அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3316 topics in this forum
-
இந்து பிரபாகரன் உருவானால் ரூ1 கோடி-மன்மோகன்சிங்கை கொலை செய்திருப்பேன்.. சாமியார்கள் பேச்சால் சர்ச்சை. ஹரித்வார்: இந்து மதத்தைக் காக்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போல ஒரு இளைஞர் உருவானால் அவருக்கு ரூ1 கோடி பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார் இந்துத்துவ சாமியார் யதி நர்சிங் ஆனந்த். மேலும் பீகாரை சேர்ந்த சாமியார் தர்மதாஸ் மகாராஜ், நாடாளுமன்றத்திலேயே நாதுராம் கோட்சே போல முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பேன் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை தர்ம சன்சத் என்ற் பெயரில் இந்து சாமியார்களின் மாநாடு நடைபெற்றது. த…
-
- 1 reply
- 361 views
-
-
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்! கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/மூக்கு-வழியே-செலுத்தும்/
-
- 0 replies
- 361 views
-
-
கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்வு – சீரம் நிறுவனம் கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மே முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ரூ.400-க்கும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600-க்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதம் அரசுக்கும் 50 சதவீதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.…
-
- 0 replies
- 361 views
-
-
பங்களாதேஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து – 69 பேர் பலி – பலர் காயம் February 21, 2019 பங்களாதேஸின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு இரசாயன சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறுகிய வீதிகளினூடாக தப்பிக்க முடியாமல் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ள நிலையில் , இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 361 views
-
-
காதலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான பயங்கரவாத சட்டமே “லவ் ஜிகாத்” அருண் நெடுஞ்செழியன் December 26, 2020 இந்தியாவிலே உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ள லவ் ஜிகாத் சட்டமானது, இயற்கையான காதல் திருமணத்தை தடை செய்வதன் வழியே இயற்கையான மானுட உணர்வுக்கும், காதல் வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்துகிறது. அங்கே போலீசாருக்கு தினசரி யார்,யாரை காதலிக்கிறார்கள் என தேடியலைந்து காதலர்களை கைவிலங்கிட்டு பிடிப்பது தான் பிரதான வேலையாகிவிட்டது! ஜனநாயக குடியரசு ஆட்சியில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமையை இந்த சட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது உ.பிஅரசு. …
-
- 0 replies
- 361 views
-
-
இந்தியர்கள் மீது தாக்குதல் நேபாளத்தின் துப்பாக்கிகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும் சிவசேனா ஆவேசம் மும்பை, இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதம் பீகார் மாநிலம் சீதாமரி அருகே எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, நேபாள ஆயுத போலீஸ் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் இந்தியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நேபாளத்தின் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிவசேனாவின் அதிகார…
-
- 0 replies
- 361 views
-
-
நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் February 28, 2019 நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் அந்தமான் நிகோபார் தீவுகளில் 6 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/114719/
-
- 0 replies
- 360 views
-
-
ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன? இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா? அப்படியானால் சராசரியாக எந்தனை குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்? அப்படி மீட்கப்படும் குழந்தைகளில் எத்தனைபேர் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. உண்மை நிலைவரங்களின் படி கடத்தப்படுகின்ற குழந்தைகளில…
-
- 1 reply
- 360 views
-
-
காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் - தேசப் பிரிவினை முதல் இப்போது வரை 28 பிப்ரவரி 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாஷ்மீரில் உயரமான மலைகளும் ஆழமான பள்ளதாக்குகளும் காணப்படுகின்றன. காலவரிசையின்படி முக்கிய நிகழ்வுகள் 1947 - பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, இந்துக்கள் பெரும்பான்மையாக வ…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
ரஃபேல் விவகாரம் - ’ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியா பரிந்துரைத்தது’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: ரஃபேல் விவகாரம் - இந்தியாவின் பரிந்துரை ரிலையன்ஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரஃபேல் ஜெட் ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி? Bharati May 31, 2020 தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி?2020-05-31T05:36:25+00:00Breaking news, அரசியல் களம் நிலாந்தன் சுமந்திரனின் பேட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம்” என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார். எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார…
-
- 0 replies
- 360 views
-
-
திருப்பதி கோயிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையைவிட ரூ.11.56 கோடி அதிகம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.76.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதத்தில் சுமார் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். லட்டு பிரசாதம் 97.87 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 63.49 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 9.82 லட்சம் ப…
-
- 1 reply
- 360 views
-
-
