Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. "ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது. மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசிய…

  2. இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கு டார்கெட்..!! சந்திராயன் திட்டத்தால் தீவிரவாதிகள் உச்சகட்ட எரிச்சல்..!! தென்னிந்தியாவில் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இது ஒரு புறமிருக்க, பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ- முகமது என்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து லஸ்கர்-இ- …

  3. ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார். இந்திய துணை ராணுவப் படை சுட்டது ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார். கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சை…

    • 0 replies
    • 437 views
  4. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, மெகா தடுப்பு மையம் கட்டப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டில், அஸ்ஸாமில் 60 ஆண்டுகளாக வசித்துவந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பில், சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த அஸ்ஸாம் மாநில மக்கள் பலருக்கும் இது, தலையில் இடி விழுந்ததைப் போல ஆகியுள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பூர்வகுடிகள் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து தரப்பினர் பெயர்களையும் பட்டியலிலிருந்து தூக்கியிருக்கிறது, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். இந்த விவ…

    • 0 replies
    • 925 views
  5. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள கோதவரி ஆற்றுக்கு இன்று ஏராளமானோர் சுற்றுலா சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் 60க்கும் மேற்பட்டோர் படகில் ஏறி காந்திபோச்சசமா கோயிலில் இருந்து அற்புதமான பாபி கொண்டலு மலைகளை சுற்றி பார்க்க புறப்பட்டு சென்றுள்ளனர். ஆற்றின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது எடை தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்தக் கோரவிபத்தில் படகில் இருந்த 61க்கு மேற்பட்ட…

  6. ஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயிரத்து 23 அதிவிரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப…

  7. ஜம்மு - காஷ்மீரில், கர்நாடக அரசு சார்பில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாக, அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர், சி.டி.ரவி, நேற்று தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல வர்த்தக நிறுவனங்கள், தங்கள் கிளைகளை, ஜம்மு - காஷ்மீரில் துவக்குவோம் என அறிவித்துள்ளன. அதே போல, மஹாராஷ்டிரா உட்பட பா.ஜ., ஆளும் மாநில அரசுகளும், இம்மாநிலத்தில் தங்கள் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த வரிசையில், கர்நாடகாவும், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த தீர்மானித்துள்ளது. இது பற்றி, கர்நாடக சுற்றுலா துறை அமைச…

    • 0 replies
    • 390 views
  8. இம்ரான்கானின் உண்மை முகம் எது?

  9. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான அரசியலமைப்பின் 370வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளி…

    • 0 replies
    • 391 views
  10. சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ``2008 - 09-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) சந்திரயான் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே ஆண்டில்தான் சந்திரயானுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடந்த 10 -12 வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்தனர். அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சந்திரயான் 2 திட்டத்துக்கு பின்னால் நான்தான் உள்ளேன்’ என்பதை இந்திய மக்களுக்குக் காட்டி ஒரு விளம்பரத்துக்காக மட்டுமே கடந்த செப்டம்பர்…

    • 0 replies
    • 303 views
  11. பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட வருகிறது ஐஎன்எஸ் கண்டேரி போர் கப்பல்...!! கடல் பரப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை தாங்கி நிற்கப்போகிறது...!! இந்திய கப்பற்படையை வலிமை படுத்தும் நோக்கில் எதிரிநாட்டு ரேடார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஊடுருவும் ஆற்றல் கொண்ட ஐஎன்எஸ் கண்டேரி என்ற போர்கப்பல் வரும் 28 ஆம் தேதி கப்பற் படையில் இணைக்கப்பட உள்ளது. ஸ்கார்ப்பின் ரக நீர் மூழ்கி கப்பல்கள் பிரான்ஸ் நாட்டின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டவையாகும், இந்த ரகத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி என்ற கப்பல் ஏற்கனவே இந்திய கப்பல் படையில் இடம்பெற்றுள்ளது. இந்த கப்பல் சுமார் 1565 டன் எடை கொண்டவையாகும் மேலும் ஏழு கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமான பணியில் இருந்து வருகிறது. நீரின் ப…

  12. மரிய மைக்கேல் பிபிசி தமிழ் கேரள மாநிலத்தின் திருச்சூரில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் தூளில் ஒரு பிரிவில் (batch) நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், அந்த பிரிவின் விற்பனைக்கு திருச்சூரில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் உணவு பாதுகாப்பு துறையின் உதவி ஆணையர் ஜெனார்தன் தெரிவித்துள்ளார். …

  13. லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. "சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது. ஆனால், அது உடைந்துவிடவில்லை. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி அளிக்கிறது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. தர…

  14. அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்து இந்தியா.! ரெல்லி: உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடம் நைஜீரியா என்கிறது. நைஜீரியாவில் அதீத வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை 15.7%. இதையடுத்து காங்கோவில் 10% மக்கள் அதீத வறுமையால் வாடுகின்றனராம். இந்தியாவில் 8% பேர் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது இப்புள்ளி விவரம். இதையடுத்து …

