தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
சென்னை ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: "ஆட்சியில் இருக்கும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் யாருக்கு வேலை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு திமுகவிடம் இருந்து என்ன பதில் வரும்? ஈழப்படுகொலைக்கு துணை நின்றவர்களே, ஈழப்படுகொலைக்கு நியாயம் கேட்கின்றனர். 10 ஆண்டுகளாக ஐநாவில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பேசாத அவர்கள், இப்போது ஏன் பேசுகின்றனர்? அதற்குக் காரணம் எங்கள் அரசியல் வலுப்பெறுகிறது. திராவிடக் கட்சிகளால் எல்லாமும் அழிவதை பார்க்கும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்கு…
-
- 0 replies
- 915 views
-
-
சாணக்கியமற்ற அரசியல் போராளியா வைகோ ! அரசியலில் அவ்வப்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது வைகோவுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் இம்முறை வைகோ ஒரு புரட்சியை நடத்தியிருக்கிறார். இதில் ஆடிப்போயிருப்பது. ம.தி.மு.க.வினரும் அவரது கூட்டணி கட்சிகளும் மட்டும் அல்ல. முழு தமிழக அரசியல் வட்டாரமும்தான். தமிழகத்தை பொறுத்தவரையில் கட்சித் தலைவர்கள் தமது வேட்பாளர் பட்டியலை மாற்றுவது வழமையான ஒரு விடயம். இத்தேர்தலில் கூட ஆளும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளின் தலைமைகள் தாம் முன்னர் அறிவித்த வேட்பாளர்களை மாற்றி புதிய வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஆனால் தமிழக வரலாற்றில் முதல்மு…
-
- 0 replies
- 729 views
-
-
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்! -விஜயகாந்துக்கு மா.செ.கள் உருக்க கடிதம் சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.,…
-
- 3 replies
- 523 views
-
-
ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள் ஊட்டி:கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ…
-
- 3 replies
- 914 views
-
-
சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை குறித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கவும், நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவதற்காக வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தடுக்க ஆன்லைன் மூலம் நேரம் நிர்ணயித்து சேவை வழங்கவும், ஒருமுறை பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களை சுகாதார முறையில் அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது ARUN SANKAR / Getty தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற…
-
- 0 replies
- 440 views
-
-
’பொறுப்பு முதல்வர்’... பரபரப்பின் பின்னணி! தமிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதல்வர் உடல்நிலை சீராக இன்னும் சில நாட்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், அதுவரை மருத்துவமனையிலே அவர் இருக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கபட்டது. முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழவினர் இரண்டு தினங்களுக்கு முன் அப்போலோ வருகை தந்தனர். அவர்கள் ஜெயலிலதாவின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை ஆய்வு…
-
- 0 replies
- 542 views
-
-
தமிழக மீனவர் படகுகளை இலங்கை அரசாங்கம் அழிப்பது தொடர்பாக இந்தியப் பிரபலங்கள் கண்டனம் 37 Views தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கைக் கடற்படை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்த 121 படகுகளை உடைத்து நொறுக்குவதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தொடர்பாக இந்தியப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலர் கண்டனங்கள் தெரிவித்திருக்கின்றனர். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று(09) வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கைக் கடற்படை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்த 121 படகுகளை உடைத்து நொறுக்குவதற்கு இலங்கையில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாக…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீப காலமாக இலங்கை ஊடகங்களும் சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்குக் கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, மாணவர் போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு, கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத் தன் கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி கேலிச்சித்திரம் வரைவதும் கோபக் கட்டுரைகள் தீட்டுவதுமே முழு நேரத் த…
-
- 0 replies
- 599 views
-
-
29 ஏப்ரல் 2013 செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் விடுதலையை எதிர்நோக்கி உண்ணாவிரதம் இருந்து வந்துள்ள நிலையில் சசிதரன் என்ற 21 வயது தமிழ் அகதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக சசிதரன் கடிதம் எழுதிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சசிதரன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளில் சிலரை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ப…
-
- 0 replies
- 450 views
-
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு வெளியிட பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி முடிந்தது. விடைத்தாள் திருத்துவது முடிவடைந்ததும் மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடி…
-
- 3 replies
- 653 views
-
-
ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்' கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச்…
-
- 0 replies
- 483 views
-
-
மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தவர் இந்தியாவிலேயே இல்லையாம்! ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாட்டிலும், இலங்கை உட்பட உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் மும்முரமாக நடைபெற்றன. தமிழக அரசின் அறிவிப்பையடுத்து ஒரு வார காலமாக இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. இந்தப் போராட்டத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவே இளைஞர்கள் ஒன்று திரட்டியதும் நீங்கள் அறிந்ததே! இந்த நிலையில், மதுரையில் தமுக்கம் - அழகர்கோவில் வீதியில் நடைபெற்ற ஒரு வார காலப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்தவர் இந்தியாவிலேயே இல்லை என்ற ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கான முதல் …
-
- 1 reply
- 595 views
-
-
சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை: தேர்தல் ஆணையம் புதுடில்லி: அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.இந்நிலையில், இடைக்கால பொது செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால், மட்டுமே பொது செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியுள்ளது. இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706953
-
- 8 replies
- 884 views
-
-
'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ சுவாரஸ்யமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர்களில் ஒருவர், வைகோ. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தபோது, அந்தத் திட்டத்தை ஆதரித்து கூட்டணியைவிட்டு வெளியேறியவர். இப்போது, மிகப்பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசிவரும் நிலையில், அதற்கு மாறான பேச்சு, அறிக்கையின்மூலம் கவனிக்கப்பட்டு வருகிறார் வைகோ. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது, சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக இயங்கியது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைப்பு என கடந்த சில தின…
-
- 1 reply
- 790 views
-
-
’சசிகலா மக்களை மொட்டையடித்தார்... தினகரன் தொப்பி போடுகிறார்...!’ - சாடும் தீபா அணியினர் 'தமிழக மக்களை மொட்டையடித்து விட்டு சிறைக்குச் சென்றுள்ளார் சசிகலா. அடுத்து, மக்களுக்கு தொப்பி போட ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நிற்கிறார்' என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவைத் தலைமைச் செய்தி தொடர்பாளர் செல்லராஜாமணி தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தீபாவின் பிரசார வியூகம் குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் செல்லராஜாமணி கூறுகையில், "தேர்தலில் தீபா, போட்டியிடக்கூடாது என்று சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர்.…
-
- 1 reply
- 498 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாளு அம்மாளின் மகள் செல்வி செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 82 வயதாகும் தயாளு அம்மாளின் உடல்நிலை சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் இல்லை. அவரது உடல் நிலையை மருத்துவ குழு ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாபக மறதி நோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கொண்ட பெஞ்ச், ‘‘தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமன…
-
- 5 replies
- 845 views
-
-
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்தும் எரிபொருட்களின் விலையுயர்வினை தீர்மானிக்க கூடிய அதிகாரம் விலையினை நிர்ணயிக்கும் அதிகாரம் எரிபொருள் நிறுவனங்களுக்கு வளங்கப்பட்டிருப்பதை இந்தியஅரசு இரத்து செய்யவேண்டும் எரிபொருள் விலைஉயர்வினை திரும்ப பெறவேண்டும் கச்சதீவினை மீட்கவேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் வற்புறுத்துகின்றது சிறீலங்காஅரசிற்கு போர்கப்பல்களை வழங்கும் இந்தியா அரசின் திட்டத்தினை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பதாகவும் திருமாவளவன் …
-
- 0 replies
- 503 views
-
-
தமிழ்நாட்டை பற்றி வெளி மாநிலங்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார். நான் கடந்த வாரம் பெங்களூர் - சென்னை வரும் போது என் பக்கத்தில் ஒரு சேட்டு அவன் நண்பனிடம் தமிழ்நாட்டை பற்றி சொல்லி கொண்டிருந்தான், தனது 30 வயதில் சென்னை வந்த அவன் இன்று சில கடைகளுக்கு முதலாளி. அவன் மட்டும் இல்லை அவனை போன்ற வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் இன்று நல்ல முறையில் சொந்தமாக வீடு மற்றும் கடைகள் கட்டி இருக்கிறார்கள். தமிழ் தெரிந்தால் போதும் தமிழர்களை லாபகமாக கையில் போட்டு வியாபாரம் செய்கிறார்கள். வெட்கப்பட வேண்டிய விஷயம். எங்கு பார்த்தாலும் கேரளா, ராஜஸ்தானி மற்றும் ஆந்திரா தான் இங்கு அதிகம். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலும் கடைகள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவன் சொன்ன …
-
- 0 replies
- 653 views
-
-
'கோடிக்கணக்கில் பேரம் பேசியது உண்மைதான்' அ.தி.மு.க எம்எல்ஏ ஒப்புதல்! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், ஆளுநரிடமும் புகார் அள…
-
- 0 replies
- 418 views
-
-
எல்லா ஊழல்களையும் கூறாதது தவறு தான்: நடிகர் கமல் காட்டம் சென்னை: 'அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறுதான்' என, நடிகர் கமல், 'டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது' என, நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், 'டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம்' என, டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'அனைத்து விதமான ஊழல்களை யும் கூறாதது தவறுதான்' என, நேற்று, கமல் தெரி வித்து…
-
- 1 reply
- 408 views
-
-
மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய, `தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற பாடலின் ஒரு பகுதியையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு கொண்டுள்ளது. ஆனால், இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய முழுப் பாடல் அல்ல, 1970-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் சில வரிகளை நீக்கி திருத்தம் செய்யப்பட்ட பாடலாகும். இந்த திருத்தம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மாநிலத் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு மோகன்ராஜ் என்பவரால், மு.கருணாநிதி திருத்திய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் ப…
-
- 0 replies
- 371 views
-
-
குழப்பம்! தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் இரட்டை இலையை மீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொ…
-
- 0 replies
- 732 views
-
-
தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டிலேயே கழித்த கெஜ்ரிவால் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா ஆகியோர் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, டென்மார்க் பெண் கற்பழிப்பில் சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் மோதல் உருவாகி உள்ளது. இதில் 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே உடனடியாக ஏற்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டில…
-
- 0 replies
- 384 views
-
-
நவராத்திரி கொலுவில் ஜெயா பொம்மை நவராத்திரி பண்டிகைக்காக வைக்கப்படும் கொலுவில் இந்த ஆண்டின் புதிய வரவாக வந்துள்ள ஜெயலலிதா பொம்மைக்கு டுவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அரசு திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தவறு என்றும் இது தவறான முன்னுதாரணம் என்றும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட மு…
-
- 0 replies
- 514 views
-