அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
மும்பை தாக்குதல்போல் மீண்டும் அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி: கடற்படை தளபதி எச்சரிக்கை Published : 05 Mar 2019 16:52 IST Updated : 05 Mar 2019 16:52 IST புதுடெல்லி கடற்படை தளபதி சுனில் லம்பா மும்பையில் 2008-ம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கடற்படை தளபதி லம்பா கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீ…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று மராட்டிய மாநிலம் மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 07:59 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது. இதன்பலன…
-
- 0 replies
- 242 views
-
-
தாராவியில் 21 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.எனவே அங்குகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆகி உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 07:55 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் ஆட்கொல்லி கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டா், பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆகியோரை கொரோனா தாக்கி உள்ளது. இவர்கள் தவிர தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரர் உயிரிழந்துவிட்டார். இதேபோல தாராவியில் துப்புரவு பணியில…
-
- 0 replies
- 236 views
-
-
மும்பை: ஆட்டோவிலே உணவு, தூக்கம்! -பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்ற முதியவரின் கதை மு.ஐயம்பெருமாள் தேஷ்ராஜ் எனது பேத்தி 12வது வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுத்த தினத்தன்று அனைத்து பயணிகளையும் பணம் இல்லாமல் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து சென்று பேத்தியின் தேர்ச்சியை கொண்டாடினேன். மும்பையில் கார்ரோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவர் தேஷ்ராஜ். இருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் ஒருவர் திடீரென கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், பின்னர் ஒருவாரம் கழித்து பிணமாக மீட்கப்பட்டார். மகன் இறந்த அடுத்த நாளே ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் ஆட்டோ எடுத்துக்கொண்டு பிழைப்பை பார்க்க சென்…
-
- 0 replies
- 368 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மும்பையில் உள்ள தாராவி பகுதியை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். மும்பை தாராவி பகுதி மும்பை: இந்தியாவில் ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 143 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் 335 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, அம்மாநிலத்தின் தாராவி பகுதியை சேர்ந்த நபர்…
-
- 0 replies
- 278 views
-
-
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை பரிசோதனை முடிவுகள் தாமதம் காரணமாக மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஜூன் 12, 2020 07:27 AM புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. 32,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி 3-வது இடத…
-
- 0 replies
- 298 views
-
-
மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு மும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் டோங்கிரி என்ற பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக குறித்த கட்டிடம் சேதம் அடைந்திருந்தது. இந்நிலையில், அந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடு களை அகற்றி காயமடைந்து போர…
-
- 0 replies
- 232 views
-
-
மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை; அதிர்ச்சி தகவல் மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 16:51 PM மும்பை, நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 61 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மராட்டியத்தில் 6 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தின் மும்பை மாநகரில் மலாட் பகுதியில் வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த…
-
- 0 replies
- 427 views
-
-
19 DEC, 2024 | 07:51 AM மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணிய…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று அதிகரிப்பு! மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவால் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மும்பையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தாராவி காணப்படுகின்ற நிலையில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி நேற்று அங்கு ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் தாராவியில் மரணித்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/மும்பையில்-தமிழர்கள்-அதி/
-
- 0 replies
- 414 views
-
-
மும்பையில் தொடரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு…. July 3, 2019 மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 5-ஆவது நாளாக நேற்றும் மழை நீடித்ததனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கிழக்கு மலாட்டி…
-
- 0 replies
- 372 views
-
-
முலாயம் சிங் யாதவ் காலமானார் - பல அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் செய்த அரசியல் தலைவர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ …
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம் .. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது. தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது முல்…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் – மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அணைகள் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளார். அணைகள் பாதுகாப்புக்கென தனி அமைப்பு உருவாக்குவதற்கான சட்டமூலத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டமூலம் தமிழக நலனுக்கு எதிராக இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உட்பட ஐந்து அணைகள் ஏனைய மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய சட்டமூலத்தால் தமிழகத்தின் உரிமை பறிபோ…
-
- 0 replies
- 378 views
-
-
-
- 2 replies
- 441 views
-
-
முஸ்லிம்களை லத்தியால் தாக்கும் உ.பி போலீஸ் - இந்தியாவை உலுக்கிய வைரல் காணொளி ரஜினி வைத்தியநாதன் & தில்நவாஸ் பாஷா பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத் தாக்கும் காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகியிருக்கிறது. அதை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து, அந்தக் க…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
ராஸ்தான் மாநிலம் உதயப்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் குலாப் சந்த் கடாரியா | படம்: ஏஎன்ஐ. Published : 21 Jan 2019 15:47 IST Updated : 21 Jan 2019 15:51 IST ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எதிர்கட்சித் தலைவராக உள்ள குலாப் சந்த் கடாரியா, ''முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ராஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு குலாப் சந்த் கடாரியா பேசியதாவது: தவறவிடாதீர் …
-
- 0 replies
- 360 views
-
-
முஸ்லீம் அகதிகளெல்லாம் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் முஸ்லீம் அகதிகளெல்லாம் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - ராம.ரவிக்குமார்,இந்து தமிழர் கட்சி
-
- 2 replies
- 447 views
-
-
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1316896
-
- 5 replies
- 170 views
-
-
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்! கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/மூக்கு-வழியே-செலுத்தும்/
-
- 0 replies
- 351 views
-
-
மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்! மின்னம்பலம் சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். மூட நம்பிக்கையால் இவ்வாறு செய்ததற்கு சமூக ஆர்வலர் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. இன்று காலை 8 மணி தொடங்கி 11.20 வரை தோன்றியது. இதனை பொது மக்கள் சூரிய கண்ணாடி அணிந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் இருந்ததால் அதைக் காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இச்சமயத்தில் சில நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.…
-
- 0 replies
- 464 views
-
-
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்.. வயது 95! மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது.ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இ…
-
- 2 replies
- 499 views
-
-
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? ஜெனி ஃப்ரீடா A health worker takes a nasal swab sample ( AP Photo/Aijaz Rahi ) வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர். இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கினாலும் மூன்றாம் அலை விரைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய உருமாறிய வைரஸ் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்…
-
- 0 replies
- 161 views
-
-
கொரோனா வைரஸ்பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிட்டு உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 08:31 AM புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஐ எட்டி விட்டது. மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 748 ஆக உயர , பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். கேரளாவில் 306 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.தெலங்கானாவில் பா…
-
- 0 replies
- 204 views
-
-
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு! இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக …
-
- 0 replies
- 116 views
-