Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பியர் கிரில்ஸ் உடன் இணைந்து காட்டுக்குள்ளான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது, காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி? என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன்…

  2. இந்தியாவுக்கு எதிராக, எப்.16 போர் விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுமதி இந்தியாவுக்கு எதிராக எப்.16 ரக போர் விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த விமானங்கள் முன்னர் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தன. அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோது, விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்திய துணைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாகிஸ்தான் பலாகோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய போர் விமானங…

  3. படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…

  4. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு – பிரதமர் புலிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக குறிப்பிட்டார். சர்வதேச புலிகள் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் வெளியிட்டார். அதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் 1400ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி…

  5. உன்னாவ் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சென்ற கார் மீது லாரி மோதியதில் அவருடன் பயணித்த உறவினர் இருவர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இந்த விபத்து நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்குரைஞரும் விபத்தில் பெற்ற காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்துகுள்ளான பெண் உன்னாவ், பாங்கர்மவு தொகுதியின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு குற்றம்சாட்டியவர். மாகி கிராமத்தில் தமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிறுமியை வன்புணர்வு செய்ததாக குல்தீப் சிங் மீது புகார் எழுந்தது. அவர் அதற்காக சென்ற ஆண்டு ஏப்ரலில் சிறையில் அடைக்கப்பட்டார். …

    • 0 replies
    • 475 views
  6. ஆசியாவின் மிக பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாராவியில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். மும்பை தமிழர்களின் தாயகமாக கருதப்படும் தாராவியில், சுகாதார பிரச்சனைகள், அதிக மக்கள்தொகை, போதுமான கழிப்பறைகள் இல்லாதது, என ஏராளமான பிரச்சனைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து மக்கள் இங்கு வாழ என்ன காரணம்? என்ன தான் சாதி இருந்தாலும் , ஒரு தமிழனுக்கு பிரச்சனை வந்தால் எல்லாரும் தமிழின மாக ஒற்றுமை இருப்பது... மகிழ்ச்சி ! ஆனால், ஒருவர் கூறியது தமிழர்கள் தாராவியை விட்டு போகிறார்கள் என, எங்கு என சொல்லவில்லை.

    • 1 reply
    • 637 views
  7. ஷேர்கான்: கார்கில் போரில் இந்தியாவின் பரிந்துரையில் உயர் விருது பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர் ரெஹான் ஃபஜல்பிபிசி 28 ஜூலை 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPAKKISTAN ARMY எதிரி நாட்டு ராணுவ சிப்பாயின் துணிச்சலையும், வீரத்தையும் மதித்து, அதை எதிரி நாட்டிற்கு தெரிவிப்பதும், அதன் அடிப்படையில் விருது கொடுப்பதும் பொதுவாக யா…

  8. காஷ்மீரில் 10,000 வீரர்கள் திடீர் குவிப்பு- தீவிரவாதிகள் பயங்கர சதி குறித்து பகீர் தகவல்! காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின் வரிசையாக காஷ்மீரை நோக்கி இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் உடனடியாக அப்போதே காஷ்மீர் எல்லைக்கு செல்லவும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போதே மொத்தம் 40 ஆயிரம் வீரர்கள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டார்கள். தற்போது அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர…

  9. கர்நாடகாவை போன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, நேற்று மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர்தான். இவர்கள் பதவி விலகியதின் பின்னணியில் பாஜ கட்சி இருப்பதால், அம்மாநில அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 4-வது முறைய…

    • 0 replies
    • 245 views
  10. ''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGODONG Image captionகோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிராமணர்கள் எப்ப…

  11. தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களில் பிழைகள் மற்றும் தேசிய கீதத்தை தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என பாடப்புத்தகத்தில் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சையானது. 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பக்கம் எண் 142ல் மொழிகளின் தொன்மை வரலாற்றை குறித்து படமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கி.மு.300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதே பக்கத்தில் சீன மொழி 1,250 ஆண்டுகள் பழைமையா…

  12. பாக்கிஸ்தானில் காணாமல்போகும் இந்து யுவதிகள் இஸ்லாமியர்களாக திரும்புகின்றனர்- சர்வதேச ஊடகம் பாக்கிஸ்தானில் இந்துமதத்தை சேர்ந்த இளம்பெண்கள் காணாமல்போவதும் பின்னர் அவர்கள் முஸ்லீம்களாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக ஏபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ரீனா ரவீனா என்ற இரு இந்து சகோதரிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஏபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தங்கள் இரு புதல்விகளும் கடத்தப்பட்டனர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை மணமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரு பிள்ளைகள் இருக்குமிடங்களை கண்டுபிடித்த பின்னர் தான் உள்ளுர் பொலிஸ்நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய…

