அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
பலூசிஸ்தான் எரிவாயு விநியோக குழாய்க்கு தீ – பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்பு… March 9, 2019 பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயுக் குழாய்க்கு தீ வைத்த சம்பவத்திற்கு பலூச் விடுதலைப் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலூசிஸ்தானில் உள்ள தேரா பக்தி பகுதியில் இருந்து பாகிஸ்தானின் ஏனைய பகுதிகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகின்ற நிலையில் நேற்றையதினம் சுயி எரிவாயு ஆலைக்கு அருகே உள்ள குழாய்க்கு தீவைத்து இன்நதெரியாத நபர்கள் தீவைத்து தகர்த்துள்ளதனால் பயங்கர சத்தத்துடன் குழாய் வெடித்து, தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது. எனினும் இது குறித்த…
-
- 7 replies
- 930 views
-
-
EWS மஹாராஷ்டிராவில் 40 லட்ஷம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருக்கவில்லை – முன்னாள் நீதிபதி பி.ஜி.கோஸ்லே பட்டில் ஹைதராபாத் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பை உதாரணம் காட்டுகிறார் ஜனதா .தாள் (எஸ்) தேசிய செயலர் மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 39,27,882 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 17 இலட்சம் தலித்துகள் மற்றும் 10 இலட்சம் முஸ்லிம்கள் என்றும் ஜனதா தாள் (எஸ்) செயலாளரம் முன்னாள் நீதிபதியுமான பி.ஜி. கோல்ஸே பட்டில் கூறியுள்ளார். இது பா.ஜ.கட்சியினால் அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பம்பாய் உய…
-
- 0 replies
- 243 views
-
-
காஷ்மீர் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள். அசாதாரண சூழல் நிலவுவதால் காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பு படையனிர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்,காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவாக அங்கு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம்தான் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டிருந்தனர். ஜம்மு காஷ்மீ…
-
- 3 replies
- 1k views
-
-
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த ஜமாத் உத்தவ அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத் விடுவிக்கப்பட்டார். ஜூலை 17-ம் தேதி தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சய்யீத்தை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516323 மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலை ஜமாத்-உத்-தாவா என்ற தீவிரவாத அமைப்பு நடத்தியது கண்டறியப்பட்டது இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத https://www.hindutamil.in/news/india/159702-.html இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நீரை …
-
- 1 reply
- 314 views
-
-
அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்…
-
- 0 replies
- 146 views
-
-
இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்…
-
- 0 replies
- 236 views
-
-
கொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத…
-
- 0 replies
- 192 views
-
-
கொரோனா: வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்படும் 40 கோடி இந்தியர்கள்! மின்னம்பலம் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும், புலம்பெயர்ந்து பணி செய்பவர்கள் மற்றும் தினக் கூலிகள் என 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் அடி நிலையைத் தொட இருப்பதாக ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு எந்த நேரமும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது இந்த வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் குறுகியகால பாதிப்புகளைத் தவிர்த்து, நீண்டக…
-
- 0 replies
- 243 views
-
-
மோடி தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும் – தயாநிதி மாறன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மத்திய வரவு செலவு குறித்த விவாதம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது பலருக்கும் நம்பிக்கையில்லை. ஆதலால், மக்களுக்கு ஏற்படும்வகையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மட்டுமல்லாது, குடியரசுத் தலை…
-
- 0 replies
- 301 views
-
-
"எனது இன்னிங்ஸ் முடிந்தது" - தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஆலோக் பிரகாஷ் புதுல் பதவி,ராய்ப்பூரில் இருந்து பிபிசி இந்திக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALOK PUTUL/BBC 2017 டிசம்பரில் நடந்த விஷயம் இது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட இருந்தார். ராகுல் காந்தி கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்டால் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சோனியா காந்தியிடம் கேட்டனர். நான் ஓய்வு பெறப்போகிறேன் என்று சோனியா ப…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் ராணுவ தலைவரை நவ்ஜோத் சிங் சித்து அணைத்துக்கொண்டது ஏன்? குருப்ரீத் சிங் சாவ்லாபிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீக்கியர்களின் புனித தலமான கர்த்தர்புர் சாஹிப், பாகிஸ்தானுக்குள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. படத்தின் காப்புரிமைNARINDER NANU/GETTY IMAGES Image captionநவ்ஜோத் சிங் சித்…
-
- 0 replies
- 464 views
-
-
