நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும். உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போது…
-
- 0 replies
- 1.1k views
-
-
இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.அதுமட்டுமின்றி, சீரகம் தற்போது பலரும் அவஸ்தைப்படும் அசிடிட்டி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். இதனை இயற்கை மருத்துவ வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர். மேலும் சீரகம் இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். சீரகத்தில் உள்ள சத்துக்கள் :- சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண் பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது. பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சு…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
உங்களை உறைய வைக்கும்... 20 "எக்ஸ்ரே" படங்கள்.
-
- 0 replies
- 349 views
-
-
சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்... ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்... இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும். ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது; அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியும். ஆனால் இறுதி மூச்சு நிற்கும் வரை மருந்துகளின் துணையோடுதான்..... மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி, புற்று நோய், என்று எந்த நோய் வந்தாலும் குணமாதல் என்பது இன்று பொய்யாகிப் போனது. அலோபதி மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, சித்த மருத்துவமோ அல்லது ஆயுர் வேதமோ எதுவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலைக்குக் காரணம் மரு…
-
- 0 replies
- 594 views
-
-
விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? - பாலியல் உடல்நலம் பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை. "இதனை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, பு…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஏப்ரல் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன. அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது. இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த …
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்! சனி, 9 பிப்ரவரி 2008( 13:47 IST ) நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையும், பானங்களையும் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துகள், சக்தியின் அடர்த்தி தன்மை, திருப்தித் தன்மை ஆகியவைத் தொடர்பாக நடத்திய ஆய்வில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதைக் கண்டறிந்…
-
- 0 replies
- 2.8k views
-
-
கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பை மெருகேற்ற ஆண்களுக்கான உணவு வகை! [Thursday 2016-02-18 07:00] பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. seithy.com உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயி…
-
- 0 replies
- 546 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்குமாறு அரை மில்லியன் பொதுமக்களுக்கு அழைப்பு! எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளில்,அரை மில்லியன் பேர் பங்கேற்க கையெழுத்திடுவார்கள் என நம்பப்படுகின்றது. பிரித்தானியாவில் குறைந்தது எட்டு பெரிய அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், சோதனைகளில் பங்கேற்பதற்றாக கையெழுத்திடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் வைட்டி கூறுகையில், ‘எந்த தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை என்பதைக் கண்டறிய பொதுமக்களின் தாராள மனப்பான்மையை நாங்கள் மீண்டும் அழைக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசிகள் கிடை…
-
- 0 replies
- 535 views
-
-
இஸ்கிமிக் கார்டியோமயோபதி ( Ischemic Cardiomyopathy)க்குரிய சிகிச்சை இதயத்தில் எந்த கோளாறுகள் ஏற்பட்டாலும் எமக்கு பயம் வருவது இயற்கையே. அது என்னவென்று தெரியவரும் போது தான் நாம் அதனை எதிர்கொள்வதற்குரிய மனதிடத்தை பெறுகிறோம் என்பதும் உண்மை. இந்நிலையில் இதய தசைப் பகுதியில் ஏற்படும் சில பாதிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இதயப்பகுதியில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான வலுவினை இழ்ந்திருந்தாலோ அல்லது இதய தசை மெலிந்திருந்தாலோ அல்லது ஓரிடத்தில் மெலிந்து பிறகு வேறொரு இடத்தில் பெரிதாக இருந்தாலோ இதயத்திற்கு இரத்தம் சீராக பம்ப் செய்ய இயலாத நிலை உருவாகும். அத்துடன் உடலுக்கு போதிய அளவில் இரத்தம் அனுப்பப்படுவதிலும் சிக்கல்கள் எழக்கூடும். …
-
- 0 replies
- 383 views
-
-
பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும். இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொ…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-
-
முக்கனிகளில் இரண்டாவது பழமான பலா! - நோய் தீர்க்கும் மருந்து [Wednesday 2015-06-24 18:00] முக்கனிகளில் இரண்டாவது பழமான பலா ருசி மிக்கக் கனிகளை தருவதுடன் ஆடுகளைக் கொழுக்க வைக்கும் தழை. இசைக் கருவிகளுக்கான மரம், கறியாகச் சமைத்திடப் பிஞ்சு மற்றும் விதை, மருத்துவப் பயனுடைய பல்வேறு பகுதிகள் ஆகிய அனைத்தையும் உடையது.பணம் காய்க்கும் மரமான இந்த பலா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உற்றதுணையாக இருக்கிறது. கோடைகாலங்களில் மட்டும் கிடைக்கும் இந்த சீசன் பழத்தை எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு பதப்படுத்தி சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அவ்வளவாக நம்மிடம் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் பலாவை பதப்படுத்தி எல்லா நாட்களிலும் அதை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். பலாபழத்தின் விலை கோடையில் குறைவாகவும் …
-
- 0 replies
- 925 views
-
-
நமது மூளையைப் பாதிக்க நாமே செய்யும் 10 கெடுதல்கல்! [Friday 2016-01-08 00:00] 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு …
-
