யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
71 topics in this forum
-
எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்க…
-
-
- 5 replies
- 450 views
-
-
புதியன புகுதலே வாழ்வு! ***************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிசு எனிவரும் நாட்களும் புதிசு புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும் சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்த்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வு கதைகள் சொல்வதும் இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு-இவைகள் எல்லாம் வெறும் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை... இவர்களின் வாழ்வ…
-
-
- 4 replies
- 720 views
-
-
தலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை. ***** விழல் ----------- சிவாஜியும் எம்ஜிஆரும் வைத்திருப்பது அவர்களின் தலைமுடி அல்ல என்று அன்று தெரியாது முடி நெற்றிக்கு மேல ஒரு சின்ன மலையாக ஏறி நெற்றியில் சுருண்டு விழ என்ன என்ன செய்ய வேண்டும் என்று அப்படி தலைமுடி இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன் இரும்புக் கம்பி ஒன்றை மெதுவாக சூடாக்கி அப்படியே சுற்று என்றும் ஒருவன் கொடுத்தான் யோசனை பள்ளிக்கூடத்தில் சூடு அதிகமாகி புரதம் கருகி மணந்தது தான் மிச்சம் படும் பாட்டைப் பார்த்து அம்மா சொன்னார் உனக்கு வாழைக்காய் பட்டை முடி வளையவே வ…
-
-
- 4 replies
- 579 views
- 1 follower
-
-
பெரியவர்கள் எம்மை எச்சரிப்பார்கள். இப்படி செய்யக்கூடாது அப்படி செய்யக்கூடாது என்று. அவை மிகச் சிறிய விடயங்களாக மிக மிக அசாதாரண விடயங்களாக எம் வாழ்வில் நடக்கமுடியாத நாம் சந்திக்காத விடயங்களாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடந்து விட்டால்......?? சில விடயங்களை நான் இங்கே எழுதுகிறேன் நீங்களும் நீங்கள் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட விடயங்களை எழுதுங்கள். எவராவது பயன் பெறட்டும். 1 - பிரெஞ்சில் இருந்து எனது நண்பர் ஒருவர் டென்மார்க்கில் உள்ள ஒரு ஆலயத்தில் தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் (இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் கடைசி ஆண் குழந்தை) சென்றிருந்தார். அந்த கோயில் உள்ள இடம் வயலும் காடும் நிறைந்த இடம். அங்கே அந்த ஆண் குழந்தைக்கு (2 வயது) ஒரு பூச்சி கடித்து விட்டது. அது …
-
-
- 4 replies
- 479 views
-
-
உயிர்த்தெழுதல் ------------------------- நாங்கள் அறியாமலேயே ஒவ்வொரு திங்கள் காலையும் உயிர்த்தெழுதல் நடந்து கொண்டேயிருக்கின்றது. பல விடயங்கள் சனி, ஞாயிறுகளில் சுத்தமாக மறந்து போய், திங்கள் பொழுது புலரப்புலர லௌகீக வாழ்விற்கான கடமைகள் மீண்டும் மெதுமெதுவாக நினைவுக்குள் வருகின்றன. மழை முடிந்த பின் இலைகளிலிருந்து சொட்டும் துளிகள் போல மனதிற்குள் துளித்துளியாக வார நாட்களுக்கான உலகம் விழுந்து பரவுகின்றது. திங்கள் அதிகாலையிலேயே அதிக மாரடைப்புகள் ஏற்படுகின்றன என்ற புள்ளிவிபரம் ஒன்றும் உள்ளது. . அவர் உயிர்த்து மேலே போனார் என்கின்றனர். இன்னொரு மகரிஷி மீண்டும் உயிர்த்து வந்தார் என்றும் சொல்கின்றனர். எண்ணூறு கோடி மக்களும் ஒரு வாழ்க்கையை முடித்து இன்னொரு வ…
-
-
- 3 replies
- 562 views
-
-
அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள் போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள் அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது 'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள் கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார் அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர் …
-
-
- 3 replies
- 609 views
-
-
(குறுங்கதை) குற்றமே தண்டனை --------------------------------- நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் ஐயா சேகரை கூட்டி வந்தார். சேகருக்கும் எனக்கும் ஒரே வயது. மலையகத்தைச் சேர்ந்தவன். யாழில் ஒரு வீட்டில் வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றான். அந்த வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓடிக்கொண்டிருந்த சேகரை ஐயா யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் வைத்துக் கண்டதாகச் சொன்னார். நாங்கள் அப்போது ஏழு பிள்ளைகள். எட்டாவது தம்பி இன்னும் பிறக்கவில்லை. சேகர் தற்காலிகமாக எட்டாவது பிள்ளை ஆகினான். சேகரை சேகரின் ஊர், தாய் தந்தையர் விவரம் அறிந்த பின், அவனின் வீட்டாரை எச்சரித்து, அங்கு கொண்டு போய் விடுவதாக ஐயா அம்மாவிற்க…
-
-
- 3 replies
- 396 views
- 1 follower
-
-
