அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
நடிகர் மோகன்லால், உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு… January 26, 2019 கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 14 பேருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்…
-
- 0 replies
- 356 views
-
-
உ.பி-யில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 32 பேர் பலி.. இழப்பீடு அறிவித்த மாநில அரசு. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இழப்பீட்டு தொகை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவர்கள் தொடர்பாக அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 18 மற்றும் 20 தேதிகளில் 2 பேர் பாம்பு கடியால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.அதே போல சனிக்கிழமையன்று மின்னல் தாக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் மின்னல் தாக்கியதன் காரணம…
-
- 1 reply
- 482 views
-
-
பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். கர்சாஸ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 12ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானில் விரைவில் ஜனநாயகம் மற்றும் சமூக-பொருளாதார உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என உறுதி கூறினார். இந்த நோக்கங்கள் நிறைவேற பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வாக்குறுதியை நிறைவேற்றி மக்களிடம் நம்பகத்தன்மையை பெற தவறிய இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்கட்சிகள் ஒன்றுகூடி முடிவு செய்துள்…
-
- 0 replies
- 267 views
-
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஆயிரம் டன் (30 லட்சம் கிலோ) எடை கொண்ட தங்க சுரங்கத்தை இந்திய புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சோன்பத்ரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த தங்க சுரங்கத்தின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மத்திய அரசு இருப்பில் வைக்கும் நிதியை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன் பஹதி மற்றும் ஹர்தி பகுதியில் சுரங்கத்திற்குள் தங்கம் கொட்டிக் கிடப்பதாக மாவட்ட கனிம வள அதிகாரி கே.கே. ராய் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் கடந்த 1992 - 93-ம் ஆண்டிலேயே தங்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் பணியை புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள்…
-
- 0 replies
- 322 views
-
-
கொரோனா தொற்றில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளிய இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 168,912 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையின் மூலமாக கொரோனா வைரஸ் அதிகளவாக பதிவான நாடுகளின் பட்டியலில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. தரவுகளின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13.53 மில்லியனை எட்டியுள்ளது, பிரேஸிஸல் 13.45 மில்லியன் கொரோனா நோயாளர்களை கொண்டுள்ளது. அதேநேரம் 31.2 மில்லியன் நோயாளர்களை கொண்டுள்ள அமெரிக்கா உலகில் அதிகளவான கொரோனா நோயாளர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை இந…
-
- 0 replies
- 332 views
-
-
சட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து! அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், அணு ஆயுதங்களின் வலையமைப்புகள், அதன் விநியோக முறை, மூலக்கூறுகள், தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அணு ஆயுதமற்ற …
-
- 0 replies
- 134 views
-
-
பண்டோரா பேப்பர்ஸில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் - அடுத்தது என்ன? ஜுபைர் அஹமது பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STU FORSTER-ICC/GETTYIMAGES கசிந்துள்ள பண்டோரா பேப்பர்ஸ் குறித்து இந்திய அரசு பல-அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா பேப்பர்களில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் (சிபிடிடி) தலைவர் ஜேபி மொஹபத்ரா விசாரணைக் குழுவை வழிநடத்துவார். CBDT தவிர, அமலாக்க இயக்க…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
இந்திய ஜனாதிபதி முர்முவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் 12 SEP, 2022 | 12:10 PM சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய தலைமைத்துவத்தில் ஜி-20 மன்றம் பலதரப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று இதன் போது நம்பிக்கை தெரிவித்தார். ஜார்ஜிவாவை ராஷ்டிரபதி பவனுக்கு வரவேற்ற இந்திய ஜனாதிபதி முர்மு, உலகம் கொவிட் தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டைக் கடந்து செல்கிறது என்று கூறினார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் பல குறைந்த வருமானம் கொண்…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,@ANURAGMALOO 5 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் அன்னபூர்ணா மலைப்பாதையில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அனுராக்கின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சகோதரர் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் நகரில் வசிப்பவர் அனுராக் (34). அவர் திங்கள்கிழமை அன்னபூர்ணா மலையில் இருந்து இறங்கும் போது முகாம்-III இல் இருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்துவிட்டார். அவர் விழுந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. அன்னபூர்ணா மலை உலகின் 10வது உயரமான மலையாகும். "அவர் …
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
"வெள்ள சேதத்திற்கு தமிழக அரசுதான் காரணம்" - கேரளா சாடல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி - "வெள்ள சேதத்திற்கு தமிழக அரசுதான் காரணம்" - கேரள அரசு குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைGETTY IMAGES முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் …
-
- 2 replies
- 808 views
-
-
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.. January 26, 2019 இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியின் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்ச…
-
- 0 replies
- 238 views
-
-
காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி? 8 ஆகஸ்ட் 2019 இ இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இணைய சேவை முற்றிலும் தடை செய்யப்படும்போது, அதிலிருந்து தப்பித்து தொடர்புகொள்வதற்கான முயற்சி இதுவாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவைக்கு தடை…
