அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. …
-
- 1 reply
- 808 views
-
-
ஓடும் ரயிலில் பா.ஜ.க.வின் முன்னாள் துணை தலைவர் சுட்டுக்கொலை குஜராத்தில் அந்த மாநில பா.ஜ.க. முன்னாள் துணை தலைவர் ஜெயந்தி பனுஷாலி ஓடும் ரயிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், சாய்ஜி நகரிலுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பில், புஜியில் இருந்து அகமதாபாத் நோக்கி நேற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது கட்டாரியா மற்றும் சுர்பாரி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பனுசாலி பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டிக்குள் திடீரென உள்நுழைந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள், அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இல…
-
- 0 replies
- 923 views
-
-
சிபிஐ இயக்குனரை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு – உச்ச நீதிமன்றம் January 8, 2019 சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்த வழக்கு விசாரணையை கடந்த டிசம்பர் 6ம் திகதி நிறைவு செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சுற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து ஏற்பபட்ட அதிகார மோதல்கள் காரணமாக மத்திய அரசு இருவரையு…
-
- 0 replies
- 355 views
-
-
நாடு தழுவிய மத்திய தொழிற்சங்கங்களின் 48 மணிநேர வேலை நிறுத்தம் ஆரம்பம் January 8, 2019 நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படுகின்றது. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊ…
-
- 0 replies
- 528 views
-
-
பொருளாதாரரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதல் Getty Images மோதி இந்தியாவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு பொதுப்பிரிவில் இருந்து அளிக்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதற்காக அரசு நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யும் என்றும் கூறப்பட்டுகிறது. மிக முக்கியமாக, இதுவரை இட ஒதுக்கீட்டின்…
-
- 0 replies
- 473 views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சிவன் வழிபாடு ஒன்றுதான். ஆனால், ஒரு கோயிலில் சிவனுக்குப் பெயர் அண்ணாமலையார் என்றால் மற்றொரு ஊரில் பெயர் நடராஜர். …
-
- 0 replies
- 366 views
-
-
சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்… January 2, 2019 சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேர…
-
- 18 replies
- 2.8k views
-
-
மம்தா பானர்ஜிக்கே பிரதமராவதற்கு தகுதியுள்ளது: பா.ஜ.க தலைவரின் கருத்தால் பரபரப்பு இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதென அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் வெளியிட்ட கருத்து இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள பா.ஜனதாவை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என நேற்று (சனிக்கிழமை) ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, திலிப் கோஷ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது, “மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவாரானால் அது முதலமைச்சர் மம்தா பானர்ஜியாகவே இருக்க முடியும். அவர் பிரதமராக தெர…
-
- 0 replies
- 337 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பிபிசி குழுவின் ஆய்வு இது . டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாசப் படம் பார்த்து அதற்கு விருப்பக்குறியிட்டதாக கூறி கேலி கிண்டலுக்குள்ளானார். தனது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செயல்படும் டெல்லி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா இவ்விவரத்தை கடந்த வியாழக்கிழமை காலையில் ட்வீட் மூலம் வெளியிட்டார். ''டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் ஆபாச படம் பார்த்திருக்கிறார். நேற்று இரவு அவர் ஆபாச படத்த…
-
- 0 replies
- 735 views
-
-
ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாக பிறந்தவர்கள் கெளரவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் இருந்ததாகவும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் கூறி உள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி முகமை. சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்றும் அந்தக் கூட்டத்தில் ராவ்பேசி உள்ளார் என்கிறது பி.டி.ஐ தகவல். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடக்கும் இந்த நான்கு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வியாழன்று தொடங்க…
-
- 0 replies
- 912 views
-
-
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நீர்வழி தாக்குதல் நடத்த நடவடிக்கை! இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா,ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில் ‘சமுந்தரி ஜிஹாத்’ எனப்படும் இத்தாக்குதலில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவி, இந்தியாவின் முக்கிய துறைமுகங்களை தாக்குவதற்கு குறித்த இயக்கங்கள…
-
- 1 reply
- 925 views
-
-
சபரிமலை போராட்டத்தில் கலவரம்.. கல் வீசி தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி.. போலீஸ் குவிப்பு! சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த நபர் பலியாகி உள்ளார். கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடக்கிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இன்று போராடி வருகிறார்கள். நேற்று மாலையே இதற்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டது.நேற்று பாஜக சார்பாக கேரளா தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடந்தது. பாஜக மகளிரணி சார்பாக இந்த பெரிய போராட்டம் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வ…
-
- 1 reply
- 305 views
-
-
கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள். அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி பேரணி நடத்தியுள்ளனர் மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இந்த பேரணி நடைபெற்றது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெர…
-
- 0 replies
- 410 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பிரதமர் நரேந்திர மோதி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான கேள்விகள் முதல் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருக்கிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், பிரதமர் நரேந்திர மோதியுடன் நேர்காணல் கண்டார். இந்த பேட்டியை ஏஎன்ஐ நிறுவனம் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது தொடர்பான அவசரச் சட்டம் பற்றி பிரதமரிடம் கேட்டதற்கு, "சட்டபூர்வமான நடைமுறைகள் முடிந்த பிறகு மட்டுமே அதைப் பற்றி சிந்திக்க முடியும்" என்று ப…
-
- 0 replies
- 399 views
-
-
விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் – முக்கிய ஆவணங்கள் சிபிஐ வசம்… January 1, 2019 விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் 431 கோடி ரூபா லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி ரூபாவுக்கு 12 நவீன ஹெலிகொப்டர்கள் வாங்கியதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பிரித்தானியாவினைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அண்மையில் கைது செய்துள்ள சிபிஐ தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இடைத்தரகர்கள் கிறி…
-
- 0 replies
- 327 views
-
-
மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை M Niyas Ahmed நினைவில் காட்டினை சுமந்து அதன் மகோன்னதத்தில் லயித்துருப்பவனுக்கு ஒரு பெருநகரம் என்னவாக இருக்கும்? அந்த நகரத்தை, அந்த நகரத்திற்கு ஏற்றவாரு தங்களை வடிவமைத்துக் கொண்ட மனிதர்களை அவன் எப்படி எதிர்கொள்வான்? தயங்குவான், தாழ்வு மனப்பான்மையில் உழல்வான், இது வேண்டாமென உதறி தள்ளி மீண்டும் கூடு திரும்புவான். இவைதானே நடக்கும். இதுதான் எனக்கும் நடந்தது. ச…
-
- 0 replies
- 443 views
-
-
பங்களாதேசில் 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கின்றார் December 31, 2018 பங்களாதேசில் நேற்றையதினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஹேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அங்கு இதுவரை யாரும் 4-வதுமுறையாக யாரும் பிரதமராக வந்ததில்லை என்பதால், ஷேக் ஹசினா புதிய வரலாறு படைக்க உள்ளார். எனினும் தேர்தல் முறையாக நடக்கவில்லை எனவும் நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெ…
-
- 0 replies
- 389 views
-
-
சபரிமலை ஐயப்பன் கோவில் – பெண்களின் உரிமைக்காக, மனித சங்கிலிப் போராட்டம்… December 31, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெண்கள் சுவர் எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நடிகை சுகாசினி, அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோ…
-
- 0 replies
- 871 views
-
-
அந்தமானில், உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு! அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி அங்குள்ள ராஸ் தீவு இனிமேல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என அறிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்தமான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தடுப்புச்சுவர் திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானின் போர்ட் பிளைர் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள காலா பானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், சுபாஷ் சந்திரபோஸ் நினைவைக் க…
-
- 0 replies
- 503 views
-
-
பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது. December 30, 2018 பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேவேளை பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சித் தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என குற்றம் சுமத்தியுள்ளதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்…
-
- 1 reply
- 553 views
-
-
அர்விந்த் சாப்ரா பிபிசி பஞ்சாபி படத்தின் …
-
- 0 replies
- 458 views
-
-
மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் விரைவு December 29, 2018 மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான 20 தீயணைப்பு படை வீரர்கள் அதிக அழுத்தம் கொண்ட பம்புகளுடன் ஒடிசாவிலிருந்து இந்திய விமானப் படையின் விமானத்தில் மேகாலயாவிற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது மேகாலயாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி இரண்டு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒடிசாவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளுக்காக சென்றுள்ளனர். இவர்கள் மிக உயரழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு செல்வதால்,…
-
- 0 replies
- 302 views
-
-
குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் December 29, 2018 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 280 views
-
-
சிக்கிம் மாநிலத்தில் சிக்கியிருந்த 2500 சுற்றுலாப்பயணிகள் மீட்பு December 29, 2018 பனிப் பொழிவு காரணமாக சிக்கிம் மாநிலத்தில் சிக்கியிருந்த 2500 சுற்றுலாப் பயணிகளை மீட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவிவருவதனால் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதனால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறு…
-
- 0 replies
- 352 views
-
-
இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவுக் குழுவின் பாரிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு December 27, 2018 இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற குழு ஒன்று தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகாமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவ…
-
- 0 replies
- 452 views
-