COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை திங்கட்கிழமை வெளியிட்ட அந்தத்துறை, காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற ஓர் எச்சரிக்கையை அந்தத்துறை விடுத்திருந்த நிலையில், அது கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பிறகு அந்த வழிகாட்டுதல்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் அதே வழிகாட்டுதல்களை சிடிசி வெளியிட்டிருக்கிறது. அதில், சிறிய அறையில் காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் வை…
-
- 0 replies
- 953 views
-
-
வேகமாகப் பரவும் ஆற்றலுள்ள சார்ஸ் கொரனாவைரஸ் உருவாகியிருக்கக் கூடும்... வைரசுகளின் ஒரு இயல்பு அடிக்கடி விகாரமடைந்து புதிய ரகங்களை உருவாக்குவது. இப்படி உருவாகும் புதிய ரக வைரசுகள் விகாரிகள் (mutants) என அழைக்கப் படுகின்றன. விகாரிகள் ஒரிஜினல் வைரசுகளை விட பலவீனமானவையாகவோ அல்லது வீரியம் கூடியவையாகவோ இருக்கலாம். இதை என்னுடைய முன்னைய கட்டுரையில் விளக்கியிருந்தேன். பெப்ரவரி மாதமளவில் சார்ஸ் கொரனாவைரசில் ஒரு புதிய வகை விகாரி உருவாகியிருப்பதை முதன் முதலில் கண்டறிந்தனர். ஆனால் அந்த விகாரியின் வலிமை, வீரியம் என்பன பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. மனித நுரையீரலில் இருந்து எடுக்கப் பட்ட இழையத்தில் இந்த விகாரிகள் இலகுவாக தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆய்வுகூட …
-
- 0 replies
- 805 views
-
-
முதியோருக்கு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! இளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த மார்டனா இங்ஸ…
-
- 0 replies
- 611 views
-
-
குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை- WHO கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து சில நிமிடங்களில் பரிசோதனை செய்யும் ஒரு முறை ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், இந்த பரிசோதனைக்கு ஐந்து டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 380 ரூபாய்) மட்டுமே ஆகும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் அற்ற ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிசோதனை கருவியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்த அதிவேக கொரோனா பரிசோதனையைச் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 904 views
-
-
இங்கிலாந்து அரசின் துணிச்சலான முடிவு -உலக நாடுகள் பெரும் வரவேற்பு கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முதல்கட்ட முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளதற்கு உலக நாடுகள் தமது வரவேற்பை அளித்துள்ளன. லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை சோதனை செய்து பார்க்கவும் முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்தால் அதை சோதனை செய்வதற்கு அந்நாட்டில் உள்ள மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. மு…
-
- 0 replies
- 568 views
-
-
ஜாக் குட்மேன் மற்றும் ஃப்ளோரா கார்மைக்கேல் பிபிசி ரியாலிட்டி செக் அணி கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்திகள் பரவுவது குறைந்தபாடில்லை. அந்த வகையில், சமீப காலமாக அதிகளவில் பகிரப்பட்டு வரும் சில கூற்றுகள் குறித்த உண்மைத் தன்மையை காண்போம். கூற்று: அகச்சிவப்பு வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் உண்மைத்தன்மை: இந்த கூற்று தவறானது. அகச்சிவப்பு வெப்பமானிகள் அபாயகரமானவை அல்ல. கல்வி நிலையங்கள் முதல் அலுவலகங்கள் வரை, வணிக வளாகங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை, எங்கு சென்றாலும் நெற்றியில் அகச்சிவப்பு வெப்ப…
-
- 0 replies
- 718 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக Meegahalande Durage Lamawansa மேலும் கூறியுள்ளதாவது, “நான் இலங்கையிலிருந்து மாஸ்கோ வந்தவுடன், எதிர்காலத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பெற தயாராக இருக்கிறேன். இந்த தடுப்பூசியானது தற்போது, 3 ஆம் கட்ட சோதனைகள் வழியாக செல்கிறது. அதில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச…
-
- 1 reply
- 859 views
-
-
கொரோனா பரிசோதனை முடிவை 5 நிமிடத்தில் தெரிவிக்கும் கருவி- சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா-இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை நிறுவியது. அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் ரிகோவர் என்ற சுகாதார நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து கொரோனா பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த கருவியில் மனிதனின் சிலதுளி உமிழ்நீர் (எச்சில்) கொண்டு, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? இல்லையா? என்பது 5 நிமிடத்திலேயே தெரிந்துவிடும். மேலும் இந்த கருவி மிகக்குறைந்த செலவில் மிகத்துல்லியமாக கொரோனா…
