Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்கா பயணமாகிறார்... மோடி! ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் குவாட் கூட்டமைப்பில் பேசும் அவர், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். அதேநேரம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசுவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240545

  2. ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது? அனந்த் பிரகாஷ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA படக்குறிப்பு, காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது சீடர் ஆனந்த் கிரி மீது உத்தரபிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அதில், கடந்த சில காலமாக நரேந்திர கிரி, அவரது சீடர் ஆனந்த் கிரியால் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்ததாகவும்…

  3. இந்தியாவில்... கருக்கலைப்புக்கு, அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு! பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய நிலையில், கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர்கள் கருகலைப்புக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு ஜுலை மாதத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கும் அனு…

  4. ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து…

  5. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை! தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தொலைப்பேசியிலோ அல்லது பேப்பர் வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவை பொதுமக்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர். https://athavannews.com/2021/1240201

  6. சரண்ஜித் சன்னி: பஞ்சாப் முதல்வராகப் போகும் இவரது பின்னணி என்ன? 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,TS_SINGH DEO படக்குறிப்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வாகியிருக்கும் சரண்ஜித் சன்னி (49) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கவிருக்கிறார். அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் ர…

  7. தந்த வேட்டைக்கு பலியாகும் ஆசிய யானைகள் - சர்வதேச நெட்வொர்க் எப்படி இயங்குகிறது? #WildlifeTrafficking ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "முப்பது ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். முதல்முறையாக என்னைக் கைது செய்துவிட்டீர்கள்" என நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 70 வயதான நாகராஜன் வாக்குமூலம் கொடுத்தபோது வனத்துறை அதிகாரிகள் உறைந்து போனார்கள். இத்தனைக்கும் அவர் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். கோத்தகிரியிலும் தென்காசியிலும் அவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்த சம்பவம் இது. தந்தத்தை தந்தமாகவே கொண்டு சென்றால் சிக்கல் என்பதால் க…

  8. தீவிரவாதிகளின் மீது... தாக்குதல் நடத்த, இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா! ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. குறித்த தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவின் விமானப்படை தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஆப்கான் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தலிபான்களுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வான்வழி தாக்குதல…

  9. கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது? - இந்திய அரசை அதிரவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GWENGOAT / GETTY IMAGES இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் மூன்றாம் பாகம் இது. அரசு விரும்பாத கருத்தைச் சொல்லும் ஊடகங்களைத் தடைசெய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தால் 1950ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று, அப்படிச் செய்ய முடியாது…

  10. சுவிஸ் வங்கியில் உள்ள... இந்தியர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் உள்ளடங்கிய மூன்றாவது பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த தொகுப்பில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய விபரங்களை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்வேறு சொத்துக்கள், வரி ஏய்ப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ath…

  11. ஏழு மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு! சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுவரை 74.32 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று மட்டும் 50 இலட்சத்து 25 ஆயிரத்து 159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239096

  12. இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் - கொண்டாடுவதில் அவரசம் காட்டப்படுகிறதா? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று புதிய பெண் நீதிபதிகள். உடன் ஏற்கெனவே நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி. இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி ஆகலாம் என குறிப்பிட்டு செய்திகள் வெளியாயின. சிலர் இதை "ஒரு வரலாற…

  13. யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டால் அரசியல் சர்ச்சை: ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’ 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர் (இன்று 13.09.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான். கடவுள் ராமர் மீது நம்பிக்கையுள்ளவர்களை அவமதித்ததும் அந்தக் கட்சிதான் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வள…

  14. ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…

  15. வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சுஹைல் ஷாஹீன், தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவில் உள்ள சுஹைல் ஷாஹீல் ஜூம் செயலி மூலம் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது, கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோதே, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை …

  16. '1965' போர்: சிறப்பு ஆபரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி? ரெஹான் ஃபைசல் பிபிசி செய்தியாளர், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFENCE.PK படக்குறிப்பு, விமானத்திலிருந்து குதிக்கும் வீரர்கள் 1965 செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தானின் பி -57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, மூன்று சி - 130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின. ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர். இரவ…