    • 1 reply
    • 388 views
  13. பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறியது. எனினும் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்த மசோதா பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற சமூக மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுத்தது. எனவே மசோதா பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இந்து மக்களுக்கு குடியுரிமை அளிக்க ராஜஸ்தான் அரசு சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் சட்டப்பேரவ…

    • 0 replies
    • 242 views
  14. மும்பை – வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர் மீட்கப்பட்டனர்… July 27, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. அதில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர். பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துசென்றன. …

  15. மொபைல் கேம்களின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று PUBG இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கேமிங் மீதான இந்த ஆர்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எந்த அளவுக்கு எ‌ன்றால் இந்திய விமானப் படையே INDIAN AIR FORCE - A CUT ABOVE என்ற ஒரு புதிய மொபைல் கேம் ஒன்றை வடிவமைக்கும் அளவுக்கு. இதற்கான முன்னோட்டத்தை இந்திய விமானப் படை தனது யூடியூப் பக்கத்தில் வெளிட்டுள்ளது. ஒரு விமானி போர் விமானத்தோடு நிற்பதுபோல் விரிகிறது காட்சி. அந்த விமானி வேற யாரும் இல்லை; புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து பிரபலமான ராணுவ வீரர் அபிநந்தன்தான். தன் கம்பீர மீசையோடு கெத்தாக நிற்கிறார் அபிநந்தன். இந்தியப் போர் வ…

    • 0 replies
    • 419 views
  16. கர்நாடக அரசியல் குழப்பம் : சுயேட்சை உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர்! கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், சுயேட்சை உறுப்பினர்களை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்துள்ளார். இதன்படி முதலாவதாக சுயேட்சை உறுப்பினரான சங்கர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிகோலியும், மகேஷ் குமதல்லி ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா கடிதத்தை சமர்பித்ததை அடுத்து அங்கு காங்கிரஸ், ஜனதா தளம் கூட்டணி ஆட்சி ஸ்திரமற்ற நிலையை எதிர்நோக்கியது. இதனையடுத்து இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாம…

  17. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லா…

    • 0 replies
    • 457 views
  18. நாளைக்கே சீனாக்காரன் நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன பண்ணலாம்.. நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை.! டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 1962-ஆம் ஆண்டு சீனா- இந்தியாவுக்கு இடையே போர் நடைபெற்றது. அப்போது சீனா, லடாக் மற்றும் மக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த டோக்லாம் பகுதியானது பூடானுக்கு சொந்தமானது. எனினும் அது எல்லை பகுதி என்பதால் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்த டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை எள…

    • 5 replies
    • 917 views
  19. டெல்லியில் நடைபெறுகிறது காவிரி ஒழுக்காற்று குழு கூட்டம்! காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் …

  20. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருப்பதாக கர்நாடக முதல்வராக ஆகப்போகும் எடியூரப்பா கூறியுள்ளார். விரைவில் அவர் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வந்த எடியூரப்பா அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கர்நாடக முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் தலைமையின் டெல்லியின் முடிவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். டெல்லிக்கு சென்று எடியூரப்பா உள்துறை அ…

    • 0 replies
    • 331 views
  21. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும், அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான, ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’ (உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது (என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில போலீசாரின் முன் அனுமதி…

    • 0 replies
    • 302 views
  22. இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை கொங்கனா சென் ஷர்மா, வரலாற்றாசிரியர் ராம சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதில் இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர். "நமது நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். நமது அரசமைப்பு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு; இங்கு மதம், இனம், பாலினம், சாதி இது எல்லாவற்றையும் கடந்து அனைத்து குடிமக்களும…

    • 0 replies
    • 566 views
  23. ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி எனக்கும் வேண்டாம்- மைத்ரேயன் டெல்லி: ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் அனுப்பப்பட்டனர்.இவர்களது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தூத்துக்குடி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவராகவே மாநிலங்களவை எம்பி பதவியை ர…

    • 1 reply
    • 933 views
  24. ஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி இந்தியாவிலேயே முதல் முறையாக, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், அது அரசின் நிதியுதவியோடு செயல்படுகிறதோ இல்லையோ, அனைத்திலும், ஆந்திர மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த சட்டமூலம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்களிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும் ஆந்திராவில் இது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஆந்திர மாந…

    • 4 replies
    • 850 views
  25. பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றன என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேசினார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, இம்ரான்கான் சந்தித்து பேசியபோது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது எ…

    • 0 replies
    • 659 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.