தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! சென்னையை கண்கலங்க வைத்த சோகம் (வீடியோ) 'தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து பலர் தவறிவிடுகின்றனர். வசதி படைத்தவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். வறுமையில் வாடுபவர்களுக்கு வீதிகளே வீடுகளாகிறது. சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடக்க முடியாத முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். பசியின் கொடுமையைவிட அவரது மனம் கடும் இறுக்கத்தில் இருந்தது. காரணம், பெற்ற மகனே தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்…
-
- 0 replies
- 573 views
-
-
பங்குனி 11, 2013 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழ பொதுவாக்கெடுப்பு கோரியும் கைதுசெய்யப்பட்ட லயோலாக் கல்லுாரி மாணவர்களை விடுவிக்கக்கோரியும் பெரும் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்கள் , தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை படுகொலைக்கு ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று உண்ணாநிலை இருந்த கல்லூரி மாணவர்களை தமிழக காவல் துறை வலுக்கட் டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்தும். இலங்கைக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருக்கும் சுப்பிரமணியசாமியை கண்டித்தும் மன்னா ர்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ச…
-
- 36 replies
- 3.6k views
-
-
சென்னை: "காங்கிரசில் சேரப்போவதாக எனக்கு வேண்டாதவர்கள் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்" என்று கூறிய நடிகை குஷ்பு, தி.மு.க.வில்தான் இருக்கிறேன், தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன் என்றார். தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினைத்தான் நான் முன்மொழிவேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பேட்டி ஒன்றில் கூறினார். இதனை நடிகை குஷ்பு விமர்சித்திருந்தார். இதையடுத்து, திருச்சியில் நடிகை குஷ்பு மீது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதோடு., சென்னையில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. இதனிடையே, இந்த தாக்குதலை கண்டித்த தி.மு.க. தலைமைக் கழகம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை நடவ…
-
- 0 replies
- 530 views
-
-
‘அப்போலோ ரகசியத்தை வெளியிட்டால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும்!’ - மிரட்டும் ஹேக்கர்ஸ் 'ஹேக்கிங்' இந்த வார்த்தையே பலரை பீதியூட்டுவதாக மாறிவிட்டது. 'ஹேக்கிங்' என்பது நல்லது, கெட்டது இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திருடி, தனக்கு சாதகமாக்கி கொள்வதற்கே ஹேக்கிங் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. லீஜியன் என்ற ஹேக்கர் குழு இந்தியாவைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நாங்கள் ஹேக் செய்துள்ள, சில அரசியல் தகவல்களை வெளியிட்டால், இந்தியா மிகப் பெரும் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே அது. இந்த லீஜியன் ஹேக்கர் குழுதான், காங்கிரஸ் கட்சியின்…
-
- 1 reply
- 839 views
-
-
கார்டனில் கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா! கலக்கத்தில் அமைச்சர்கள் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் முகம் பதித்த கேக்கை கார்டனில் சசிகலா வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டையொட்டி அவர் கேக் வெட்டியதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அடுத்து சசிகலாவை கார்டனில் சந்தித்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாம். அந்த கையெழுத்தை சசிகலாவை முதல்வராக்கப் போகிறது என்ற தகவல் அமைச்சர்களை கலக்கத்தில் ஏற்படுத்தி இருக்கிறதாம். அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் கடும் அதிர்வலைகளையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக அடிமட்ட தொண்டர்கள் முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர். கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சசிகலா நடராஜன் வந்து விட்டார். அடுத்து அ…
-
- 0 replies
- 539 views
-
-
ஜல்லிக்கட்டு தடைக்கு தீர்வு என்ன? #YoutubeLive ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் சங்கிலித் தொடர்போல... கோவை, சேலம், கடலூர், திருச்சி, சேலம், டெல்லி என எங்கும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் மட்டும் நடந்துவந்த ஜல்லிக்கட்டு, இளைஞர்களின் எழுச்சியால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றி இளைஞர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், யூடியூப் லைவ்வில் அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்…
-
- 0 replies
- 631 views
-
-