  17. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? - நீதித்துறை தலையீடும் வழக்குகளும் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை …

  18. ஃபிரோஸ் காந்தி நினைவு தினம்: இந்திரா காந்தியின் விதவை கோலத்துக்கு என்ன காரணம்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEHRU MEMORIAL MUSEUM AND LIBRARY அது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி. இந்திரா காந்தி அப்போதுதான் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி பாலம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார். அவரிடம் உடனடியாக ஃபிரோஸ் காந்திக்கு மற்றொரு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஃபிரோஸ் சேர்க்கப்பட்டிருந்த வெல்லிங்டன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஃபிரோஸின் உதவியாளர் உஷா பகத் இருந்தார். "இரவு முழுவதும் …

  19. தலிபான் - பாகிஸ்தான் - சீனா: மோடி அவசர ஆலோசனை! மின்னம்பலம்2021-09-07 ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் குறித்து பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் நேற்று (செப்டம்பர் 6) மாலை ஆலோசனை நடத்தினார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அப்ஷ்ரப் கனி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று அமெரிக்காவின் கடைசி விமானமும் ஆப்கன் மண்ணில் இருந்து பறந்த நிலையில், தலிபான்கள் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் வடகிழக்கு மாகாணமான பஞ்ச்ஷீர் பகுதியில் தலிபான்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அங்குள்ள தலிபான் எதிர்ப்புப் படையினர் சுமார் 600 தலிபான…

  20. விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் எனப்படும் விபிஎன் சேவைகள் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. உள்துறைக்கான இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, சமீபத்தில் விபிஎன் சேவைகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. வி.பி.என் சேவை என்றால் என்ன, அதனால் என்ன பயன், இந்திய அரசு அதை ஏன் தடை செய்ய விரும்புகிறது என சில தகவல்களை இங்கே பார்ப்போம். வி.பி.என் சேவை என்றால் என்ன? விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் என்பது ஒரு பொது இணையதள இணைப்புக்குள் இருக்கும் தனிப்பட்ட வலையமைப்பு ஆகும். இணையத்துக்குள் ஒரு சிறிய இணைய அமைப்பு போன்றது இது. இந்த தனி அமைப்புக்குள் இருக்கும் அனைத்தும் மறையாக்கம் செய்யப்படும். வேறு ச…

  21. காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்! காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திய காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியலில் இருந்து விலகிய கிலானி, ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து இந்தியாவுடனான அனைத்து உரையாடலையும் அவர் நீண்ட காலமாக நிராகரித்து வந்தார். காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் 370 ஆவது பிரிவு, 2019 ஓகஸ்ட் 5 ஆம் திகதி இரத்து செய்யப்பட்ட பின்னர் கிலானி உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது மரணம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், ஸ்…

  22. உத்தரப் பிரதேசத்தில்... மர்மக் காய்ச்சலால், 33 குழந்தைகள் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட சிகிச்சை நிலையங்கள் குறித்த மர்ம காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதே மருத்துவமனையில் ஏறக்குறைய 30 குழந்தைகள் இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021…

  23. பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - மருத்துவமனையில் இறந்தார் சுரை நியாஜி பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காவல் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது. இது…

  24. இந்தியாவை... எச்சரிக்கும், தலிபான்கள்! ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது என தலிபான்களின் முக்கிய தலைவரான Shahabuddin Dilwar எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நிரூபர் ஒருவரிடம் பேசிய அவர் தலிபான்கள் அரசாங்க விவகாரங்களை சுமூகமாக நடத்த முடியும் என்பதை இந்தியா விரைவில் அறிந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது எனத் தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானின் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தமைக்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தலிபான்கள் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவை விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்ப…

  25. இந்தியாவிற்குள்... பயங்கரவாதம் ஊடுருவினால், ஒடுக்கப்படும்: முப்படை தளபதி ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு மாதங்களாகும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக குறுகிய காலத்துக்குள் அவர்கள் நாட்டை கைப்பற்றியமை ஆச்சரியமளிப்பதாகவும் கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக் கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய முப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.