Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவின் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ! 3 பேர் கைது கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கேரளாவில் பதுங்கியிருப்ப தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில், அடுத்தடுத்து சக்தி வாய்ந்த தற்கொலைக் குண்டுகள் வெடித்தன. இதில், 253 பேர் பலியாகியுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டடோர் படுகாயம் அடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்…

  2. இந்தியாவின் கோவா கடற்கரையில் மது அருந்தினால் சிறை… January 27, 2019 இந்தியாவின் கோவா கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர். இதனால் அண்மைக் காலமாக அங்கு வேண்டத்தகாத பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுவதாக கலை வெளியிடப்பட்டுள்ளது. இது கோவா அரசுக்கும், காவற்த…

  3. 07 JAN, 2025 | 12:44 PM சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 3இ500 வீரர்கள் உள்ளனர். டிஆர்ஜி படைப் பிரிவு வீரர்கள்இ வனப்பகுதிகளில் முகாம் அமைத்து நக்சல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் …

  4. 31 JAN, 2024 | 12:20 PM சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும் இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021-ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது. …

  5. இந்தியாவின் சனத்தொகை 32 வீதத்தால் குறையும்! இந்தியாவின் மக்கள் தொகை 2048இல் 160 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த சனத்தொகை அளவு 2100 ஆவது ஆண்டாகும்போது குறைவடையக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் ஆய்வாளர்கள் வொசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மக்கள்தொகை, அவற்றின் இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்களின் மாதிரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த …

  6. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல்- பிரதமர் மோடி இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியல் கட்சிகளின் தலைமை கைமாற்றப்படுகின்றமையினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதேவேளை இக்கூட்டத்தை காங்கிரஸ், …

  7. தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: வேதாந்தா நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவின் நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். இந்து தமிழ் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசலைவிட பெரிய இடங்கள் தேர்வு நெடுவாசலில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு மீண்டும் வரவுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித…

  8. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் ரிசல்ட்! Jul 21, 2022 06:38AM IST இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது இன்று தெரியவரும். ஜூலை 18 ஆம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 21) எண்ணப்படுகின்றன. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 24 மண…

  9. இந்தியாவின் பெயரை.... மாற்றுமாறு, வலியுறுத்தும் மனு மீது இன்று விசாரணை! நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில சொல் எனவும் இது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தை நினைவு படுத்துவதுபோலவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு ஏதுவாக நாட்டின் பெயர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கை…

    • 6 replies
    • 568 views
  10. இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவால் பாதிப்பு: 'உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டு சரியும்' - ரிசர்வ் வங்கி Getty Images இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.4%-இல் இருந்து 4% ஆகக் குறைந்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.75%-இல் இருந்து 3.35% ஆகக் குறைந்துள்ளது. ரெப்போ (repo rate) விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, அந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். வங்கிகளிடம் இருந்து ஒரு நாட்டின் மத்திய வங்கி வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்…

  11. இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து : மூன்று ஊழியர்கள் கைது இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்னல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர், சிக்னல் பிரிவின் ஊழியர்களின் தவறை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி, மூவரின் செயல்கள் விபத்திற்கு வழிவகுத்தது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1338120

  12. இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 10 ஆயிரம் பேரை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு! இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் உட்பட 10 ஆயிரம் பேரை சீனா உளவுப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலக நாடுகள் சீனா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலின்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, இந்திய தலைமை நீதிபதி பாப்டே, இராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 10 ஆயிரம் முக்கிய அதிகாரிகளை சீன உளவுப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவ…

  13. இந்தியாவின் சாஞ்சி புத்த மடத்திலுள்ள பெயர்ப்பலகைகளில் சிங்களமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவின் புத்த வழிபாட்டிடங்கள், மடங்களி் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இருந்தன. தற்போது சாஞ்சி மடத்தில் முதன்முறையாக அனைத்து பெயர்ப்பலகைகளிலும் சிங்களம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் சாஞ்சி மடத்தை பார்வையிட்ட இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்தியாவின் தொல்பொருள் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனையின்படி, புதிய பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன. சிங்கள பெயர்ச்சொற்களின் திறப்பு வார இறுதியில் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள அனைத்து புத்த வழிபாட்டிடங்களின் அறிவிப்பு பலகைகளிலும் சிங்கள மொழி …

  14. 05 MAY, 2025 | 02:18 PM இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய ஆகாய கப்பலை செலுத்துவது தொடர்பான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆகாய கப்பலானது கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ. தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும். இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆகாய கப்பலை கடந்த சனிக்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் பறக்கவிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு ம…

  15. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங…

  16. இந்தியாவின் முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம் இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி. அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரான…

  17. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது அவர் எய்மஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள…

  18. 11 AUG, 2024 | 01:08 PM இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நட்வர் சிங் நேற்று (ஆக.10) சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95. முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் "ஸ்ரீ நட்வர் சிங்கின்…

  19. இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்! உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தார். ஃபாக்ஸ் ரேடியோவுக்கு அளித்த செவ்வியில் அவர், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சிக்கு நிதியளிக்க உதவும் வகையில் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்கிறது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி விரக்தியடைந்துள்ளார். இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருள…

  20. ராஜஸ்தானை விஞ்சிய டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக 126.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி செய்திகள் 29 மே 2024, 14:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் (120 பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள். இந்த வாரம்…

  21. இந்தியாவின் வலிமை அதிகரித்து வருகிறது – மோடி இந்தியாவின் வலிமை அதிகரித்து வருதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள நம் மக்களை மீட்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த பணியை விரைவுப்படுத்த நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நம் நாட…

  22. இந்தியாவின், அண்டை நாடுகள் இரண்டுமே... இந்தியாவிற்கு எதிராக உள்ளது – நிர்மலா சீதாராமன் இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டுமே இந்தியாவிற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் சென்றுள்ளார். இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா அதன் பெரும்பாலான இராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடு இன்னொரு அண்டை அண்டை நாட்டுடன் கைகோர்க்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர், அவ்விரு நாடுகளுமே இந்தியாவிற்கு எதிராக இருப்…

  23. இந்தியாவின், உணவு தானியங்கள் ஏற்றுமதியை... உலகமே எதிர்பார்த்து இருப்பதாக... பியூஷ் கோயல் தெரிவிப்பு இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இதனை பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 இலட்சம் தொன்கள்…

  24. 03 JUN, 2025 | 01:30 PM காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில்இராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென் லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சிக…

  25. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தை வாஹா எல்லையில் பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜௌதா எக்பிரஸை இன்று ஒரு மணியளவில் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வாஹா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாங்கள் சம்ஜௌதா புகையிரதசேவையை நிறுத்த தீர்மானித்துள்ளோம் என பாக்கிஸ்தானின் புகையிரசேவைகளிற்கான அமைச்சர் சேக் ரசீட் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். நான் அமைச்சராகயிருக்கும்வரை சம்ஜௌதா புகையிரதம் சேவையில் ஈடுபடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக உறவுகளை இடைநி…

    • 0 replies
    • 658 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.