Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. #AppleIOS10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்! ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிவித்துவிட்டு அவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான ஐ.ஓ.எஸ்-ஐ வெளியிடுவது ஆப்பிளின் ஸ்டைல். அதே போன்று இந்தாண்டுக்கான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் சென்ற செப்டம்பர் 7-ம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டத்தோடு ஐ.ஓ.எஸ்10 செப்டம்பர் 13-ம் தேதி முதல் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்பிளின் பளிச்சிடும் மாற்றங்கள் ஐ.ஓ.எஸ்10-ல் இருக்கிறதா? 1. இனி ஸ்டாக் ஆப்ஸ்-ஐ நீக்கலாம்: பல ஐ-போன் பிரியர்களுக்கு பிடிக்காத ஒன்று இந்த ஸ்டாக் ஆப்ஸ். இதற்கு முந்தைய ஐ.ஓ.எஸ்-களில் நமக்குத் தேவையில்லை…

  2. குழந்தைகளைக் காக்க... புது இணையதளம்! #childabuse குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம். …

  3. சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை விமானங்களில் பயன்படுத்த தடை புதிய சாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது. பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது. விமானத்தில் பயணிக்கும்போது, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூக்கி ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்து இருக்கின்றனர். பயணியர் எடுத்துச் செல்கின்ற பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறி…

  4. பேஸ்புக் முன்னுரிமை அளிக்கும் நபர்கள் யார் என்று தெரியுமா.? ஏன் அது நீங்களாவும் இருக்கலாம்..! இதோ தெரிந்துகொள்ளுங்கள் உலக தற்கொலை தடுப்பு தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்கவுள்ளது. பேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும். தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீத…

  5. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்மார்ட் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களுக்கான, உலகிலேயே விலை மலிவான 4ஜி தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ என்ற இந்த புதிய தகவல் ஒருங்கிணைப்பு சேவை, அலைபேசி வாடிக்கையாளர்களைக் கவரும் இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் போட்டியை அதிகரித்துள்ளது. அதிவிரைவு 4ஜி இணையதள சேவை இந்தியாவிற்கு புதியதில்லை என்ற போதும் ஜியோ சேவை அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம், வீடியோ, ஆவணங்கள் உள்பட பல்வேறு சேவைகளை தற்போதுள்ளதைவிட, மிகக்குறைந்த கட்டணத்தில் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ என்ற இந்த சேவை மூலம் அடுத்த ஆண்டு வரை…

  6. இனி DSLR வேண்டாம்! மொபைலே போதும்! #HasselbladTrueZoom எல்லா வசதிகளையும் கொண்ட டிஜிட்டல் கேமராவை ஒரு ஸ்லிம்மான செல்லுக்குள் அடக்கினால் எப்படி இருக்கும். உண்மையிலேயே நடந்துவிட்டது. 'ஹாசல்பிளாட் கேமரா' (Hasselblad) என்ற கேமரா ஒரு சின்ன மொபைலுக்குள் அடங்கிவிட்டது. நம்மில் பெரும்பாலோனோர்க்கு 'ஹாசல்பிளாட்' கேமரா (Hasselblad) பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போட்டோகிராபி துறையில் பல சாதனைகள் புரிந்த நிறுவனம் ஹாசல்பிளாட். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங் சென்ற பொழுது நிலவில் படம் பிடிக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த நிறுவனத்தின் கேமராக்கள்தான். இந்த நிறுவனத்தின் கேமராக்களின் விலையை கேட்டால் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். இதனால்தான் என்னவோ இதனை பயன்படுத்துபவர்க…

  7. உங்கள் மொபைல், உங்கள் சொல்பேச்சுக் கேட்கிறதா? நாம ஸ்மார்ட்டா இருக்கோமோ, இல்லையோ... ஆனா நம்ம கையில இருக்க போன் ஸ்மார்ட்டாதான் இருக்கு. ஸ்மார்ட் போன்ல பல வருஷமா இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் அதிகம் பயனபடுத்தியிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? அதில் இருந்த பல குறைபாடுகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், "சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத…

