நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக உறைப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம். தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுத…
-
- 0 replies
- 10.8k views
-
-
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். சாதாரணமாகத் தண்…
-
- 2 replies
- 3.3k views
-
-
தற்புனைவு ஆழ்வு நோயின் அறிகுறிகள் பிறந்த குழந்தைகளின் மூளையைத் தாக்கி அவர்களது இயல்பான நிலையை பாதிக்கச் செய்யும் நோய் தான் ஆட்டிசம் எனப்படுகிறது. இதன் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் இந்நோய் குறித்து மருத்துவ உலகால் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பிறந்த 6 மாதத்தில் செய்ய வேண்டிய சின்ன சின்ன செயல்களைக் கூட செய்யாமல் முடங்கி இருக்கும். அதாவது தாயின் முகத்தை அடையாளம் காணுதல், சிரித்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு கூட விளையாட மற…
-
- 14 replies
- 4.9k views
-
-
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்ப…
-
- 0 replies
- 646 views
-
-
இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? புதன், 05 ஜனவரி 2011 13:21 சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் (நீரிழிவுநோய்) வரும் என்று சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையிலேயே சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? அது பற்றி இங்கே பார்ப்போம். உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் தினமும் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும், அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், ஒருவரது பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும், அவரது உடல் அதிக பருமனாகவும் இருக்கும்பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக …
-
- 0 replies
- 1.6k views
-
-
சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும். காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம். பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. ஃபிளாஸ் (floss) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால்,…
-
- 0 replies
- 676 views
-
-
இரத்தத்தில் உள்ள பில்லியன் கணக்கான கலன்களில் செய்யக்கூடிய ஒரு இரத்த பரிசோதனையுடன் புற்றுநோயை கண்டுபிடிக்கக்கூடிய வசதி உருவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு இல்லை மூன்று வருடங்களில் இந்த இரத்த பரிசோதனை செய்யக்கூடியதாக இருக்கும்.
-
- 0 replies
- 747 views
-
-
குளிர்காலத்தில் `புளிப்பு' வேண்டாம்! சனி, 01 ஜனவரி 2011 05:44 குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன. பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, `அல்கலைன் சிட்ரைட்' என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது. புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொ…
-
- 0 replies
- 626 views
-
-
நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எர…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெற்றிலைப் பாக்கு, பான் பராக் உள்ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை சதா மென்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும். சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில் பான் பராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்லத் தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கண்ண உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது. புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது. இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து எ…
-
- 10 replies
- 3k views
-
-
ஈரலின் பழுதடைந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு புதிய துண்டைப் பொருத்தி மறுவாழ்வு காணும் வைத்தியத்தில் வெற்றி… ! குடிச்சுக் குடிச்சே ஈரல்; போய் இளையதம்பி செத்தான்.. என்று நமது நாட்டில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் மதுவால் இறப்பவர்கள் பற்றிப் பேசிக்கொள்வார்கள். ஈரலில் துளைபட்டு நாசமானாலும், பழுதடைந்த பகுதியை வெட்டி எறிந்து, அந்த இடத்தில் இன்னொருவரின் ஈரலை ஒட்டி வாழ்வை புத்துணர்ச்சியுடன் தொடங்க இப்போது புதுவழி பிறந்திருக்கிறது. பஞ்சரான டயரை ஒட்டி மறுபடியும் காற்றடிப்பது போல வைத்தியத்துறையில் இந்தப் புதுமை எட்டித் தொட்டுள்ளார்கள் அமெரிக்க வைத்தியர்கள். அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் யோனத்தன் நுஸ் என்ற குழந்தை பிறந்த எட்டு மாதங்களில் ஈரல் பழுதடைந்து இறக்கும்…
-
- 0 replies
- 706 views
-
-
மாதுளை மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், தினமும் இரவில் ஒழுங்காக நித்திரை கொண்டாலே போதும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் பேராசிரியர் ஜான் ஆக்ஸல்சன் தூக்கத்திற்கும் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார். தற்போதைய இயந்திர வாழ்வில் மக்கள் தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 18 முதல் 31 வயது வரையுள்ள 23 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பிற்பகல் 2 மணி மற்றும் 3 மணி அளவில், நல்ல தூக்கம், தூக்கமின்மை ஆகிய 2 தருணங்களில் புகைப்படம் எ…
-
- 0 replies
- 552 views
-
-
எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனியிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பேர்லின் நகரைச் சேர்ந்த இம்மருத்துவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி. மற்றும் இரத்தப் புற்றுநோய்குள்ளான நோயாளியுடன் பணியாற்றிவந்தனர். இந்நிலையில் இவ்விரு நோய்களையும் குணப்படுத்தும் மருந்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நோயாளியொருவர் குணப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். எனினும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானோருக்கான பொதுவான சிகிச்சையாக இதை பயன்படுத்துவதற்கு முன்னர் பல வருடகால வேலைகள் எஞ்சியிருக்கின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குணப்படுத்தல் என்பது பலமான ஒரு வார்த…
-
- 3 replies
- 609 views
-
-
பசுமதி / Basmati அரிசி சோறு உண்டால் குறிப்பிட்ட அரிசியின் மெலிந்த தோற்றம் போன்றே ஆட்களும் உடல் மெலிவார்களாம் என்று கூறுகின்றார்கள். Glycemic index According to the Canadian Diabetes Association, basmati rice has a "medium" glycemic index (between 56 and 69), thus making it more suitable for diabetics as compared to certain other grains and products made from white flour.
