Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும் – அமெரிக்கா வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபா் விளாடிமீா் புதினுக்கு ஆதரவளிப்பது, மிக மோசமான பின்விளைவுகளை உண்டாக்குவதற்கு ஆதரவு தருவதாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை செயற்படுத்தி வருவதன் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்…

    • 6 replies
    • 516 views
  2. கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்களை தூக்கி எறிந்த அமைச்சர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ரேவண்ணா உணவு பொருட்களைக் கைகளில் கொடுக்காமல், அலட்சியமாகத் தூக்கி எறிந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், சிக்கமகளூரு, தென்கனரா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பாக பொதுமக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் முத…

  3. படக்குறிப்பு, விசாகப்பட்டினம் கடற்கரையில் கடல் உள்வாங்குவதால் வெளிப்படும் பாறைகள் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரைக்குச் சென்று காளிமாதா கோவில் எதிரே அமர்ந்த போது, கடல் உள்வாங்கியது போன்று இருந்தது. அதனால்தான் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட பாறைகள், அன்று அதிகம் தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் வெளியே அதிகமாக தெரிந்த பாறைகளின் மீது கடற்கரைக்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். நல்லபாபு என்ற மீனவர் சிறிய தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. ஏன் பாறைக…

  4. ‘மக்கள் பாஜக-வை நிராகரித்து விட்டனர்’ - ஆம் ஆத்மி, கேஜ்ரிவால் வெற்றி குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது. கடும் பிரச்சாரங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முன்னிலைப் படுத்திய கேஜ்ரிவாலின் வாக்குறுதிகளுக்கும், கடந்த ஆட்சிக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன், மக்கள் பாஜகவை நிராகரித்து …

  5. ``ஆர்யா என ஏன் பேர் வெச்சோம் தெரியுமா?" - திருவனந்தபுரம் இளம் மேயரின் பெற்றோர் பெருமிதம் சிந்து ஆர்ரா.ராம்குமார் பெற்றோருடன் ஆர்யா ராஜேந்திரன் ( படம்: விகடன் / ரா.ராம்குமார் ) திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு குறுகலான சந்துக்குள் இருக்கிறது. ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதை. ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். நாட்டின் மிகவும் வயது குறைந்த மேயர், சி.பி.எம் கட்சியின் சாதாரண தொண்டனின் மகள் எனப் பல பெருமைகளோடு மதிப்புமிக்க மேய…

  6. பிரதமர் இல்லம், 80 கார்கள், 524 ஊழியர்கள் வேண்டாம்: ஆடம்பரங்களை மறுக்கும் இம்ரான் கான் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் அந்நாட்டில் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் தங்க மறுத்திவிட்டார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது. இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் …

  7. நந்திகிராமில் வேட்புமனு தாக்கலின்போது தன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக மம்தா கூறிய குற்றச்சாட்டுகளும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வெளியானதும் அவர் மீதான அனுதாபத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. மேற்கு வங்க தேர்தலில் தனது கட்சிக்கு எதிராக பாஜக மேற்கொண்ட அத்தனை அரசியல் வியூகங்களையும் அடித்து நொறுக்கி, மூன்றாவது முறையாக தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதன் மூலம், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் மம்தா பானர்ஜி தான் மாபெரும் அரசியல் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மாநிலத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல்…

  8. மக்கள் இறைச்சி உண்வதை குறைத்தோ அல்லது முற்றிலும் தவிர்ப்பது அதிகமாகி வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் நலத்திற்காக, அல்லது இயற்கையை பாதுகாக்க அல்லது விலங்கினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இறைச்சியை தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். மேலும், பால் பொருட்களைக் கூடத் தவிர்க்கும் வீகனாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன? அதிகரிக்கும் வருவாய் உலகளவில் இறைச்சி உண்பது கடந்த 50 ஆண்டுகளில் வேகமாக உயர்ந்திருப்பது தெரிய வந்…

  9. பாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரதமருக்கு கடிதம் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்தோடு பாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரமருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். வறுமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசப் போவதில்லை என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இம்ரான்கான் இக் கடிதத்தை எழுதிவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/57788

