Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்… January 2, 2019 சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேர…

    • 18 replies
    • 2.8k views
  2. படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார். தமது அரசு ஏழைகள் …

  3. 20 FEB, 2025 | 12:29 PM முகநூலில்அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: இந்திய கடற்படை குறித்த தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு குழு திரட்டி வருவதாக எங்களுக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தீபக் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கார்வார் அருகேயுள்ள கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆகாஷ் நாயக் வேதன் தண்டேல் ஆகிய இருவர் பற்றிய தகவல் பற்றிய தகவல் கிடைத்தது. இந்த இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூல…

  4. அதிகாலையில் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்! நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை அளந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் 5.5 என அதன் அளவை மதிப்பிட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க ச…

  5. சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். வார இறுதியில் வெளியுறவு துறை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில், நித்யானந்தா பற்றி ரவீஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்று ரவீஷ் குமார் கூறினார். "எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை முதலாக கொண்டே நாங்கள் செயல்பட முடியும். இதுவரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என…

    • 0 replies
    • 283 views
  6. நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன…

    • 1 reply
    • 110 views
  7. அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அதற்குரிய காரணங்களை டாக்டர் நாரேந்திர குமார் வர்மா விளக்குகிறார். பதிவு: ஏப்ரல் 06, 2020 11:59 AM புதுடெல்லி இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து…

  8. சீனாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்கள் டெல்லியை வந்தடைந்தன! சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஒக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகின்றது. அந்தவகையில் இதுவரை இல்லாத வகையில் சீனாவில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி சுமார் 100 டன் எடைக் கொண்ட செறிவூட்டிகள், சீனாவின் ஹொங்கொங் விமானநிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் பல மருத்துவ பொருட்கள் சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப…

  9. 'இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சாமியார் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DHIRENDRA MEMORIAL FOUNDATION சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள். நீல நிற டொயோட்டா காரை அவர் தானே …

  10. மனைவி கொலை: பத்து வருடங்களுக்கு பிறகு போலீஸிடம் பிடிபட்ட தலைமறைவான கணவர் பட மூலாதாரம்,BHARGHAV PARIKH 4 மணி நேரங்களுக்கு முன்னர் ’நான் வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருந்தால், என்னை யாராவது அடையாளம் கண்டிருப்பார்கள். அதனால் காவல் துறையினரிடம் நான் பிடிபட்டிருக்கலாம். அதனால்தான் நான் வெளியுலகை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஒரு உணவு விடுதியின் கொல்லைப்புறத்திலேயே தங்கினேன். பத்து ஆண்டுகளாக இப்படிதான் நாட்களை கடத்தி வந்தேன். ஆனால் இப்போது காவல் துறையினர் என்னை பிடித்து விட்டார்கள்’ என்கிறார் பீம்சிங் பட்டேல். பீம்சிங் பட்டேல் தனது குற்றத்தை ஒத்துக்கொண்ட பிறகு, ஆமதாபாத் குற்றப்பிரிவில் ஆஜர்படுத்தப்ப…

  11. மகாத்மா காந்தி எமோஜியை டுவிட்டரில் ஆரம்பித்து வைத்தார் மோடி மகாத்மா காந்தி எமோஜியை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த மகாத்மா காந்தி எமோஜி எதிர்வரும் 8ஆம் திகதி அனைவரது பயன்பாட்டுக்கு கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ‘டுவிட்டர் இந்தியா’ வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, காந்தி ஜெயந்தி, எம்.கே.காந்தி, பாபு அட்150, மகாத்மா காந்தி, மகாத்மா அட்150 உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் மகாத்மா காந்தியின் ஓவியத்தை கொண்டிருக்கும் இப்புதிய எமோஜியை எதிர்வரும் 8ஆம் திகதி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் டுவிட்டர், டுவிட்டர் லைட் ஆகியவற…

  12. 19 AUG, 2023 | 10:50 AM மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆய்வுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆய்வு கப்பல் கடந்த 16-ம்தேதி நள்ளிரவு மும்பையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பலில் இருந்த சீன விஞ்ஞானியின் வெய்க்யாங் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக மும்பையில் உள்ள கடல்சார் மீட்…

  13. தெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் December 7, 2018 தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றதுஇ காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்திவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நில…

  14. பெங்களூர் விபத்தில் இரு விமானிகள் பலி… February 1, 2019 பெங்களூரில் இன்று (01.02.19) பிற்பகல் இந்திய விடானப்படையின் மிராஜ் 2000 (Mirage 2000 aircraft of the Indian Air Force) விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமான பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக விமானத் துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏச்.ஏ.எல், (HAL) நிறுவனத்தின் மிராஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் பெங்களூரிலுள்ள (HAL).ஏ.எல்.விமான நிலையத்தில் (HAL Airport) தரையிறங்கியபோது, தரையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததுடன், பாரியளவில் தீப்பற்றிக்கொள்ள, தீயணைக்கும் படையினர் பெரும் சிரமத்தின் பின்ன…

  15. சோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை! நில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதேராவிடம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ரொபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹொஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் ராஜஸ்தான் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேற்று ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை இடம்பெறுகிறது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சோனியாவின்-மருமகனிடம்-இர/

  16. கர்நாடகாவை போன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, நேற்று மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர்தான். இவர்கள் பதவி விலகியதின் பின்னணியில் பாஜ கட்சி இருப்பதால், அம்மாநில அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 4-வது முறைய…

    • 0 replies
    • 244 views
  17. சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ``2008 - 09-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) சந்திரயான் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே ஆண்டில்தான் சந்திரயானுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடந்த 10 -12 வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்தனர். அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சந்திரயான் 2 திட்டத்துக்கு பின்னால் நான்தான் உள்ளேன்’ என்பதை இந்திய மக்களுக்குக் காட்டி ஒரு விளம்பரத்துக்காக மட்டுமே கடந்த செப்டம்பர்…

    • 0 replies
    • 305 views
  18. மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார், நாடியா மாவட்டத்தில் காரில் சென்றார். காரை திரிணமூல் காங்கிரஸார் வழிமறித்ததால், கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவரை, செடி கொடிகளுக்குள் பிடித்து தள்ளிய திரிணமூல் காங்கிரஸார், காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதைக் கண்டு, பாதுகாப்புப் படையினர் திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அ…

    • 0 replies
    • 287 views
  19. சிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்! சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவ‌டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா ப…

  20. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள் கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனப்பான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற…

  21. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம் .. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது. தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது முல்…

  22. அருணாச்சலில் சீன படைகள் அத்துமீறல் – மீண்டும் பதற்றம்… October 16, 2018 1 Min Read காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன ஹெலிடிகொப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன என இந்தோ – திபெத் எல்லைக் காவல்துறைப் படையினர் தெரிவித்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு, லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 5 நிமிடங்களுக்கு மேல் பறந்தததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பகுதிக்குள் சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி நுழைவது இது முதல் முறை அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 5 முறை சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளன…

  23. 22 APR, 2024 | 11:41 AM பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் உள்ள கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ் (23) என்ற மாணவர் பல்கலைக்கழக வளா…

  24. உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார். ஒஸ்ட்ரியாவுக்கு (AUSTRIA) விஜயம் செய்திருந்த போது , அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார். அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அம…

  25. இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை! காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்துள்ள அதிரடி தீர்மானங்களின் காரணமாக இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தானிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையின் காரணமாக இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாகவும், தூதரக உறவை குறைத்துக் கொள்வதாகவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளாக இந்திய திரைப்படங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீக்கியது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தின் காரணமாக இந்திய திரைப்படங்கள் மீது பாகிஸ்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.