Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் வைத்தியர் மைக்கேல் ரயான் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்…

  2. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020: கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 - டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காணும் முயற்சி. இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவார்கள். மழைப…

  3. அயோத்திக்கு பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என திட்டவட்டமாக அறிவிப்பு ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 5ஆம் திகத…

  4. தனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன் விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை…

  5. ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு! பிரான்ஸ் நாட்டிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட ரஃபேல் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா வந்தடையவுள்ளன. குறித்த விமானங்கள் பிற்பகல் 2 மணி அளவில் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை அன்று புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்தாப்ரா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது. இவ்வாறு தரையிறக்கப்பட்ட குறித்த விமானங்கள் காலை 11.00 மணிக்கு அங்கிருந்த புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை வந்தடையவுள்ளன. அதன் பிறகு பிற்…

    • 4 replies
    • 1k views
  6. இமாச்சல் எல்லையில் இந்தியாவை நோக்கி புதிய வீதியை அமைக்கும் சீனா? இமாச்சல பிரதேச மாநிலத்தை அண்மித்த தனது எல்லை பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சீனா புதிதாக வீதி கட்டமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்தனர். இதன்போது இந்தியாவை நோக்கி புதிய வீதியை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரியவந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறித்த பகுதியில் வீதி அமை…

  7. டெல்லியில், கடந்த 21ம் திகதி , ஒரு நாலு வயது பெண் குழந்தையினை கடத்த நடந்த முயல்வு பெரும் அதிர்சியினை உண்டாக்கி உள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டினை தட்டி, கதவை திறந்த பெண்ணிடம், தாம் சேல்ஸ் ரெப்கள் என்றும், தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா என்று கேட்க, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கொஞ்சம் தள்ளி போய் கடையில் வாங்கி குடிக்காமல் ஏன் இங்கே கேட்க்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் தண்ணி எடுக்க, உள்ளே செல்ல, கண நேரத்தில், தாயார் பின்னால் சென்ற 4 வயது பெண் குழந்தையினை தூக்கிக் கொண்டு ஓட முயன்று இருக்கிறார்கள். பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், அலறிக்கொண்டே பிள்ளையினை, பயத்தில் ஒருவர் ஓட, வண்டியினை ஓட்டி வந்தவர் இழுபறியில் விழுந்து, எழ…

  8. கொரோனா வைரஸ் தடுப்பு மையத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி சிறுமி சித்தரிக்கும் படம் மட்டுமே டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அதே தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், அந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்…

  9. லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். பதிவு: ஜூன் 16, 2020 13:19 PM புதுடெல்லி லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர். சீன ராணுவத…

  10. இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா உட்பட முக்கிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இராணுவ தளவாடங்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. இந்த விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய பணியாக உள்ளது.கடந்த …

  11. எங்கே போனது காங்கிரஸின் சமரசக் கலை? ஹரிஷ் காரே ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் பலரிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோதல் எல்லாத் தரப்புகளுக்கும் தோல்வியையே தந்திருக்கிறது. முரண்பாடான, பன்மையான கருத்துகள், சுயங்கள், ஆளுமைகள், லட்சியங்கள் ஆகியவற்றுக்கு இடையே இணக்கம் ஏற்படுத்தும் கலையில் காங்கிரஸ் மிகவும் தேர்ந்த கட்சி என்பதால், தற்போதைய மோதல் ஏற்படுத்திய கவலை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சுதந்திரத்துக்கும் முன்பே கட்சிக்குள் பல்வேறு தரப்பினரையும் எப்படி உள்ளடக்குவது என்பதிலும், உட்கட்சிப் பூசல்களை எப்படித் தீர்ப்பது என்பதிலும் காங்கிரஸ் முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருந்தது. கொஞ்சம் வரல…

  12. 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை இந்தியாவுடன் கூட்டாக உருவாக்க இஸ்ரேல் குழு வருகிறது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி கே. விஜயராகவனுடன் இணைந்து செயல்படும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு, ஒரு தனி விமானத்தில் இந்…

  13. பிரம்மபுத்திரா ஆற்றுக்கு கீழே சுரங்கச் சாலை அமைக்க இந்தியா திட்டம் சச்சின் கோகாய் பிபிசி மானிடரிங் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. மத்தியிலும், அசாமிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி, அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப்பாதை குறித்து ஜூலை 16-ம் தேதி விளம்பரப்படுத்தியது. '…

  14. ரூ.577 கோடியில் 1512 சுரங்க கலப்பை தயாரிக்க பிஇஎம்எல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் புதுடெல்லி மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் ஒரு வெளிப்படையான முயற்சியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சின் கையகப்படுத்தல் பிரிவு பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்) ரூ .557 கோடி செலவில். டேங்க் டி -90 க்கு 1,512 சுரங்க கலப்பை (எம்.பி.) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுக்குப் பிறகு கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை உருவாக்குவதில் குறைந்தபட்சம் 50 சதவீத உள்நாட்டு உள்ளடக்கத்துடன் வாங்க மற்றும் தயாரித்தல் (இந்திய) வகைப்பாடு உள்ளது. …

    • 2 replies
    • 457 views
  15. ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி- விரைவில் இந்தியாவிலும் பரிசோதனை by : Dhackshala ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமம் விரைவில் பெறப்படும் என சோதனையை நடத்தவுள்ள புனேசீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் பெரிய எண்ணிக்கையில் அதை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அடார் பூனாவால்லா தெரிவித்துள்ளார். மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இந்த தடுப்பூசி சாதகமான பலனை தந்துள்ளதுடன், நோய் எதிர்ப்புக்கான …

