அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
நாளைக்கே சீனாக்காரன் நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன பண்ணலாம்.. நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை.! டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 1962-ஆம் ஆண்டு சீனா- இந்தியாவுக்கு இடையே போர் நடைபெற்றது. அப்போது சீனா, லடாக் மற்றும் மக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த டோக்லாம் பகுதியானது பூடானுக்கு சொந்தமானது. எனினும் அது எல்லை பகுதி என்பதால் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்த டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை எள…
-
- 5 replies
- 917 views
-
-
டெல்லியில் நடைபெறுகிறது காவிரி ஒழுக்காற்று குழு கூட்டம்! காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் …
-
- 0 replies
- 282 views
-
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருப்பதாக கர்நாடக முதல்வராக ஆகப்போகும் எடியூரப்பா கூறியுள்ளார். விரைவில் அவர் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வந்த எடியூரப்பா அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கர்நாடக முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் தலைமையின் டெல்லியின் முடிவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். டெல்லிக்கு சென்று எடியூரப்பா உள்துறை அ…
-
- 0 replies
- 330 views
-
-
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும், அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான, ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’ (உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது (என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில போலீசாரின் முன் அனுமதி…
-
- 0 replies
- 302 views
-
-
இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை கொங்கனா சென் ஷர்மா, வரலாற்றாசிரியர் ராம சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதில் இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர். "நமது நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். நமது அரசமைப்பு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு; இங்கு மதம், இனம், பாலினம், சாதி இது எல்லாவற்றையும் கடந்து அனைத்து குடிமக்களும…
-
- 0 replies
- 566 views
-
-
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி எனக்கும் வேண்டாம்- மைத்ரேயன் டெல்லி: ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் அனுப்பப்பட்டனர்.இவர்களது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தூத்துக்குடி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவராகவே மாநிலங்களவை எம்பி பதவியை ர…
-
- 1 reply
- 932 views
-
-
ஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி இந்தியாவிலேயே முதல் முறையாக, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், அது அரசின் நிதியுதவியோடு செயல்படுகிறதோ இல்லையோ, அனைத்திலும், ஆந்திர மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த சட்டமூலம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்களிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும் ஆந்திராவில் இது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஆந்திர மாந…
-
- 4 replies
- 847 views
-
-
பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றன என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேசினார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, இம்ரான்கான் சந்தித்து பேசியபோது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது எ…
-
- 0 replies
- 658 views
-
-
குமாரசாமி ராஜிநாமா: கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி படத்தின் காப்புரிமை TWITTER/ANI கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார். குமாரசாமியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார். இன்று (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அ…
-
- 0 replies
- 666 views
-
-
சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோ…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், பிரதமர் மோதி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். - இவ்வாறாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இதனை மறுக்கிறது இந்தியா. அழைக்கவில்லை அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. MEA அதில், "இந்தியாவும் பாகிஸ்தானும் அழைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாக அறிகிறோம். ஆனால்,…
-
- 0 replies
- 226 views
-
-
ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு ஆளுநர் அழைப்பு காஷ்மீரில் சாதாரண பொது மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்கில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “துப்பாக்கி ஏந்திய இந்த பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைத்தான் கொலை செய்கிறார்கள். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளை கொன்று விடுகிறார்கள். ஏன் அவர்களை கொலை செய்கிறீர்கள்? காஷ்மீரின் சொத்துக்களை கொள்ளையடிப்போரை கொன்று விடுங்கள். அப்படி யாரையாவது கொன்றிருக்கிறீர்களா?” என…
-
- 0 replies
- 288 views
-
-
உ.பி-யில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 32 பேர் பலி.. இழப்பீடு அறிவித்த மாநில அரசு. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இழப்பீட்டு தொகை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவர்கள் தொடர்பாக அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 18 மற்றும் 20 தேதிகளில் 2 பேர் பாம்பு கடியால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.அதே போல சனிக்கிழமையன்று மின்னல் தாக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் மின்னல் தாக்கியதன் காரணம…
-
- 1 reply
- 483 views
-
-
டி.ராஜா: பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்ச…
-
- 0 replies
- 488 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொட…
-
- 0 replies
- 529 views
-
-
AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…
-
- 0 replies
- 290 views
-
-
பிரியங்கா காந்தி கைது! தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டம், உம்பா கிராமத்தின் தலைவர் யாக்யா தத். இவர், அங்கு வசிக்கும் கோத்ந் பழங்குடியின மக்களின் 36 ஏக்கர் நிலத்தை தரும்படி கேட்டிருக்கிறார். நிலத்தை வழங்க பழங்குடியின மக்கள் மறுத்துள்ளனர். இதனால், 200 கூலியாட்களை நியமித்து நிலங்களை கைப்பற்றுமாறு கிராமத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் கிராமத் தலைவர். துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால…
-
- 0 replies
- 580 views
-
-
உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு இருப்பதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமை WTI Image caption வீட்டிற்குள் நுழைந்த புலி புலிகளின் வாழ்விடமாகவும் இருப்பதால் 2006ம்…
-
- 0 replies
- 306 views
-
-
இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் – காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் கருத்து மோதல்! இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீர்மானித்திருந்தது. இந்நிலையில், சீதை இலங்கைக்கு உண்மையிலேயே கடத்திச் செல்லப்பட்டாரா என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலகறிந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வக…
-
- 0 replies
- 277 views
-
-
தீப்தி பத்தினி பிபிசி தெலுகு சேவை படத்தின் காப்புரிமை Getty Images திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது. திருமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி இதனைத் தெரிவித்தார். அவருடன் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் உடனிருந்தார். பிபிசியிடம் பேசிய சுப்பா ரெட்டி, "மக்கள் நீதிமன்றத்தை அண…
-
- 1 reply
- 589 views
-
-
மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு மும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் டோங்கிரி என்ற பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக குறித்த கட்டிடம் சேதம் அடைந்திருந்தது. இந்நிலையில், அந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடு களை அகற்றி காயமடைந்து போர…
-
- 0 replies
- 232 views
-
-
400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் இலக்குகளை தரையில் இருந்து தாக்கும் வல்லமை கொண்டது எஸ் 400 ரக ஏவுகனைகள் 2018-ல் எஸ்-400 ஏவுகனைகள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. NEW DELHI: தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் எஸ் - 400 ரக ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2018 அக்டோபர் 5-ம்தேதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்யாவிடம் இருந்து ஏவுகனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா நெருக்கடி கொடுத்திருந்த நிலையில் அதனை மீறி இந்தியா இந்த நடவடிக்கையை எட…
-
- 0 replies
- 713 views
-
-
ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் இன்று காலை கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களான ஹஃபீஸ் சயீத், அப்துல் ரெஹ்மான் மக்கி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட சுமார் இரண்டு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள் 1997-ம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. https://www.bbc.com/tamil/global-49017111
-
- 1 reply
- 381 views
-
-
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியீடு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முதல் முறையாக பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநில மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிடும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஹிந்…
-
- 0 replies
- 218 views
-
-
தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது. எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 666 views
-