-
- 0 replies
- 473 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, 2024ஆம் ஆண்டுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி போதுமான வகையில் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனிகா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், பிரிட்டனில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவருக்கு அசாதாரணமான உடல் பக்க விளைவு தென்பட்டதால், மறுஉத்தரவு வரும்வரை அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவிலும் சீரம் நிறுவன பரிசோதனை நடவடிக்கை நிறு…
-
- 0 replies
- 504 views
-
-
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்! ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில், 3ஆம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட…
-
- 0 replies
- 517 views
-
-
கொவிட்-19 தடுப்பு ஊசிகளை உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ளும் யுனிசெஃப்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து, உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (யுனிசெஃப்) மேற்கொள்ளவுள்ளது. உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு ஊசியைத் தயாரிக்கும் பணியில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு ஊசி தயாரிக்கப்பட்ட பிறகு அதை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தடுப்பு ஊசியைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து…
-
- 0 replies
- 416 views
-
-
அடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பது உலகின் கடைசி தொற்று நோய் அல்ல. இனி வர உள்ள தொற்று நோய்களுக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும். தொற்று நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பொதுசுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் பொதுசுகாதார நடவடிக்கைக்கு உலக நாடுகள் அத…
-
- 0 replies
- 550 views
-
-
சீனாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - பரிசோதனையில் உறுதி கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இந்த தடுப்பூசி சோதனையின் இறுதிகட்டமான 3-வது கட்டத்தில் பல தடுப்பூசிகள் உள்ளன. தற்போதைய நிலைப்படி, உலகம் முழுவதும் மொத்தம் 8 தடுப்பூசிகள் இறுதிகட்ட கட்ட பரிசோதனையில் உள்ளன. அதில் 4 தடுப்பூசிகள் சீனாவை சேர்ந்தவை ஆகும். இந…
-
- 0 replies
- 370 views
-
-
கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்தது பிரித்தானியா! இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. ஒக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்டவை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முயற்சில் நல்ல ப…
-
- 0 replies
- 450 views
-
-
2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் – உலக சுகாதார அமைப்பு தற்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் 2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் கெப்ரியாசிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போன்று கொரோனா வைரஸ் நீடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைவரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினை என தெரிவித்த அவர் கடந்த 1918 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட, இந்த கொரோனா தொற்றை வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கிய தொடர்பு, போக்குவரத்து ஆகியவை அன…
-
- 0 replies
- 478 views
-
-
கொரோனாவை தடுக்க களிம்பு: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு வாஷிங்டன், உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனைக்கூட அறிக்கை, இந்த களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என கூறுகிறது. இந்த களிம்பு ‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதுபற்றி அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் டெக்னாலஜி நிறுவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
உமிழ்நீரால் கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை மலிவானது கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி, நமது உடலில் புகுந்திருக்கிறதா என்பதை கண்டறிய தற்போது 2 விதமான பரிசோதனைகள் வழக்கத்தில் உள்ளன. 1. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை. 2. ஆன்டிஜன் கோவிட்-19 பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு மாதிரிகளை சேகரிப்பது சற்றே வலியானது. செலவும் சற்றே அதிகம். முதல் பரிசோதனையில் முடிவு வர பல மணி நேரம் ஆகும். 2-வது பரிசோதனையில் முடிவு வர சில நிமிடங்கள் ஆகும். ஆனால் பெருமளவு சோதனை செய்ய கருவிகள் கிடைப்பதில் சிக்கல். இந்த சூழலில்தான் கொரோனாவை சாதாரணமாக உமிழ்நீரைக் கொண்டே கண்டறியும் ‘சலிவா டைரக்ட்’ என்ற பரிசோதனை முறையை அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்க…