எல்லைப் பிரச்சினை: இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்துள்ளன – அமித்ஷா ‘தனது எல்லைக்குள் எந்த ஊடுருவலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்பதை உலக நாடுகள் உணா்ந்துள்ளன’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒடிஸாவில் உள்ள பா.ஜ.க தொண்டா்கள் மற்றும் பொதுமக்களிடையே நேற்று (திங்கள்கிழமை) இணையவழி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவினால் தக்க தண்டனை கிடைக்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தனது எல்லைக்குள் எந்த ஊடுருவலையும் பொறுத்துக் கொள்ளாது என்பதை உலக நாடுகள் உணா்ந்து கொண்டுள்ளன. தங்களது நாட்டு இராணு…
-
- 1 reply
- 360 views
-
-
சிபிஐ இயக்குனரை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு – உச்ச நீதிமன்றம் January 8, 2019 சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்த வழக்கு விசாரணையை கடந்த டிசம்பர் 6ம் திகதி நிறைவு செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சுற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து ஏற்பபட்ட அதிகார மோதல்கள் காரணமாக மத்திய அரசு இருவரையு…
-
- 0 replies
- 359 views
-
-
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டு கால பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆற்றிய வெற்றி உரையில், “டெல்லியை இன்னும் சிறப்பாக்க மத்திய அரசு உதவ வேண்டும். பிரதமர் மோடியின் ஆசிகள் வேண்டும்” என்று கோரியுள்ளார். வெற்றி நிலவரம்: கட்சி வார்டுகள் ஆம் ஆத்மி 134 பாஜக 104 காங்கிரஸ் 9 சுயேச்சை 2 மொத்தம் 2…
-
- 0 replies
- 359 views
-
-
படத்தின் காப்புரிமை DASSAULT RAFALE பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை பிரான்சின் டஸ்ஸோ நி…
-
- 0 replies
- 359 views
-
-
திரையரங்குகளில் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி! திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 வீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திரையரங்குகளில் முகக் கவசம் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும், இணையம் ஊடான முன்பதிவுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஓ.ரி.ரி. தளத்தில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது அரசுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் பிரகாஷ் ஜவ…
-
- 1 reply
- 359 views
-
-
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்று சமூகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களென்றும் பாராமல் அவர்கள் மீது கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடித்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், தவறுதலாக நடந்துவிட்டது, எந்திரக்கோளாறால் அவர்கள் மீது குழாய் பழுதடைந்து மருந்து தெளிக்கப்பட்டது என்று தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்…
-
- 1 reply
- 359 views
-
-
கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறைவடையும் என்கிறது ஆய்வு! இந்தியாவில் கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறைவடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மே 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தற்போது கொரோனா பரவும் வேகமும் சற்று குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இருமடங்காக ஆவதற்கு, முன்பு 3.4 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது அது 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மே 22ஆம் திகதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 15ம்…
-
- 0 replies
- 359 views
-
-
மிஸோக்களுடன் சில நாள்கள்… ராமச்சந்திர குஹா மிஸோரம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சில நாள்கள் இருந்தேன். அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறைகூட அங்கு நேரில் சென்றதில்லை. அந்த வாய்ப்பும் கிடைத்தது. முதலில் விமானம் மூலம் அசாம் தலைநகரம் குவாஹாட்டியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பிரமிக்க வைக்கும், பிரம்மபுத்திரா நதியின் அழகை ரசித்தேன். அங்குள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களிடையே மகாத்மா காந்திஜியின் போதனைகள் குறித்துப் பேசினேன். அடுத்து அய்ஜால் செல்லும் விமானத்தில் ஏறியதும் ஓர இருக்கையை விரும்பிக் கேட்டு வாங்கி அமர்ந்தேன். விமானம் உய…
-
- 2 replies
- 359 views
-
-
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் December 25, 2018 Kiev, Ukraine – October 17, 2012 – A logotype collection of well-known social media brand’s printed on paper. Include Facebook, YouTube, Twitter, Google Plus, Instagram, Vimeo, Flickr, Myspace, Tumblr, Livejournal, Foursquare and more other logos. சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய இந்திய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு திட்டமிட்டுள்ளது. பசுவதை தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், ஆங்காங்கே இடம்பெற்ற வன்முறை சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக…
-
- 0 replies
- 359 views
-
-
மீண்டும் தாக்குதல் நடத்துவோம்:ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு Published by R. Kalaichelvan on 2019-02-21 11:44:36 புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் குறித்த அமைப்பினால் இந்திய துணை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50396
-
- 0 replies
- 358 views
-
-
நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை! இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் 32 மீற்றர் ஆழத்தில் குறித்த மெட்ரோ ரெயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372463
-
- 0 replies
- 358 views
-
-
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன் October 9, 2025 0 இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது. இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும். தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி …
-
-
- 5 replies
- 358 views
-
-
இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு! இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை எழுந்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார். தலிபான்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2021/1235248
-
- 0 replies
- 358 views
-