அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3313 topics in this forum
-
சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில், பொருட்கள் சேவை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்ற MEMU (Mainline Electric Multiple Unit) பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த பொருட்கள் சேவை ரயிலுடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன, காயமடைந்தவர்கள் பிலாஸ்பூரில் உள்ள…
-
- 0 replies
- 108 views
-
-
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத…
-
- 0 replies
- 116 views
-
-
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலின் பின்னர் காணாமல்போன 18 இந்திய பாதுகாப்பு படையினர் சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் சனிக்கிழமை நடைபெற்ற மோதலையடுத்து குறைந்தது 18 பாதுகாப்பு படையினரை காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்டுகளுடனான மோதலின் போது ஐந்து பாதுகாப்பு வீரர்கள் இறந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று சத்தீஸ்கர் பொலிஸார் நேற்று தெரிவித்தனர். அதேநேரம் இந்த மோதலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் சடலமும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது. இது குறித்து சத்தீஸ்கர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் டி.எம். அவஸ்தி கூறுகையில், சில பாதுகாப்புப் பணியாளர்கள் காணவில்லை, தேடுதல் ந…
-
- 6 replies
- 648 views
-
-
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் 70 சதவீதமான மக்கள் வாக்களிப்பு சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தலில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் நேற்றைய தினத்திலும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் திகதியும் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக துணை இராணுவத்தினர், பொலிஸ…
-
- 0 replies
- 284 views
-
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: 7 நக்சலைட்டுகளை உயிரிழப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகளை படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியிலுள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று (சனிக்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் தப்பியோட முயன்றபோது, அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்…
-
- 0 replies
- 305 views
-
-
படத்தின் காப்புரிமை ANI சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி மீது குறிவைத்து நடந்த தாக்குதலில் ஐந்து சிஆர்பிஎஃப் படையினர் பலியாகி உள்ளனர். தண்டேவாடா-சுக்மா சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகுல்னார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் 36 மணி நேரத்தில் நடக்க இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 384 views
-
-
சத்ரபதி சிவாஜி: ஔரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியவர், முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DR. KAMAL GOKHALE படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜி ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. …
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Isro பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் - 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுன்ட் - டவுன் நிறுத்தப்பட்டது. நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவப்படவிருந்தது. …
-
- 2 replies
- 874 views
-
-
சந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கேள்வி:விக்ரம் லேண்டருடனான தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டிருக்கும்? என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்? பதில்: முழுமையான தகவல்களை ஆராய்ந்த பிறகுதான் என்ன நடந்திருக்கும் என்பதை முழுமையாகச் சொல்ல முடியும். முதல்கட்…
-
- 2 replies
- 705 views
-
-
சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோ…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள். அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி பேரணி நடத்தியுள்ளனர் மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இந்த பேரணி நடைபெற்றது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெர…
-
- 0 replies
- 414 views
-
-
பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவதை தடுப்பதற்காக சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், புதன்கிழமை ஐயப்பன் கோயில் நடை திறப்பதால், பெண்கள் யாரும் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தப் பெண்கள் முகாம் அமைத்து அங்கு தங்கி போராட்டம் நடத்துகின்றனர். வாகனங்களை சோதிக்கின்றனர். …
-
- 0 replies
- 882 views
-
-
சபரிமலை உள்ளிட்ட அனைத்து சமய விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் – உச்சநீதிமன்றம்! சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது உள்பட அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சபரிமலை விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறு ஆய்வு மனுக்களை மட்டுமே விசாரிக்க முடியும். கேள்விகளை விசாரிக்க முடியாது என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வழக்கறிஞர்களின் வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி, சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரம் மட்டுமின்றி…
-
- 0 replies
- 291 views
-
-
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது – பெண்களுக்கான பாதுகாப்பு நீக்கம் சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழக்கப்படாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், முன்னைய தீர்ப்புக்கு தடை எதுவும்…
-
- 1 reply
- 304 views
-
-
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: மருத்துவ சான்றிதழ்கள் அவசியம் ஒவ்வொரு வருடமும், நவம்பர் மாதம் ஆரம்பித்து ஜனவரி மாதம் வரை, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் பக்கதர்கள் தரிசனத்திற்காக விடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நடை திறக்கப்பட்டுள்ளது. பம்பை, நிலக்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், வழைமையை போலல்லாது, இவ்வருடம் 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்ப…
-
- 1 reply
- 583 views
-
-
சபரிமலை ஐயப்பன் கோவில் – பெண்களின் உரிமைக்காக, மனித சங்கிலிப் போராட்டம்… December 31, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெண்கள் சுவர் எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நடிகை சுகாசினி, அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோ…
-
- 0 replies
- 876 views
-
-
படத்தின் காப்புரிமை A S Satheesh Image caption 20 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த திருநங்கைகள் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தொடர்ந்து கசப்பான சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றம் பெண் பக்தர்களை சபரிமலைக்குள் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், சில கும்பல்களால் திரும்ப திரும்ப பெண் பக்தர்கள் தடுக்கப்பட்டனர். நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள் அன…
-
- 0 replies
- 402 views
-
-
சபரிமலை கோவில் திருவிழா இந்த ஆண்டு ஒத்தி வைப்பு; கேரள அரசு முடிவு திருவனந்தபுரம், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. எனினும், கோவில்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவின் தளர்வுகளில் ஒரு பகுதியாக, ஜூன் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், வருகிற 14ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையு…
-
- 0 replies
- 364 views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சிவன் வழிபாடு ஒன்றுதான். ஆனால், ஒரு கோயிலில் சிவனுக்குப் பெயர் அண்ணாமலையார் என்றால் மற்றொரு ஊரில் பெயர் நடராஜர். …
-
- 0 replies
- 377 views
-
-
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஆலய நிர்வாகம் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலின் ‘நடை’ எதிர்வரும் 17ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலைய…
-
- 0 replies
- 288 views
-
-
சபரிமலை பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு December 1, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தினதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் திகதிp வரை நீடித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். http://globaltamilnews.net/2018/10…
-
- 0 replies
- 874 views
-
-
சபரிமலை போராட்டத்தில் கலவரம்.. கல் வீசி தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி.. போலீஸ் குவிப்பு! சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த நபர் பலியாகி உள்ளார். கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடக்கிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இன்று போராடி வருகிறார்கள். நேற்று மாலையே இதற்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டது.நேற்று பாஜக சார்பாக கேரளா தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடந்தது. பாஜக மகளிரணி சார்பாக இந்த பெரிய போராட்டம் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வ…
-
- 1 reply
- 312 views
-
-
சபரிமலை விவகாரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு! சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இடதுசாரிக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், வழிபாட…
-
- 0 replies
- 382 views
-
-
சபரிமலை விவகாரம் – கைது நடவடிக்கை- கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : October 27, 2018 1 Min Read சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதன்போது 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கோவில் வளாகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையினால் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர…
-
- 0 replies
- 306 views
-
-
படத்தின் காப்புரிமை REHANA FATHIMA Image caption ரெஹானா ஃபாத்திமா சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அக்டோபரி…
-
- 1 reply
- 1.1k views
-