  8. ஐபோன்-7: அறிய வேண்டிய 9 அப்டேட்டுகள்! #iphone 7 updates செப்டம்பர் மாதம் 'ஆப்பிள்' பிரியர்களின் வசந்தகாலம் எனலாம். ஆப்பிள் தனது புதிய வெளியீடுகளை இந்த மாதத்தில்தான் வெளியிடும். இந்த ஆண்டு செப்டம்பரின் எதிர்பார்ப்பு, ஐபோன் 7. இதுபற்றி இன்னும் எந்தவித உறுதியான தகவல்களும் வராத நிலையில், அதற்குள்ளேயே கொடிகட்டிப் பறக்கின்றன ஐபோன் செய்திகள். இதுவரைக்கும் தெரிந்த, ஐபோன் 7 பற்றிய அப்டேட்டுகள் இதோ.. 1. ஐபோன் 7 ஐ 7, 7 ப்ளஸ் மற்றும் 7 ப்ரோ அல்லது பிரீமியம் என மூன்று மாடல்களில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 2. 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளே சைஸ்களில் வெளிவருகிறது. 3. இந்த முறை ஐபோனில், டூயல் சி…

  9. ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், அடுத்த பத்தாண்டுகளில் நாம் எங்கு இருக்க வேண்டும் என் தீர்மானிப்பதும், அதை நோக்கி பயணிப்பதுமே ஆகும். மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆர்குட், தற்போது இணையவெளியில் இல்லை. அதன் நிறுவனர் புதிதாக ஓர் அப்ளிகேஷனை வெளியிட்டு, அதை சந்தைப்படுத்துவதில் தீர்வம் காட்டி வருகிறார். ஆனால், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தொலைநோக்குப் பார்வையில் அசத்தி வருகிறது. 32 வயதான அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தற்போது வரை 50 நிறுவனங்களை வாங்கி இருக்கிறார். வாட்ஸ் -அப், அக்குலஸ் , இன்ஸ்டாகிராம் என ஃபேஸ்புக்கின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஏராளம். அடுத்த பத்து ஆண்டுகளில் , செயற்கோள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, போன்றவற்றில்…

  10. டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்! முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே! டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப். கண்ணுக்குத் தெரியாத இருளுலகம் நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்…

  11. WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. டிம் பெர்னெர்ஸ் லீ லண்டன்: WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் இணையதளம் என்ற ஓர் கம்ப்யூட்டர்களுக்கு இடையிலான வெளிப்படையான ஓர் இணைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த இணைப்பின்மூலம் ஆராய்ச்ச…

    • 1 reply
    • 499 views
  12. விடைப்பெற்றது பிரபல தேடல் தளம் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்…

  13. யாகூவை 4.8 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது வெரிசான் இணையத்தளத்தின் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த பிரபல இணையத்தள தேடல் பொறி நிறுவனமான யாகூவை (Yahoo), அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டொலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் வெரிசான் நிறுவனம், யாகூ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, யாகூ நிறுவனம் தனது பங்குகளை, வெரிசானுக்கு விற்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏ.ஓ.எல் நிறுவனத்தை 4.4…

  14. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான போன் வெளியிடுகிற‌து பிளாக்பெர்ரி! பிளாக்பெர்ரி நிறுவனம் உலக அளவில் மிகப் பிரபலமான மொபைல் நிறுவனம். அதன் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதள போட்டியால், இந்நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. போட்டியை சமாளிக்க கடந்த வருடம் Blackberry PRIV எனும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Black Berry DTEK50 என்று பெயரிடப்பட்டுள்ள இது "உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது" என்று பிளாக்பெர்ரி நிறுவனம் விளம்பரப்ப…

  15. ஆண்ட்ராய்டில் வெளியானது 'பிரிஸ்மா'! மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகாக ஓவியம் போன்ற புகைப்படங்களாக மாற்றித் தரும் 'பிரிஸ்மா என்னும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஆப், சென்ற மாதம் வெளியானது. சாதாரண புகைப்படங்களை நிஜ ஓவியம் போன்று மாற்றிக்கொடுப்பதுதான் இதன் சிறப்பு. இது உலகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் - ஐ பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆப் ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் விதவிதமான ஆப்கள், தங்களுக்கு கிடைக்கவில்லையென்று வருத்தப்பட்டனர் ஆண்ட்ராய்டு வாசிகள். ஆப்பிள் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்குத்தான் இந்த ஆப் சென்ற மாதம் முதலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆண்ட…

