யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
31 topics in this forum
-
அமைதியான நீரோடடமாய் அவர்களது வாழ்வு சென்று கொண்டிருக்கையில், புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் , வயது வந்த பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஆசைபடடனார். தமக்கு அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு சொல்லியும் வைத்தனர். செல்வி இரண்டு அண்ணா மா ருக்கு ஒரு செல்லத்தங்கை . புல ம் பெயர்ந்த தமிழ் தாய் தந்தைக்கு மகளாக வளர்ந்தவள். பெற்றாரும் பெண்பிள்ளை என்ற கிராமத்து வழக்கில் , ஜெர்மனியில் வாழ்ந்தாலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள் அவளு க்கு ஒரு நண்பிகளும் இல்லை . பாடசாலைக்கு கூட்டிப்போய் கூட்டி வரும் தந்தை , இவர்களது திருமணம் சற்று வயதான காலத்திலே நடந்தது. செல்வி பிறக்கும் போது தாய்க்கு நாற்பது வயது. சமய கடமைகளி ல் மிகவும் ஊறி போனவர்கள். ஒரு வகை போதகக் கூட்ட்ம் என்றும் சொ…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
இச் சிறிய பறவை இப்போது, நீல வானத்தைப் பார்க்கிறது. முன்போல் அதனால் வானத்தை இன்னும், முழுமையாகச் சொந்தம் கொண்டாட முடியவில்லை. இப்பறவையை இப்போது யாரும் பார்க்க மாட்டார்கள். இப்போது இதனால் அரிதாகவே பறக்க முடிகிறது. அதன் உடைந்த சிறகுகளை சரிசெய்ய, அங்கு யாரும் வரமாட்டார்கள். ஒரு காலத்தின் சுதந்திர பறவை இது! காற்றின் மிதப்பில், வானத்தை உரிமை கொண்டாடியபடி, மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி மிதந்தது. -தியா-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! …
-
-
- 7 replies
- 982 views
-
-
கால் நூற்றாண்டுகளாய் களம் கண்டு-நின்றியங்கும், யாழ் இணையம்- நூறாண்டு மேல் உயர வாழ்த்துக்கள் ! மச்சானின் நெல் வயலில் மகிழ்ந்திருந்த நெல் மணிகள், கச்சான் காத்தடித்ததனால் கதிர் விலகிச் சிதறினவே. அருகினிலே சில மணிகள் ஆழ மண்ணில் சில மணிகள் தெருவினிலே சில மணிகள் தேசம் விட்டுச் சில மணிகள். கலகலத்துச் சிரித்துவிட்டு கச்சான் காத்தோய்ந்து போக, வெலவெலத்துப் போன மச்சான் வெளிப்பட்டான்-செயற்பட்டான். பதறிப் போன மச்சானும் சிதறிப்போன மணிகளதைக், கதறிக் கொண்டு சேகரித்துக் கட்டிச் சேர்த்தான் கோணியிலே. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. …
-
-
- 4 replies
- 824 views
- 1 follower
-
-
இன்று தாய்மொழி்தினம். எம் உயிரினுமினிய தமிழன்னைக்காக 2020 பெப்ரவரி 21 இல் நானெழுதிய அருட்புகழ் கீழே தரப்பட்டுள்ளது.
-
- 7 replies
- 753 views
-
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும…
-
- 3 replies
- 539 views
-