    • 3 replies
    • 1.1k views
  15. ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.முக்கிய அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதன்போது தொடக்க உரை நிகழ்த்திய ஆணையத் தலைவர் மிஷேல் பச்சலெட் அம்மையார், “ஜம்மு காஷ்மீரில், சட்டப்பிரிவு 370யை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். மேலும் காஷ்மீர் மக்கள் மீது இணையம், தொலைபேசி கட்டுப்பாடுகள் விதித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. ஆகையால் இந்திய அரசு தற்போதைய ஊரடங்கு உத்தரவுகளைத் தளர…

  16. தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். குஜராத் அருகே சர் கிரீக் பகுதியில் இருந்து ஆளில்லாத சில படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விமான நி…

    • 0 replies
    • 214 views
  17. இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் இராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் குற்றம்சாட்டினார். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளமை குறித்து பாகிஸ்தான் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீரின் தற்போதைய நிலை இந்தப் பிராந்தியத்துக்கு மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் போருக்கான விதைகளை தூவும் வகையில் அமைந்துள்ளன. எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்…

    • 0 replies
    • 465 views
  18. மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்.. வயது 95! மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது.ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இ…

  19. சந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கேள்வி:விக்ரம் லேண்டருடனான தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டிருக்கும்? என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்? பதில்: முழுமையான தகவல்களை ஆராய்ந்த பிறகுதான் என்ன நடந்திருக்கும் என்பதை முழுமையாகச் சொல்ல முடியும். முதல்கட்…

  20. இந்தியாவில் 28 சதவீதம்பேர் அலுவலக நேரத்தில்தான் செல்ஃபோனை பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவந்துள்ளது. இன்றையக் காலகட்டத்தில் ஆன்லைனில் தகவல்களும் நிகழ்ச்சிகளும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், பூனே, அகமதாபாத், ஜெய்பூர், லூதியானா, பானிபட், நாக்பூர் மற்றும் மதுரை என 16 நகரங்களில் 1,458 நபரிடம் ஆய்வு நடத்தப்படுள்ளது. அதில், கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் தகவல்களை செல்ஃபோன் மூலமாகவே தெரிந்துகொள்வதாகவும், அதில் 28 சதவீதம்பேர் அலுவலக நேரத்தில்தான் செல்ஃபோனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் அலுவலக நேரமான 10 - 6 வரை வேலைகளுக்கு நடுவே அதிகமாகப் படம் பார்ப்பதாக கருத்துக் க…

    • 0 replies
    • 401 views
  21. எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளை ராணுவம் சொர்கத்திற்கு அனுப்பும்...!! இந்தியா காட்டம்...!! பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்வது பாகிஸ்தானின் வேலை, அவர்களை சொர்கத்திற்கு அனுப்புவது இந்தியாவின் வேலை என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் படைத்தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கிவருகிறது பாகிஸ்தான் , இந்தியாவிற்கு எதிராக பாக் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில். அந்நாட்டின் பிரதமர் உட்பட இராணுவத் தளபதிவரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்தியாவிற்கெதிராக போர் குரல் எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவ தலைமை ஜ…

    • 2 replies
    • 532 views
  22. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி மொழியை மேம்படுத்தும் வகையில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தி திவாஸ் என்று அழைக்கப்படும் அந்நாளுக்கு சமூக ஊடகமான ட்விட்டரில் #WeDontWantHindiDivas என்ற ஹாஷ்டேக் மூலம் தற்போதே கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் விருது வழங்கி கெளரவித்து வந்தது. ஆனால், 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்தி மொழ…

    • 0 replies
    • 477 views
  23. இந்திய இராணுவம் காஸ்மீரில் அரச பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி குற்றம்சாட்டியுள்ளார். பாக்கிஸ்தான் இராணுவம் அனைத்து வகையான தியாகங்களிற்காகவும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ள குயுமார் ஜாவிட் பஜ்வா பாக்கிஸ்தான் இராணுவம் காஸ்மீர் மக்களை ஒருபோதும் கைவிடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் தொடர்பான ஐநா தீர்மானங்களின் அடிப்படையில் பாக்கிஸ்தான் இராணுவம் காஸ்மீர் மக்களின் சுயநிர்யண உரிமைக்கு ஆதரவை வழங்கும் எனவும் பாக்கிஸ்தான் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அவர்களை கைவிடாது என்ற உறுதிமொழியை நான் காஸ்மீர் மக்களிற்கு வழங்க விரும்புகின்றேன்,பாக்கிஸ்தான் மக்களினதும் காஸ்மீர் மக்களினதும் இதயங்களும் ஒன்றாக துடிக்கின்றன…

    • 0 replies
    • 417 views
  24. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்…

  25. கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது. இந்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் 21ம் திகதி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில்தான் சிக்கி உள்ளார். சிதம்பரம் தரப்பில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சி.பி.ஐ கேட்டபடி அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.சி.பி.ஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார் என்று எதி…

    • 0 replies
    • 253 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.