நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் பயனற்றுப் போகும் நிலையை சமாளிக்க பெரும்பாலான நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது மலேரியா, காச நோய் போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று அந்த நிறுவனம் வர்ணித்திருக்கிறது. இது குறித்து 133 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 34 நாடுகள் மட்டுமே இந்த மருந்துகள் சக்தியிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியை செய்யும் நிலையில் உள்ளன என்று காட்டுவதாக தெரியவந்திருக்கிறது. ஆண்டிபயாடிக் மருந்துகளால் நோய்களை குணப்படுத்த முடியாமல் போகும் நிலையை எதிர்த்து நடவடிக்கைகள் எடுக்க உலகளாவிய வகையில் எடுக்கப்படவுள்ள ஒரு திட்டம் அடுத்த மாதம் ஜெனிவாவில் உலக சுகாதார நிறு…
-
- 1 reply
- 788 views
-
-
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும். இனிப்பு, புளிப்பு, உப்பு என விதவிதமான உணவுகளை சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளை வைத்தே, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சில சமயங்களில் இந்த கணிப்பு உண்மையாகிறது. அப்படி ஆண் குழந்தை இருந்தால் சாப்பிட தோன்றும் உணவுகள் இதோ, கர்ப்பிணிகளுக்கு இனிப்பான உணவுகளைப் பார்த்து அதிக ஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்புமிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் கருதப்படுகிறது. காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்துவந்த …
-
- 1 reply
- 2.2k views
-
-
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும். மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ், ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம். மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும். தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, ப…
-
- 8 replies
- 27.1k views
-
-
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனைய…
-
- 0 replies
- 754 views
-
-
கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது. இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும். சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கர்ப்பக் காலத்தில் பெண்…
-
- 5 replies
- 1.1k views
-
-
வாயூறி என்ன பயன்..... 30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம் ”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்! எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்! அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வட…
-
- 1 reply
- 3.8k views
-
-
உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி. இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை. கீழாநெல்லியின் மகத்துவங்கள் கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்…
-
- 0 replies
- 814 views
-
-
பழங்களில் சுவையான பழமான பப்பாளியில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது. பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர். கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. அடிக்கடி இ…
-
- 0 replies
- 429 views
-
-
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள், அதில் ஒன்றுதான் Polycystic Ovary Syndrome. Polycystic Ovary Syndrome என்பது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் பெண்களின் கருப்பையில் ஏற்படும் கட்டி ஆகும். ஹார்மோன்களின் சமநிலையின்மையால், மாதவிடாய் பிரச்சனைகள், கருத்தரித்தல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர். நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், பல வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் உடல் வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி போன்ற பணிகளை ஹார்மோன்கள் செய்கின்றன. ஆனால், ஒழுங்கற்ற உடல் பராமரிப்பு, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்ளாமை போன்ற காரணங்களால் இந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்போது, ப…
-
- 0 replies
- 740 views
-
-
ஊறுகாயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பலருக்கும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பிடுவது என்பது கடினமான விடயமாக இருக்கும். அனைவராலும் ருசித்து சாப்பிடப்படும் இந்த ஊறுகாய் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தம் உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுநீரக குறைபாடு ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. புற்றுநோய் ஊறுகாயின் சுவ…
-
- 0 replies
- 721 views
-
-
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழவகைகள், பருப்புவகைகள் என அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே கொடுப்பட்டுள்ள 10 உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும். வெள்ளைப்பூண்டு குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. வெங்காயம் வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாலுடன் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கியங்களை வழங்குகிறது. இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் குறையும், இதனால் பாலுடன் தேன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல…
-
- 3 replies
- 1.6k views
-
-
நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயை அடையாளம் கண்டுள்ளது புதிய ஆய்வு ஒன்று. வாழ்க்கை முறை காரணிகளால் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்வது ‘நீரிழிவுடற்பருமன்’(Diabesity). இந்த புதிய ஆய்வில் உணவுப் பழக்கமுறைகளினால் உடற்பருமன், நீரிழிவு நோய்களை திறம்பட நிர்வகிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது . சி.எஸ்.ஐ.ஆர்.-ல் உள்ள ஆய்வாளர்கள் பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதில் அதி நீரிழிவு மற்றும் அதி உடற்பருமனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பதைக் கண்டுள்ளனர். பொதுவாக குடல்சுவரில் காணப்படும் ஆல்பா-குளூக்கோசிடேஸ் என்ற சுரப்பியே கார்போ…
