Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொடநாடு கொலை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்த சசி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலையில் கூடியதும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் தரவில்லை. இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து கோஷங்களையும் எழுப்பி…

  2. `துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை சு.கவிதா துர்காவதி இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங…

  3. ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இக் கட்டளையை விடுத்துள்ளனர். ஆளுனரின் அனுமதியில்லாது, இவ்வேழுபேரையும் விடுதலைசெய்யும் ஆணையை, மாநில அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதே நளினியின் விண்ணப்பமாகும். தலைமை நீதிபதி சஞ்சி…

    • 2 replies
    • 869 views
  4. “பொணம் மட்டும்தான் எங்களைத் தொந்தரவு செய்யறதில்லை!” ‘எங்களை எங்கயுமே தங்கவிட மாட்டேங்கிறாங்க. ஊருக்குப் பக்கத்துல இருந்தா அருவருப்பா பார்க்கிறாங்க. கோயில், குளம் பக்கம் போக முடியலை... எங்களை இந்தச் சுடுகாட்டுல இருக்குற பொணம் மட்டும்தான் தொந்தரவு செய்யறது இல்லை...’’ என்று செல்லுமிடமெல்லாம் துரத்தப்படும் துயரத்தை விரக்தியாகக் கொட்டுகிறார்கள் சுடுகாட்டில் வசிக்கும் நாடோடி இன மக்கள்! நாம் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதையில் மெலிந்துபோன உடல், ஒட்டிக்கிடக்கும் வயிறு என வறுமை வரித்துக்கொண்ட ஜீவன்கள் ஏராளம். குறைந்தபட்சம், பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டுவதே இந்தச் சமூகம் அவர்களுக்கு அளிக்கும் பரிசாக இருக்கிறது. அதிகபட்சம் அவர்கள் பெறுவது என்னவோ, புறக்கண…

  5. தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்- 58 பேருக்கு ஆணை வழங்கினார் முதல்வர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இவர்களில் 24 பேர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. கடந்த…

  6. பல நூறு வௌவால்களோடு வாழும் புதுச்சேரி குடும்பம் - சொல்லும் காரணம் என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, ஆயிரத்துக்கும் மேலான வெளவால்களுக்கு 21 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வரும் குடும்பம் நாய், பூனை, கிளி போன்ற செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்த்து பார்த்திருப்போம். ஆனால் புதுச்சேரியில் ஒரு மனிதர் ஆயிரக் கணக்கான வெளவால்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரபு பொன்முடி, விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத பற்று கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாக கடந்த 21 ஆண்டுகளாக இவரது வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்ப…

  7. தமிழகத்தில்... புதிய அரசின், வரவு செலவு திட்டம் தாக்கல் ! தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார். அரசின் வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி இன்று தாக்கல் செய்யப்படும் புதிய வரவு செலவு திட்டத்தில் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத வரவு செலவு திட்டம் முதன்முறையாக தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக…

  8. யானைகள் தினம்: தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தை ஆட்டிப் படைத்து 26 பேரை கொன்றபின் கும்கியான மூர்த்தியின் கதை மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2021, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு, மூர்த்திக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டபோது சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு 25க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கிக்கொன்றதோடு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில மக்களை அச்சுறுத்தி வந்த ஆக்ரோஷமான காட்டு யானை, இன்று முதுமலையின் அடர்ந்த வனப்பரப்பை ரசித்து பார்த்தபடி அமைதியான கும்கி ய…

  9. கைதும்... அதன் பின்னணியும், சிறையில் நடந்த... மறக்க முடியாத சம்பவங்கள்.

    • 10 replies
    • 978 views
  10. எஸ்.பி.வேலுமணி மீது, சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் அவரது பங்குதாரர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசின் ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அத்துடன் அவர், அரச கட்டுமானப் பணிகளிலும் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய, முன்னாள் அமைச…

  11. தமிழகத்தில்... 27 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளன- மத்திய கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியா முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் மதுரை, நாகை, சேலம், அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்களும் உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்…

  12. தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1 மின்னிதழ் உள்ளடக்கம் பகுதி 1 தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும் பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை கேள்வி? தமிழக சட்டசபையின் வளர்ச்சிக் கட்டங்களையும், அவற்றின் முக்கியத் துவங்களையும் பற்றிக் கூறுங்கள்? பதில்! கேள்வி? தமிழக சட்டசபை தோற்றுவித்த ஆளுமைகள் குறித்து சுருக்கமாகக் கூறவும்? …

  13. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். `கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு சரியவில்லை' என அமைச்சர் தெரிவித்தார். வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது. அதேநேரம், கடந்த சில வாரங்களாக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்…

  14. கலைஞர் கருணாநிதியின், 3ஆம் வருட நினைவேந்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன்போது அங்கு வருகைதந்திருந்த அமைச்சர்கள், தி.மு.க.நிர்வாகிகள், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். https://athavannews.com/2021/1232985

  15. ஏழுவர் விடுதலை: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-விசிக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அமைச்சரவைகூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூ…

  16. இலங்கைக் கடற்படையினர்... தாக்குதல் நடத்துவதை நிறுத்த, நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து! தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாகி சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் …

  17. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 18 நிமிடங்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் கிறிஸ்துவ தேவாலயம் செயல்பட்டு வந்த இடத்தில் திடீரென பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிப்படை குவிப்பு, ஆர்.டி.ஓ விசாரணை, பிள்ளையார் சிலை அகற்றம், கைது என அந்த பகுதியே பதற்றத்துடன் காணப்பட்டது. என்ன நடந்தது? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கிரி வல பாதையில் கடந்த 30 ஆண்டுகளாக `இமானுவேல் ஜெப வீடு' என்ற பெயரில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதை சபையின் போதகராக இருக்கும் எசேக்கியேல் பாலகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் கிரி வல பாதையை விரிவாக்கம் செய்யும் பணியில…

  18. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில், இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், இது குறித்து மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்தை பிரிக்கும் எந்த கோர…

  19. கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு மின்னம்பலம்2021-08-02 தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் ப…

    • 9 replies
    • 1.1k views
  20. தமிழக சட்டசபையின்... நூற்றாண்டு விழா இன்று! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்…

  21. தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என கருதப்பட்ட நிலையில் 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது. இதனால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் பூஷண், கேரளா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா, ஒடிசா, அஸ்ஸாம், மீசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர்…

  22. ஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது ஒக்சிஜன் தேவை குறைவடைந்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் மேற்படி ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அதுவரை ஒக்சிஜன் உற்பத்தி தொடரும் எனத் தெரிவித்துள்ளது. https://athavan…

  23. "ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன்!"- ரகசியம் சொல்லும் சீமான்! "என்னை பி.ஜே.பியின் ‘பி' டீம் என்பவர்கள்தான் மெயின் டீமாக இருக்கிறார்கள்." - சீமான் 'இந்துத்துவ அஜென்டாபடிதான் சீமான் செயல்படுகிறார்' என்கிற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவே? ‘‘அதெல்லாம் சும்மா கிளப்பிவிடுவது. நான் இறை நம்பிக்கையற்று நீண்டகாலம் பயணம் செய்தவன். இன மீட்சி என்று வரும்போது தமிழர் வழிபாட்டை மீட்பதற்காக சில வேலைகளைச் செய்தேன். உடனே, ‘பாருங்கள், சீமான் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்' என விமர்சனம் செய்கிறார்கள். நான் என் மெய்யியல் கோட்பா…

  24. இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ் மின்னம்பலம்2021-07-31 இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2009ல் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு …

  25. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! மின்னம்பலம்2021-07-28 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.