாத்ரி நிவாஸ். திருவானைக்காவல், சமயபுரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் இங்கே தங்கிச் செல்லலாம். திருப்பதி போன்ற பிரபல கோயில்களில் உள்ளதைப்போல பிரமாண்ட கட்டடம். ''கொள்ளிட ஆற்றில் குளித்துவிட்டு ரங்கநாதரைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கிறது. அதனால்தான், பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். அவர்களின் வசதியை மனத்தில் வைத்து முதல்வர் செயல்படுத்தி​யது​தான் யாத்ரி நிவாஸ். ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கிச் செல்லலாம். காலங்காலத்துக்கு முதல்வர் பெயரை பக்தர்கள் உச்சரிப்பார்கள்'' என்கிறார் சுந்தர்…

  19. சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாற்றுத் திறனாளியான பதினொரு வயது சிறுமி ஒருவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …

  20. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்தில் இந்த நோய்த் தொற்றியோர் எண்ணிக்கையை 3 ஆக ஆக்கியுள்ளது. 17-ம் தேதி சென்னை வந்தவுடனே அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். நேற்று மார்ச் 18 அன்று அவர் அறிகுறிகளோடு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன…

  21. அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்! christopherJan 12, 2025 12:51PM அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடியில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அறிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் “நான் முதல்வர் ஆன பிறகு , சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றபோது, தாயகத்தில் வாழுகிற உணர்வை அங்குள்ள தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். அமெரிக்க பயணத்தில்…

  22. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 08:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது? அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆள…

  23. தமிழ் நாட்டின் தென்காசி அருகில் உள்ள அய்யாபுரம் கிராமத்தின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொரோனா விலிருந்து தமது ஊரை பாதுகாகக்க பல கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இளைஞர்கள் ஒன்று இணைந்து ஊரின் முகப்பின் சுவரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். டிரம்களில் தண்ணீர் மற்றும் சவற்காரம் வைக்கப்பட்டு ஊருக்குள் செல்பவர்கள் தங்கள் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின் முகக்கவசம் அணிந்த பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதே வேளை இவ் கிராமத்தின் குழந்தைகள் ஒன்றிணைந்து தனது பெற்றோர்கள் உதவியுடன் கொரோனாவுக்கான விழிப்புணர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். …

    • 0 replies
    • 362 views
  24. அரக்கோணத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்! சென்னை: மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து நாளை (4-ம் தேதி) அரக்கோணத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நேற்று (2-ம் தேதி) சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடற்கரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையும் நாளை (4-ம் தேதி) முதல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.