அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
NEW YORK: புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது- புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி…
-
- 7 replies
- 968 views
-
-
இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இ…
-
- 2 replies
- 420 views
-
-
தமிழ்நாட்டை டார்கெட் செய்த மோடி...!! ஜல்லிக் கட்டுப்போட்டியை பார்க்க அலங்காநல்லூர் வருகிறார் ரஷ்ய அதிபர்...!! ஜி ஜின்பிங்கை அடுத்து தமிழகம் வரும் விளாடிமிர் புடின்.! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியைகாண ஆண்டுதோறும் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி, முன்பைவிட அதிக சிறப்புடனும், அதிக ஆர்வத்துடனும் தமிழக அரசாலும், ஜல்லிக்கட்டு ஆதரவு…
-
- 0 replies
- 503 views
-
-
இந்திய ராணுவ வீரர்கள் தான் என்னுடைய குடும்பம், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண விரும்புகிறேன் என காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி குறிப்பிட்டார். காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரெஸ் ராணுவ முகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது ஒரு பாரம்பரியம் . அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் குடும்பம். நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன.ஆனால் நீங்கள் இருக்கும் இந்த ப…
-
- 0 replies
- 305 views
-
-
பிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்பிரதமர் நரேந்திர மோடி தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசி பெறும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஏலத்தில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடவே பிரதமர் மோடி முன்வந்தார்.இதையடுத்து அந்த பரிசு பொருட்கள் இடம் பெற்ற கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை மத்திய கலாச்சார அமைச்சகம் டெல்லியில் நடத்தியது. இதில் மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட…
-
- 0 replies
- 288 views
-
-
* இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வர் பதவியை ஒப்படைக்க எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட வலியுறுத்தல் மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி இருக்கிறது. ‘இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர்கள் பதவி வழங்கப்படும்’ என எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் எழுதி கொடுக்க வேண்டும் என பாஜ.வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருக்கின்றன. ஆனால், ஆட்சியில் தங்களுக்கு முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூற…
-
- 0 replies
- 325 views
-
-
நவாஸ் ஷெரிப் பிணையில் விடுதலை! ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட நவாஷ் ஷெரீப்புக்கு அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www…
-
- 0 replies
- 390 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். இந்நிலையில், மலாக்கா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே சாலையோரம் அமர்ந்து தனது போராட்டத்தை…
-
- 1 reply
- 372 views
-
-
பங்களாதேஷில் படுகொலை செய்யப்பட்ட மாணவி: 16 பேருக்கு மரண தண்டனை பங்களாதேஷில் பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்ததற்காக 19 வயது மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டமை நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், குற்றவாளிகள் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஏப்ரலில் பங்களாதேஷ் பள்ளிக்கூடம் ஒன்றில் பள்ளி மாணவி நுஸ்ரத் ஜஹான் ரஃபி என்பவர் தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த ரஃபி, காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். இதைத் தொடர்ந்து வகுப்பறையிலிருந்து மாணவியை கட்டடத்தின் மாடிக்கு அழைத…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று இலங்கை நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று மூன்று கிறித்துவ தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிலும் நடைபெற்ற தற்கொலைப்படை தீவிரவாதத் தாக்குதலில் 270 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர், 45 குழந்தைகளும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர். இத்தாக்குதல் குறித்து இலங்கை நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. 272 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் ச…
-
- 0 replies
- 220 views
-
-
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு – ப.சிதம்பரம் பிணையில் விடுதலை ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிகழமை) உத்தரவிட்டது. மேலும் ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர். இதேநேரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, சி.பி.ஐ வழக்கில் பிணை பெற்றாலும் ப.சிதம்பரம் உடனடிய…
-
- 0 replies
- 212 views
-
-
தபால் சேவை நிறுத்தம்- பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்காக இந்திய அரசு அந்நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தபால்களை அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததை அடுத்தே இந்திய தபால் துறை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிலுவையில் வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “பாகிஸ்தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்ற…
-
- 0 replies
- 284 views
-
-
தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தி…
-
- 0 replies
- 307 views
-
-
ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டி தாக்குதல் ; இரு இராணுவ வீரர் உட்பட மூவர் பலி! Published by J Anojan on 2019-10-20 11:19:42 எல்லை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலால் 2 இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஜம்மூ காஷ்மீரின், குப்வாரா மாவடத்தில் இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://www.virakesari.lk/article/67223