  10. படத்தின் காப்புரிமை 3DSCULPTOR அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைப் போன்றே இஸ்ரோவின் வழியும் தனிவழி. உலகின் சில முன்னணி நாடுகளைப் போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ. அதற்கான சோதனை முயற்சியில் விலங்குகளுக்கு பதிலாக மனித ரோபோக்களை அனுப்பலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 'ககன்யான் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருப்பதாக இந்திய அரசும் இஸ்ரோவும் தெளிவாக கூறியிருக்கின்றன. …

  11. யு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - யார் இவர்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக சனிக்கிழமை பதவியேற்கவுள்ள யு.யு. லலித்துடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற என்.வி. ரமணா இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி யு.யு.லலித், சனிக்கிழமை காலையில் முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ தமது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இவர் 74 நாட்கள் மட்டுமே இருப்பார். உச்ச ந…

  12. விரைவில் பாகிஸ்தான் திவாலாகும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். புதுடெல்லி கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷியா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது. அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான தட்டுப…

    • 0 replies
    • 511 views
  13. Fari and lovely பெயர் மாற்றம் - சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் Getty Images யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர். `வெள்ளையாக இருப்பதே அழகு` என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்றத்தன்மையுடன் உணருவதற்கும் இந்த ஃபேர் அண்ட லவ்லி க்ரீம் துணை புரிகிறது என யூனிலீவர் மற்றும் அதன் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீது ஏற்கனவே பலர் கடுமையான விமர்சனங்…

  14. நாடாளுமன்ற தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் போட்டி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றார். இந்நிலையில், இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, மோடியை எதிர்த்து விவசாயிகள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரத…

  15. பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு! இதுவரை வெளியான 4 முக்கிய கருத்துக் கணிப்புகளின் சராசரியின்படி பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் ஒரு இடத்தைக் கூடுதலாகப் பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டிப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரையில் வெளியானவற்றில் சில முக்கியக் கருத்துக் கணிப்புகளாக பார்க்கப்பட்ட சி வோட்டர், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு, சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் டைம்ஸ் நவ்-விம்ஆர் இணைந்து நடத்திய கருத்த…

  16. கேரள வெள்ளம் - வீட்டுக்குள் புகுந்த முதலையால் மக்கள் அதிர்ச்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'கேரள வெள்ளம் - வீட்டுக்குள் புகுந்த முதலை' படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புப் படம் ஆலப்புழை அருகே, வீட்டுக்குள் முதலை புகுந்ததால் பரபரப்ப…

  17. உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 வயது செவிலியர் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பணிக்குச் சென்றிருக்கிறார் அந்தப் பெண் செவிலியர். அன்று இரவு, மருத்துவமனையின் மற்றொரு செவிலியர் மெஹ்னாஸ், டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி, அந்தச் செவிலியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தச் செவியிலியர் மறுத்ததால், மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர், மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக அந்தச் செவிலியரை இழுத்துச் சென்று அடைத்து வெளியிலிருந்து பூட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டி பாலியல…

  18. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக…

  19. டி.ராஜா: பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்ச…

    • 0 replies
    • 509 views
  20. இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 11:21 AM இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த …

  21. கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங…

  22. ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது! ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன. பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பு நாடு தலைமையேற்கும். இதன்படி ஒகஸ்ட் மாதத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்தப் பதவிகாலத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெ…

  23. அந்தமானில், உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு! அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி அங்குள்ள ராஸ் தீவு இனிமேல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என அறிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்தமான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தடுப்புச்சுவர் திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானின் போர்ட் பிளைர் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள காலா பானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், சுபாஷ் சந்திரபோஸ் நினைவைக் க…

  24. கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து இந்தியாவில் புதிதாக பரவும் வைரஸ்! கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் தற்போது புதியவகை வைரஸ் தொற்றும் இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி கேட் கியூ வைரஸ் (cat que virus) என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 இரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேரின் மாதிரியில் இந்த வைரசுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் சீனா மற்றும் வியட்நாமில் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் சமூக பரவல் ஏற்படலாம் எனக் க…

  25. ஆகாஷ் ஏவுகணை, பரிசோதனை வெற்றி! ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. தரையில் இருந்து ஆளில்லா விமானங்களை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒடிசாவில் சந்திப்பூரில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆளில்லாத ட்ரோனை குறித்த ஏவுகணை தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது. https://athavannews.com/2021/1241618

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.