-
- 0 replies
- 655 views
-
-
உலகளவில் சுமார் 2.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கப்போகிறது. உலக பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டறிய பல நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது கியூபா. சோஷலிச பின்னணி கொண்ட கியூபா, சுகாதார சேவைகளுக்கு பெயர் பெற்ற நாடாக அறியப்படுகிறது. அதே சமயம் இதனை ஒரு ராஜீய உத்தியாகவும் கடைபிடித்துவருகிறது. தற்போது சொபெரனா 01 அதாவது சவரின் 01 என்ற பெயரில் ஒரு கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. கியூப அரசின் நிறுவனமான ஃபின்லே இன்ஸ்டியூட் இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ள…
-
- 0 replies
- 562 views
-
-
50 வயதிற்கும் குறைந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை! ஆசிய – பசிபிக் நாடுகளில் 50 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தகேஷி கசாய் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் உரையாற்றிய அவர், தொற்று பாதித்துள்ள 50 வயதிற்கும் குறைவானவர்களில் பெரும்பாலானோருக்கு தமக்கு தொற்று இருப்பது கூட தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்றின் போக்கு மாறி வருவதாகக் கூறியுள்ள அவர், 20, 30, 40 வயது இளைஞர்கள் மூலம் அதிகளவில் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர…
-
- 0 replies
- 440 views
-
-
ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்’ என தெரிவித்தார். உலகை அச்ச…
-
- 2 replies
- 743 views
-
-
உலக சுகாதார நிறுவனம் சேகரித்து வெளியிட்டுள்ள தகவலின்படி கொரோனா வைரஸ் 56 பாகை செல்சியஸில் 15 நிமிடத்தில் 10,000 வைரஸ்கள் என்ற அளவில் அழிகிறது எமது மக்கள் சளி கூடினால் வேதி பிடிப்பது வழக்கம். கொதி நீராவியை சுவாசிப்பதை வேதி பிடிப்பது என்கிறோம். நீர் கொதிப்பது 100 பாகையில் என்பதால், கொதி நீராவி 56 பாகை செல்சியஸிலும் கூடவாக இருக்கும். உலக சகாதார நிலைய தரவின் இணைப்பு: https://www.who.int/csr/sars/survival_2003_05_04/en/
-
- 1 reply
- 587 views
-
-
கொரோனாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை ஆய்வு செய்ய தயாராகும் உலக சுகாதார நிறுவனம் கொரொனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கியுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விபரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம் கூறியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளும் களமிறங்கியுள்ளன. அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை தாங்கள் உருவாக்கியுள்ளதாக ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது. அந்த நாட்டின் இராணுவ அமைச்ச…
-
- 0 replies
- 395 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதில் தாக்கம் செலுத்தும் வாய் புற்றுநோய் – நாளாந்தம் மூவர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய் புற்றுநோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் வாய் புற்றுநோயினால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பதுடன், வாய் புற்றுநோயுடன் நாளாந்தம் 6 பேர் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வெற்றிலை, புகையிலை, பாக்கு, சிகரெட் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினால் ஆண்களே அதிகமாக புற்றுநோய்க்கு இலக்காகுகின்றனர் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெற்றிலை பயன்பாடு மற்றும் எச்சில் துப்புவதனூடாக வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 1 reply
- 636 views
-
-
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும். இந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களை…
-
- 6 replies
- 1.7k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று வெளிநபர்களிலிருந்து பரவுவதைவிட வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகம் பரவுவதாக தென் கொரிய தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு சொல்வது என்ன? கொரோனா தொற்று உள்ளான முதன்மை நோயாளிகள் 5,706 பேரும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 59 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பட மூலாதாரம், Getty Images இதில் நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே வெளியாட்களிடம் இருந்து கோவிட்- 19 பரவியது தெரியவந்துள்ளது, பத…
-
- 0 replies
- 523 views
-