ஓபிஎஸ் சிரித்ததை காரணம் காட்டுவது வெட்கக் கேடானது: சசிகலா மீது ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின் | கோப்புப் படம் "அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்" என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினை…
-
- 2 replies
- 624 views
-
-
தமிழ் நாட்டில் அதிமுக கட்சியின் தொழிநுட்ப பிரிவு நடத்திய, தொலைபேசி ஆதரவு கணக்கெடுப்பு ஆரம்பித்து 48 மணித்தியாலயங்களில், சுமார் 33 இலட்சம் பேர், தமது ஆதரவை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக தமிழகம் மற்றும் ஏனைய மாநிலங்களிலிருந்தும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவளித்து வந்த அதிமுக கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நடிகர்கள், தற்போது முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தமது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்…
-
- 0 replies
- 652 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு: முதல்வர், தலைமைச் செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். மேலும், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 15 …
-
- 0 replies
- 274 views
-
-
சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம் பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சசிகலாவுக்கு வந்த கடிதங்களில் ஏராளமானவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி சசிகலாவை சபித்து எழுதப்பட்டிருப்பதாக பரப்பன அக்ரஹார மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி சிறையில் சரணடைந்த நாள் முதல் தற்போது வரை 'சசிகலா, மத்திய சிறைச்சாலை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூர் - 560100' என்ற முகவரிக்கு…
-
- 0 replies
- 292 views
-
-
சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 31 நாட்களில் 28 முறை பார்வையாளர்கள் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர, அவரைச் சந்தித்த ஒரே அந்நிய நபர், மகுன்டா சீனிவாசலு ரெட்டி. யார் இவர்... எதற்காக சசிகலாவைச் சந்திக்க வேண்டும்... என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல் அதிர வைத்தது. சசிகலாவை இவர் சந்தித்ததற்கும், டாஸ்மாக் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது! சீனிவாசலு ரெட்டி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியின் எம்.பி-யாக இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பி…
-
- 0 replies
- 528 views
-
-
பஞ்சாப் முதல்வரின் அதிரடி..! அலறுகிறது பா.ஜ.க.,, தமிழகமே இதையும் கொஞ்சம் பார்..! பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அரசு பல அதிரடிகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆம் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று பிரதமர் தெரிவித்து விட்டு, அதனை உபி மாநிலத்தில் மட்டும் அவர்கள் ஆளும் மாநிலம் என்பதால் தள்ளுபடி செய்தார். தமிழக விவசாய…
-
- 1 reply
- 416 views
-
-
கோடநாட்டில் என்ன தான் நடக்குது? சட்டசபையில் தி.மு.க., கேள்வி சென்னை:''கோடநாடு பங்களாவில் வேலை செய்த, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழியர்க ளுக்கே, இந்த கதி என்றால், மற்றவர்களின் நிலை என்னாகும்,'' என, சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அதிர்ச்சிதெரிவித்தார். சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: தி.மு.க., - ஜெ.அன்பழகன்: நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில் வேலை செய்த டிரை வர், விபத்தில் சிக்குகிறார்; அவரது மனைவி மற்றும்குழந்தை விபத்தில் உயிரிழக்கின் றனர்.அதில் தொடர்புடைய, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் முதல்வரின் ஊழியர்களுக்கே,இந்த ந…
-
- 0 replies
- 378 views
-
-
மிஸ்டர் கழுகு: “ஆட்சியைக் கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை!” மிரட்டிய பி.ஜே.பி... பதுங்கும் தினகரன்? ஒரு சிறுவனைப் போன்ற குதூகலத்துடன் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுற்றியபடி வந்த கழுகாரைப் பார்க்க விநோதமாக இருந்தது. ‘‘இதைச் சுழற்றி விளையாடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! விஜயகாந்த் விட்ட பம்பரத்தின் 2.0 வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். உலகம் முழுக்கப் பள்ளிக் குழந்தைகளின் விருப்ப விளையாட்டாக இது மாறியிருக்கிறது. ‘குழந்தைகளின் மன அழுத்தத்தை நீக்கும், கற்றல் குறைபாட்டுக்குத் தீர்வு தரும்’ என்றெல்லாம் பல பள்ளிகளில் ஆசிரியர்களே இதைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதை விளையாடும் குழந்தைகளுக…
-
- 0 replies
- 2.4k views
-
-
கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட உணவு குழாய் மாற்றப்பட்ட பின்னர் வீடு திரும்புவார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் …