- 0 replies
- 479 views
-
-
இன்றைய காலகட்டத்தில் stress என்ற வார்த்தையை உபயோகிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகமானால் மன நோயை தூண்டி மன உளைச்சலை உண்டாக்கும். இவையெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணமாக அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்வார்கள் stress என்பதற்கான அர்த்தத்தை... மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் என்ன? அதனை தடுப்பதற்கு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்... மன நோய் என்றால் என்ன ? ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளில் இருந்தே தொடங்குகிறது மன அழுத்தம். சிறு வயதில் நமக்கு பிடித்த ஒரு பொருளை அப்பா வாங்கிதராமல் இருப்பின் எழும் பிடிவாத தன்மையும் எ…
-
- 0 replies
- 489 views
-
-
கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு: மனிதர்களிடம் பரிசோதனை செய்ய முடிவு! உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ்க்கு (கோவிட்-19) அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலையில் வணிகரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக…
-
- 0 replies
- 287 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், பெயர்கள் மற்றும் எண்களை அடிக்கடி மறக்கிறோம் என்றால் அது ஒரு நரம்பியல் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம் கட்டுரை தகவல் எழுதியவர், கிரேக் டி ஜூபிகாரே பதவி, தி கன்சர்வேஷன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் பேசும்போது நாம் பயன்படுத்த விரும்பும் வார்த்தையைக் மறப்பதை நாம் அனைவரும் எதிர்கொண்டிருப்போம். உலகளாவிய இந்தப் பிரச்னை பேச்சாளர்களிடையே ஏன் ஏற்படுகிறது ? அப்படி பேசும்போது நாம் வார்த்தைகளை மறப்பது உண்மையில் தீவிரமான ஒரு பிரச்னையா ? எப்போதாவது இந்த சிக்கல் ஏற்பட்டாமல் அது மிகவும் இயல்பா…
-
- 0 replies
- 745 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜிம் ரீட் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மென்மையான அதிர்வலைகள் (Shock wave) கொடுப்பது நோயாளிகளின் இதய திசுக்களை மீண்டும் உருவாக்க உதவும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் 63 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிர்வலைகளை கொண்ட புதிய சிகிச்சையைப் பெற்றவர்களால் அதிக தூரம் நடக்க முடிந்தது. அவர்கள் அதிக ரத்த ஓட்ட விகிதங்களைக் கொண்டிருந்தனர். இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோஹன்னஸ் ஹோல்ஃபெல்ட் கூறுகையில், "முதன்முறையாக ஒரு மருத்துவ அமைப்பின் உதவியுடன் இதயத் தசைகள் மீண்டும் உருவ…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாய் இருப்பதாக ஐரோப்ப ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. சர்க்கரை நோயோ, அதிகமாக இனிப்பு வகைகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையினால் பெண்களுக்கு கருப்பை, தோல் போன்ற பல இடங்களில் புற்று நோய் வரும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது. மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதற்கும் இந்த இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒரு காரணம் என்று உமேயா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. அதுவும் 49 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது. கடந்த பதிமூன்று வருடங்களாக இந்த ஆ…
-
- 0 replies
- 980 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்? ரிச்சர்ட் கேல்பின் பிபிசி Getty Images தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். துரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. நுரையீரல் வீக்கம் கொரோனா வைரஸால் ஏற்படும் வழக்கமான பாதிப்பு. இதே போல உலகில் உள்ள பல கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேறு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வந…
-
- 0 replies
- 479 views
-
-
உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் நிறுவன சாதனங்களில் எந்த மாதிரியானவைகளை எல்லாம் பாதுகாப்பான தொலைவில் வைக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தன் வலைதளத்திலேயே பட்டியலிட்டு இருக்கிறது. இதில் ஏர்பாடுகள் மற்றும் சார்ஜிங் கேஸ்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் அதன் உதிரி பாகங்கள், ஹோம்பாடுகள், ஐபேடுகள், ஐபோன் மற்றும் மேக் சேஃப் உதிரிபாகங்கள், மேக் மற்றும் அதன் உதிரி பாகங்கள், பீட்ஸ் என பல்வேறு கருவிகளையும் மருத்துவ சாதனங்களை பொருத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பான தொ…
-
- 0 replies
- 743 views
-
-
ஒற்றை தலைவலி பாட்டி வைத்தியம் N. சுரேஷ் குமார் ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம். அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள் தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வரு…
-
- 0 replies
- 513 views
-
-
காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது? உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட…
-
- 0 replies
- 6.2k views
-
-
பல மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும் காளான் மிகுந்த வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் (LENTYSINE) உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஆண் கருத்தடை மாத்திரை இதுவரை ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? - கலாசாரம் காரணமா? ஜாரியா கோர்வெட் பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் கருத்தடை மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படும் பல பக்க விளைவுகள், பல தசாப்தங்களாக பெண்களைப் பாதித்துக் கொண்டுள்ளன. இது நம் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறதா? 1968ஆம் ஆண்டு ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையாக தியோரிடசின் என்ற மருந்தை எடுத்து வந்த ஓர் இளைஞர் உடலுறவின்போது தனக்கு வறண்ட உச்சகட்டம் ஏ…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-