தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
நாளை முதல் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி! மின்னம்பலம்2022-02-15 சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து விதமான கண்காட்சி மற்றும் பொருட்காட்சிக்குத் தமிழக அரசு தடை விதித்தது. இதனால் புத்தகக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், தற்போது கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னை புத்தகக் காட்சியை நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி நாளை (பிப்ரவரி 16) முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45ஆவது புத்…
-
- 3 replies
- 398 views
- 1 follower
-
-
தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தல் : பிரசார நடவடிக்கைகள் நிறைவு! தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன. இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆயிரத்து 824 வாடர்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 411 வார்டுகளிலும், நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக பொலிஸாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவத்தினரும், ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267574
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
நியூட்ரினோ திட்டத்தால் தேனி அருகே என்ன பாதிப்பு வரும்? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன? க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்றும், புலிகள் நடமாட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு…
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதால், கரையோரங்களில் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் தொலைவுக்குள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதியில் இது நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், இப்படி நடக்கவில்லை என்கிறார்கள் விசைப்படகு மீனவர்கள். இந்த சிக்கலால், நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக ந…
-
- 5 replies
- 605 views
-
-
நாங்கள் சீர்திருத்தவாதிகள் அல்ல, புரட்சியவாதிகள்: சீமான் மின்னம்பலம்2022-02-17 நாங்கள் சீர்திருத்தவாதிகள் இல்லை; புரட்சியவாதிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று(பிப்ரவரி 17) செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. நேர்மையான, ஊழலற்ற, தூய்மையான ஆட்சி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் என்றைக்கு ஒழிந்துபோகும் என்று தெரியவில்லை. கோயில் கருவறையில் இருந்து …
-
- 1 reply
- 384 views
-
-
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 183 views
-
-
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்த வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார் ஹைலைட்ஸ்: 'தமிழனத்திற்கு பேரழிவு!' மோடி அரசை விமர்சித்த வேல்முருகன்! தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ள கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இக்கோரிக்கையை முன் வைத்துதான், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் தமிழ்நாடு தழுவியதாக மாறியது. ஆனால் மக்களின் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கவில்…
-
- 0 replies
- 458 views
-
-
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீவிரமடைந்தபோது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.…
-
- 0 replies
- 201 views
-
-
தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? ஏ.எம்.சுதாகர் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் விதைப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் மேம்பட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் உருவாகியிருக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், பருவநிலையும் அவர்கள் விதைப் பண்ணைகளை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. நெல், நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, ஆமணக்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளையும் உற்பத்தி செய்து, ஆண்டு மு…
-
- 1 reply
- 539 views
- 1 follower
-
-
தமிழ்நாடு விவசாயம்: 1,250 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு பாதுகாக்கும் தம்பதி ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SIVARANJANI நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் சரவணகுமார் - சிவரஞ்சனி தம்பதி இந்தியா மற்றும் பிற நாடுகளின் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சொர்ணமுகி, ராதாதிலக், போபோசால், ரப்புத்தாளி, கப்பக்கார், இலுப்பைப்பூ சம்பா, கொட்டார சம்பா, நீலஞ் சம்பா, குருவிக் கார், செங…
-
- 3 replies
- 346 views
- 1 follower
-
-
by கதிர் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும்,தமிழக படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களை, படகுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் காலவரயற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரம் விசைப்படகு வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முற்றிலும் வேலையிழந்துள்ளதோடு மீன்பிடி சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு ச…
-
- 0 replies
- 229 views
-
-
மீனவர்கள் கைது விவகாரம்: தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 29 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவா்கள் மூன்றாவது முறையாகக் கைது செய்யப்பட்டிருப்பதை தங்களது தனிப்பட்ட கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த 7 ஆம் திகதி அன்று மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, அந்த நாட்டின…
-
- 0 replies
- 211 views
-
-
தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் – சீமான் வேண்டுகோள் February 8, 2022 இலங்கை – இந்திய கடற்பரப்பில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை இரு நிலத்தில் வாழும் தமிழர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்படாவது, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளான தமிழ்த்தேசிய இன மக்களைத் தங்களுக்குள்ளேயே மோதிச்சண்டையிட வழிவகை செ…