இது என்ன மழையோ, இங்கு நான் இருக்கும் பாலை நிலத்தில் இப்படி பெய்து கொண்டேயிருக்கின்றது. இங்கு முன்னர் இப்படியான ஒரு மழையை நான் காணவில்லை. ஊரில் தான் மாரியில் இப்படி பெய்திருக்கின்றது. ************************** ஒரே மழை ---------------- அன்று அங்கே மாரியில் அடைமழையில் இடுப்பளவு ஓடும் வெள்ளத்தில் குளிப்போம் வெள்ளத்தின் போக்கில் கடல் வரும் ஓங்கி ஓங்கி கடல் அலை கரையை அடிக்கும் என்னூருக்கு ஏதோ ஒரு சாபமிடுவது போல அலையை தொட்டு தொட்டு ஒதுங்குவோம் வெட்ட வெளியை வெள்ளம் மூடும் பத்து லட்சம் பேத்தைக் குஞ்சுகள் பிறக்கும் அன்று வந்து வெள்ளத்தில் வால் ஆட்டி ஆட்டி நீந்தும் அவை ஒரு கையில் அள்…
-
-
- 3 replies
- 537 views
-
-
கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ்…
-
- 3 replies
- 1.5k views
-
-
மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் …
-
- 2 replies
- 664 views
-
-
புளுகுப் போட்டி -------------------------- மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது. மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏது…
-
-
- 2 replies
- 456 views
-
-
(குறுங்கதை) குரு தட்சணை ----------------------- அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார். சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூல…
-
-
- 2 replies
- 531 views
-
-
(குறுங்கதை - அறிவியல் புனைவு) சிவப்புக்கல் -------------------- 'அம்மா.....' 'என்ன பிள்ளை.... போக வேணுமா?' அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 'ம்ம்.......' என்று இழுத்தான் அவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகி…
-
-
- 2 replies
- 423 views
-
-
'கடவுளின் பிரதிநிதி' புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்று. அவருடைய எல்லாக் கதைகளுமே புகழ்பெற்றவை தான். தலைப்பை அங்கிருந்து எடுத்து, மிகுதியை நான் முயன்றிருக்கின்றேன். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது என்றும் ஓயாத ஒரு கேள்வியே. **************************** கடவுளின் பிரதிநிதிகள் ------------------------------------ சுரீர் என்று வெயில் கொட்டித் தீர்த்த மழையின் பின் பூமியின் ஈரம் துவட்ட என்று கொளுத்திக் கொண்டிருந்தது கவிழ்ந்த அரைக் கிண்ண வானத்தில் நீலம் அன்றி வேறெதுவும் இல்லை சூரியனுடன் சொட்டிச் சொட்டி ஈர…
-
- 2 replies
- 526 views
-
-
27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் து…
-
-
- 2 replies
- 601 views
-
-
நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம் சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவ…
-
-
- 1 reply
- 544 views
- 1 follower
-
-
மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினே…
-
-
- 1 reply
- 504 views
- 1 follower
-
-
சனாதனம் என்றால் தொன்மையானது என்று ஒரு பொருள் உள்ளது. மனிதர்களின் சில இயல்புகளும் மிகத் தொன்மையானதே. இந்த சில இயல்புகள் இன்னமும் மாறாமல் அப்படியே வந்து கொண்டிருக்கின்றது. ************************************* சனாதன வருத்தம் ---------------------------- புது மனிதர் ஒருவரை இன்று சந்தித்தேன் தான் ஒரு பெரியவன் என்று அவரே சொன்னார் அடிக்கடி சொன்னார் பெரிய வேலை என்றார் பெரும் பொறுப்பு என்றார் பெரிய சந்திப…
-
- 0 replies
- 281 views
-
-
அன்று ஊரில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பல இறுதிக் கட்டத்தில் கைகலப்பில் முடியும். ஓரிரண்டு நடுவர்கள் தான் ஊரில் இருந்தனர். ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை போட்டிகளுக்கு கூட்டிக் கொண்டு வருவது. வந்த பின் அவர்களுக்கு என்ன நடக்கும் என்றால்.......... சிறந்த நடுவர் --------------------- கறுப்பு சட்டை கறுப்பு காற்சட்டை கறுப்பு காலணி கறுப்பு மணிக்கூடு அணிந்து நடுவில் நின்றார் நடுவர் வரப்போவதை அறியாத மணவறை மாப்பிள்ளை போல அந்தப்பக்கம் அவர்கள் இந்தப்பக்கம் இவர்கள் அந்த அணி சண்டியர்கள் இந்த அணி சவலைகள் சவலைகள் சந்தியில் முதல் நாள் ஏடாகூடமாக ஏதோ சொல்ல சண்…
-
- 0 replies
- 289 views
-
-
பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூட…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
அள்ளு கொள்ளை ----------------------------- பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் செய்வதற்கு இரண்டு வேலைகள் இருந்தன. ஒன்று பந்தடிப்பது, மற்றயது கயங்குண்டு விளையாடுவது. போலை அல்லது மார்பிள் என்று சொல்வதை எங்களூர் பக்கம் கயங்குண்டு என்று சொல்வார்கள். பந்தடிப்பதற்கு ஆட்கள் சேர முன், கயங்குண்டு விளையாடுவோம். பெரும்பாலும் கோஸ் என்று ஒரு விளையாட்டு. அன்று நான் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த இரண்டு விளையாட்டுகளுக்காகவும் அர்ப்பணித்திருந்தேன். பள்ளிக்கூடத்திற்கும் ஒரு பந்தும், கொஞ்ச கயங்குண்டுகளும் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது பள்ளிக்கூடத்தில் ஒரு புதிய விஞ்ஞான கூடம் கட்டியிருந்தனர். அது ஒரு மூலையில் கொஞ்சம் ஒதுக்குப் பக்கமாக இருந்தது. அதற்கும் …
-
- 0 replies
- 461 views
-