  16. அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு கோப்புப் படம் | ஏ.எஃப்.பி அமெரிக்காவில் அதிபர் தேர்தலையும் தாண்டி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் போகிமான் கோ (Pokemon Go). சார்ஸ் போல கொடிய வைரஸா இது என விவரம் புரியாதவர்கள் யோசிக்கலாம். போகிமான் கோ ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம். இந்த விளையாட்டால் தான் கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போகிமான் கோ விளையாடிக் கொண்டே கார் ஓட்டியதால் விபத்து, முழு நேரம் போகிமான் கோ விளையாட வேலையை விட்டவர், போகிமான் கோ விளையாடுபவர்களை பின் தொடர்ந்து கொள்ளை சம்பவம் என பரபரப்பான செய்தி…

  17. தமிழன்டா..! - தமிழர்களுக்கான சமூக வலைத்தளம் தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த நெடுநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது ‘தமிழன்டா’. “தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்” என்று வரவேற்கிறது ‘தமிழன்டா' கைப்பேசி செயலியின் முகப்புப் பக்கம். வழக்கமான சமூக வலைத்தளச் செயலிகள் போல, நமக்குத் தேவையில்லாததையும் சேர்த்துக் கொட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்துகொள்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், டென்ட் கொ…

  18. சமூக வலைதளங்களில் தேவை கவனம்! இன்றைய காலகட்டத்தில் மக்கள் உணவில்லாமல் கூட வாழத் தயாராக உள்ளனர். ஆனால் சமூக வலைத் தளங்களில் நுழையாமல் அவர்களால் சில மணிநேரம் கூட தாக்குபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டது. நண்பர்கள் கேட்டால் பலர் ATM பாஸ்வேர்டை கூட எளிதில் தந்து விடுவார்கள், ஆனால் சமூக வலைத் தளங்களின் பாஸ்வேர்டை உயிர்போகிற காரியம் என்றால் கூட யாரும் தரமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இதில், மக்கள் தங்களின் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள, கால் செய்ய, சாட் செய்ய, ஃபோட்டோ பதிவேற்றி தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து க…

  19. சுஜாதாவின் சிறுகதைகள் https://app.box.com/s/e5tu1vok06gb7c8s2bqjuj0karox2atf நன்றி. ஜீவன் சிவா

  20. எந்த மொழியாயினும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம் உலகில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாகிய பேஸ்புக் புதிய மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் பேஸ்புக் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதித்து வருகிறது. கணனியில் பேஸ்புகினை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத…

  21. செயலிழந்த யூ டியூப் தளம் - அதிர்ச்சியில் பாவணையாளர்கள் அதிக பாவணையாளர்களால் உபயோகிக்கப்படும் வீடியோ தளமான யூ டியூப் நேற்று தீடீரென செயலிழந்தது. செயலிழந்த யூ டியூப் தளம் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பியது. செயலிழந்த யூ டியூப் தளத்தில் “மிகவும் பயிற்சி பெற்ற குழுவொன்று இந்த நிலைமையை சமாளிக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களை கண்டால் இதனை தெரியப்படுத்துங்கள் " என்ற வாசகம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. http://www.virakesari.lk/article/7987

  22. வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்! இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தை…

    • 1 reply
    • 1.3k views
  23. தந்தையர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் அனைவரும் பார்த்தவுடன் கவரும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது. பொதுவாக குழந்தையை கவரும் முதல் கதாநாயகனாகவும், முதல் விளையாட்டு ஆசிரியராகவும், கண்ணுக்குத் தெரியாத மானசீக பலமாகவும் இருக்கும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள டூடுலில், ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை தான் வழிகாட்டி என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை அணியும் ஒரு ஜோடி ஷூவுடன், அதன் கூடவே வரும் குழந்தையின் ஒரு ஜோடி ஷூவை கொண்டதாக இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் வாசல் மிதியடியில் இருப்பதைப்போல ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை…

  24. 10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமின் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த சிறுவனுக்கு 10,000 டாலர் பரிசு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வயதை எட்டாத இந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை தன்னால் அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்த சிறுவன் தம்மைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்ததும் இந்தக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவ…

  25. சமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா?' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக் காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை (இன்றைய தேதிக்கு).ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் வசதி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. Netflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில,இந்திய படங்கள், டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது. ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB எல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.