    • 2 replies
    • 352 views
  16. சீன அத்துமீறலைக் கண்காணிக்க இந்திய இராணுவத்திற்கு அதிநவீன ஆளில்லா விமானங்கள்! இந்தியா – சீனாவுக்கு இடையிலான எல்லையை துல்லியமாகக் கண்காணிக்க இந்திய இராணுவத்திற்கு நவீன ஆளில்லா விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தயாரித்து வழங்கியுள்ளது. இந்தியா – சீனா இடையே நீண்ட நிலப்பரப்பு எல்லை காணப்படுகிறது. அதில் முக்கியமாக இமயமலை, லடாக் போன்ற கடும் பனிப்பொழிவான இடங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில், பனி காலநிலையைப் பயன்படுத்தி சீன இராணுவம் இந்திய எல்லையைத் தாண்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை அவ்வப்போது முன்னெடுத்து…

  17. இந்தியர்கள் மீது தாக்குதல் நேபாளத்தின் துப்பாக்கிகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும் சிவசேனா ஆவேசம் மும்பை, இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதம் பீகார் மாநிலம் சீதாமரி அருகே எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, நேபாள ஆயுத போலீஸ் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் இந்தியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நேபாளத்தின் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிவசேனாவின் அதிகார…

  18. கடவுள் ராமரை உரிமை கொண்டாடும் நேபாளம்...!! தொல்பொருள் ஆராய்ச்சியில் நிரூபிக்க தீவிரம்..!! இந்துக்களின் கடவுள் ராமர் இந்தியாவில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும், அவர் ஒரு நேபாளி என்பதால் அவர் தங்களுக்கே சொந்தம் எனவும் நேபாள பிரதமர் ஷர்மா ஓலி திகில் கிளப்பிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா-சீனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நேபாள பிரதமர் செயல்பட்டு வரும் நிலையில் அயோத்தி மற்றும் ராமபிரான் குறித்த அவரின் கருந்து இந்தியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. மேலும் ராமர் குறித்து தெரிவித்த கருந்தை உறுதி செய்யும் வகையில் தொல்பொரு…

  19. திருப்பதியில் ஊழியர்களுக்கு கொரோனா: பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரை!!! கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்திட ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகி…

  20. சீனப் பொருட்களுக்குப் பதிலாக வேறு நாடுகளில் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானம்! சீனத் தயாரிப்புகளை கொள்வனவு செய்தலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.சுக் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் காலங்களில் சீனப் பொருட்களுக்குப் பதிலாக ஜப்பான், தைவான், கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து மின் உபகரணங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் மென்பொருட்களை ரஷ்யா, செக் குடியரசு அல்லது போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேறு நாடுகளில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதால் செலவு நிலை ஏற்பட்ட போதும் சீன…

  21. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைவு: சுகாதார அமைச்சு by : Yuganthini சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைவாகதான் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிரிழப்புகள், சர்வதேச அளவில் 3.41 சதவீதமாக இருக்கும்போது, இந்தியாவில் அது குறைவாக 2.5 என்ற சதவீதத்தில் காணப்படுகின்றது. கடந்த 5 மாதங்களில் முதல் முறையாக இறப்பு விகிதம் இந்த அளவுக்கு குறைந்து காணப்படுகின்றது. அத்துடன் மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மற்றும் அந்தமான் நிகோபார…

    • 0 replies
    • 293 views
  22. கோவேக்சின் பரிசோதனை தொடங்கியது; பக்க விளைவுகள் ஏற்படவில்லை: அரியானா சுகாதாரத்துறை மந்திரி சண்டிகார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதா்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரியானாவின் ரோடக் பிஜிஐ மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தும் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டதாக அரியானா சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அனில் விஜ் கூறுகையில், “ 3 பேரிடம் இன்று பரிசோ…

  23. அஸாமில் தொடரும் மழை – இதுவரையில் 110 பேர் உயிரிழப்பு அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் இந்த அனர்த்தம் காரணமாக 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அஸாமில் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதன் காரணமாக ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திப்…

  24. எல்லை பாதுகாப்பை வலுபடுத்த ரஃபேல் விமானங்களை களமிறக்குகிறது இந்தியா! எல்லைப் பகுதியை வலுப்படுத்தும் நோக்கில் ரஃபேல் போர் விமானங்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி 5 ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த விமானங்கள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடையவுள்ளன. இதில் 3 விமானங்கள் இரு விமானிகளை கொண்டதாகவும், இரு விமானங்கள் ஒரு விமானியை கொண்டதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரஃபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும் வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. இந்தியா வர உள்ள விமானங்கள் 300 கிமீ தூரத்தில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவு…

  25. இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை என தெரிவித்து மோசடி – ஹைதராபாத்தில் இளைஞன் கைது July 19, 2020 இலங்கையுடன் தொடர்புபட்ட சிறுநீரக மாற்றுசத்திர சிகிச்சை மோடிசடிகும்பலொன்றை சேர்ந்தவரை கைதுசெய்துள்ளதாக இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்து குடும்பமொன்றிடமிருந்து 34 இலட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய இளைஞர் ஒருவரை கைதுசெய்ததன் மூலம் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைதுசெய்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆந்திரபிரதேசத்தின் குண்டுரை சேர்ந்த பவன்ஸ்ரீனிவாஸ் என் 25 வயது இளைஞனை இந்த மோசடி தொடர்பில் முதலில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.