டாலருக்கு கெட்-அவுட் சொன்னது இந்தியா.. யுஏஇ.யுடன் இனி ரூபாயில்தான் வியாபாரம்.. அமெரிக்கா ஷாக் அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து விலக தொடங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முதலில் ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தது, பின் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சீண்டி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவை அதிர வைக்கும் வகையில் டாலர் வர்த்தகத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவும் அரபு அமீரகமும் போட்டு இர…
-
- 0 replies
- 447 views
-
-
காஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், 'இந்தியாவே திரும்பிப் போ' முழக்கம் #BBCGroundReport 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்லெறி சம்பவங்கள் நடந்து வருவதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா. இதனிடையே காஷ்மீர் சென்றுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் …
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00 இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடு…
-
- 2 replies
- 530 views
-
-
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு, மத்திய அரசு மருந்து ஒதுக்கீடு புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வைரஸ் பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருகிறது. இந்த தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங…
-
- 2 replies
- 411 views
-
-
அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலி பீடமாக உருவானது எப்படி? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUMRAN PREET 1857-ல் பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய அகமது கான் கரல் கொல்லப்பட்டு, அவரது தோழர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் 'காலா பானி' என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 'காலா பானி' என்பது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும். நெடுந்தொலைவைக் குறிக்க 'கலா கோஸ்'…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
'பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவ…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
ராணுவ தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 75-வது ராணுவ தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாளில், ராணுவத்தின் சாதனைகள், தேசத்திற்கு ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள் நினைவுகூர்ந்து கவுரவிக்கப்படும். 1971 இந்தியா - பா…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவ் கைது : November 18, 2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் உள்ளிட்ட கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் முதலான ஐந்துபேரை மகாராஷ்டிரா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இதனால், எழுத்தாளர் வரவரராவை கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் ஹைதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட…
-
- 0 replies
- 309 views
-
-
படத்தின் காப்புரிமை Twitter Image caption மொராரி பாபு நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம் தமிழ் இந்து: "அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு 'ராமர் கதை' சொற்பொழிவு நடத்திய ஆன்மீக தலைவர் - சர்ச்சை" பாலியல் தொழிலாளர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று ஆன்மிக தலைவர் மொராரி பாபு, 'ராமர் கதை'யை சொற்பொழிவாற்றிய நிகழ்ச்சி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது. "பிரபல ஆன்மிக தலைவர் மொராரி பாபு, மும்ப…
-
- 1 reply
- 962 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 10:25 AM புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். டெல்லி பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் நிலைமையை இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூதரகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள …
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சபரிமலையில் மாதவிடாய் வயதுள்ள பெண்கள் நுழைய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அந்த தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மொத்தமுள்ள 65 மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption போலீ…
-
- 0 replies
- 323 views
-
-
196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி கொல்கத்தா உயர் நீதிமன்றில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பெண்கள் சிறைச்சாலையில் ஆண்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1369099
-
- 0 replies
- 267 views
-
-
ராணுவ மருத்துவப் பரிசோதனையை அடுத்து அபிநந்தனிடம் விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணை Published : 03 Mar 2019 13:24 IST Updated : 03 Mar 2019 13:24 IST ஆர்.ஷபிமுன்னா புதுடெல்லி தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: படம் ஏஎன்ஐ பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதுதவிர, ராணுவ விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணைக்கும் அவர் உட்படுத்தப்பட உள்ளார். கடந்த 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, மிக் 21 ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்ற அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் சிற…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், ஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் உச்சிமாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உச்சிமாநாட்டினிடையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 275 views
-