அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3315 topics in this forum
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்திருக்கின்றது. அவர்களில் 43 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று டெல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒன்பது பேர் 50 முதல் 60 வயது நிரம்பியவர்கள் என்றும், பத்து பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 31 ஆயிரத்து 878 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இரு வார…
-
- 0 replies
- 312 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது. குழுவின் பரி…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் 'ஒரே நாடு ஒரே உரம்' என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர மூட்டைகளை 'பாரத்' என்ற பெயரில்தான் விற்பனை செய்யவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு உர நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான விவசாயிகளும் இந்த திட்டத்தால் தங்களுக்கு பயனில்லை என்கிறார்கள். ஒரே நாடு ஒரே…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2023, 07:12 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது, ஆனால் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து அரசு …
-
- 2 replies
- 281 views
- 1 follower
-
-
ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் 3,14,835 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஆரம்பமானதிலிருந்து இந்தியா ஒரே நாளில் பதிவு செய்த மிக உயர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். மேலும் இந்தியாவில் மகாராஷ்டிராவில் 568 பேரும், டெல்லியில் 249 பேருமாக ஒரே நாளில் 2,104 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழ…
-
- 16 replies
- 1.1k views
-
-
ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி 6ஆவது முறையாக இந்தியா சாதனை! இந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள. இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்திய சாதனையை எட்டியது. அதன்பின்னர், செப்டம்பர் 27ஆம் திகதி வரை இதேபோல் 5 முறை இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் திகதி ஒரே நாளில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்தது. இந்த நிலையில், 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இ…
-
- 0 replies
- 169 views
-
-
ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா புதிய சாதனை. வானில் 25 கி.மீ. தூரம் வரை சென்று இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் ஏவுகணை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை அமைப்பு நேற்று விமானப்படை அதிகாரிகளால் சோதித்து பார்க்கப்பட்டது. இதன் மூலம் ஒரே ஏவுதல் அலகில் இருந்து 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. https://athavannews.com/2023/1363501
-
- 0 replies
- 217 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி! 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களையும் மோடி பாராட்டியுள்ளார். ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள ப…
-
-
- 28 replies
- 2.1k views
-
-
ஒலியை விட வேகமாகச் செல்லும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி! ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை (BrahMos Missle) சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) ருவிற்றரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரஷ்யாவுடன்…
-
- 3 replies
- 954 views
-
-
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின…
-
- 0 replies
- 335 views
-
-
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை …
-
- 0 replies
- 202 views
-
-
ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்! மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் யாகூப் ஹபீபுதீன் டூசி, ஷம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளர் எ…
-
- 0 replies
- 122 views
-
-
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என்று இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி ஏற்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாக்களுக்கு மும்பையில் இருக்கும் சென்சார் குழு சான்றளிக்காமல், அதை பொதுவெளியில் திரையிட முடியாது. சென்சார் குழுவுக்கு வட்டார அலுவலகங்களும் இருக்க…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்! மின்னம்பலம் குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி என்ற பெயரில் குழந்தைகள் மீது இந்திய பெற்றோர்கள் 30 வகையான உடல் மற்றும் வாய்மொழி அவதூறுகளை பயன்படுத்துவதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'பெற்றோருக்குரிய விஷயங்கள்: பெற்றோரின் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல்' என்ற ஆய்வு யுனிசெஃப் மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் மூன்று மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. இதன் மூலம், தண்டனை என்பது குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற…
-
- 0 replies
- 345 views
-
-
கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது. இந்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் 21ம் திகதி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில்தான் சிக்கி உள்ளார். சிதம்பரம் தரப்பில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சி.பி.ஐ கேட்டபடி அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.சி.பி.ஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார் என்று எதி…
-
- 0 replies
- 260 views
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 04:37 PM பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது அரசியல் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை நாங்கள் உதவ முன்வந்தோம். வெளிப்படையாக சொல்வதென்றால் யாரும் உதவ முன்வராதபோது நாங்கள் உதவமுன்வந்தோம் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இதனை செய்தோம் என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தக்க தருணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் உதவினோம் 4.5 மி…
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
ஓசூர்: ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து இன்றி, ஓசூர் பகுதியில் விளையும் குடைமிளகாயை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டுகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மலர்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குடை மிளகாயை விவசாயிகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல், குப்பைகளில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு விவசாயி 40 முதல் 50 டன் அளவிலான குடை மிளகாய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகிறார். ஓசூர் பகுதிகளில் சாகு…
-
- 0 replies
- 267 views
-
-
ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். பதிவு: ஜூன் 19, 2020 13:42 PM லக்னோ உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார். நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர். இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு …
-
- 0 replies
- 459 views
-
-
ஓடும் ரயிலில் பா.ஜ.க.வின் முன்னாள் துணை தலைவர் சுட்டுக்கொலை குஜராத்தில் அந்த மாநில பா.ஜ.க. முன்னாள் துணை தலைவர் ஜெயந்தி பனுஷாலி ஓடும் ரயிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், சாய்ஜி நகரிலுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பில், புஜியில் இருந்து அகமதாபாத் நோக்கி நேற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது கட்டாரியா மற்றும் சுர்பாரி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பனுசாலி பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டிக்குள் திடீரென உள்நுழைந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள், அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இல…
-
- 0 replies
- 929 views
-
-
ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை …
-
- 3 replies
- 685 views
-
-
ஓணம் பண்டிகை: களையிழந்து காணப்படும் கேரளா கேரளா மக்களால் சிறப்பிக்கப்படும் ஓணம் பண்டிகை நாளான இன்று, அம்மாநிலம் களையிழந்து காணப்படுகிறது. கேரளாவில் கடந்த 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் கொட்டித்தீர்த்த மழை, அம்மாநில மக்களின் வாழ்வை சீழ்குழைத்துள்ளது. இதனால் இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையின்றி கேரளா வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த காலங்களில் ஓணம் பண்டிகை என்றால் கேரளாவே களை கட்டி பிரகாசிக்கும். குறிப்பாக கேரளாவின் பிரசித்திபெற்ற ஆனச்சல் ஐயப்பன் ஆலயம் மற்றும் பத்மநாபபுரம் மாளிகை என்பனவே ஓணம் நாளில் பிரகாசிக்கும் இடங்கள். ஆனால் இந்த ஆண்டு குறித்த இரண்டு இடங்களுமே வெறிச்சோடி காணப்படுகின்றன. பலமாநிலங்களை…
-
- 2 replies
- 790 views
-
-
ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர் டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்துத் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்களைப் பிரித்த விவசாயிகள், தங்கள் பொருட்களை டிரக்டர்களில் ஏற்றியதுடன், புறப்படுவதற்கு முன்னர் பஜனைப் பாடல்களைப் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1255945
-
- 1 reply
- 348 views
-
-
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல: சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு #LGBTRights பகிர்க இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 150 ஆண்டுகளுக்கும் மே…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈ - பைக்: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களும் சிக்கல்களும் க. சுபகுணம் பிபிசி தமிழ் 23 அக்டோபர் 2022, 02:50 GMT பட மூலாதாரம்,OLA ELECTRIC/TWITTER இந்தியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைக்குள் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது. தற்போது, அக்டோபர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருசக்கர வாகன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை, 2021ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்த காணொளி வெளியானது. அதைத் தொடர்ந…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு. நடிகையும் அரசியல் வாதியுமான கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் டெல்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியான குல்வீந்தர் கவுர் திடீரெ கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து அவருடைய உதவியாளர்கள் …
-
- 4 replies
- 441 views
- 1 follower
-