-
- 0 replies
- 576 views
-
-
சமையலுக்கும், நறுமணத்துக்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சி…
-
- 4 replies
- 5k views
-
-
சைவ உணவுகளிலேயே புரோட்டீன் அதிகளவில் நிறைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் கைகளையும் அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம். துவரம் பருப்பு துவரம் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன், போலிக் ஆச…
-
- 0 replies
- 1.5k views
-
-
வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவர்களுக்கான உணவுகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், முட்டை சாப்பிடுவதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. முட்டைய…
-
- 10 replies
- 1.1k views
-
-
உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். இதனால் மற்றவர்கள் அருகில் வரவே பயப்படுவார்கள், பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது என பலவித காரணங்கள் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதுதவிர சுவாசக்குழாய் பாதிப்பு, நிமோனியா, ப்ராங்கைட்டிஸ் சர்க்கரை நோய், ஈறு நோய், குடல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். * முதலில் காலை, மாலை 2 வேளையும் நன்றாக பல் துலக்க வேண்டும். * சாப்பிட்ட பின்னர் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும், மவுத் வாஷ், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். * மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டு…
-
- 4 replies
- 1.1k views
-
-
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் இருக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி கருமை சூழ்ந்திருக்கும். கழுத்தின் கருமையைப் போக்க அழகு நிலையம் சென்று காசை வீணாக்குகின்றனர் இன்றைய கால பெண்கள். ஆனால் வீட்டில் இருந்தபடியே சில பேக்குகளை செய்து, கழுத்தை பளிச்சென மாற்றலாம். எலுமிச்சை தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளித்தால் கழுத்தின் கருமை படிப்படியாக மறையும். பால்பவுடர் பேக் முதலில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். …
-
- 9 replies
- 1.1k views
-
-
உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே சரியான உணவுகளை எடுத்துக் கொண்டு இரத்த சோகையிலிருந்து விடுபடுவது அவசியம். கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். ஓட்ஸ் ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து உள்ளதால் காலை உணவாக ஓட்ஸை எடுத்து வருவதால் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். உருளைக்கிழங்கு உருளைக…
-
- 0 replies
- 611 views
-
-
இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது. ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண…
-
- 0 replies
- 657 views
-
-
பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் உடனடியாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும். உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன், மாரடைப்பு வராமலும் தடுக்கலாம். பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் பசியெடுக்கும், உடலில் உள்ள கலோரிகள் கரைவதால் தான் பசியெடுக்கிறது. உடனே சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும். இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உ…
-
- 0 replies
- 510 views
-
-
பொதுவாக காலை உணவு சாப்பிடுவதை தற்போதைய காலக்கட்டத்தில் பலர் தவிர்த்துவிடுகின்றனர். அலுவலம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் செல்கின்றனர். சிலர் ஆரோக்கியமற்ற உணவை வெளியிலும் சாப்பிடுகின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே காலை உணவை தினந்தோறும் சாப்பிட வேண்டும். மேலும் சில காலை உணவுகள் நம் அரோக்கியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இட்லி இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும். தோசை இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், க…
-
- 0 replies
- 2.3k views
-
-
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தின் இயக்கத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான முச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், நாற்பது நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத் திசுக்கள் மூ…
-
- 0 replies
- 506 views
-
-
உடல் மெலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்த பல்வேறு நோய்கள் வர நாமே காரணமாக இருக்கிறோம். அதிலும் குறிப்பாக பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் தொல்லை ரொம்பவும் இயல்பாகிவிட்டது. இதற்கு தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். தடுக்க என்ன செய்யலாம்? * தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். * சாப்பாட்டில் காரம் குறைக்கவும். * அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சா…
-
- 0 replies
- 684 views
-
-
பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆரஞ்சு தோல் ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். வாழைப்பழ தோல் வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும். மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும். குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை …
-
- 0 replies
- 653 views
-