Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாக்காளர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு: தேர்தல் ஆணையம் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திலும், எதிர்வரும் 11ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தடவை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தவகையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவு முடிந்ததும் ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள மையை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்பட…

  2. வாக்கு எந்திர விவகாரம்; தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை: உச்ச நீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் Published : 14 Apr 2019 17:48 IST Updated : 14 Apr 2019 17:48 IST பி.டி.ஐ. புதுடெல்லி மின்னணு வாக்கு எந்திரத்தின் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் : படம் ஏஎன்ஐ மின்னணு வாக்கு எந்திரங்களில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஒப்புகை தணிக்கைச் சீட்டு எந்திரங்கள் மூலம வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட…

  3. வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றியுள்ளனர் – மம்தா பானர்ஜி வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அலிபூர்துவார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ காணாகுல் தொகுதி வேட்பாளர் தாக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஏராளமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திரிணாமூல் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குகள் நுழைய பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை. வாக்குப்பதிவ…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18வது மக்களவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் அட்டவணையை வெளியிடுவதற்கு முன், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு தயாராகி வருகின்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கினார். மேலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்தும் அவர் ஊடகங்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்…

  5. வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணைக்குழு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளதாகவும், இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகள் எனவும் வோட் பார் டெமாக்ரச…

  6. அரசு பணியில் உள்ள பெண்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், 6 மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Published:Today at 6 AMUpdated:Today at 6 AM மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் கிடையாது. இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என…

  7. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரஷ்ய அன்டோனோவ் ஏஎன் 26 விமானம் புருலியாவில் ஆயுதங்களை வீசியது. கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது. டிசம்பர் 17-ம் தேதி இரவு, சுமார் நான்கு டன் எடையுள்ள ஆபத்தான ஆயுதங்களை ஏந்திய ரஷ்ய அன்டோனோவ் ஏஎன் 26 (Antonov AN-26) சரக்கு விமானம் கராச்சியிலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் எட்டு பேர் பயணம் செய்தனர். அவர்களில் டென்மார்க்கைச் சேர்ந்த கிம் பீட்டர் டேவி, பிரிட்டனில் இருந்து வந்த ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் மணிகன் மற்றும் ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர். அந்த ஐந்து பணியாளர்க…

  8. வானில், ஏவுகணைகளை... அழித்துத் தாக்கும் "அபியாஸ்" வெற்றிக்கு... ராஜ்நாத் சிங் வாழ்த்து. வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் ‘அபியாஸ்’ விமான சோதனை வெற்றிகரமாக நிறைவேறயமையை அடுத்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வளர்ச்சி ஆயுதப்படைகளுக்கான வான்வழி இலக்குகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறினார். அநேரம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றில் தொடர்புடைய குழுக்களின் முயற்சிகளை பாதுகாப்பு துறையின் செயலாளரும், இந்த அமைப்பின் தலைவருமான கலாநிதி. ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டியுள்ளார். …

  9. வான் தாக்குதலை... வானத்திலேயே முறியடிக்கும், ஏவுகணையை... உருவாக்கும் இந்தியா வான்வழி தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தயாரித்துள்ள இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை முறியடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மற்றொரு ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது என்றும் இந்தியா அறிவித்துள்ளது. ஒஸ்ட்ரா எம்.கே. 2 மற்றும் எம்.கே.3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்ட…

  10. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 321 views
  11. வாயில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை - நடந்தே உயிரை மாய்த்து கொண்ட சோகம்; யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்பட்ட மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா வந்ததை அடுத்து, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர…

  12. வி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது பற்றி மீள் பரிசீலனை செய்யும்படி மலேசியாவின் சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் கேட்டுக்கொண்டதை அந் நாட்டின் உள்துறை அமைச்சர் முஹிதீன் யஸின் கண்டித்திருக்கிறார். ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென வகைப்படுத்தும் அதிகாரம் மலேசியாவின் உள்துறை அமைச்சருக்கு மட்டுமே உண்டே தவிர சட்டமா அதிபருக்கு அதில் தலையிடும் அதிகாரம் இல்லை என அமைச்சர் யஸின் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வை…

  13. விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் – முக்கிய ஆவணங்கள் சிபிஐ வசம்… January 1, 2019 விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் 431 கோடி ரூபா லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி ரூபாவுக்கு 12 நவீன ஹெலிகொப்டர்கள் வாங்கியதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பிரித்தானியாவினைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அண்மையில் கைது செய்துள்ள சிபிஐ தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இடைத்தரகர்கள் கிறி…

  14. விக்ராந்த் கப்பலின், சோதனை ஓட்டம் நிறைவு! உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233208

    • 4 replies
    • 822 views
  15. விக்ராந்த் போர் கப்பலில் பிபிசி: பிரமிப்பூட்டும் திறன்கள் - முழு விவரம் ஜுகல் ஆர் புரோஹித் பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து 31 ஆகஸ்ட் 2022 படக்குறிப்பு, விக்ராந்த் கடற்படை கப்பல் "இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?" - கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். "இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன" என்று அந்த அதிகாரி புன்னகையுடன் கூறினார். இந்திய கடற்படை சேவைக…

  16. விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு: அதிகாலை 3 மணிக்கு அலறிய சைரன்.. கதவை உடைத்து மக்களை வெளியேற்றிய போலீஸ்- முகத்தை ஈரத்துணியால் மறைக்க அறிவுறுத்தல்-2,000 பேர் வெளியேற்றம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 2.30-3 மணியளவில் இந்த வ…

  17. படக்குறிப்பு, விசாகப்பட்டினம் கடற்கரையில் கடல் உள்வாங்குவதால் வெளிப்படும் பாறைகள் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரைக்குச் சென்று காளிமாதா கோவில் எதிரே அமர்ந்த போது, கடல் உள்வாங்கியது போன்று இருந்தது. அதனால்தான் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட பாறைகள், அன்று அதிகம் தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் வெளியே அதிகமாக தெரிந்த பாறைகளின் மீது கடற்கரைக்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். நல்லபாபு என்ற மீனவர் சிறிய தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. ஏன் பாறைக…

  18. விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை விஜய் மல்லையா, பிரதமர் மோடி : கோப்புப்படம் புதுடெல்லி இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்படலாம் என சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அழைத்துவரப்படும் விஜய் மல்லையா முதலில் சிபிஐ வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப…

  19. விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி! விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்த…

  20. படத்தின் காப்புரிமை Getty Images விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்…

  21. விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானியா அனுமதி February 5, 2019 இந்தியாவில் வங்கி மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி வழங்கியுள்ளார். அவரை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா, இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்டு, அதனை மீளச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றுள்ள நிலையில் இந்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ளன. இந்தநிலையிலேயே இவ்வாறு அவ…

  22. விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகின்றார் பிரதமர் மோடி! ”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வ…

    • 4 replies
    • 277 views
  23. விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 14-ம் தேதி அந்த அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு ஆதரவை பெருக்க முயற்சிப்பதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடி…

    • 3 replies
    • 792 views
  24. பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. Image caption பினாங்கு ராமசாமி இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார். துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்…

    • 0 replies
    • 294 views
  25. விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த, இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல் விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ,…

    • 4 replies
    • 437 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.