அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை இராணுவ படையினரை திரும்பப் பெற்றது மத்திய அரசு! ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் 10 ஆயிரம் துணை இராணுவப் படையினரை உடனடியாக திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்யும் வகையில் இடம்பெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை மீளப் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 334 views
-
-
கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட…
-
- 25 replies
- 3k views
-
-
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு – ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், “முடக்கம் காரணமாக ஏப்ரல் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 இலட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 இலட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 இலட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 இலட்சம் பேருக்கும் ஜூலையில் 50 இலட்சம் பேருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 309 views
-
-
மத்திய பிரதேச மக்களுக்கு மட்டுமே மாநில அரசுப் பணிகள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள சிவராஜ் செளஹான், "மத்திய பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேச அரசு பணிகள் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளோம். மத்திய பிரதேச வளம், மத்திய பிரதேச குழந்தைகளுக்கே," என அவர் கூறி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை அல்லது நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75%, உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட…
-
- 4 replies
- 540 views
-
-
இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில விஷயங்களை அவர் பார்த்தார். அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிரம்பியிருந்தது. தற்போது ரூப்குந்த் ஏரி அல்லது "எலும்புகூடு ஏரி" என்று அது கூறப்படுகிறது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜப்பானிய ராணுவ வீரர்களின் எலும்பு கூடுகளாக அவை இருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சினர். ஆனால் அந்த எலும்புக்கூடுகள் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை. …
-
- 0 replies
- 369 views
-
-
இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம். விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம் இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை. கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது. கொரோனாவுக…
-
- 3 replies
- 455 views
-
-
https://www.youtube.com/watch?v=-2b1sXPncoM
-
- 1 reply
- 768 views
-
-
கோழிக்கோடு விமான விபத்துக்கு, விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது. விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் இறுதிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் புதிய திருப்பமாக, விமானி தன்னிச்சையாக விமான நிலையத்தின் மேற்குப்புறம் உள்ள 10 ஆம் எண் ஓடுதளத்தை தவறாகத் தேர்ந்தெடுத்ததுதான் விபத்துக்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குப் பக்கம் உள்ள 28 ஆம…
-
- 0 replies
- 230 views
-
-
2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 743 பேரில் 402 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 338 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏனைய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோயிலில் 2 இலட்சத்து 38ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் 16 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்…
-
- 0 replies
- 367 views
-
-
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து: மீட்புப்பணிகள் தீவிரம் கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த சுமார் 200 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசரஊர்தி வாகனங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் இன்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம…
-
- 7 replies
- 1.5k views
-
-
குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து அகமதபாத், குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய அளவுக்கான புகை வெளியேறியதை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். புகை தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. சேத விவரம் குறித்த எந்த தகவலும் உடனுக்குடன் வெளியாகவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு காரணமாக பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியத…
-
- 0 replies
- 264 views
-
-
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானப் பணி இன்று ஆரம்பம்! August 8, 2020 இந்தியா: அயோத்தியில் இராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணியானது மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோயில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/60866
-
- 0 replies
- 377 views
-
-
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பதிவு: ஆகஸ்ட் 06, 2020 09:32 AM அகமதாபாத், குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக…
-
- 0 replies
- 305 views
-
-
நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ் மற்றும் மோதி: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை 5 ஆகஸ்ட் 2020 KEYSTONE-FRANCE 1933ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு வயதாக வயதாக, மதத்துடனான எனது நெருக்கம் குறைந்துவிட்டது" என்று எழுதினார். 1936 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையில், "ஒழுங்கமைக்கப்பட்ட மதம் எனக்கு எப்போதுமே அச்ச உணர்வையே கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இது எப்போதும் மூடநம்பிக்கை, பழமைவாதம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றைக் குறிக்கிறது.அதில் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் இடமில்லை" என்று எழுதுகிறார். சோம்நாத் கோயில் குஜராத்தில் உள்ள…
-
- 0 replies
- 539 views
-
-
500 வருட கால கனவு நனவானது..!: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல் 500 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(05.08.2020)நடந்தது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, இந்தியப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு,ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை நடந்தது. இதனால், அயோத்தி மாவட்டம் முழுதும், விழாக்கோலம் பூண்டது. …
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 607 views
-
-
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு! அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்க…
-
- 12 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தான் வரைபடம்: ஜம்மு காஷ்மீர் இடம்பெற்றுள்ள புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டார் இம்ரான் கான் - இந்தியா கூறுவது என்ன? 4 ஆகஸ்ட் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார். மொத்த ஜம்மு காஷ்மீரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பாகிஸ்தான் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளையும் ஓராண்டு ஆகும் சூழலில் பாகிஸ்தான் இந்த புதிய வரைபடத்தை அறிமுகம் செய்துள்ளது. பட மூலாதாரம், GOVT OF PAKISTAN …
-
- 0 replies
- 695 views
-
-
UNSC on Kashmir: காஷ்மீர் கடந்து வந்த பாதை - 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு - காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது. இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றி…
-
- 0 replies
- 620 views
-
-
5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார் அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினால் பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி பிரச்சினைக்கு முடிவு…
-
- 6 replies
- 721 views
-
-
கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் வைத்தியர் மைக்கேல் ரயான் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்…
-
- 0 replies
- 271 views
-
-
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020: கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 - டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காணும் முயற்சி. இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவார்கள். மழைப…
-
- 0 replies
- 324 views
-
-
அயோத்திக்கு பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என திட்டவட்டமாக அறிவிப்பு ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 5ஆம் திகத…
-
- 1 reply
- 493 views
-
-
தனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன் விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை…
-
- 0 replies
- 533 views
-