தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10257 topics in this forum
-
தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்ப ட்டனர். பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் முயன்று தோற்றுப்போய், ஏதாவது செய்ய வேண்டும் என்று, இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல். முதல்வருக்கு தெரியாமல் இது நடந்தி ருந் தால் இந்த இருட்டு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும். இல்லை யென்றால் ந…
-
- 20 replies
- 1.1k views
-
-
இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு சென்னை: இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென…
-
- 1 reply
- 1.1k views
-
-
இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராக சீறும் நிர்வாகிகள் #VikatanExculsive பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை சசிகலா கண்காணித்துவந்தாலும், டி.டி.வி.தினகரனைச் சுற்றியுள்ள இருவர் அணியின் கெடுபிடிகளால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சீனியர் அமைச்சர்கள். 'அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், இருவர் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கட்சியை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 'சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை' என்ற உத்தரவு வந்த நொடியே, கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனைக் கொண்டுவந்தார், சசிகலா. அதற்கேற்ப, துணைப் பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 314 views
-
-
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருவேறு ஏ.டி.எம்களில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடி தூவியுள்ளனர். அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைரேகை பதிவதைத் தவிர்க்க கையுறை அணிந்தும் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய்ப்பொடி தூவியும் சிசிடிவி கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை திறப்பதற்கான அவர்களது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறும் போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட…
-
- 1 reply
- 427 views
-
-
இறந்து போன மாணவியின் பிளஸ் 2 மார்க்ஷீட்டை பயன்படுத்தி, தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாகச் சேர்ந்து டாக்டரானவரின் அங்கீகாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விஏஓ. இவரது மகள் அர்ச்சனா (26). எம்பிபிஎஸ் முடித்த இவர் சென்னை குரோம்பேட்டையில், தமிழரசி என்ற பெயரில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது கணவர், ‘எனது மனைவி பிளஸ் 2 கூட தேர்ச்சி பெறாதவர், இறந்துபோன தமிழரசி என்ற மாணவியின் பிளஸ் 2 மதிப்ெபண் சான்றிதழை பயன்படுத்தி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து டாக்டராகிவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார். கவுன்சில் நடத்திய விசாரணையில், குற்றச்ச…
-
- 0 replies
- 464 views
-
-
இறந்ததாக நினைத்த இந்திய மீனவர் 23 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை யூடியூப் அலைவரிசையில் தோன்றிய அதிசயம் கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற நிலையில் மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பாததால் இவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் பல நாட்களாக தேடிய நிலையில் மீன்பிடித் துறை சார்பாக கடலில் மாயமானவர்கள் பட்டியலில் இந்த நான்கு பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்பிடித்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடயே கடந்த மே மாதம் 9ஆம் திகதி இலங…
-
- 0 replies
- 744 views
-
-
இறந்தால்தான் விருதா? எம்.எஸ்.வி.யை மறந்துபோன மத்திய, மாநில அரசுகள்! ‘மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு! இந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு!’ - என்ற பாடல் வரிகளைப் பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று உயிரோடு இல்லை. ஆனால், அவருடைய இசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 87 வயதான எம்.எஸ்.வி, இந்தியத் திரையுலகமே போற்றும், மூத்த இசையமைப்பாளர். ‘தனியாக 500 திரைப்படங்களுக்கு மேலாகவும், டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கு மேலாகவும் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தன் பாடல்களின் மூலமாக, ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி, தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி திரையுலகிலும…
-
- 2 replies
- 460 views
-
-
இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினாரா: விசாரணையில் கேள்வி சென்னை:''சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார். மறுநாள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுஉள்ளது,'' என, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் தெரிவித்தார். ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசி உறவினர்கள், கிருஷ்ணப்பிரியா, விவேக் மற்றும் ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த, டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வெங்கட்ரமணன், அரசு மருத்துவர், சுவாமிநாதன் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது.விசாரணைக்கு பின், ராஜா செந்துார் பா…
-
- 0 replies
- 402 views
-
-
இறாலுக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ வை தப்பிக்க வைத்த குண்டர்கள்! - கூவத்தூர் ரிசார்ட் உள்ளிருந்து விகடன் நிருபர்! ஓ.பி.எஸ். கூடாரத்துக்குத் தப்பிவந்த எம்.எல்.ஏ-க்களில் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருகை, தமிழக அரசியல் களத்தை வேறு வடிவத்துக்கு மாற்றியுள்ளது. ‘மாறுவேடத்தில் தப்பி வந்தேன்’ என்றும், ‘என்னைக் கடத்தினார்கள்’ என்றும் புகார்கொடுத்து பரபரப்பைக் கிளப்பிவருகிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ தப்பிவந்தது எப்படி? அந்தத் திக்... திக் நிமிடங்கள்.... ‘‘13-ம் தேதி இரவு 11 மணிக்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது விடாமல் எனது செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களின் வேலை பளு காரணமாகத் தெரிய…
-
- 0 replies
- 556 views
-
-
கடலூரில் சாப்பிட்ட இறால் குழம்பால் அஜீரணம்... நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்ட ஸ்டாலின்புதுச்சேரி: கடலுார் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. கடலுார் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்து இரவில் கார் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அவருடன் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வமும் வந்தார். புதுச்சேரி ராஜிவ் சிலை சிக்னல் அருகில் உள்ள அக்கார்டு ஓட்டலில் ஸ்டாலின் இரவு உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியை நெருங்கிய நிலையில் ஸ…
-
- 3 replies
- 596 views
-
-
மிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்! ‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார். ரெய்டு செய்திகளை அவரே கொட்டட்டும் என்று காத்திருந்தோம். ‘‘2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, இன்னும் தமிழகத்தைவிட்டு நகரவில்லை. அதன்பிறகு, சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஈ.டி.ஏ குழும அலுவலகங்களில் ரெய்டு, தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு என்று சுழன்றடித்த வருமானவரித் துறையின் பார்வை, தற்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
இறுக்கும் டெல்லி போலீஸ்... கைதாகிறாரா டி.டி.வி.தினகரன்?! இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை உரிமை கோரின. இதனால் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பு 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக டெல்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டி.டி.வி.தினகரன் நட…
-
- 3 replies
- 825 views
-
-
தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர். காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 2 நாட்களூக்கு முன் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிகைகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.கே.பாலசந்தரின் இறுதி சடங்கில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கில் பால சந்தருக்கு அரசு மரியாதை அளிக்கப்படாததற்கு குஷ்பு வருத்தம் தெரிவித்து உள்ளா…
-
- 2 replies
- 586 views
-
-
தமிழகத்தில் திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 30 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக மாநிலம் முழுவதும் …
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கையிடமிருந்து விடுவியுங்கள்.! இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே மீனவர்களின் குடும்பத்தினர் மனுகொடுத்துள்ளனர். காரைக்காலில் 'பாஸ்போர்ட்' (கடவுச்சீட்டு) சேவை மையம் திறப்பு விழா நிகழ்விற்கு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்க முயற்சித்தார். அப்போது திடீரென காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டனர். தீபாவளிக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காரைக்காலை…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கைக்கு உதவிட கமலஹாசன் விருப்பம் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவும் விருப்பத்தை தென்னிந்தியத் திரைப்பட நடிகர், உலகநாயகன் கமலஹாசன், சென்னையிலுள்ள இலங்கையின் துணைத்தூதுவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். கமலஹாசன், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு கடந்த 24ஆம் திகதி பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமாத் துறை குறித்து கலந்துரையாடினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கையின் சுற்றுலாத…
-
- 0 replies
- 409 views
-
-
மீண்டும் சூடு பிடிக்கிறதா இலங்கை தமிழர் விவகாரம்? இலங்கையில் நடந்த, இறுதிகட்ட போரின் போது நடந்த படுகொலைகள் தொடர்பான பதிவுகள், மீண்டும் தமிழகத்தையும், உலகையும் உலுக்கியுள்ளன. "பிரபாகரனின் மகன் என்ற ஒரு காரணத்திற்காக, 12 வயதான, பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றது, மன்னிக்க முடியாத போர்குற்றம்' என, முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதற்காக, ஆசிய தடகள போட்டிகளை ரத்து செய்ததும், அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளன. இலங்கை தமிழர்கள் நலனுக்காக, தமிழக அரசியல் கட்சிகள், ஒன்று திரளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் குறித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் உள்…
-
- 2 replies
- 912 views
-
-
இலங்கை கடத்தவிருந்த போதைப் பொருள், வயகரா மாத்திரைகள் மீட்பு ; மூவர் கைது (ராமநாதபுரத்திலிருந்து ஆர் .பிரபுராவ்) மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ள பொலிஸார், முக்கிய கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிறப்புபிரிவினர் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோரப்பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மண்டபம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ? இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபால…
-
-
- 11 replies
- 537 views
- 1 follower
-
-
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. இதன்போது, அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனையவர் உயிரிழந்தார். இந்த நிலையிலேயே, இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்…
-
- 4 replies
- 432 views
-
-
28 APR, 2024 | 06:36 PM நேர்கண்டவர் - ரொபட் அன்டனி இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவியிலேயே இதனை சுட்…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது. தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர் எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது…
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கை அகதி தீக்குளிக்க முயற்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். இவருக்கு நிரோஜா (22) என்ற மனைவியும், தைசிகா (5), சாய்ஷிகா (1) என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர், தான் வசிக்கும் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம். ஏலத்தில் பணம் எடுத்தவர்களில் 16 பேர் பணம் தராமல் ஏமாற்றி விட்டனராம். பணத்தை திருப்பிக் கேட்டால் தாக்கினார்களாம். இது குறித்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும…
-
- 0 replies
- 491 views
-
-
``இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'', ``இலங்கை அகதிகள் 90 சதவிகிதம்பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறார்கள்'', ``இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு'' - குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் முக்கியமாக எதிரொலித்துக்கொண்டிருப்பது இப்படிப்பட்ட குரல்கள்தான். இந்நிலையில், சம்பந்தபட்டவர்களான இலங்கைத் தமிழ் அகதிகள் மனநிலை என்ன என்பதை தெரிந்துகொண்டு ஜுனியர் விகடனில் சிறப்புக் கட்டுரை வெளியிடலாம் எனத் திட்டமிட்டோம். இதற்காக தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் அம் மக்களைச் சந்தித்து கருத்துகளைச் சேகரித்தனர் விகடன் நிருபர்கள். கருத்துக்கேட்புப் பணிகள் க…
-
- 3 replies
- 595 views
-
-
இலங்கை அகதிகளின் 112 முகாம்களின் இணைப்பாளர்கள் ஒன்று கூட கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுப்பு:- 14 செப்டம்பர் 2014 தமிழகத்தில் 112 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நலன் பேணும் இணைப்பாளர்கள்; ஓரிடத்தில் சந்திப்பதற்கு கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 1600 பேர், லெணாவிலக்கில் 1500 பேர் மற்றும் அழியா நிலையில் 800 பேர் என மொத்தம் 3900 பேர் உள்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 112 முகாம்களில் 66491 பேர் வசித்து வருகின்றனர். தமிழத்தில் உள்ள முகாம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இங்குள்ள முகாம் மற்றும் இலங்…
-
- 0 replies
- 400 views
-