-
- 1 reply
- 286 views
-
-
பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். கர்சாஸ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 12ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானில் விரைவில் ஜனநாயகம் மற்றும் சமூக-பொருளாதார உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என உறுதி கூறினார். இந்த நோக்கங்கள் நிறைவேற பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வாக்குறுதியை நிறைவேற்றி மக்களிடம் நம்பகத்தன்மையை பெற தவறிய இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்கட்சிகள் ஒன்றுகூடி முடிவு செய்துள்…
-
- 0 replies
- 275 views
-
-
அயோத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை (இன்று) முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 23 நாட்களுக்குள் இதன் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதாக இந்து மகாசபையின் வழக்கறிஞர் வருண் சின்ஹா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். விசாரணையின் கடைசி நாளான இன்று நிர்மோனி அக்காரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷி…
-
- 1 reply
- 342 views
-
-
ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர். ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென புதிதாக சாலைகள் போடப்படும் என பேசி மத்திய பிரதேச மாநில அமைச்சர் பி.சி.சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா பாஜக எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி கன்னத்தை உவமையாக கொண்டு பேட்டியளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாலை பழுதடைந்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து ஆய்வு நடத்திய அமைச்சர் சர்மா, தற்போதுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பாஜக தலைவர் விஜய்வர்கியாவின் கன்னங்களை ப…
-
- 0 replies
- 289 views
-
-
சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்த விவகாரம் – எழுவருக்கு எதிராக வழக்கு தாக்கல்! ஜேர்மனியில் சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்து வெளியிட்ட சர்வதேசக் கும்பலுடன் தொடர்புடைய ஏழு இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜேர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சிறுவர் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வட்ஸ் அப் குழுக்கள் (whatsapp Group) இருந்தமை கண்டறியப்பட்டது. அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்தமையும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்…
-
- 0 replies
- 248 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை வழங்கியது இந்தியா ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் நான்கு ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியிருந்தது. அத்துடன், அவற்றுக்கு மாற்றாக நான்கு அதிநவீன எம்ஐ-24 ரக அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை பரிசாக வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. இந்தநிலையில் இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகொப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய எஞ்சியுள்ள இரண்டு அதிநவீன ஹெலிகொப்டர்களை இந்திய தூதர் வினைய்குமார் ஆப்கானிஸ்தான் இராணுவத்திடம் வழங்கியுள்ளார். http://athavannews…
-
- 0 replies
- 219 views
-
-
இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70 வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்.! டெல்லி: ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருக்கிறது அதை ஹரியானா மாநிலத்திற்கே மோடி ஆகிய நான் கொண்டுவருவேன் என ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் …
-
- 0 replies
- 806 views
-
-
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல், சர்வதேச தீவிரவாத இயக…
-
- 0 replies
- 210 views
-
-
இந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி… October 15, 2019 இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் மேற்கொண்ட செவ்வியின்போது, இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், வ…
-
- 0 replies
- 374 views
-
-
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் மேற்கொண்டுள்ள ‘2020 வாக்கெடுப்பு’ பிரசாரம் போலியானது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ்வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார். சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என அம்மதத்தின் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த சிலர் 1970ம் ஆண்டுகளில் இருந்தே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சீக்கியர்கள் இடையே கூட போதுமான ஆதரவு இல்லை. இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சிலர் இந்த கோரிக்கைக்கு இன்னும் உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களிடம் ஆதரவும் கோரும் வகையில் ‘2020 வாக்கெடுப்பு’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள குருத்வார…
-
- 0 replies
- 250 views
-
-
இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு! இந்தியாவினைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்கின்றனர். உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காகவே இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அபிஜித் பேனர்ஜி கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்தியர்-உள்ளிட்ட-மூவருக/
-
- 0 replies
- 246 views
-
-
அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று! உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்,14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும், தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அரசிய…
-
- 0 replies
- 229 views
-