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது – தமிழக முதலமைச்சர் நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு என்றும் அது ஒரு பலிபீடம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு சட்டமூலத்தை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடியது. கூட்டத்தில், நீட் விலக்கு சட்டமூலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் சட்டமூலம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்போது, நீட் விலக்கு சட்டமூலம் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தே…
-
- 1 reply
- 388 views
- 1 follower
-
-
நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்பாதை: திருவண்ணாமலை விவசாயிகள் கணிசமான இழப்பீடு பெற்றது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் பவர் கிரிட் கார்ப்பரேஷன், டான்டிரான்ஸ்கோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் உயர் அழுத்த மின் கம்பிகளை 14 மாவட்டங்களில் அமைக்கின்றன. இந்த மின் கம்பிகள், அதற்கான உயர் மின் கோபுரங்கள் விவசாயிகளின் விளை நிலங்களில் அமைகின்றன. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததால் அவர்களால் இழப்பீடு வாங்க முடியவில்லை, வாங்கிய சிலரும் சொற்ப அளவிலேயே இழப்பீடு பெற்றுள்ளனர். ஆனால், திருவண்ணாமலை…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிற நிலையில் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களை கூறி இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொர…
-
- 6 replies
- 1k views
-
-
தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார் 6 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய ரயில்வே: வடக்கு, தெற்கு பாகுபாடு? கடந்த நான்கு ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் புதிய வழித்தடத் திட்டங்களுக்கு 308 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால், இதே காலகட்டத்தில் வடக்கு ரயில்வேயில் புதிய வழித் தடத்திட்டங்களுக்கு சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வேவைவிட வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு அதிக நிதி ஒதுக…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
4 இலங்கை தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும்! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஈழத்தாயகத்தைச் சேர்ந்த முகமது கலீல், முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் ஆகிய 4 மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து மீன் பிடிக்கக் கிளம்பியவர்கள், படகின் இயந்திரம் பழுதானதால் உண்ண உணவின்றி, மூன்று வேளையும் பச்சை மீனை சாப்பிட்டும், கடல் நீரைக்குடித்தும…
-
- 0 replies
- 691 views
-
-
இந்திய மீனவர்களின் விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். இலங்கை மீனவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவைத் துணைத் தலைவர் குமரவேலு தெரிவித்துள்ளார், இந்திய மீனவர்களை கண்டித்து இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து ராமேஸ்வரத்தில் உள்ள தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேலு பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடலில் இலங்கை மீனவர்களை இந்திய மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ யாருக்கும் நோக்கம் இருந்ததில்லை," என்று கூறினார். மேலும், ''இந்திய மீனவர…
-
- 1 reply
- 266 views
-
-
சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர் 15 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM (செப்டம்பர் 15, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான கட்டுரை அண்ணா நினைவு நாளான இன்று மறுபகிர்வு செய்ய்யப்படுகிறது.) தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையை அவரது நினைவு தினமான இன்று தொகுத்துவழங்குகிறோம். பெருமதிப்பிற்குரிய மன…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
பட்ஜெட் 2022: காவிரி - பெண்ணாறு உட்பட 5 நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு வரைவு அறிக்கை தயார் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 2022-23 நிதியாண்டுக்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை: வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்கள் அற்ற இயற்…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா? மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசினார்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,K P SHANKAR FACEBOOK PAGE திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சித் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ''சாலைகளைத் தரம் இல்லாமல் போடுவது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நான் தாக்கியதாகப் புகார் கொடுத்துவிட்டார்கள். முதலமைச்சரிடமும் நடந்ததை விளக்கிக் கூறியுள்ளேன்,'' என்கிறார் கே.பி.சங்கர். என்ன நடந்தது? தி.மு.க பொதுச…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டிய விவகாரம் – 50 வயதுடைய பெண் உள்ளடங்களாக ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டியதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 50 வயதுடைய லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற பெண்ணை சென்னையிலும் மற்றொருவரை மதுரையிலும் தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். கடந்த வருடம் கைது செய்யப்பட்ட பிரான்சிஸ்கா ஒக்டோபர் மாதம் சென்னை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்ட…
-
- 1 reply
- 485 views
-
-
தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை நிதர்சனம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானதாகவே உள்ளது. தமிழகத்தை 2030 க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் திட்டமாக உள்ளது. மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் இந்த எண்ணத்தை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகவும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே புதிய சோசியலிச இயக்கம் கூறி வந்தது. தற்போது இதனை நிரூபிக்கும் வ…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த அதிகாரிகள்: சென்னையில் போராட்டம்! இந்திய குடியரசு தினமான நேற்று சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க அதிகாரிகள் மறுத்த நிலையில் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பல்வேறு கட்சிகள் சென்னையில் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன. குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ச…
-
- 3 replies
- 616 views
-