-
- 1 reply
- 622 views
-
-
நவாஸ் ஷெரிப் பிணையில் விடுதலை! ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட நவாஷ் ஷெரீப்புக்கு அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www…
-
- 0 replies
- 388 views
-
-
1947ம் ஆண்டிலே முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முக்கிய இடம் வகிக்கும் கிரிராஜ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பூர்ணியா பகுதியில் புதன்கிழமையன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது, தேசத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது, 1947க்கு முன்பு ஜின்னா இஸ்லாமிய நாடு வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, நமது முன்னோர்கள் செய்த பெரும் தவறால், அதற்கான பலனை தற்போது நாம் அனுபவிக்கிறோம். அப்போது, முஸ்லிம் சகோதரர்கள் அந்த நாட்டிற்கும், இந்துக்கள் நம் நாட்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தால், நாம் தற்போது இந்த நிலைமையிலிருந்திருக்க மாட்டோம் …
-
- 0 replies
- 430 views
-
-
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர்…
-
- 2 replies
- 188 views
- 1 follower
-
-
நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக ஆய்வில் தகவல் கொரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’ (morning consult), இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜேர்மனி ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கையாளுகின்றனர், அவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வ…
-
- 0 replies
- 325 views
-
-
இந்தியாவிடம் சரணடைவதை தவிர்க்க பாகிஸ்தான் விமானிகள் டாக்காவில் இருந்து தப்பியது எப்படி? பட மூலாதாரம்,Bettmann via Getty Images படக்குறிப்பு,1971 போரில் தோல்வியடைந்த பிறகு சரணடைதல் ஆவணங்களில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி கையெழுத்திடுகிறார். இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவும் (இடது) காணப்படுகிறார். கட்டுரை தகவல் முனாஸ்ஸா அன்வர் பதவி,பிபிசி உருது, இஸ்லாமாபாத் 18 டிசம்பர் 2025 அது 1971ஆம் ஆண்டு டிசம்பர் 15 இரவு. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் முறைப்படி சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தது. டாக்காவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் 4வது ஏவியேஷன் படைப் பிரிவுக்கு, தங்களிடம் இருந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை அழித்த…
-
- 0 replies
- 71 views
- 1 follower
-
-
சரக்கு ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலி "மிகுந்த வேதனையளிக்கிறது" - பிரதமர் மோடி சரக்கு ரெயில் மோதி 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பதிவு: மே 08, 2020 10:14 AM புதுடெல்லி மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரெயில் தண்டவாள பாதையில் நடந்து சென்றுள்ளனர். ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்து…
-
- 4 replies
- 904 views
-
-
இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் - கொண்டாடுவதில் அவரசம் காட்டப்படுகிறதா? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று புதிய பெண் நீதிபதிகள். உடன் ஏற்கெனவே நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி. இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி ஆகலாம் என குறிப்பிட்டு செய்திகள் வெளியாயின. சிலர் இதை "ஒரு வரலாற…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு: 200 பேர் காயம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்…
-
- 0 replies
- 153 views
-
-
10,000 வீரர்கள்.. பல போர் விமானங்கள்.. இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு.. போர் பதற்றம்! இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து கடுமையான போர் பதற்றம் உருவாகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. 12 விமானங்களோடு உள்ளே புகுந்த இந்திய விமானப்படை சரமாரி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த அதிரடி தாக்குதலில் மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத…
-
- 3 replies
- 860 views
-
-
பட மூலாதாரம்,ANI 12 செப்டெம்பர் 2024, 11:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72. சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். யெச்சூரி இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதாக பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜி.எஸ்.ராம்மோகனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புண்யாவதி தெரிவித்தார். செப்டம்பர் 10 அன்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கை…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
காஷ்மீரில் 10,000 வீரர்கள் திடீர் குவிப்பு- தீவிரவாதிகள் பயங்கர சதி குறித்து பகீர் தகவல்! காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின் வரிசையாக காஷ்மீரை நோக்கி இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் உடனடியாக அப்போதே காஷ்மீர் எல்லைக்கு செல்லவும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போதே மொத்தம் 40 ஆயிரம் வீரர்கள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டார்கள். தற்போது அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர…
-
- 1 reply
- 617 views
- 1 follower
-
-
வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி, மதரீதியாகப் பிரச்சினையாக்கப்படும் நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத்மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களால்தான் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளியாயின. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸை தப்லீக் உறுப்பினர்கள் பரப்பி வருகின்றனர் என்று இந்துக்கள் கூறுவதாக ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இது தொடர்பான …
-
- 1 reply
- 304 views
-
-
"பாகிஸ்தான்" பயங்கரவாதிகள்.... இந்தியாவில், ஊடுருவ திட்டம் : கண்ணி வெடிகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிவிப்பு! ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் சில தினங்களுக்கு முன் அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை …
-
- 0 replies
- 427 views
-