-
- 13 replies
- 1.9k views
-
-
நோயாளியை தொடாமல், மருந்து கொடுக்காமல் வருத்தத்தை குணப்படுத்தலாம், அதிசயம் ஆனால் உண்மை! வெள்ளி, 10 டிசம்பர் 2010 19:41 பிராண சிகிச்சை முறை மூலம் நோயாளிகளை தொடாமல், மருந்துகள் கொடுக்காமல் முழுமையாக எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறார் இலங்கையின் மூத்த பிராண சிகிச்சையாளர்களில் ஒருவரான தேவா சோமசுந்தரம். இவர் கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர். ஓய்வு பெற்ற சிவில் பொறியியலாளர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவை தளமாக கொண்டு உலகின் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றன பிராண சிகிச்சை நிலையங்கள். இலங்கைக் கிளைக்குப் பொறுப்பானவராக இவர் இருக்கின்றார். தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இச்சிகிச்சை நிலையம். அண்மையில் இங்கு செல்லும் வாய்ப்பு எமத…
-
- 1 reply
- 4.6k views
-
-
வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மச…
-
- 5 replies
- 5.3k views
-
-
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு.…
-
- 0 replies
- 1.7k views
-
-
மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் [ multiple sclerosis (MS) ] என்று சொல்லப்படுகின்ற மூளைக் கோளாறினால் மூளையின் நரம்புகளில் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்தி சரிசெய்யக்கூடிய வழியொன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டனிலுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எம். எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நரம்பு நார்களுக்கான மூளை குறுத்தணுக்களை தூண்டிவிடுவதன் மூலம் புத்துயிர் தர முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர். மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் பற்றி பல விஷயங்களை நாம் அறிந்தாலும் அந்த நோய் எதனால் வருகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. எம்.எஸ். வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்பு என்பது நரம்பு நார்களைப் சுற்றிப் படிந்துள்ள மைலீன் எ…
-
- 0 replies
- 550 views
-
-
ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்? தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம். சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது. துபாயிலிருக்கும் ஒரு நண்பர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவார். கள்ளக்குறிச்சியில் இருக்கும் இன்னொரு நண்பர் ஒவ்வ…
-
- 0 replies
- 694 views
-
-
வணக்கம் நண்பர்களே, எனக்கு தெரிந்த ஒரு நண்பனுக்கு Histrionic personality disorder என்னும் உளவியல் பிரச்சனை உண்டு. அவருக்கு உதவுவதற்கு, அந்த நோயைப்பற்றி தமிழில் தகவழ் தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த மன நல மறுத்துவர்கள் இருந்ந்தால் தயவுசெய்து அறியத்தரவும். அல்லது அந்த நோய் பற்றி எதாவது தகவள் தெறிந்தால் சொல்லவும். நன்றி
-
- 0 replies
- 1.1k views
-
-
நோயின் அறிகுறியை நகங்களில் காணலாம்! நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. * நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது. * இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம். * சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை த…
-
- 0 replies
- 640 views
-
-
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின…
-
- 2 replies
- 455 views
-
-
வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது…
-
- 0 replies
- 616 views
-