அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
உலகை வலம் வந்த ஸ்பெயின் பெண் இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை - கணவர் கண்ணெதிரே பயங்கரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரவி பிரகாஷ் பதவி, ராஞ்சியிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக 3 மார்ச் 2024, 08:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த முழு விவகாரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர…
-
-
- 4 replies
- 526 views
- 1 follower
-
-
1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி’சர்ச்சை. 1980களில் தாம் டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் பேட் வைத்திருந்ததாக பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போது நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டி மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், 1990களின் தொடக்கத்திலேயே டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனை பயன்படுத்துகிறார்கள். அத…
-
- 0 replies
- 380 views
-
-
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது நிரம்பிய 2 சிறுமிகள் – 72 பேர் கைது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்…
-
- 0 replies
- 146 views
-
-
இந்தியாவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளில் உண்மை இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளதாக பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தெரிவிக்கிறார். ஆகஸ்டு 17ஆம் தேதியன்று பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள கெல் செக்டரில் நடைபெற்ற எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் நாயிப் சுபேதார் அகமது கான் என்ற பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆ…
-
- 0 replies
- 399 views
-
-
உத்தரப் பிரதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு சென்ற வழியில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண்ணொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்திற்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில், …
-
- 3 replies
- 685 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக…
-
- 1 reply
- 509 views
-
-
03 JUN, 2025 | 01:30 PM காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில்இராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென் லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சிக…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார். டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். என்ன நடந்தது? கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளிய…
-
- 12 replies
- 972 views
-
-
-
- 0 replies
- 902 views
-
-
பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த உத்தரவும் குற்றப்பத்திரிக்கையும் இன்றி கடந்த 28 மணி நேரம் தன்னை பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியதை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். குறித்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்,…
-
- 0 replies
- 158 views
-
-
இலங்கை தொடர்பான சர்வ கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு இலங்கை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. \ எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைநெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளிற்கு முன்னதாக இடம்பெற்ற சம்பிரதாயப்பூர்வமான அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா த…
-
- 2 replies
- 447 views
-
-
ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்ற இந்தியப் பொறியியலாளர் கைது! ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகளுக்கு அனுப்பியதாக பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைகளுக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DARO) பொறியியலாளர் நிஷாந்த் அகர்வால் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக விசாரித்து வருவதாக இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 332 views
-
-
சிறிசேனாவை கொல்ல திட்டம்.. ராவின் பிளானை விசாரிக்கும் ஹவாய் போன் நிறுவனம்.. பின்னணி என்ன ? கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய நடந்த திட்டம் குறித்து சீனாவின் ஹவாய் போன் நிறுவனம் விசாரணை நடத்த உள்ளது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தகவல் அளித்தவர் இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தவர் நமல் குமாரா என்ற நபர்தான். நமல் குமாரா அதிபர் சிற…
-
- 0 replies
- 574 views
-
-
ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் வளர்சிதை மாற்ற ஆபத்து என்ன? மாரடைப்பு அதிகம் வருவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐடி துறையில் பணிபுவர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆய்வு கூறுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்ரலகடா பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப துறையில் ( ஐடி) பணிபுரிபவர்கள் என்றால், குளிர்சாதன அறையில் வேலை, ஐந்து இலக்க சம்பளம் என்று சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற எண்ணம்தான் பரவலாக உள்ளது. ஆனால் பணி ரீதியான…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சிவன் வழிபாடு ஒன்றுதான். ஆனால், ஒரு கோயிலில் சிவனுக்குப் பெயர் அண்ணாமலையார் என்றால் மற்றொரு ஊரில் பெயர் நடராஜர். …
-
- 0 replies
- 375 views
-
-
வாக்காளர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு: தேர்தல் ஆணையம் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திலும், எதிர்வரும் 11ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தடவை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தவகையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவு முடிந்ததும் ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள மையை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்பட…
-
- 0 replies
- 703 views
-
-
இந்தியாவின் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ! 3 பேர் கைது கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கேரளாவில் பதுங்கியிருப்ப தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில், அடுத்தடுத்து சக்தி வாய்ந்த தற்கொலைக் குண்டுகள் வெடித்தன. இதில், 253 பேர் பலியாகியுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டடோர் படுகாயம் அடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்…
-
- 0 replies
- 667 views
-
-
டி.ராஜா: பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்ச…
-
- 0 replies
- 509 views
-
-
அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMINERVA STUDIO / GETTY IMAGES சில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அணு உல…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக தீர்ப்பு! மின்னம்பலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இனி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும், 3 மாதத்துக்குள் இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள்ளேயே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அமர்வு அளித்த தீர்ப்பில், “ 1934 ஆம் ஆண்டு கலவரங்கள் மற்றும் 1949 இல் ஏற்பட்ட பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள் முற்றம் இருந்திருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் 1857 க்கு முன்னர், இந்துக்கள் உள் முற்றத்தில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று ஆவணங்கள் காட்டுகின்றன. 1857 ஆம் ஆண்டில் வெ…
-
- 13 replies
- 2k views
- 1 follower
-
-
பிரேசிலில் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்திய போது இந்தியாவுக்கு ரஷ்யாவின் எஸ்.400 ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை விற்பது தொடர்பான ஆலோசனை நடந்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார், கடந்த ஆண்டு இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகணைத் தடுப்புகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவின் எல்லை அச்சுறுத்தலை எதிர்கொள்ள இவை தேவைப்படுவதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமான முறையில் நடைபெற்று வருவதாக பிரேசிலில் செய்தியாளர் சந்திப்பின்போது புதின் தெரிவித்துள்ளார். தனது இறையாண்மையை பெரிதாக மதிக்கும் இந்தியாவுக்கு 135 கோடி மக்கள் தொகை இருப்பதாகவும் குறிப்பிட்ட புதின், இந்தியாவுடன் தொழில்நுட்பம் மிகுந்த ஆயுத…
-
- 1 reply
- 450 views
-
-
இரண்டு குழந்தைகள்... கொள்கை, குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்! இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதை படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்கு சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் மாநில முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் மேற்படி விளக்கமளித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பு…
-
- 0 replies
- 177 views
-
-
சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – சவுத்ரி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். விமானப்படையின் 89 ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய விமானப்படை விமானங்களும், முழு அளவில் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ரஃபேல் விமானங்களும், அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்களும் விமானப்படையில் இணைத்தது, இந்தியாவின் போர் திறனை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1243185
-
- 0 replies
- 140 views
-
-
மன்மோகன் சிங்... திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி! இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244770
-
- 0 replies
- 557 views
-
-
43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜூபைர் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROLI BOOKS பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர் இரண்டாம் உலக போரின் நாயகனாக நினைவு கூரப்படுகிறார். ஹிட்லர் போன்ற சக்தி வாய்ந்த சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடி தோற்கடித்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். அவர் பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பிரிட்டனின் காலனித்த…
-
- 1 reply
- 607 views
- 1 follower
-