-
- 0 replies
- 388 views
-
-
தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா? மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசினார்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,K P SHANKAR FACEBOOK PAGE திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சித் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ''சாலைகளைத் தரம் இல்லாமல் போடுவது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நான் தாக்கியதாகப் புகார் கொடுத்துவிட்டார்கள். முதலமைச்சரிடமும் நடந்ததை விளக்கிக் கூறியுள்ளேன்,'' என்கிறார் கே.பி.சங்கர். என்ன நடந்தது? தி.மு.க பொதுச…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
தினகரன் அணியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ள நிலையில், அவர்களில், 11 பேர், முதல்வர் பழனிசாமி விரித்த வலையில் விழுந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த, 11 பேரின் குடும்பத்தினருடன், மூத்த அமைச்சர் ஒருவர் நேரில் நடத்திய ரகசிய பேச்சில், இந்த உடன்பாடு உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது மட்டும், கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கை கைவிடப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், கவர்னரிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், 19 பேர் க…
-
- 0 replies
- 996 views
-
-
சசிகலாவின் கணவர் கவலைக்கிடம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலாவின் கணவரான நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு லண்டனைச் சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா சென்னை வந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களுக்குள் கல்லீரல் மாற்று அறுவகை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜனினுக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் அடைப்பு இருந்ததால் அவர் தீவிர சிக…
-
- 2 replies
- 2.7k views
-
-
மு.க.ஸ்டாலின் - திராவிடச் சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.) கருப்பையும் சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது! Chennai: சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய…
-
- 2 replies
- 570 views
-
-
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயில் பாதுகாப்பு கருதி ரூ.1.30 கோடி மதிப்பில் 31 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நேற்று முதல் செயல்பட துவங்கியது.தஞ்சை பெரிய கோயில், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.இந்தநிலையில், கூடுதல் பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பெரிய கோயில் மராட்டா நுழைவு வாயில், கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், விமான கோபுரம், நந்தி மண்டபம், கோயில் திருச்சுற்று என்று 31 இடங்களில் கண்காணிப்ப…
-
- 0 replies
- 537 views
-
-
இலங்கைக்கு, எதிராக... வாக்களிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து. இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்க வேண்டும் என்பதை வலியறுத்த மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகவே இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்ப…
-
- 1 reply
- 314 views
-
-
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..! #wewantcmb #liveupdate பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார். மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட…
-
- 5 replies
- 1.5k views
-
-
அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா? "எதிர்விளைவு இருக்கும்" - எச்சரிக்கும் அண்ணாமலை படக்குறிப்பு, கே. அண்ணாமலை, மாநில தலைவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி 52 நிமிடங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து, இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது. தங்களிடமிருந்து ஆட்களை எடுத்து திராவிட கட்சிகள் வளர்வதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இளைஞர் அணியினர் எடப்பாடியின் படத்தை எரிக்கிறார்கள். முடிவுக்கு வந்ததா கூட்டணி? பாஜகவிலிருந்து விலகிய அந்த கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொ…
-
- 3 replies
- 807 views
- 1 follower
-
-
பேனா நினைவுச்சின்னம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் christopherAug 01, 2023 12:31PM கலைஞர் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது. இந்த நிலையில், கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, சென்னை தங்கம், நாகர்கோவில் ஆகியோரின் பொதுநல மனுக்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனு ஆகியவை உச்சநீதிமன்றத…
-
- 0 replies
- 261 views
-